தமிழக மக்கள் விழித்து கொள்ள வேண்டும்.

தமிழக நிலவரம் கொரோனாவில் மகா மோசமாக சென்று கொண்டிருப்பது சாதரண விஷயமாக படவில்லை. உயிர்பலிகள் அதிர வைக்கின்றன‌

சென்னை இதுவரை மகா சிக்கல்களை, மிரட்டல்களை சந்தித்த நகரம் அல்ல. முதல் உலகபோரில் ஜெர்மன் நீர்மூழ்கி குண்டு வீசியதை தவிர எந்த மிரட்டலும் வந்ததில்லை

மழை வெள்ளம் மட்டும் மிரட்டும், வேறு எந்த பெரும் மிரட்டலும் பாதிப்பும் இதுவரை வந்ததில்லை

ஆனால் கொரோனா சென்னை வரலாற்றிலே மிகபெரும் சவாலாக உருவெடுத்து நிற்கின்றது, திரும்பும் இடமெல்லம் கொரோனா என அது மிகபெரும் திகிலை கொடுக்கின்றது. அணுவெடிப்பு வேகத்தில் அதன் பரவல் இருப்பது மிகபெரும் ஆபத்து.

குழந்தைக்கு கொரோனா , 17 வயது மாணவி மரணம் இன்னும் சில பிரமுகர்கள் ரகசிய சிகிச்சையில் இருக்கின்றார்கள் என்பது கலங்க வைக்கும் விஷயம்

சென்னையிலும் இதர தமிழகத்திலும் மிக வேகமாக‌ பரவி கொண்டிருக்கும் கொரொனா தொற்று உலகை அதிர வைக்கின்றது, இந்திய அரசே சிறிது பதற்றத்தில் இருக்கின்றது.

மெல்ல உலகம் இயங்க ஆரம்பிக்கும் நேரமிது, ஜூன் 15க்கு பின் சர்வதேச போக்குவரத்துகள் தொடங்கபடலாம்

ஆனால் இனி உலகெல்லாம் இயங்க ஆரம்பிக்கும் பொழுது சென்னை துண்டிக்கபடும், சர்வதேச விமானங்களோ கப்பலோ சென்னைக்கு வராது.

இது பெரும் முடக்கத்தை கொடுக்கும், இன்னும் சில நாட்களில் சென்னையின் கொரோனா அளவு மிக கடுமையாக இருக்கும் என்கின்றார்கள், அப்பொழுது சென்னை முழுவதும் துண்டிக்கபடலாம்

வேறு வழி இருப்பதாக தெரியவில்லை

தமிழகத்தின் இதர பகுதிகளிலும் நிலமை சரியாக இல்லை, ஒருவித வேகமான கொரோனா அலை தெரிகின்றது.

நிச்சயம் மிக பெரிய நடவடிக்கை எடுத்து இன்னும் இரு வாரங்களுக்கு மகா கடுமையான இறுக்கமான ஊரடங்கை அறிவிக்க வேண்டிய நேரமிது ஆனால் அரசு தயங்குகின்றது

அரசு வருமானம் பாதிக்கும், மாநில அரசு இயங்கமுடியாது எனும் சுயநலத்தில் மிகபெரிய விலை கொடுக்க தயாராகின்றது பழனிச்சாமி அரசு

இருந்து பாருங்கள் இது சாதாரணமாய் தீராது

இந்நிலையிலும் மிக வருத்தமளிக்கும் அல்லது கண்டிக்கதக்க விஷயம் என்னவென்றால் பழனிச்சாமி சென்னை முடங்கி தவிக்கும் நிலையிலும் ஏதும் நடக்காதது போல உலகின் விமான நிறுவணங்களுக்கு அழைப்பு விடுப்பதும், தொழில் நிறுவணங்களுக்கு அழைப்பு விடுப்பதாகும்

நேற்று ஸ்பேஸ் எக்ஸ்ஸின் ராக்கெட் பற்றி படித்திருப்பார் போல, உடனே அந்த கம்பெனி நிறுவணர் எலோன் மாஸ்க்குக்கு ஒரு கடிதம் எழுதுவிட்டார், “அன்புடையீர்,பாரில் சிறந்த மாநிலமான தமிழ்நாட்டில் ஏன் நீங்கள் கம்பெனி திறக்க்க கூடாது?”

