ஆஸ்திரேலியா vs இந்தியா

நேற்று ஆஸ்திரேலியா இந்திய அணியினை அடித்து நொறுக்கி விசாகபட்டினம் கடலில் வீசியதற்கு என்ன காரணம் தெரியுமா?

இதுதான் காரணம்

ஆஸ்திரேலிய அணி ஒரு குழந்தை என்றும் சேவாக் அதற்கு பராமரிபாளர் போலவும் வந்த விளம்பரம் ஆஸ்திரேலியாவில் பலத்த சர்ச்சையினை ஏற்படுத்தியது 56 இன்ஞ் இல்லை 100 இன்ஞ் மார்பு கொண்ட ஹைடன் எல்லாம் சீறியிருந்தார்

இதோ போட்டு சாத்திவிட்டார்கள், இனி தோல்வியினை தவிர்க்க இந்த விளம்பரத்தை ஆஸ்திரேலியர் கண்ணில் காட்டாமல் உடனே மறைக்க வேண்டும்

அர்ஜுன ரணதுங்க

அர்ஜுன ரணதுங்க எனும் கிரிக்கெட் ஆட்டக்காரரை மறக்க முடியாது

இலங்கை அணி 1980களில் தடுமாறியபொழுது அவர்தான் கேப்டன், மனிதர் கொஞ்சம் அதிர்ஷ்டசாலி

அப்பொழுது இந்த கனடா, ஆப்கானிஸ்தான் போலிருந்த இலங்கை அணி இவர் தலமையில் குப்புற கிடந்தபொழுது சமிந்தவாஸ், டிசில்வா, ஜெயசூர்யா, முரளிதரன் போன்ற சிற்ந்த வீரர்கள் கிடைத்தார்கள், இதுவரை இலங்கை கண்ட மிக சிறந்த அணி அதுதான்

அந்த அணி வலுவான ஆஸ்திரேலியாவினையும் விரட்டி கோப்பையினை கைபற்றியது, அப்பொழுது அவர் கேப்டன்

அதனால் மிகபிரபலமான அவர் அரசியலுக்கு வந்தார், ரணில் அமைச்சரவையில் சாலை மற்றும் கடற்போக்குவரத்து அமைச்சர் ஆனார்

இம்ரான்கான், சித்துவிற்கு எல்லாம் அன்னார் முன்னோடி

இப்பொழுது மகிந்தா ராஜபக்சே டிடிவி தினகரன் ஸ்டைலில் அங்கு கும்மாங்குத்து அதிரடி எல்லாம் காட்டுவதால் மனிதருக்கு நேரம் சரியில்லை

எங்கோ அலுவலகத்தில் நுழையபோய் துப்பாக்கி சூடு எல்லாம் நடந்து இருவர் பலி

விஷயம் உலக அரங்கில் பெரிதாகி அமெரிக்காவே தன் குடிமக்களை இலங்கையில் எச்சரிக்கையாய் இருங்கள் கலவரம் வரலாம் என சொல்லிவிட்டது

ராஜபக்சே இந்த ரணதுங்கவினை பிடித்து உள்ளே போட சொல்லிவிட்டார்

இலங்கை சிக்கல் மோசமாகிகொண்டுதான் செல்கின்றது

போகிற போக்கில் இன்னும் சிக்கலாகலாம், ராஜபக்சே உடனே நாடாளுமன்ற தேர்தல் நடத்தவேண்டும் என்கின்றார்

ஒருவேளை பெரும் கலவரம் வந்தால் என்னாகும்?

அதை அடக்க 1977, 1987களில் இந்தியா முன்பு களமிறங்கியது போல் இறங்கும்

காரணம் இன்னொரு நாட்டை இலங்கையில் களமிறக்க இந்தியா எளிதில் அனுமதிக்காது

ஒருவேளை கொழும்பில் கலவர சூழல் வந்து இந்தியா தலையிட்டால் என்னாகும்?

