பீலா ராஜேஷ் சிறப்பாக செயல்பட்டால் குஷ்பு விருது.

Image may contain: 1 person, sitting and indoor

இது என்ன யழவு தமிழ்நாடோ தெரியவில்லை

இதே காலம் யுத்தகாலம் என்றால் யார் முன்னால் நிற்பார்கள்? இந்திய ராணுவ தளபதி முன்னின்று பணிகளை செய்வார்

இதுவே இயற்கை சீற்றம் என்றால் அதாவது புயல் மழை கடல் கொந்தளிப்பு என்றால் கலெக்டர்கள் பம்பரமாக சுழன்று பணியாற்றுவார்கள்

அவர்களை அதற்குத்தான் இத்தேசத்தின் நிர்வாக அமைப்பு தேர்ந்தெடுத்து சோதித்து பதவி எல்லாம் கொடுத்தும் வைத்திருக்கின்றது

அப்படி இப்பொழுது சுகாதார துறைக்கு நெருக்கடியான காலம் என்பதால் சுகாதார துறை செயலாளர் பீலா ராஜேஷ் அவர் கடமையினை செய்கின்றார்

சும்மா சொல்ல கூடாது நன்றாகவே செய்கின்றார், ஆனால் யார்தான் செய்யவில்லை? ஜப்பான் முதல் அமெரிக்கா வரை எல்லா சுகாதார தொழிலாளர் முதல் துப்புரவு பணியாளர் வரை ஓய்வின்றி உழைக்கின்றார்கள்

இங்கு பீலா ராஜேஷ் என்பவரும் உழைக்கின்றாரே அன்றி அவர் ஒருவர்தான் உழைக்கின்றார் என்பது போன்ற தோற்றம் சரியல்ல, இது ஊடகங்களால் உருவாக்கபடும் வெட்டி பிம்பம்

அந்த அம்மணியினை விடாமல் சுற்றி செய்தி பெறுகின்றோம் என சொல்லி இழுத்துவைத்து கேள்வி கேட்கின்றார்கள், ஐ.ஏ.எஸ் பயிற்சி இருப்பதால் அம்மணியும் சமாளிக்கின்றது

ஆனால் இந்த காலகட்டத்தில் ஒரு விஷயம் புரிகின்றது

ஆம், இந்நாட்டின் நிவாக எந்திரம் வெள்ளையனால் மிக சரியாக இயங்குமாறு வடிவமைக்கபட்டது அதில் மிக சரியாக கலெக்டர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தான் வெள்ளையன்

அந்த ஐ.சி.எஸ் எனப்படும் மிக முக்கிய பதவியினை உருவாக்கினான், அவர்கள்தான் 1900க்கு பின்னரான நவீன இந்தியாவின் அடித்தளம்

இப்பொழுது ஒவ்வொரு ஐ.ஏ.எஸ் , ஐ.பி.எஸ் அதிகாரியும் செவ்வனே பணியாற்றுவதை கண்டால் ஒன்று புரிகின்றது

இங்கு மாநில அரசு என ஒன்று வேண்டவே வேண்டாம், பொறுப்புகளை அதிகாரிகளிடம் கொடுத்துவிட்டு இந்நாட்டில் தேசிய அரசு ஒன்று மட்டும் அமைதல் நலம், தேசிய கட்சிகள் மட்டும் இயங்குதல் நலம்

அதுதான் நாட்டுக்கும் நல்லது, மக்கள் நலனுக்கும் நல்லது

இதைத்தான் அன்றே நேருவிடம் சொன்னார்கள், அவர் நல்ல விஷயம் எதையும் காதில் வாங்கியதே இல்லை அதன் விளைவுதான் நாம் காணும் மாநில அரசியல் இம்சைகள்

பீலா ராஜேஷ் லைம் லைட்டுக்கு வந்து சில நாட்கள் கூட ஆகவில்லை, அதற்குள் அவரின் ஜாதகமே அலசபட்டு கோஷங்கள் எழுகின்றன எப்படி தெரியுமா?

“நாட்டை காக்க வந்திருக்கும் நாடார் திருமகளே வாழ்க..”

“லேடி காமராஜர் வாழ்க.”

” நாடார் குல ஜெயலலிதாவே வாழ்க”

“கொரோனா அரக்கனை ஒழிக்க வந்த நாடார் குலதெய்வம் பத்ரகாளியே..”

இவரது அம்மா ராணி வெங்கடேசன் முன்னாள் சாத்தான் குளம் எம்.எல்.ஏ என்பது குறிப்பிடதக்கது

போகிற போக்கில் கனிமொழி, தமிழிசை அக்காவுக்கு எல்லாம் கடும் போட்டியாக அம்மணி உருவாகிவிடும் போல‌

ஆனால் சங்கம் நிலமையினை உற்று கவனிக்கின்றது, அவர் இன்னும் சிறப்பாக செயல்பட்டால் இந்த வருடத்திற்கான “குஷ்பு விருது” அவருக்குத்தான், அதில் மாற்று கருத்தே இல்லை

ஆயினும் அம்மணி பேட்டி கொடுக்கும் பொழுது மாஸ்க் அணிவதில்லை சங்கம் எல்லா விஷயங்களிலும் மதிப்பெண் வழங்கும் என்பதால் அம்மணி அதை அணிந்து கொண்டு பேட்டி கொடுப்பது அவசியம்

(பிற்செய்தி சுருக்கம் : பழனிச்சாமி அரசில் தென்னக‌ நாடார்களுக்கு முக்கியத்துவமில்லை அதுவும் தென்னகத்தில் அமைச்சர் பதவி இல்லை என ஒரு முணுமுணுப்பு வந்த நிலையில் மிக சரியாக பீலா ராஜேஷை முன்னுறுத்தி அதை பழனிச்சாமி தீர்த்தும் விட்டாராம்.

ஈரோட்டு ராம்சாமி மண் எப்படி இருக்கும்?, இப்படித்தான் இருக்கும்

கொரோனா ஒழிப்பிலும் ஜாதி அரசியல் இருக்கத்தான் செய்யும்.)