ராக்கெட் டாஸ்மாக் சரக்கில் பறக்கும் என நினைத்திருப்பார் போல‌

சென்னை மகா மோசமான நிலைக்கு தள்ளபடுகின்றது, தமிழகத்தின் இதர சூழலும் சரியாக இல்லை, மிக பெரும் நெருக்கடியில் மாநிலம் சிக்க போகின்றது

பொறுப்பற்ற மக்கள் இருந்தால் அரசு உறுதியாய் இருந்து அடக்குதல் வேண்டும், அரசு பொறுப்பற்று இருந்தால் மக்கள் பொங்கி திருத்தவேண்டும்

இரண்டு தரப்புமே பொறுப்பற்று இருந்தால் ஒரு மாநிலம் எப்படி நாசமாகும் என்பதற்கு தமிழகமே சான்று

பலத்த எச்சரிக்கை தமிழகத்துக்கு விடபடும் நேரமிது, புயல் ஆபத்துக்கெல்லாம் ஓடி ஓடி பாதுகாக்கும் தமிழகம், கொரோனாவில் கோட்டை விட்டது மட்டுமல்ல இன்னும் ஆபத்தை உணர மறுப்பது சோகம்

இனி சர்வதேசம் இயங்கும் பொழுது துண்டிக்கபடுவது சென்னையாக மட்டும் இராது, திருச்சி மதுரை போன்ற விமான நிலையங்களாக இருக்கலாம் தூத்துகுடியாகவும் இருக்கலாம்

இப்பொழுது முடக்கினாலும் சென்னை மீள சில மாதமாகும் என்பதால் நிலமையின் வீரியம் மகா ஆபத்தானது

சென்னை போலவே சிக்கியிருக்கும் இன்னொரு நகரம் மும்பை, அங்கு இனி பருவமழை தொடங்க போகின்றது, மும்பையின் மழை சாதாரணாம் அல்ல‌

அந்த கொடும் மழையில் தனித்திருந்த்தல் சமூக இடைவெளி சாத்தியமில்லை, மும்பைக்கு விடபட்டிருக்கும் எச்சரிக்கை சிகப்பு எச்சரிக்கை

தமிழக மக்கள் இனியும் விழித்து கொள்ளாவிட்டால் அதற்கு கொடுக்க போகும் விலை மிக மிக அதிகமாக இருக்கலாம்

நாம் அழுதோம், மனம் விட்டு அழுதோம்.

கொரோனா வந்ததில் உலகின் பல இடங்களில் அமைதி நிலவுவது போல பாலஸ்தீனத்திலும் நிலவுகின்றது

உலகில் பெரும் கொடுமை இழைக்கபட்ட இடம் பாலஸ்தீனம், அந்த மக்கள் செய்த பெரும் பாவம் பாலஸ்தீனத்தில் பிறந்தது அதுவும் இஸ்லாமியராக பிறந்தது

ஒரு வாதத்துக்கு வைப்போம், திடீரென மதுரையில் 4 குண்டர்கள் புகுந்து இது ஹேமநாதபாகவதருக்கு பாண்டிய மன்னன் கொடுத்த பூமி , எங்கள் பூமி எல்லோரும் கிளம்புங்கள் என்றால் என்னாகும்?

அந்த பைத்தியகாரதனமான 4 குண்டர்களுக்கு ஆதரவாக மேற்குலகில் இருந்து சிலர் வந்து நியாயம் பேசி கோடுபோட்டு ஊரை பிரித்து கொடுத்தால் என்னாகும்?