இங்கு உடனே முள்ளிவாய்க்காலில் இறங்காத இந்தியா கொழும்பு என்றால் மட்டும் எப்படி இறங்கலாம் என குதிப்பார்கள், இந்திய அரசுக்கு தலைவலி கொடுப்பார்கள்

அதை பார்த்த அமெரிக்கா, இலங்கைக்கு உதவ தயார் என சொல்லிவிட்டு டெல்லியினை பார்த்து சிரிக்கும்

இலங்கை விவகாரத்தில் இந்தியாவினை கட்டிபோட இங்கு சில சக்திகளை அமெரிக்கா ரகசியமாக ஆதரிக்கும் என்பது ஒன்றும் வியப்பல்ல, அரையணாவிற்கு தெருவோடு திரிபவன் எல்லாம் ஜெர்மன், பிரான்ஸ் என சென்று ஈழ முழக்கம் எழுப்புவதெல்லாம் இந்த ரகசியத்தில்தான்

ஆனால் இப்பொழுது ஆள்வது இரும்பு மனிதர் பழனிச்சாமி, எக்கு மனிதர் மோடி

யாராவது சீண்டினால் நொறுக்கிவிடுவார்கள், அதனால் கொழும்பில் இந்திய படை இறங்க ஒரு தடையும் இருக்காது

எனினும் இப்போது இலங்கை கிரிக்கெட் அணிக்கு மட்டுமலல், முன்னாள் கேப்டனுக்கும் போதாத காலம்.. [ October 30, 2018 ]

 

Image may contain: 2 people
Image may contain: 1 person, closeup

ஆப்கான் கிரிக்கெட் அணி

அது சல்லடையாய் துளைக்கபட்ட நாடு, குண்டு விழாத இடம் என ஒன்றோ, இல்லை தோட்டா துளைக்காத சுவர் என்றோ எதுவுமில்லை

நல்ல களம் இல்லை, மட்டை இல்லை, கிரிக்கெட் விளையாட நல்ல பந்தோ, ஷூ கூட அவர்களுக்கு இல்லை

சுருக்கமாக சொன்னால் உடல் ஒன்றே அவர்களுக்கு உருப்படி, வெறு எதுவுமில்லை

ஆனாலும் அட்டகாசமாக வலுவான இந்திய அணியினை சமன் செய்யும் அளவிற்கு பயிற்சி பெற்று இருக்கின்றார்கள்

இங்கிலாந்து கிரிக்கெட் அணியோ, ஆஸ்திரேலியாவோ ஏன் ஹாங்காங் கூட வளர்வது விஷயம் அல்ல‌

கோடிகளில் புரளும் இந்திய கிரிக்கெட் அமைப்பின் அணி வந்து நிற்பதும் ஆச்சரியமல்ல‌

அந்த குண்டு சத்தத்திலும், காட்டுமிராண்டி கூட்டத்தின் நடுவிலும் இருந்து வளர்ந்திருக்கின்றார்கள் அல்லவா? அதுதான் திறமை

வாழ்த்துக்கள் ஆப்கன் அணி. உங்களை வாழ்த்துகின்றோம்

“லகான்” எனும் சினிமா கதை நனவும் ஆகலாம் என காட்டி இருக்கின்றது ஆப்கன் அணி

அவர்கள் இன்னும் வளர்ந்து நிலைக்க, வெல்ல வாழ்த்துக்கள்

(அந்த பாழாய் போன தாலிபான்கள் மலைலா போல இவர்கள் மேலும் பாயாமல் இருக்கட்டும்..)

Image may contain: 4 people, people playing sports and outdoor

சிதறல்கள்

கட்சி தொடங்கி தமிழகத்தை சுற்றிவருவார் என ரஜினியினை நம்பினால் அவர் மலேசிய எஸ்டேட்டை சுற்றினார், அப்படியே மும்பை சேரியினை சுற்றினார்

இப்பொழுது ஏதோ பேட்டையினை சுற்ற போகின்றாராம்

இடையில் அடிக்கடி இமயமலை வேறு

பேட்ட என்பது இந்த பீட்டா (PETTA) என்பது போல் நமக்கு தெரிகின்றது, தனுஷ் வேறு அதில் உறுப்பினர் என்பதை எதற்கும் சொல்லி வைப்போம்


மலேசியாவில் ரஜினிகாந்திற்கு ஏகபட்ட ரசிகர்கள் உண்டு, அவர்களில் சில‌ தமிழர்களே தவிர தமிழ் என்பது ஆங்கிலம் கலந்தே இருக்கும், காந்தியினை கூட கேந்தி என்றுதான் சொல்வார்கள்

இப்பொழுது சிலர் கேட்கின்றனர், பிரதர் ரஜினியின் புதுபடம் “பெட்டே” என்றால் என்ன அர்த்தம்?

“பெட்டே ” இல்லை “பேட்ட” என சொல்லி தீரவில்லை.

