கிரகாம் ஸ்டெயின்ஸ்

graham

ஒரிசாவில் கொல்லபட்ட அந்த கிரகாம் ஸ்டெயின்ஸ் மற்றும் அவரின் மகன்களின் நினைவு நாள், பாரதத்திற்கு பெரும் தலைகுனிவு ஏற்படுத்திய கொடூர சம்பவம் இது

நிச்சயம் தமிழகம் இதற்கு விதிவிலக்கு, தமிழரின் கலாச்சாரமும் இன்னபிற உயர்ந்த நாகரீகமும் அதற்கு சான்று

தமிழகம் இம்மாதிரி கொடுமைகளை காணவில்லை என்பதற்கு ஆயிரம் காரணம் உண்டு, தமிழக மக்களின் மனநிலை வேறுமாதிரியானது

ஆனால் பெரியாரே காரணம், தன்மான பகுத்தறிவு சிந்தனைகளே இங்கு மிஷினரிகளின் பாதுகாப்புக்கு காரணம் என யாராவது சொன்னால் யோசிக்காமல் அடித்தே விடுங்கள்

ஆம் 1600களிலே நாயக்க மன்னர்களிடம் இயேசு சபை குருக்கள் (லயோலா கல்லூரி முன்னோடிகள்) கல்வி நிலையம் அமைக்க மத போதனை செய்ய அனுமதி கேட்டபொழுது அது கொடுக்கபட்டது

கல்வியும், சேவையும் பெருக தமிழகம் அனுமதித்தது

அப்படித்தான் ஐடா ஸ்கேடர் வந்தார், டாக்டர் டோனா வந்தார், டக்கர் என்பவர் வந்தார் இன்னும் யாரெல்லாமோ வந்தார்கள்

1600களில் இருந்தே அவர்கள் இங்கு வந்தார்கள், தமிழகம் அணைத்து கொண்டது

ஒருவரையும் பகைத்ததாக, அடித்ததாக, விரட்டியதாக தகவல் இல்லை.

இதன் தன்மை அப்படியானது, அன்றே கிரேக்கரும் ரோமரும் ஏன் மார்க்கோ போலோ கூட சுற்றியிருக்கின்றார்

யாதும் ஊரே யாவரும் கேளிர் என கவிஞன் சும்மா சொல்லவில்லை, தமிழரின் உயர்ந்த மனநிலையினை சொன்னான்

1600களில் இருந்தே கிறிஸ்தவ மிஷினரிகளும் கல்வி அமைப்புகளும் கால்பதித்தபொழுது ஏற்றுகொண்ட தமிழகத்தை, 1930களில் வந்த பெரியார்தான் மாற்றினார் , அதனால்தான் இங்கு மிஷினரிகளுக்கு பாதுகாப்பு என சொல்பவர்களிடம் பேசவே கூடாது.

எங்கிருந்தோ வந்து ஒரிசா மக்களுக்காக போராடி அவர்களுக்காக உயிரையும் இழந்த இக்குடும்பம் மறக்க முடியாதது

கொலையாளியினை விடுதலை செய்ய சொல்லி உண்மை கிறிஸ்தவராக நின்ற ஸ்டெயின்ஸின் மனைவி கிளாராவும் மறக்கவே முடியாத நபர்

உண்மை கிறிஸ்தவம் என்றால் இதுதான்

“என் பொருட்டு தன் உயிரை இழப்பவன் அதை காத்து கொள்கின்றான்” என இயேசு சொன்னது இவர்கள் வழி நிறைவேறிற்று

இயேசுவிற்காக மாபெரும் சவால் எடுத்து அழிந்து நிற்கின்றது ஒரு குடும்பம், அது தியாகம்

தன் பேரபிள்ளைகளுக்கு ஊர் காசில் திருமணம் செய்து வேடிக்கை காட்டுகின்றது இன்னொரு குடும்பம், அது சுயநலம்

நல்ல கிறிஸ்தவ குடும்பம் பால் தினகரன் குடும்பமா? இல்லை இந்த ஸ்டெயின்ஸ் குடும்பமா? எது, கிறிஸ்துவிற்காக வாழ்ந்த குடும்பம் என நீங்களே முடிவு செய்யுங்கள்

ஸ்டெயின்ஸ் எனும் சத்திய கிறிஸ்தவனின் பெயரை உச்சரிக்க கூட தமிழகத்திலிருக்கும் யூதாஸ் கும்பலுக்கு தகுதி இல்லை

இயேசுவினை 30 காசுக்கு காட்டிகொடுத்த அவனுக்கும், இயேசு பெயரை சொல்லி காசுபார்க்கும் இவர்களுக்கும் துளி வித்தியாசமுமில்லை

ஆனால் யூதாஸ் திருந்தி செத்தான், இவர்களோ திருந்தவே மட்டார்கள், யூதாஸைவிட மகா மோசமானவர்கள் இவர்கள்