அந்த வலிதான் பாலஸ்தீனியரின் வலி

அவர்கள் வலிக்கு பெரும் காயங்களும் தோன்றி கொண்டே இருக்கின்றன, பாலஸ்தீனில் எண்ணெய் இல்லை, எண்ணெய் இருக்கும் அரபு தேசங்கள் அவர்களுக்கு பெரும் ஆதரவாய் இல்லை என ஏகபட்ட இல்லை

அந்த மக்கள் அனுதினமும் வெடிகுண்டு வெடிப்பாலும் துப்பாக்கி சத்ததாலும் பாதிக்கபட்டு வாழ்பவர்கள், ஒரு கட்டத்தில் அதுவே இயல்பு வாழ்வுமாயிற்று

கொரோனா காலம் என்பதால் கொஞ்சம் அமைதி நிலவுகின்றது, குண்டு வீச்சு இல்லாத, அழுகுரலை கேட்காத பாலஸ்தீன குழந்தைகள் வீட்டுக்குள் சிரிக்கின்றன‌

ஆம், கொஞ்சம் நிம்மதியாக சிரிக்கின்றன, அது தற்காலிகம் என்றாலும் அந்த பிஞ்சுகள் சிரிப்பது என்பது தெய்வம் மகிழும் தருணம்

கொரோனா எனும் கொடும் வியாதியின் இன்னொரு பக்கம் இப்படியும் இருக்கின்றது. அறிவு, ராணுவம், பணம் எனும் இறுமாப்பின் உச்சியில் விஞ்ஞானத்தி உச்சியில் ஆடிய இஸ்ரேலை கொரோனாதான் கொஞ்சம் அடக்கியிருகின்றது

மேற்குலகம் அஞ்சி ஒடுங்கி கதறி சாகும் நேரம் என்றாலும் அதற்கு கண்ணீர்விட்டு அழுது மேற்காசியா பக்கம் வந்தால் அங்கு வீட்டுக்குள் பாதுகாப்பாக சிரிக்கும் அரபு குழந்தைகளை காணும் பொழுது கண்ணீரை மீறிய மகிழ்ச்சி வருகின்றது

வாழ்வின் முதன் முதலாக அவை சிரிக்கின்றன, அக்கம்பக்கம் மக்கள் அழாமல் சாகாமல் இருப்பதை பார்த்து சிரிக்கின்றன‌

நமக்கும் மெல்ல புன்னகை வருகின்றது..

ஆனால் மேற்குலகம் சாகும்பொழுது இந்த குழந்தைகள் சிரிப்பதில் மகிழ்கின்றாயா என்றால், அக்குழந்தைகள் அழும் பொழுது ரத்தத்தை பார்த்து அழும்பொழுது யார் அழுதார்கள்?

நாம் அழுதோம், மனம் விட்டு அழுதோம்

அர்ஜூனா உலகில் நன்மையும் நான் தீமையும் நான் , எல்லாம் என்னாலே உண்டாவது மானிடனுக்கு அது புரியாது என கீதையில் கண்ணன் சொன்ன வாக்குகளை நோக்க வேண்டிய நேரமிது

சீனாவில் இருந்து வெளியேறும் கம்பெனிகளை இந்தியா வளைக்க முடியுமா?

சீனாவில் இருந்து பல கம்பெனிகள் வெளியேறுகின்றது, அவற்றை இந்தியா வளைத்து பிடித்து இங்கு இழுத்து போட வேண்டும் என்ற கூக்குரல்கள் அதிகம் கேட்கின்றன‌

நல்லது, ஆனால் ஒரு விஷயத்தை எல்லோரும் மறக்கின்றார்கள். சீனாவின் பெரும் பலம் நிலையான அரசாங்கம், அதுவும் சக்தி மிக்க அரசாங்கம்

மாறாத சட்டங்கள், நிலையான அரசு, நினைத்த மாத்திரத்தில் நினைத்த வசதிகளை செய்துதரும் அரசு, சீனாவில் பெரும் முதலீடு செய்தால் ஆபத்தில்லை , எத்தனையாயிரம் கோடி முதலீடு என்றாலும் தொழில் நடக்க அரசு உறுதி, வீண் போராட்டமில்லை, தொழிற்சாலை இல்லை

மகா முக்கியமாக மாநிலத்துக்கு 10 கட்சி இல்லை, சாதி சங்கம் இல்லை, இன்னும் எந்த தொந்தரவுமில்லை. தொழில் அதன் போக்கில் நடக்கும் எல்லாவற்றுக்கும் உத்திரவாதம்