Image may contain: 1 person, standing and text

—————————————————————————————————————————————–

சீனாவின் இறக்குமதி பொருளுக்கு இன்னும் கூடுதல் வரியினை விதித்துவிட்டார் டிரம்ப், இதனால் சீன அமெரிக்க மோதல் இன்னும் வலுக்கின்றது

முதலில் சில பொருளுக்கு வரி என்ற டிரம்ப் , இப்பொழுது எல்லா சீன பொருளுக்கும் வரி என்கின்றார், சீன சுற்றுபயணிகளுக்கும் வரி இருக்கும் போல‌

பொதுவாக ஆசிய நாடு எதில் ஆதிக்கம் செலுத்தினாலும் மேற்குநாடுகளுக்கு பொறுக்காது, ஜப்பான் அப்படி செய்ததால் முன்பு அணுகுண்டு வீசி அடக்கினார்கள்

சீனா முன்பு நோயாளி நாடு, மாவோவின் காலத்தில் புரட்சி நடந்தாலும் பொருளாதாரம் சொல்லிகொள்ளும் அளவு இல்லை

தமிழக அமைச்சர்கள் போல எல்லோருடனும் மோதும் சீனா அப்படி சோவியத் யூனியனுடனும் எல்லை தகறாறில் மோதியது

1972 வங்கப்போரில் அமெரிக்க செல்வாக்கு சரிவு, இந்தியாவினை அடக்குதல் கூடுதலாக சோவியத்திற்கு செக் வைத்தல் என்ற கணக்கில் சீனாவினை நெருங்கியது அமெரிக்கா

பொதுவுடமைவாதி மாவோ அதை தயக்கமின்றி ஏற்றார், அதன் பின் டெங் ஜியோ பிங் வலுவாக பற்றினார்

விளைவு சீனா சீறி எழுந்தது, சோவியத் சிதறினாலும் சீனா பெரும் வலுவான நாடாக மாறிற்று

விடுவார்களா? இப்பொழுது சீனாவினை அடக்கி வைக்க அமெரிக்கா துடியாய் துடிக்கின்றது

நன்றாக இருவரும் மோதட்டும்

இதில் யார் நாசமாய் போனாலும் இந்தியாவிற்கு மிகவும் நல்லது


குட்கா ஊழல் விஸ்வரூபமாகின்றது, சில அமைச்சர்களே கைதாகலாம் என்ற அளவில் செல்கின்றது விஷயம்

ஜெயா வழியில் ஆட்சி என்றபொழுதே இவர்கள் இப்படித்தான் சிக்குவார்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்தது, இதில் ஆச்சரியபட ஒன்றுமில்லை


நெடுநாளைக்கு பின் கிரிக்கெட் பார்த்தால் ரவீந்திர ஜடஜே என்பவர் விளையாடி கொண்டிருந்தார்

அப்பொழுது பார்த்தது போல இப்பொழுதும் சொத்தையாகவே ஆடிகொண்டிருந்தார்

ஏனோ பழனிச்சாமி நியாபகம் வந்து போனது, அவரையும் யாரோ ஒரு மோடி காப்பாற்றி ஆடவைத்து ரசித்துகொண்டிருக்கின்றார்


பூலோகம் என்றொரு படம் ஓடிகொண்டிருக்கின்றது, எருமை கிடாவிற்கு கிளவுஸ் போட்டது போல ஒரு வெள்ளைக்காரன் ஜெயம் ரவியுடன் குத்துசண்டை போட்டு கொண்டிருக்கின்றான்

ஜெயம் ரவிக்கு முகம் துடைப்பது, தண்ணீர் கொடுப்பது போன்ற வேலைகளை அருகிருந்து செய்கின்றார் திரிஷா

ஒருவேளை ஜெயம் ரவி விழுந்துவிட்டால் திரிஷா வெள்ளைக்காரனை நானே தியாக தலைவி என களத்தில் இறங்கி குத்த வந்துவிட்டால் எப்படி இருக்கும்?

கேட்டால் அவனுக்கு நான் சோறு போட்டேன், தண்ணீர் கொடுத்தேன் இதனால் குத்துசண்டைக்கு வரும் தகுதி எனக்கு உண்டு அவர் சொன்னால் எப்படி இருக்கும்?

சிரிப்பு வருமா வராதா?

ஆனால் சசிகலாவும் தினகரனும் அப்படி அரசியலுக்கு வந்துவிட்டால் மட்டும் யாரும் சத்தம் போட்டு சிரிப்பதில்லை

ஆச்சரியமாக தினகரன் வெற்றியும் பெருகின்றார்

இப்படிபட்ட தமிழகத்தில் திரிஷா அந்த வெள்ளைகாரனை குத்தி வீழ்த்தியதாக படத்தை முடித்திருக்கலாம்

தமிழகத்தில் சினிமாதான அரசியல், அரசியல்தான் சினிமா