குஷ்பு : 04

குஷ்பு : 04

சின்னதம்பிக்கு பின் மாதம் ஒரு குஷ்பூ படம் வந்து கொண்டே இருந்தது, பவுர்ணமி வரும்பொழுதெல்லாம் குஷ்பூ படமும் வெளிவந்துகொண்டிருந்தது, அவ்வளவு வேகமாக நடித்தார் குஷ்பூ, எல்லா நாட்களிலும் அவருக்கு படப்பிடிப்பு இருந்தது. சின்னதம்பியின் பெருவெற்றியினை கொண்டாடிகொண்டிருக்கும் பொழுதுதான் 13 ஏப்ரல் 1992ல் சிங்காரவேலன் படம் வந்தது.
மிக அழகான குஷ்பூ வந்த படங்களில் அதுவும் ஒன்று, அப்படத்தில் அவர் தலையில் தொப்பியோடு ஒரு நடை நடப்பார். அந்த கம்பீரமான, அசால்ட்டான, ஸ்டைலான நடையினை யாராலும் நடக்க முடியாது. குஷ்பூ ரோஜா பூ கூட்டம்போல‌ போல இருந்த படம் அது.
கமலஹாசனுக்கு போட்டியாக நடிப்பு, நடனம் , அழகு என மிக பெரும் சவாலை கொடுத்திருந்தார். சில இடங்களில் கமலஹாசன் திணறியதும் தெரிந்தது, சிங்காரவேலன் படம் அவரை சிங்கார தேவதையாக கொண்டாட வைத்தது. அடுத்தடுத்து சிக்ஸர்களாக விளாசும் பேட்ஸ்மேன் போல அடுத்து அட்டகாசமான படம் கொடுத்தார் குஷ்பூ, அது 1992 ஜூன் மாதம் ‘அண்ணாமலை’ படமாக வந்தது. எம்ஜிஆர் காலத்திற்கு பின் ரஜினி, அதுவும் 1990க்கு பின் வேகமாக வளர்ந்தார். அந்த வேகத்தினை குஷ்பூவின் புகழும் வேண்டியிருந்தது
‘அண்ணாமலை’ படத்தில் குஷ்பூ மிக சிறப்பான இடத்தினை பெற்றார், அந்த சுப்புலட்சுமியாக அவர் சிரித்த சிரிப்பிற்கே படம் ஹிட், படத்தின் கதை, ரஜினி எல்லாம் அடுத்த வகை.
படத்தில் குஷ்பூ ரஜினியின் இளவயதிற்கும் பொருந்தினார், பிற்பாதி முதிய வயதிற்கும் இளநரையுடன் அட்டகாசமாக பொருந்தினார். கடந்த வருடம் கபாலியில் ரஜினி முதியவராக வந்தபொழுது, எல்லோர் மனதிலும் இவருக்கு ஜோடியாக அண்ணாமலை குஷ்பூ அல்லவா வந்திருக்க வேண்டும் என்ற எண்ணம் தானாக தோன்றியது அதனால்தான்.
அந்த அளவிற்கு ரசிகர் மனதில் இடம்பிடித்தார் குஷ்பூ, இன்றும் காலா படத்தின் போஸ்டரை கண்டால், அடடா இதில் குஷ்பூ நடித்தால் பொருத்தமாக இருக்குமே என ஏங்குவதுதான் தமிழன் உள்ளம், குஷ்பூவின் தாக்கம் அப்படி. பின்னாளில் மூப்பனாருக்காக ரஜினி சைக்கிள் சின்னத்தை ஆதரித்தபொழுது, அண்ணமலை சைக்கிளோடு போஸ் கொடுத்தபொழுது, இச்சின்னம் ரஜினிக்கு மட்டுமா? குஷ்பூவிற்கு பங்கு இல்லையா? என்றெல்லாம் குரல்கள் கேட்டன.
அண்ணாமலைக்கு பின் குஷ்பூ வந்த அனைத்து பாடல்களும் தமிழகத்து தேசிய கீதமாயின, எல்லா தியேட்டர், டிவி, அன்றைய கேபிள் டிவி, திருட்டு கேசட், ரேடியோ என எல்லா இடத்திலும் குஷ்பூ பாடல்தான் இருந்தது. அதுவும் வைரமுத்து எழுதிய கொண்டையில் தாழம்பூ பாடல், தமிழகத்து தேசிய பாடல் ஆயிற்று, “இந்த ஊரெல்லாம் உன்பேச்சு தானடி” என்ற கவிஞரின் வரிகள் 100% அக்காலத்தில் உண்மையாய் இருந்தது
வருஷம் 16ல் அழகு நடிகை, சின்னதம்பியில் முழு தேவதையாக ஜொலித்த குஷ்பூ, அண்ணாமலைக்கு பின் ரசிகர்களால் இன்னமும் உயர்த்தபட்டார். ஆம், அவருக்கு அந்த காலத்தில்தான் கோயில் கட்டபட்டதாக செய்திகள் வந்தன, குஷ்பூ நமஹ, குஷ்பாம்பிகை போற்றி என்ற ஸ்லோகங்கள் அப்பொழுதுதான் கேட்டன. எத்தனையோ நடிகைகளை கொண்டாடிய தமிழகம் தான், எத்தனையோ நடிகைகள் கோலோச்சிய இடம்தான் , ஆனால் கோயில் எந்த நடிகைக்கும் இருந்ததுமில்லை, இருக்க போவதுமில்லை.
அந்த அளவிற்கு மிக அபிமான ரசிகர்கள் இருந்தார்கள், குஷ்பூ முகத்தில் கடவுளை காணும் அளவிற்கு குஷ்பூ அவர்களை ஆக்கிரமித்திருந்தார். திருச்சியில் அக்கோயில் கட்டபட்டதாக செய்திகள் வந்தன, சிலர் அதெல்லாம் சும்மா என்பார்கள், நெருப்பின்றி புகையாது, விஷயம் நடந்திருக்கின்றது. இப்படியாக தெய்வம் என கொண்டாடபட்டார் குஷ்பூ, எந்த நடிகையும் எட்டாத தெய்வம் எனும் உயரத்தை எட்டிய ஒரே நடிகை இன்றுவரை குஷ்பூதான்.
அண்ணாமலையினை தொடர்ந்து, ரஜினியின் பாண்டியன் படமும் வந்தது, அதில் ஜொலித்த குஷ்பூ, ஒரு பாடலில் அபூர்வ அழகாக தெரிந்தார், “அன்பே நீ என்ன அந்த கண்ணனோ மன்னனோ..” பாடலில் எல்லா உடையிலும் வருவார், எல்லாமே அழகு என்பதுதான் ஆச்சரியம்.
அதுவும் சுற்றிய புடவையில் தலையில் சூடிய மல்லிகையோடு அவர் வந்த காட்சியில் அட ஒரு கோயில் என்ன? உலகெல்லாம் கோயில் கட்டலாம் என தோன்றும், அப்படி ஒரு அழகு
