சங்கத்து சாபம் சும்மா விடாது

இந்த மார்ச் 15 ஒரு நாசமாய் போன நாள், கருப்பு நாள், கலங்க வைத்த நாள்

ஆம் அன்றொருநாள் இதே நாளில்தான் ஜூலியஸ் சீசர் எனும் பெரும் சாகசக்காரன் தான் நம்பியவர்களால் கொல்லபட்டிருக்கின்றான்

ஐரோப்பாவின் நவீன நாகரிகத்தை அவனே தொடங்கி வைத்தான், இன்றளவும் ஐரோப்பாவின் அரச அமைப்பும் பல விஷயமும் அவனையே பின்பற்றுகின்றன‌

அந்த மாபெரும் பராக்கிரமசாலி வீழ்த்தபட்டான், அவனை நம்ப வைத்து உடனிருந்தவர்களே கொன்றனர்

முதல் இரு வெட்டு முதுகில் விழுந்ததும் நண்பர் புரூட்டஸிடம் ஓடினான், அந்த சண்டாளன் வாளை பாய்ச்சினான்

நீயுமா புரூட்டஸ்.. என சொல்லி சரிந்தான் சீசர், அவன் மனம் முதல் செத்தது, உடல் பின்புதான் செத்தது

நல்லவர்களும் வல்லவர்களும் தாங்கள் நம்பியவர்களாலே ஏமாற்றபட்டனர் என்பது வரலாறு, இயேசுபிரான் கொலை வரை அதுதான் நடந்தது

அந்த விதிக்கு குஷ்புவும் தப்பவில்லை

புரூட்டஸ் நீயுமா? என்பதை ராகுல் நீருமா? என சங்கம் உரக்க கேட்கின்றது

ஜூலியஸ் சீசர் கொல்லபட்ட நாளிலே தலைவிக்கு நிகழ்ந்த இந்த மாபெரும் அநியாயம் கண்டு உலகமே தலை குனிந்து நிற்கின்றது

அலங்கார தேர் ஊர்வலம் வரவில்லை என்றால் அது என்ன திருவிழா? வெற்று கும்பல் கூட்டது

எப்படியும் போகட்டும், எல்லாம் நாசமாய் போகட்டும்..

தேர்தலும் மண்ணாங்கட்டியும் மண்ணாய் போகட்டும் , சங்கத்து சாபம் சும்மா விடாது