இதுதான், அந்த அரசு கொடுக்கும் நிலைத்த நம்பிக்கைதான் எல்லாவற்றுக்கும் காரணம், அங்கு அரசு மாறாது சட்டம் மாறாது, இதர இம்சைகள் இல்லை

இந்தியா அப்படி அல்ல ஏதோ இப்பொழுதுதான் 6ம் ஆண்டாக நிலைத்த அரசு இருக்கின்றது, அதுவாலும் மாநிலங்களுக்குள் பெரும் அதிகாரம் செலுத்த முடியாது

இங்கு எதுவும் நிலையல்ல, ஆட்சி நிலையல்ல, மாநிலம் நிலையல்ல, மீறி நுழைந்தாலும் கமிஷன் கேட்கும் அமைச்சர்கள் கட்சிகள், இது போக ஏரியா தாதாக்கள் அவர்களை சமாளிக்காவிட்டால் வரும் தொழிலாளர் சிக்கல் என ஏக ஏக சிக்கல்கள்

இதுதான் ஒரு கட்டத்துகு மேல் அந்நிய முதலீடு குவியவில்லை

பல்லாயிரம் கோடி முதலீடு செய்து தொழில்தொடங்க வருபவன் இதையெல்லாம் யோசிக்காமலா வருவான்?

மகராஷ்ட்ராவில் எண்ணெய் நிலையம் என அறிவித்துவிட்டு மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் இடையில் கால்பந்தாய் மிதிபட்டது சமீபத்திய சவுதி கம்பெனி வரலாறு

உடன்குடி அணல்மின் நிலையம் அமைக்க வந்து மாநில அரசு அமைச்சர்கள் கேட்ட தொகையில் கடலில் நீந்தியே சீன கம்பெனி அலறி அடித்து ஓடிய கதை எல்லாம் இங்கு உண்டு

இதனால் இங்கு முதலில் பல திருத்தங்கள் அவசியம், மீறி வம்பு செய்யும் “போராளிகள்” “மனித உரிமை” என ஒளிந்து கொள்ளும் இம்சைகள், “மாநில உரிமை” என கிளம்பும் கோஷ்டிகள் என எல்லாவற்றையும் இரும்பு கரம் கொண்டு ஒடுக்கும் வழிகள் வேண்டும்

அதை செய்துவிட்டுத்தான் சீனாவில் இருந்து வெளியேறும் கம்பெனிகளை அழைக்க வேண்டும், மாறாக அய்யயோ பறவை பறக்கின்றது இங்கே வலையிட்டு பிடியுங்கள் என்றால் அது அர்த்தமுமில்லை பலனுமில்லை

இங்கே பறவை வந்து தங்கவும் பலுகி பெருகவும் மிக பொருத்தமான சூழலை அமைத்தால், தனக்கு ஆபத்தில்லை என பறவையினை உணரவைத்தால் அது தானாகவே இங்கு வரபோகின்றது.

அமெரிக்காவின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் புத்தாக்க குழு.

சர்வ சக்திவாய்ந்த அமெரிக்கா கிட்டதட்ட 100 ஆண்டுகளுக்கு பின் பெரும் வீழ்ச்சியினை காண்கின்றது, அதன் வல்லமை மிக்க கரங்களும், பெரும் அதிகாரமும் வீழ்ந்து கொண்டிருக்கின்றது

ஆனால் முடிந்தவரை போராடுவார்கள் அல்லவா? சும்மா இருபார்களா என்ன?