இவருக்கு கோவில் கட்டாவிட்டால் பின் யாருக்கு கோவில் என்ற அளவிற்கு குஷ்பூ மின்னிகொண்டிருந்தார்
புகழின் உச்சியினை வெறும் 23 வயதில் எட்டிபிடித்தார் குஷ்பூ, எந்த நடிகைக்கும் அது இங்கு சாத்தியமே இல்லை, புகழின் சிகரத்தில் சிம்மாசனம் போட்டு அமர்ந்துவிட்டார், அதன் பின் அடைய எந்த உயரமுமில்லை.
தமிழகம் வந்தாயிற்று, சம்பாதித்தாயிற்று, வந்த வேலை முடிந்தது என திரும்பி செல்வதுதான் பெரும்பாலும் மும்பை நடிகைகள் வழக்கம் ஆனால் குஷ்பூவின் மனம் வேறுமாதிரியானது, எவ்வளவு உறுதியும் , நம்பிக்கையும் கொண்ட மனமோ அவ்வளவிற்கு நன்றியும் கொண்டது
தனக்கு கோயில் கட்டுமளவு சென்ற தமிழகத்தை பிரிய அவர் தயாரில்லை, இனி வாழ்வு இந்த தமிழகத்தில் தான் என முடிவே செய்தார். தமிழக ரசிகர்களும் அவர் அமெரிக்கா சென்றாலும் இழுத்து வந்து கேமரா முன் நிறுத்துவது என்பதில் கருத்தாய் இருந்தனர்
குஷ்பூ தமிழக பெண் ஆனார், தமிழக அடையாளமும் ஆனார், எங்கு சென்றாலும் தமிழ்பெண்ணாக தழைய முடிந்த சேலையில்தான் வருவார், இன்றும் அந்த பழக்கமே அவரிடம் உண்டு. தமிழகம் தனக்கான வீடு என கண்டுகொண்டார், தொழிலில் பெருவெற்றி பெற்ற அவர், அதுவும் உச்சத்தில் இருந்த அவர் வாழ்வின் அடுத்தகட்டம் செல்ல விரும்பினார். அது எல்லா பெண்களுக்கும் வரும் ஆசை, எல்லா நடிகைகளுக்கு வரும், அக்கால ஜானகி முதல் ஷோபா, ஷாலினி , ஜோதிகா வரை வந்த ஆசை புகழ் சிகரத்தின் உச்சியில் இருந்த குஷ்பூவிற்கும் வந்தது
தன் விருப்பபடி அவர் திருமணம் செய்ய அவர் தயாரான பொழுதுதான் பெரும் புயல் அவர் வாழ்வில் வீசியது. இன்னொரு நடிகை என்றால் அந்த புயலில் காணாமலே போயிருப்பார், அல்லது தற்கொலை அது இது என வாழ்வினை முடித்திருப்பார்
அதுவரை அழகு பெண்ணாக மட்டும் அறியபட்ட குஷ்பூ, மிக தைரியமான பெண்ணாக மாறியது அக்கால கட்டத்தில்தான். நிச்சயமாக அவருக்கு அது சோதனையான காலகட்டம், அடுத்த மாநிலம், அடுத்த மக்கள், ஆனால் அவருக்கு சோதனையினை கொடுத்தது மிக பெரிய இடம், அதில்தான் நம்பர் 1 நடிகையாக குஷ்பூவினால் நிலைக்க முடிகின்றது
ஆனால் குஷ்பூவின் விதி , அவரின் திருமணம் தொடர்பாக பெரிய இடத்தோடு மோத வைத்தது, அவர்கள் திரைதுறையின் மிக பெரிய அடையாளம்,
அவர்களிடம் கொஞ்சம் முறைத்தாலும் திரைவாழ்வே கேள்விகுறி, கோபுரத்தில் இருக்கும் குஷ்பூவினை நொடியில் தரைக்கு கொண்டுவரும் வல்லமை படைத்தவர்கள் அவர்கள், அங்குதான் தனிபட்ட வாழ்வின் பெரும் ஏமாற்றத்தை கண்டார்.
ஏமாற்றம்தான், வலிதான், பெரும் சோகம் தான் ஆனால் வெறும் 23 வயது பெண்ணாயினும் மிக நிதானமாக அச்சிக்கல்களை கடந்தார்
அந்த சலசலப்புகள் அவர் திரைவாழ்வினை பாதிக்காதவாறு பார்த்துகொண்டார், ஆனால் மனதிற்குள் அழுதிருக்கலாம், துடிக்க துடிக்க அழுதிருக்கலாம். மீன்கள் அழுவதும், விண்மீன்கள் தங்களுக்குள் எரிவதும் யாருக்கும் தெரியாது, அப்படி குஷ்பூ கண்ணீரை தனக்குள் புதைத்துகொண்டு திரைவாழ்வினை தொடர்ந்தார்
ஆனால் அவரின் கண்ணீர் நியாயமானதும் உண்மையானதுமாக இருந்திருக்க வேண்டும், இல்லாவிட்டால் அவரின் கன்ணீருக்கு காரணமானவர்கள் அப்படி பெரும் வீழ்ச்சி கண்டிருக்க மாட்டார்கள், அவ்வளவு பெரும் சிக்கலையும், அவமரியாதையினையும் கண்டிருக்கமாட்டார்கள்
குஷ்பூவினை அழவைத்தவர்கள் பின்னாளில் கதற கதற கண்ணீர் விட்டதையும், பெரும் இடத்தில் இருந்த அவர்கள் சாலையோரம் தனியாக அடிமை போல நடந்த்து சென்றதையும் தமிழகம் காணத்தான் செய்தது,
குஷ்பூவின் கண்ணீரில் சில உண்மை இருக்கலாம் என உலகம் தனக்குள் முணுமுணுத்துகொண்டது.
தனிபட்ட உறவுகள் அவரை ஏமாற்றியதே தவிர, திரையுலகம் அவருக்கான சிகப்பு கம்பளத்தை அப்படியேதான் வைத்திருந்தது
அவரை அசைக்க யாராயினும் முடியவில்லை, சோகங்களை தன்னோடு புதைத்து கொண்டு நடித்துகொண்டே இருந்தார். அவருக்கான இடம் அப்படியே இருந்தது, நடிகர்கள் தான் மாறிகொண்டிருந்தார்கள். குஷ்பூ மனமும் அவர் அழகும் மாறவே இல்லை, அதுபோல தமிழகத்தை விட்டு போகவே மாட்டேன் எனும் அந்த வைராக்கியம் நாளுக்குநாள் அவர் மனதில் வளர்ந்துகொண்டே இருந்தது.
குஷ்பூ எனும் அழகு சூரியன் சினிமாவில் ஒளிவீசிகொண்டே இருந்தது
(பூ பூக்கும்) [ November 4, 2018 ]
Image may contain: 1 person, smiling

குஷ்பூ : 03

குஷ்பூ : 03

வருடம் 16 வரும்பொழுதே குஷ்பூ முண்ணணிக்கு வந்திருந்தார். அதுவரை கோலோச்சிய ராதா எல்லாம் ஒடினார்கள், நதியா, அமலா என அன்றைய முண்ண்ணி நடிகைகளை அன்றே ஆட்டம் காண செய்திருந்தார் குஷ்பூ.
வருஷம் 16ல் முகத்தில் ஒரு சின்ன சிணுங்கலுடன், ‘‘கண்ணத்தான்…” என்று கார்த்திக்கிடம் கேட்கும் குஷ்பு, முதல் மரியாதை எனக்கு என தாத்தாமுன் நிற்கும் குழந்தை தனமான குஷ்பூ, பாவாடை சட்டையில் அழகு பெட்டகமான குஷ்பூ, இரட்டை ஜடையுடன் தோன்றும் குஷ்பு என ஏகபட்ட குஷ்பூக்கள் படம் முழுக்க தெரிந்தார்கள்
கார்த்திக்கிடம் காதல் வயப்படும்பொழுது மெல்ல மெல்ல அத்திபழ கன்னத்தோடு வெட்கபடும் பொழுது கவுண்டருக்கு சென்று அடுத்த காட்சிக்கான‌ டிக்கெட்டுக்கான பணத்தை கொடுக்க சொன்னது பலரின் மனது, பூப்பூக்கும் மாதம் பாடலில் தை மாத மேகமென குஷ்பூ ஆடிய நளினத்தில் தியான அமைதியில் அமர்ந்திருந்தது கூட்டம்.
அப்படமே அப்படி குஷ்பூவினை ஆக்கிவைத்தபின்புதான் சின்னதம்பி அவரை நங்கூரமிட்டு நிறுத்த வந்தது. அரைத்த சந்தனம் அழகு குங்குமம் என்ற பாடலில் குஷ்பூ அப்படத்தில் அறிமுகமாகும் பொழுது தியேட்டர் ஆர்ப்பரித்தது, சிரித்த முகமாக குஷ்பூ அறிமுகமாகும் அக்காட்சியில் தியேட்டர் குதூகலித்தது.
அப்படத்தில் குஷ்பூ பல இடங்களில் ஜொலித்தார், அண்ணன்கள் முன்பு பாசமான தங்கை குஷ்பூவாக, உலகம் காண துடிக்கும் ஏக்கமான குஷ்பூவாக, சின்னதம்பியினை முதலில் வேடிக்கையாக பார்க்கும் வெள்ளந்தி குஷ்பூவாக, போவோமா ஊர்கோலம் பாடலில் அவருக்காகவே ஆண்டவன் படைத்த அந்த லொக்கேஷனின் குஷ்பூவாக அற்புதமாக நடித்திருந்தார்
அதுவும் காதல் வந்தபின், சின்னதம்பியினை தாலிகட்ட வைத்தபின் நடிப்பின் அடுத்த பரிமாணத்திற்கு சென்றார் குஷ்பூ, இறுதியில் சகோதரர்களிடம் சீறும் பொழுது நடிப்பில் ஜொலிப்பார். அந்த கோபத்திலும் அவர் முகத்தில் ஒரு அழகு தெரிந்தது தான் குஷ்பூவின் அபூர்வம், கோபத்திலும் அவர் அப்படி ஒரு அழகு. எல்லா அழகிக்கும் உச்ச அழகு என ஒரு கணம் வரும், சின்னதம்பியில் குஷ்பூ ஒரு காட்சியில் உச்ச அழகில் ஜொலிப்பார்
ஊர்சுற்றிய பின் குஷ்பூவிற்கு காய்ச்சல் வந்து, பிரபு உண்மையினை மறைத்து அடிவாங்கிய பின் அவருக்கு மாத்திரை கொடுப்பார், அந்த காட்சிதான், அதில் நொடிப்பொழுதுதான்
மெல்ல சொல்வார் பாருங்கள்
லேசாக குனிந்த தலையோடு, முகத்தில் கொஞ்சம் குறும்போடு, உதடுகளை லேசாக குவித்தபடி “சின்னதம்பி நீங்க ரொம்ப நல்லவரு” என சொல்லும் காட்சியில் அழகின் உச்சிக்கு சென்றார் குஷ்பூ, அட அந்த காட்சியினை பார்க்கும் பொழுது எல்லா கடவுளும், முப்பது முக்கோடி தேவர்களும் நம்மை ஆசீர்வதிக்கும் மங்கள இசை ஒலி காதில் கேட்கும்
இப்பொழுதும் அக்காட்சியினை பாருங்கள், மிக மிக அழகாய்ய் தெரிவார் அவர்.
படத்தில் அவர் சிரித்தால் தியேட்டர் சிரிக்கும், அவர் ஆடினால் கூட்டம் ஆடும், அவர் யோசித்தால் கூட்டம் யோசிக்கும், அவர் அழுதால் எல்லோரும் அழுதார்கள், அதுவும் கண்ணாடி மேல் குஷ்பூ நடக்கும்பொழுது எல்லோர் கண்களிலும் ரத்தமே வந்தது. தமிழர்கள் ஒவ்வொரு பிரேமாக ரசித்தபடம் என்றால் அதில் சின்னதம்பியும் ஒன்று, அப்படி அணுஅணுவாய் ரசித்தார்கள், குஷ்பூவிற்காய் என்பதை தவிர சொல்லி தெரியவேண்டியதில்லை
ஒளிப்பதிவாளர் ரவிந்தரும் குஷ்பூவினை மிக அழகாக காட்டினார் என பத்திரிகைகள் எழுதின, நிலாவிற்கு என்ன? எல்லோர் கேமராவிலும் அது அழகுதான்.
விபிசிங் பிரச்சாரம், ராஜிவ் கொலை, தமிழக அசாதாரண நிலை, புலிகள் கைது, பெரும் கலவர சூழல் எதுவும் அப்படத்தின் வசூலை பாதிக்கவில்லை. அது தன் வழியே தன் வசூலை கொட்டிகொண்டே இருந்தது, குஷ்பூவினை காண வந்துகொண்டே இருந்தார்கள். படம் ஓடிய வசூல் கட்டியம் கட்டி சொன்னது,
இனி குஷ்பூ இன்றி தமிழக சினிமா இல்லை.
அந்த வெற்றியில் அதுவரை தமிழக கனவு கன்னியாக வந்த அமலா தெலுங்கிற்கு தலைதெறிக்க ஓடினார், அங்கேயே நாகர்ஜூனாவிடம் அடைக்கலமானார், அதன் பின் இப்பக்கம் வரவே இல்லை. மிக பெரும் வரவேற்பான நடிகையாக இருந்த நதியாவும் குஷ்பூ எனும் பெரும் நதிமுன் நிற்க முடியாமல் மறைந்தது.
இன்று பெரும் நடிகையாக ஜொலிக்கும் ரம்யா கிருஷ்ணன் அன்று எழமுடியாமல் போனதற்கு குஷ்பூ பல வழிகளில் காரணம். தமிழக திரையின் ஏகபோக நாயகியானார் குஷ்பூ, அவரில்லாத படங்கள் இல்லை, எல்லா நடிகர்கள், தயாரிப்பாளர்கள் வார்த்தைகளும், பேச்சுகளும் குஷ்பூ இன்றி முடிவதில்லை.
எல்லோருக்கும் பிடித்த குஷ்பூவினை அன்றைய முதல்வர் ஜெயலலிதாவிற்கும் பிடித்திருந்தது, அப்படத்திற்கான சிறந்த நடிகை விருதையும் தமிழக அரசு வழங்கியது. குஷ்பூ காட்டில் அடைமழை கொட்ட தொடங்கியது, இனி அவரோடு நடிக்காவிட்டால் தங்கள் ஸ்டார் பட்டம் நிலைக்காது என உச்ச நட்சத்திரங்கள் நினைக்க தொடங்கின
குஷ்புவோடு நடித்த எந்த புதுமுக நடிகரும் சூப்பர்ஸ்டார் ஆகும் வாய்ப்பும் இருந்தது, குஷ்பூவின் பிரபலம் அப்படி
சின்னதம்பிக்கு பின் பிரபுவோடு கிழக்கு கரையில் நடித்தார், அதன்பின் வசூல் கணக்கில் தயாரிப்பாளர்கள் ரஜினி குஷ்பூ, கமல் குஷ்பூ என்றே கணக்கிட்டனர், காலம் அப்படித்தான் குஷ்பூவினை உயர நிறுத்தியிருந்தது,
சின்னதம்பிக்கு பின் அடுத்த உயரத்திற்கு சென்றார் குஷ்பூ, தமிழகத்தின் நிரந்தர நடிகை ஆனார். எல்லா நடிகைகளையும் ஓரங்கட்டிவிட்டு, புதுமுகம் யாருமே தேவையில்லை என தமிழ்திரையுலகம் குஷ்பூவிடம் மண்டியிட்டு சரணடைந்தது. சின்னதம்பி குஷ்பூவினை எல்லோரும் ரசித்தார்கள், பத்மினி கால ரசிகர்கள் கூட இப்படி சொன்னார்கள்
“கொஞ்சம் உயரமாய் இருந்திருந்தால் அப்படியே பத்மினி போலவே இருந்திருப்பார்..”, சிவாஜி பத்மினி ஜோடிக்கு பின், பிரபு குஷ்பூ ஜோடி பேசபட்டது இப்படித்தான். பத்மினி எனும் பேரோளியின் அடையாளமும் உயரமும் மிக பெரிது, அசால்டாக இரு படத்திலே அதனை தாண்டினார் குஷ்பூ. இரு மாபெரும் வெற்றிக்கு பின்னால் ரஜினி எனும் உச்சத்துடன் ஜோடியாகும் முன்னால் அந்த இடைவெளியில் சத்யராஜுடன் பிரம்மா படத்தில் வந்தார்
அதில் அந்த ஜெனிபர் குஷ்பூவினை யாரால் மறக்க முடியும்? அப்படம் வந்தபின் கான்வென்ட் எல்லாம் குஷ்பூவால் நிரம்பியதாக எல்லோரும் எண்ணி கொண்டார்கள். கிராண்ட்ஸ்லாம் நாயகிகள் மோனிகா செலஸையும், ஸ்டெபிகிராப்பையும் பார்க்கும் பொழுதெல்லாம் அவர்களை குஷ்பூவாக கண்டது தமிழகம். அப்படம் குஷ்பூவின் பிரபலத்தை இன்னும் கூட்டியது,
குஷ்பூ கவர்ச்சி நடிகை அல்ல, அவர் குறும்பும் அழகும் கலந்த ஒரு நாயகி,
ஆனாலும் ஒரு பாடல் அப்படத்தில் சர்ச்சையானது
அதன்பின் அம்மாதிரி பாடல்களில் குஷ்பூ வரவே இல்லை, அதற்கான அவசியமும் அவருக்கு இல்லை. வருடம் 16 வந்த பின் அடுத்த பல‌ ஆண்டுகள் குஷ்பூவின் கொடி உயர பறந்தது, அதனை அசைக்க யாருமில்லை, தனிகாட்டு ராணியாக கோலோச்சினார். எல்லா நடிகைகளும் ரஜினியுடன் ஜோடி சேர்ந்த பின்புதான் வெற்றி பெறுவார்கள்,
ஆனால் முழுவெற்றி பெற்றபின்புதான் ரஜினியுடன் பாண்டியன் படத்தில் வந்தார் குஷ்பூ.
ரஜினியும் அப்பொழுதே சூப்பர் ஸ்டார் இடத்தில் அமர்ந்திருந்தார், புது நடிகையும் ஆனால் வெகு பிரபலமாகிவிட்ட குஷ்பூவும் இணைந்து நடிப்பது பெரும் எதிர்பார்ப்பினை கூட்டிற்று. ரஜினியின் புகழுக்கு கொஞ்சமும் குறையாமல் புகழை அப்படத்தில் அசால்ட்டாக குவித்தார் குஷ்பூ. அது மங்கா புகழுக்கு அவரை அழைத்து சென்றது.
லேடி சூப்பர்ஸ்டார் ஆகிகொண்டிருந்தார் குஷ்பூ, ரஜினி வசூல் சக்கரவர்த்தி என்றால் குஷ்பூ வசூல் ராஜமாதா எனும் அளவிற்கு காலம் அவரை கொண்டாட வைத்தது.
ரஜினியோடு குஷ்பூ நடித்த படங்கள் வந்தன, பெரும் ஆரவார சத்தங்கள் எல்லாம் தமிழகத்தில் கேட்டன, அது குமரிமுனை அலையோசை போல விடாமல் ஒலித்துகொண்டே இருந்தது..
(தொடரும்..) [ November 3, 2018 ]
Image may contain: 1 person, closeup