அமெரிக்காவின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் புத்தாக்க குழு ஒன்றை டிரம்ப் உருவாக்கியுள்ளார். அவர்கள் பெரும் வழிகாட்டலை கொடுப்பார்கள், புது புது ஆலோசனைகளை கொடுப்பார்கள், அந்த ஆலோசனைகளில் சிறந்ததை அமெரிக்க அரசு செயல்படுத்தும்

இந்த குழுவில் அமெரிக்காவின் ஆக சிறந்த அறிவாளிகள், பெரும் திறமையாளர்கள் என தேடி சலித்து எடுத்திருகின்றார்கள், அதில் இந்தியர் 6 பேர் இடம் பெற்றிருப்பதுதான் உலக கவனத்தை ஈர்த்திருக்கின்றது

ஆம் சுந்தர் பிச்சை (கூகுள்), சத்யா நாதெல்லா (மைக்ரோ சாப்ட்), அரவிந்த் கிருஷ்ணா (ஐ.பி.எம்), சஞ்சய் மெஹ்ரோத்ரா (மைக்ரான்), அஜய் பங்கா , முகர்ஜி (மாஸ்டர் கார்டு), ஆகிய ஆறு இந்தியர்கள் இடம்பெற்றுள்ளனர்.

ஆம் இவர்கள் நேரடியாக டிரம்புக்கே ஆலோசனை கூறும் பெரும் அதிகாரம் வழங்கபட்டிருகின்றது

இவர்களில் பெரும்பாலானோர் பிராமணர்கள், ஒரு காலத்தில் இந்திய அரசர்கள் தங்கள் ஆலோசகர்களாக வைத்திருந்த பிராமணர்களின் வாரிசுகள்

“இயங்கும் தேசத்தில் அவனவனுக்கு ஆயிரம் வேலைகள் , எல்லோரும் எல்லா விஷயத்திலும் கவனம் செலுத்தி யோசிக்க முடியாது, சமூகத்துக்கும் அரசுக்கும் என்ன வேண்டும்? என்ன தேவை? என்ன செய்ய வேண்டும் என ஒதுங்கி இருந்து பார்க்க ஒருவன் வேண்டும்.

எல்லாவற்றையும் அவன் கவனித்திருந்து பார்க்க வேண்டும், நிறைய யோசிக்க வேண்டும், சமூகத்தை உற்று பார்த்து கொண்டே, அது குழம்பும் பொழுது அவன் தாங்கிபிடிக்க வழிகளை சொல்லவேண்டும்

ஆம் மிக உயர்ந்த இடத்திலிருந்து சமூகத்தை பார்த்து கொண்டிருப்பவனே பார்ப்பான்.

சமூகம இயங்க, நாடு செழிக்க என்ன செய்யவேண்டும் எனும் திட்டம் அவனிடமே உண்டு, அவனே முழுவதும் சமூகத்தை உணர்ந்து பார்த்து கொண்டே இருக்கின்றான்”

அன்று இந்தியா இந்த வரிகளை பின்பற்றித்தான் தன் பொற்காலத்தின் உச்சியில் இருந்தது, உலகமே இந்தியாவினை தேடி வந்தது

இன்று அந்த வரிகளை அமெரிக்கா செய்து கொண்டிருக்கின்றது, இனி அந்நாடு மீண்டெழும் என்பதில் சந்தேகமில்லை

இதே பிராமணன் இங்கே இருந்து ஆலோசனை சொல்லும் வரை தமிழகம் பெரும் பொன்விளையும் பூமியாய் இருந்தது, கிரேக்கர் ரோமர் இன்னும் யார் யாரெல்லாமோ வந்து தமிழகத்தை கண்டு வியந்து நின்றனர்

ராம்சாமி கோஷ்டியின் அழிச்சாட்டியத்தில் பல பிராமணர் வெளிநாடு சென்றாயிற்று, இதோ மேலை நாடுகள் வாழ்கின்றன.

இந்த புத்தாக்க குழு அமெரிக்காவினை நிச்சயம் உயர்த்தும், கொஞ்ச காலத்தில் அமெரிக்கா தன் வலிமையினனி மீள பெறும்

அதன்பின் என்ன செய்வார்கள் தெரியுமா?

வெள்ளை மாளிகையின் ரகசிய அறையில் இருக்கும் ராம்சாமி, அண்ணா இன்னும் சிலரின் படங்களுக்கு மாலையிட்டு மஞ்சளிட்டு வணங்குவர் அமெரிக்க அதிகார பீடத்தார், ஆம் அவர்கள் இல்லையென்றால் பிராமணன் ஏன் கடல்கடக்க போகின்றான்? அமெரிக்காவினை வாழவைக்க போகின்றான்?