குஷ்பு : 02

குஷ்பு : 02

வருஷம் 16 படம் அந்த காலத்தில் பிய்த்துகொண்டு ஓடியது. பெரு வெற்றிபெற்று சாதனை படைத்தது
அந்த படத்தின் நாயகன் கார்த்திக். இன்று அவர் காணாமல் போனாலும், அரசியல் காமெடியன் ஆனாலும் அன்று அவர் பெண்களுக்கு கனவு கண்ணன். மவுனராகம் புகழ் அவருக்கு தொடர்ந்த காலம் அது. வித்தியாசமான மொழியும், துறுதுறு நடையும், குறும்பு முகமாக அவரை எல்லோருக்கும் பிடித்த காலம் அது
பாசில் கதை, பூரணம் விசுவநாதன், வடிவுக்கரசி , கார்த்திக் என எல்லோரையும் மீறி படத்தில் கவனம் பெற்றார் குஷ்பூ ஒன்றும் தெரியாத பெண்ணாக அவர் முதலில் வருவதும், கொஞ்சம் கொஞ்சமாக கார்த்திக்கிடம் காதலில் விழுவதும், மரத்தூணுக்கு பின்னால் மான் போல மருகி பார்ப்பதும், பின்னர் உயிரை விடுவதுமாய் அற்புதமாக நடித்திருந்தார்.
ராதிகா என்பது அவரின் கதாபாத்திர பெயர். அது ஒன்றுதான் எல்லோர் மனதிலும் தங்கியது. வருஷம் 16ல் எத்தனையோ நட்சத்திரங்கள் நடித்திருந்தாலும் நிலாவாக பதிந்தார் குஷ்பூ, கார்த்திக்கினை மீறி அவர் படத்தில் ஜொலித்தது பெரும் விஷயம்.
தயங்கி தயங்கி அவர் அந்த பாத்திரமாகவே நடித்த காட்சியில் மயங்கி மயங்கி, அந்த பூமுகத்தில் தமிழகம் சொக்கி போயிற்று.
அத்திபழம் போன்ற அந்த கன்னங்கள் அசைய, மெல்ல‌ ரோஜா மலர்ந்தது போன்ற குறுஞ்சிறிப்பிலும், குறுகுறு கண்களிலும் பலர் குப்புற விழுந்தார்கள். யாரய்யா அந்த பெண்? குலோப்ஜாமூன் மாதிரி இருக்காய்யா” என சொல்லியே பலமுறை பார்க்க வந்தார்கள். படம் கிட்டதட்ட ஒரு வருடம் ஓடியது. தியேட்டரில் அவருக்காக கூட்டம் குவிந்தது. அவரை திரையில் பார்த்த உடனே விசிலடிக்க ஆரம்பித்தார்கள் ரசிகர்கள்
முதன் முதலில் ஒரு கதாநாயகி நடிகைக்காக விசில் சத்தம் கேட்க தொடங்கியது தமிழகத்தில் குஷ்பூவிற்காகத்தான், இன்றுவரை அவர் ஒருவருக்காகத்தான்.
நகை கடையில் குவிந்த பெண்களை போல குஷ்பூவினை சுற்றி தயாரிப்பாளர்களும், டைரக்டர்களும் குவிந்தார்கள். குஷ்பூ எனும் பெயர் இளைஞர்களின் தாரக மந்திரமானது, சிலருக்கு மூச்சானது, பலருக்கு இதயதுடிப்பானது.
பெண்களில் கூட அவருக்கு ரசிகைகள் உருவானார்கள், அவரை பார்த்து பார்த்து ரசித்தார்கள். அக்காலத்தில் கேபிள் டிவி, இணையம் என ஒன்றுமே கிடையாது. ஏன் பல வீடுகளில் டிவியே கிடையாது. தூதர்ஷனில் வாரம் ஒருமுறை பாடல் மட்டும் ஒளிபரப்புவார்கள். இலங்கை டிவியில் வஞ்சகமின்றி அடிக்கடி ஒளிபரப்புவார்கள். அதற்காக ஆண்டெனாவினை இலங்கை பக்கம் திருப்பி வைத்து தவமிருந்தார்கள்.
வருஷம் 16 குஷ்பூவினை தியேட்டரில் பார்த்துவிட்டு அவர் பாடலுக்காக டிவி முன் தவமிருந்தோர் உண்டு, குஷ்பூவினை டயனோரா, சாலிடர், வீடியோகான், பிபிஎல் போன்ற டிவிகளில் எதிர்பார்த்த கூட்டம் உண்டு. தெருக்களில் வாடகை டிவி , வாடகை விசிஆரில் அப்படத்தினை பார்க்காதவர் இல்லை, கிராமங்களில் திரைகட்டி புரொஜக்டர் வைத்து அதனை கொண்டாடாத மக்கள் இல்லை.
எல்லா கிராமத்து திருவிழாவும் வருஷம் 16 படத்துடன்தான் முடிவு பெற்றன, அல்லது அப்படத்திற்காகவே திருவிழா கொண்டாடபட்டது.
அப்படியெல்லாம் குஷ்பூ எல்லோர் மனதிலும் இடம்பிடித்தார். அவர் மேலான எதிர்பார்ப்பு அதிகரித்தது.
தங்க தட்டில் சந்தனம் பூசியது போன்ற முகத்துடனும், வெண்பஞ்சு போன்ற உடலுடனும் இருந்த அவர் சாட்சாத் தேவதையாகவே தெரிந்தார்.
அப்படத்திற்கு பின் 2 வருடத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என கிட்டதட்ட 50 படங்களை நெருங்கியிருந்தாரென்றால் அவருக்கு எவ்வளவு வேகமாக படங்கள் குவிந்தன என நீங்களே முடிவு செய்யுங்கள்.
தமிழில் வெற்றிவிழா, தாலாட்டு பாடவா, மைடியர் மார்த்தாண்டன், நடிகன் போன்ற படங்கள் எல்லாம் அப்பொழுதுதான் வந்தன. எல்லா நடிகர்களும் அவரோடு நடிக்க அணிவகுத்து நின்றனர்,
ரஜினி நாட்டுக்கொரு நல்லவன், கமலஹாசன் மைக்கேல் மதன காமராஜன், வெற்றிவிழா என குஷ்பூவின் கால்ஷீட்டுக்காக காத்திருந்தனர்.
அந்நாளைய மெகா ஸ்டார் ராமராஜனே பசுமாடு, டவுசர் எல்லாம் விட்டுவிட்டு, நகரத்து மனிதனதாக கோட் சூட் போட்டு குஷ்பூ படத்திற்காய் மாறியிருந்தார். எங்கும் குஷ்பூ, எதிலும் குஷ்பூ என மாறிகொண்டிருந்தது தமிழகம்
1988 முதல் 1990 வரை ஜெயா, ஜானகி, கலைஞர், மூப்பனார், ராஜிவ் என எல்லோரும் அரசியலில் செய்திகள் சொல்லிகொண்டிருக்க, ஈழத்தில் அமைதிப்படை மோதலில் இருக்க, மத்தியில் மண்டல் கமிஷன், அத்வாணி ரதம் என பரபரப்பு காட்சிகள் இருக்க‌, எல்லா ஊடகத்திலும் குஷ்பூ தனி பக்கம் பிடித்துகொண்டிருந்தார்.
அவருக்கு முழு பக்கம் கொடுத்து பத்திரிகைகள் எழுதின. அது அந்நாளில் பெரும் அதிசயம். டிவி, ரேடியோ, பத்திரிகை, சுவரொட்டி என எங்கு திரும்பினாலும் குஷ்பூ மயமாக இருந்தது தமிழகம்.
உடை முதல் நகைகள் வரை அவர் பெயரில் வந்தன. இப்படி இரு வருடங்கள் சென்றன, தமிழகத்தில் சூரியன் குஷ்பூ பெயரோடுதான் உதித்தது, மழை குஷ்பூ பெயரோடுதான் பெய்தது, அலைகடல் கூட குஷ்பூ என்றுதான் கத்தியது.
வருடம் 16 படத்தின் வீச்சு எந்த அளவு இருந்ததென்றால், இன்னமும் இருக்கிறதென்றால் குமரிமாவட்டம் பத்மநாபபுரம் அரண்மனையே சாட்சி.
மிக மிக அழகான அரண்மனை அது, முழுக்க மரத்தால் கட்டபட்டது, திருவிதாங்கூர் மஹாராஜா மார்த்தாண்ட வர்மன் கட்டிய மர தாஜ்மகால் அது அல்லது மரத்தால் ஆன மைசூர் மாளிகை அது. எல்லா மகாராஜாக்களும் அதனை ரசித்தார்கள், வெள்ளையர்கள் உருண்டு புரண்டு ரசித்தார்கள், இன்றும் கலையழகு மிக்க அரண்மனையில் அதற்கு பெரும் இடம் உண்டு.
உலகபுகழ்பெற்றதால் எல்லா வெளிநாட்டு மக்களும் பார்க்க வருவார்கள். அந்த அரண்மனையின் ஒரு பகுதியில்தான் வருஷம் 16 படம் எடுக்கபட்டது, படம் வெளிவந்தபின் கொஞ்சம் கொஞ்சமாக அது எடுக்கபட்ட இடம் வெளிதெரிந்தது.
அவ்வளவுதான், அந்த மாளிகைக்கு பார்வையாளர் எண்ணிக்கை அதிகரித்தது, இது குஷ்பூ நின்ற இடம், இது குஷ்பூ அமர்ந்த திண்ணை, இது குஷ்பூ பிடித்த தூண் என அதன் அடையாளம் எல்லாம் குஷ்பூ மயமானது
உச்சமாக அரண்மனை குளம், குஷ்பூ குளித்த குளமாயிற்று. இன்றும் அது குஷ்பூ குளித்த குளம் என்றே அறியபடுகின்றது. இன்று சென்றாலும் அங்குள்ள கைடுகள் அரண்மனை வரலாற்றை சொல்லி, மறக்காமல் குஷ்பூ அங்கு படப்பிடிப்பிற்கு வந்ததையும் சொல்லித்தான் முடிப்பார்கள்.
அந்த அரண்மனையில் எத்தனையோ படப்பிடிப்புக்கள் நடந்தன. எத்தனையோ உச்ச நட்சத்திரங்கள் எல்லாம் நடித்தார்கள் ஆனால் அது குஷ்பூவினால் மங்கா அடையாளம் பெற்றது.
இன்றும் அங்கு சென்றால் குஷ்பூ பெயரினைத்தான் உச்சரிப்பார்கள். வருஷம் 16க்கு பின் உச்சம் சென்ற குஷ்பூ அப்படியே உயரத்தில் நின்றார், அவரை மிக பெரும் உயரமாக்கி வானில் மின்ன வைத்தது அடுத்த இரு வருடங்களில் வந்த “சின்ன தம்பி”.
பராசக்திக்கு பின் கலைஞரின் மனோகரா முத்திரை பதித்தது போல , வருஷம் 16 படத்திற்கு பின் சின்னதம்பி தமிழகத்தை புரட்டி போட்டது. குஷ்பூவும் தர்மத்தின் தலைவன், வருஷம் 16 படங்களை விட மெருகேறியிருந்தார், கொள்ளை அழகு அப்பொழுது அவரிடம் அடைக்கலமாகியிருந்தது
1991, ஏப்ரல் 12ம் நாள் சின்னதம்பி ரிலீஸ் ஆனது, நந்தினி கேரக்டரில் குஷ்பூ நடித்திருந்தார். ராதாரவி, மனோரமா, கவுண்டமணி, பிரபு போன்ற பெரும் ஜாம்பவான்களும் அசத்தியிருந்தனர், உச்சமாக இளையராஜா தன் திறமையின் உச்சத்தில் பாடல்களை கொடுத்திருந்தார்.
படம் அப்படி ஒரு வரவேற்பினை பெற்றது. சிவாஜி கணேசனின் சாந்தி திரையரங்கங்கள் சிவாஜி கணேசன் பட கூட்டத்திற்கு கூட அப்படி ஒரு கூட்டத்தை கண்டதில்லை
மிகபெரும் கூட்டம் அலைமோதிற்று. அந்த தேர்தல் காலம், ராஜிவ் கொலை எனும் கொடூர நிகழ்வு, இன்னபிற கொடுமையான காலத்தில் அப்படம் சிக்கிகொண்டாலும், முடங்கவில்லை. அதன் வரவேற்பு அப்படி இருந்தது.
தமிழகத்தை ராஜிவ் கொலைக்காக சிபிஐ, போலிஸ், பெரும் படைகள் தமிழகத்தை முற்றுகையிட, சின்னதம்பி படத்தால் தியேட்டர்களை எல்லாம் முற்றுகையிட்டார் குஷ்பூ
இந்த வினோத காட்சி எல்லோருக்கும் விசித்திரமாய் பட்டது, இதெல்லாம் குஷ்பூ தவிர இன்னொரு நடிகைக்கு சாத்தியமே இல்லை.
எல்லா தமிழகத்தாரும் தங்கள் வீட்டு பெண் எப்படி இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பினை குஷ்பூவில் கண்டிருந்தார்களோ எனும் அளவிற்கு அவருக்கு பெருத்த வரவேற்பு இருந்தது.
தமிழகம் எதிர்பார்த்த பெண்ணாகவே அவரை அணைத்து ஏற்றுகொண்டது, இனி குஷ்பூ இன்றி தமிழக சினிமா இல்லை என்ற நிலையும் வந்தது
அப்படம் அவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. எம்மாதிரியெல்லாம் குஷ்பு கொண்டாடப்பட்டார்?
(பூ பூக்கும்)
Image may contain: 1 person, closeup

குஷ்பூ : 01

குஷ்பூ : 01

அன்றைய பாம்பேயில் செப்டம்பர் 29, 1970ம் நாளன்று அந்த குழந்தை சாதாரண குழந்தையாகத்தான் பிறந்தது, பின்னொரு நாளில் தமிழக பெரும் சர்ச்சைகளுக்கு காரணமாகும் என யாருக்கும் தெரியாது. மூன்று சகோதரர்களுடன் அது தவழ்ந்து வளர்ந்தது. நஜ்மா கான் எனும் தனித்து வாழ்ந்த தாய் அந்த 4 குழந்தைகளையும் வளர்த்து வந்தார்
நக்கத் கான் எனும் பெயரோடு வளர்ந்த அந்த குழந்தை படிப்பில் கெட்டிதான். அப்பொழுதே ஆங்கிலம் அதன் நுனிநாக்கில் விளையாடியது.
நாக்கில் ஆங்கிலம் ஆடியதை விட அந்த குழந்தை முகத்திலே ஒரு வசீகரம் இருந்தது. வட்ட முகமும், குண்டு கன்னமும், ஓளிவீசும் கண்களுமாய் பார்ப்போரை கவர்ந்திழுந்த அந்த முகம், இந்தி திரையுலகத்தோரை அன்றே திரும்பி பார்க்க வைத்தது, ஒரு வித ஈர்ப்பு அன்றே அக்குழந்தையிடம் இருந்தது. விளைவு அது குழந்தை நட்சத்திரம் ஆனது
தர்மேந்திரா, வினோத் கண்ணா, ஹேமமாலினி நடித்த அந்த “பர்னிங் டிரெய்ன்” படத்தில் 10 வயது ஆன அந்த குழந்தை முதன் முதலாக ஒரு பாடலில் நடித்தது. “தெரி காய் சாமீன்” எனும் பாடலில் அன்றே “தெறி”க்க விட்டது அக்குழந்தை ஹேமா மாலினியியோடு நடித்தாலும், தமிழகத்திலிருந்து பாம்பே சென்று ஜெயித்த ஹேமா மாலினி போல பின்னாளில் தமிழகத்தில் தான் ஜொலிப்போம் என்பதெல்லாம் அதற்கு அன்று தெரிந்திருக்க நியாயமில்லை
அதன் பின் 5 வருடம் படிப்பில் கவனம் என இருந்த அந்த அழகு சிலை 15ம் வயதில் கதாநாயகி ஆனது. ஆம் அச்சிறுமி “ஜானு” எனும் படத்தில் துணை கதாநாயகி ஆனார். மிக இளம் வயது என்றாலும் அந்த வட்ட முகமும், குழந்தை சிரிப்பும் குமரி முகமுமாய், மலந்தும் மலராத மலர் போல இருந்த அவருக்கு வாய்ப்புகள் வரதொடங்கின‌. ஆயினும் மாதுரி தீட்சித், ஸ்ரீதேவி போன்ற பெரும் ராணிகள் இருந்த இடத்தில் இந்த புதுமலர் பெரிய இடத்தை அடைய முடியவில்லை
சினிமா என்பது ஜென்ம சனி. பிடித்தால் விடாது. ஒருமுறை கேமரா முன் நடித்துவிட்டால் அந்த பாதையிலே இழுத்து செல்லும், அதன் தன்மை அப்படி. குழந்தை நட்சத்திரங்கள் வளர்ந்து போராடி வருவது அப்படித்தான், கமலஹாசன் அப்படித்தான் உருவானார். இன்னும் ஏராளம் உண்டு. விதி இவரை தெற்கு பக்கம் தள்ளிவிட்டது, தெலுங்கு பக்கம் வந்தார்
“கலியுக பண்டவுலு” எனும் தெலுங்கு படமே அவருக்கு தெற்கே முதல்படம், 16 வயது மங்கையாக, அதிகாலை பனிபோல மென்மையான முகமாக, 3ம்நாள் பிறையாக, தங்க சிலையாக தெலுங்கில்தான் அறிமுகமானார். அது ரிலாசான அன்றே சொன்னார்கள், மான் போல துள்ளிகொண்டும், மயக்கும் சிரிப்புடனும், கொழு கொழு கன்னத்துடனும், கண்களில் குறும்புடனும் அப்பெண் திரையில் ஜொலித்ததை பலர் கணித்து சொன்னார்கள்
“இப்பெண் தெற்கே ஒரு ரவுண்ட் நிச்சயம் ஜொலிக்கும்”.
அப்பெண் சென்னையில் இருந்து கொண்டு வாய்ப்பு தேடினார். 17 வயதில் தன்னந்தனியாக தேடினார். மொழி தெரியாத ஊர், அந்நியமான ஊர். மொழி தெரியாவிட்டாலும், யாரும் தெரியாவிட்டாலும் அவரிடம் பெரும் தைரியம் அன்றே இருந்தது. அந்த தைரியம்தான் சென்னையில் அவரை போராட வைத்தது. தப்பும் தவறுமாக தமிழ்படித்து அவர் தமிழச்சியாக மாற தொடங்கியது அப்பொழுதுதான்.
கொஞ்சமும் அசராமல் போராடினார். அவரின் போராட்டம் ஒரு துணை நடிகைக்கான வாய்பினைதான் பெற்று தந்தது. ரஜினியும் பிரபுவும் இணைந்து நடித்த தர்மத்தின் தலைவன் படத்தின் மூலமாகதான் அவர் தமிழகத்திற்கு வந்தார். மெக்கானிக் ஷாப் முதலாளி வேடம். பாத்திரத்தின் பெயர் தேவி. தன் 18ம் பிறந்தநாளை கொண்டாட அவர் தயாராகிகொண்டிருந்த பொழுது செப்டம்பர் 24, 1988 அன்று திரைக்கு வந்தது அப்படம்
ரஜினி அன்றே மாஸ் ஹீரோ. சுஹாசினியும், பிரபுவும் பெரும் குடும்ப வாரிசுகள் எல்லோரும் அறிந்தது. நாசர் அப்பொழுதே நாயகனில் பிரபலமாகியிருந்தார். அவர்களை எல்லோரும் கொண்டாடியது ஆச்சரியமல்ல, மாறாக அவர்களை ஒதுக்கிவிட்டு இந்த புது முகத்தை ஆச்சரியமாக பார்த்தார்கள். ஒரு விதமான அழகு அவர். அதற்கு முன்பு அப்படி ஒரு அழகான பெண்ணை தமிழகம் கண்டதில்லை. அந்த முகம் அப்படி பிரகாசமாக ஜொலித்தது, கண்களும் கன்னமும் பல நூறு கதைகளை சொன்னது
ரோஜா நிறத்தில் வந்த தங்க சிலையாக அவர் ஜொலித்தார்
தமிழகம் மெல்ல அவர் பெயரை உச்சரித்தது. சிலர் குறும்பாக பார்த்தார்கள். சிலர் வியந்து பார்த்தார்கள். துறுதுறுவான வெண்ணை கட்டி சிலையாக இருந்த அப்பெண்ணின் பெயரை எல்லோரும் உச்சரித்தார்கள்.
“குஷ்பூ” எனும் பெயர் அன்றுதான் தமிழகத்தில் நுழைந்தது, எல்லோர் பார்வையும் அவர் மேல் பதிந்தது. இத்தனைக்கும் மிக சிறு பாத்திரத்தில்தான் அவர் நடித்திருந்தார். பல டைரக்டர்கள், தயாரிப்பாளர்கள் கவனம் அவர் மேல் பதிந்தது. அவர் காட்டில் அடைமழை கொட்டுவதற்கான மேகங்கள் அப்பொழுது கூடின‌
எல்லோர் மனதிலும் சிம்மாசனம் போட்டு அமர அவரும் தயாரானது அந்த தருணத்தில்தான்.
தமிழ் திரையில் எத்தனை நாயகிகள் வந்தாலும் வெகு சிலரே ரசிகர்கள் மனதில் சிம்மாசனமிட்டு நிரந்தரமாக அமர்வார்கள், அஞ்சலி தேவி, பத்மினி, சாவித்ரி, சரோஜாதேவி வரிசை என அந்த வரிசை மிக சிறியது
அந்த மிக சிறிய வரிசையிலும் குஷ்பூ பெரும் இடம் பெற வழி வகுத்தவர் பாசில். வருடம் 16 என படமெடுத்து அடுத்த வந்த 20 வருடங்களை அவர் நாயகியாக ஆள அவர்தான் அடித்தளமிட்டார். பெரும் திறமைசாலியும், மிக நுண்ணிய ரசனையும் கொண்ட பாசில் தன் படத்தில் குஷ்பூவினை அனுமதிக்காமல் இருந்தால்தான் ஆச்சரியம், மிக சரியாக அந்த கதையில் மிக பொருத்தமாக குஷ்பூவினை பொருத்தினார் பாசில்
குஷ்பூவின் மிக சிறந்த படமான வருஷம் 16 தயாரானது. டெல்லியில் இருந்து கன்னியாகுமரிக்கு வந்த பெண் பாத்திரத்தில் குஷ்பூ மிக அழகாக பொருந்தினார். அதுவரை மலையாள நடிகைகளை கண்டுகொண்டிருந்த தமிழகத்தில் ஒரு மாறுதலுக்காக பாசில் குஷ்பூவினை ஒப்பந்தம் செய்தார்
அது பிப்ரவரி 17, 1989 நிச்சயம் ஒரு சுபயோக தினமாக இருக்க வேண்டும், அன்றுதான் அப்படம் திரைக்கு வந்தது
பெருவெற்றி பெற்ற அப்படம், குஷ்பூவினை எப்படி தமிழகத்தின் சொத்தாக மாற்றியது? எப்படி எல்லாம் குஷ்பூ மங்கா அடையாளம் பெற்றார்?
(பூ பூக்கும்)

[ November 1, 2018 ]

Image may contain: 1 person, smiling, closeup

பகையும் வணங்கும் முகமிது..

தலைவியும் அடிக்கடி விமானத்தில் பறக்கின்றார், அவரோடு விமானத்தில் பயணிப்பது பெரும் பாக்கியமும், வரலாற்று பெருமித நிமிடமும் என என சக பயணிகளும் பைலட்டும் நினைத்து கொள்வதால் அவரின் பயணத்தில் ஒரு சலசலப்புமில்லை…

இந்த முகத்தை கண்ட பின்பும் கோஷம் போட முடியும்? நிச்சயம் முடியாது

பகையும் வணங்கும் முகமிது…

உலகிற்கு கிடைத்த அதிசயம் இன்று

Image may contain: 2 people, people smiling, selfie and close-up

இரட்டை நிலா தோன்றுவது உலகில் ஏற்படும் சில மாற்றங்களுக்கு அறிகுறி என சில மதங்களின் குறிப்புகள் சொல்கின்றன‌

உலகம் இனி கொஞ்சம் விழிப்பாய் இருத்தல் வேண்டும்

(எப்படியோ இரு நிலவு இணைந்த காணற்கரிய காட்சி உலகிற்கு கிடைத்த அதிசயம் இன்று நிகழ்ந்திருக்கின்றது)


விடுமுறை விடபட்டதால் தமிழ் திரையுலகில் வந்த மிக சிறந்த படங்கள் சிலவற்றை பார்த்துவிடுவது என சங்கம் முடிவு செய்திருக்கின்றது

பட்டியலிட்டு சலித்து பார்த்தால், வரலாற்றில் நிலைத்துவிட்ட இந்த 5 படங்களை தவிர ஏதுமில்லை, அவை எந்த படங்கள்?

1) வருஷம் 16
2) சின்னதம்பி
3) அண்ணாமலை
4) சிங்கார வேலன்
5) கிழக்கு கரை

இதை தவிர மிக சிறந்த படங்கள் வரவே வராது


தலைவி வாழ்க…

Image may contain: 1 personஇந்த தமிழக பத்திரிகையாளர்கள் மோடியினை சந்தித்தபொழுது அது புரியவில்லை இப்பொழுது புரிகின்றது

என்ன நடந்திருக்கின்றது?

தமிழக செய்திகளில் பல கட்டுபாடுகளும் , மர்ம மவுனங்களும் தெரியதொடங்கிவிட்டன, கூர்ந்து கவனித்தால் புரிகின்றது

ஆம் அதிரடியாக பேசிகொண்டிருந்தவர்களின் கருத்துக்கள் இப்பொழுது செய்தி ஆக்காமல் தவிர்க்கபடுகின்றது, அவர்களை மக்களிடம் நெருங்கவிடாதபடி பெரும் சதி நடக்கின்றது

இது இப்பொழுது நன்றாக தெரிகின்றது, எதில் தெரிகின்றது என்றால் தலைவி குஷ்பு பற்றிய செய்திகள் இப்பொழுது அதிகம் இல்லை

தலைவி சமூக போராளி , தீவிரமாக இயங்கும் அரசியல் சூறாவளி

மோடி அரசின் மீது சாடல், கோபம் , உண்மைகளை போட்டு உடைத்தல் இன்னும் தார்மீக கோபத்தை வெளிபடுத்திகொண்டே இருப்பார்

கட்சி, சமூக நலம் என தொடர்ந்து கருத்துக்களை சொல்லி கொண்டே இருப்பவர் அவர்

இப்பொழுதெல்லாம் அவர் அறிக்கையினையோ இல்லை அவரின் செய்திகளையோ எந்த ஊடகமும் வெளியிடவில்லை

இது மோடியின் சதி என சங்கம் கண்டிக்கின்றது, தமிழக ஊடகங்களும் இச்சதிக்கு உடன்பட்டுவிட்டன‌

ஏன் இப்படி ஆனது?

எங்கள் தலைவி தன்னிகரற்ற தலைவியாக வளர்ந்துவிடுவார் என்ற அச்சம் பாஜகவிற்கு எற்பட்டாயிற்று, இன்னொரு ஜெயலலிதாவாக அவர் வந்துவிடுவார் என நடுங்குகின்றார்கள்

இதனால் அவரை இருட்டடிப்பு செய்கின்றார்கள், இதற்கு பாஜகவின் ஸ்லீப்பர் செல்லான காங்கிரஸ்காரர்களான திருநாவுக்கரசு போன்றோரும் இந்த சதியில் இருக்கின்றார்கள்

ஆயிரம் கரங்கள் மறைத்து நின்றாலும் சந்திரனை மறைக்க முடியாது, எத்தனை பேர் முயன்றாலும் எவரெஸ்ட் சிகரத்து உயரத்தை குறைக்க முடியாது

அப்படி எங்கள் தலைவியினையும் இந்த சதிகாரர்களால் தடுக்க முடியாது, அவர் மீண்டு வருவார்

இந்த நிலைமாறி தலைவியின் செய்திகள் எல்லா ஏடுகளிலும் வரட்டும், எல்லா டிவிகளிலும் தலைவி பேட்டி இடம்பெறட்டும்

இல்லாவிட்டால் சங்கம் புதிதாக ஊடகம் தொடங்கி தலையின் அறிக்கைகளை அகில உலகெல்லாம் எடுத்து செல்லும் என்பதை தெரிவித்து கொள்கின்றோம்

இந்த அயோக்கிய ஊடகங்களை வன்மையாக கண்டிக்கின்றோம், அவர்களை பயமுறுத்தி தலைவியினை முடக்கலாம் , மக்களிடமிருந்து அவரை விலக்கலாம் என திட்டம் போடும் பாஜகவின் கனவு ஒருநாளும் நடக்காது என்பதையும் தெரிவித்து கொள்கின்றோம்

தலைவி வாழ்க…

நயன் சங்கத்தை கண்டித்து கறுவருக்க பெரும் சபதம் செய்திருந்தாலும்…..

Image may contain: 1 person, close-up

ஊரெல்லாம் நயன் சங்கத்தை கண்டித்து கறுவருக்க பெரும் சபதம் செய்திருந்தாலும் வீட்டுக்குள்ள்ளே நயனுக்கு ஆதரவு பெருகிற்று

மகள் நயனின் தீவிர ரசிகையாகிவிட்டார், தலைவி பற்றி எவ்வளவு எடுத்து சொன்னாலும் ஏறெடுத்து பார்ப்பதில்லை

விவரமறியாத சிறுமி என்பது சரியாகத்தான் இருக்கின்றது

இந்த விஷயம் Babu Rao என்பவருக்கும் Chandran Kannanஎன்பவருக்கும் தெரியாமல் போககடவது என அந்தோணியாருக்கு ஆட்டுகிடா நேர்ந்திருகின்றேன்


ஏதோ ஒரு பாடலில் அவ்வையார் சொல்வார், நாளுக்கு ஒரு தேர் செய்யும் தச்சன், வாரமுழுக்க இருந்து ஒரு தேர் சக்கரம் மட்டும் செய்து.. என ஒரு தேரின் வலுவினை சொல்வார்

அப்படியாக இந்த அழகிய தேரினை படைக்க‌ அந்த பிரம்மனுக்கு இரண்டாயிரம் ஆண்டுகள் ஆகி இருக்கலாம்

இல்லை ஒரு யுகமும் ஆகியிருக்கலாம்


கோலமாவு கோகிலா எல்லாம் கோவில் சிலை ஆக முடியாது

Image may contain: 1 person, close-up

ரஜினி படத்தில் திரிஷா இணைந்தார் : செய்தி

ஆட்சியினை ரஜினி பிடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்தால் அவரோ திரிஷாவினை பிடித்திருக்கின்றார்

இந்த வயதான ரஜினிக்கு பொருத்தமான ஒரே நடிகை குஷ்பு, அண்ணாமலை படத்தின் வெற்றிக்கு தலைவிதான் காரணம்

அது இன்னும் புரியாமல் திரிஷாவினை எல்லாம் அழைக்கின்றார் ரஜினி

மனிதருக்கு அரசியலை போலவே சினிமாவும் புரியவே இல்லை போலிருக்கின்றது

எப்படியோ ரஜினிக்கும் சமீபகால படம் எதுவும் ஓடவில்லை, திரிஷாவின் நிலை அதை விட மோசம்

இரண்டும் இணைந்தால் எப்படி இருக்கும்?


காற்றில் உயரபறக்கும் தூசு கோபுரத்தை விட உயர்ந்தது ஆக முடியாது

நீரில் அடித்து செல்லபடும் கோலமாவு கோவில் சிலை ஆகிவிட முடியாது

கோலமாவு கோகிலா எல்லாம் கோவில் சிலை ஆக முடியாது

முன்னொரு காலத்தில் கமலஹாசனுக்கு கடும் போட்டி என பிரதாப் போத்தனை கூட சொன்ன திரையுலகமிது அது நயனை எல்லாம் லேடி சூப்பர் ஸ்டார் என சொல்வதில் ஆச்சரியமில்லை

நல்லி எலும்பெல்லாம் நான்கு லோக நாயகியிடம் நிற்க முடியுமா?

Image may contain: indoorஇந்தியாவில் இருந்து காணாமல் போன விஷயங்களில் ஷாஜகானின் புகழ்பெற்ற‌ மயிலாசனமும் ஒன்று, அது இன்னும் மீட்கபடவில்லை

ஏன் தெரியுமா?

அதில் அமர ஒரு தகுதி வேண்டும், அந்த தகுதி தலைவி ஒருவருக்கே உண்டு

விரைவில் சங்கம் ஈரானில் தேடி அந்த மயிலாசனத்தை மீட்டு தலைவியினை அதில் அமரவைக்க வேண்டும்

அதுதான் அந்த மயிலாசனத்திற்கு பெரும் கவுரவம்