ஆக அமெரிக்காவுக்கும் ஐரோப்பாவுக்கும் ராம்சாமி, அம்பேத்கர் கோஷ்டி செய்திருப்பது கொஞ்சமல்ல..

பிராமணன் அண்டிய அமெரிக்கா வாழ்கின்றது, அவனை விரட்டிய மண் “கரணாவுக்கு செத்தால் 1 கோடி” என பம்பர் பரிசு அறிவித்து கொண்டிருக்கின்றது.

உலகை அச்சுறுத்தும் நிகழ்வுகள் சூழ தொடங்கிவிட்டன.

உலகை அச்சுறுத்தும் நிகழ்வுகள் சூழ தொடங்கிவிட்டன, இதுவரை தைரியமாக இருந்த பெரும் அதிகார பீடங்கள் கூட அசைய தொடங்கிவிட்டன‌

அமெரிக்காவில் 7 லட்சம் பேருடன் வெறியாட்டம் ஆடும் கொரோனா, வழக்கம் போல நேற்றும் 2.5 ஆயிரம் பேரை பலிவாங்கிவிட்டது

ஆம் வழக்கம் போல‌

ஐரோப்பாவில் நிலமை அப்படியே நீடிக்கின்றது அதன் பொருள் கொரோனாவின் தாக்கம் குறையவே இல்லை

மிக மிக அச்சமூட்டும் செய்தி, கொரோனாவின் தாயான சீனா தாங்கள் இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டோம் என சொன்ன சில நாட்களில் ஒரே நாளில் ஆயிரம் பேரை காவு கொடுத்துவிட்டது

கூட்டுக்குள் இருந்த டைனோசர் வெளிவந்ததை போல அரண்டு கிடக்கின்றது சீனா

இனி பெரும் சிக்கலை உலகம் சந்திக்கலாம், நம்பிக்கைகள் எதிர்ப்பார்ப்புகள் எல்லாம் மறுபரீசிலனை செய்யபடுகின்றன, சீனாவிடமிருந்து எதுவும் வாங்ககூடாது என அஞ்சி நடுங்குகின்றது உலகம்

உலக நாடுகளின் அச்சத்திலும் நடுக்கத்திலும் இந்தியா ஓரளவு நம்பிக்கையினை தன் மக்களுக்கு கொடுத்திருக்கின்றது, இந்திய நிலை எவ்வளவோ பரவாயில்லை

22 லட்சம் பேரை பாதித்து, 1.5 லட்சம் பேரை கொன்று 50 ஆயிரம் பேரை இரு நாளுக்குள் பறிக்க கழுத்தை நெறித்து கொண்டு இருக்கின்றது கொரொனா, விஷயம் தீர்வதாக தெரியவில்லை

இது தொடர்ந்து நீடிக்க உள்ளூர் தொழில்களை தவிர வேறு எந்த இறக்குமதி ஏற்றுமதியிலும் கொஞ்சநாளைக்கு இந்தியா கை வைக்காமல், தனித்து தவமிருந்து, வேலி கட்டி நிற்பது நலம் என்கின்றது ஆய்வு

இது இந்தியாவின் பொருளாதாரத்துக்கு சிக்கல் என்றால் சிக்கல் ஆனால் மக்கள் உயிரை காக்குமா என்றால் காக்கும்

இந்தியர் முன் இரு தேர்வுகள் உண்டு, ஒன்று சிரமத்தை எதிர்கொண்டு உயிரை காப்பது அல்லது பொருளாதாரம் முக்கியம் என்று சீனா இப்பொழுது சிக்கி கிடப்பது போல் சிக்கி கிடப்பது

எது வேண்டுமோ அதை இந்தியர் எடுக்கட்டும்

சீனா யுகானில் இருந்து மக்களை வெளியேற்றும் பொழுது நாம் சொன்னோம், ஒரிடத்தில் இருக்கும் தீயினை ஊரெல்லாம் பரப்புகின்றார்கள் என்றோம்

பொருளாதாரம் முக்கியம் என சீனா செய்த மகா அவசர நடவடிக்கை அவர்களுக்கே வினையாகிவிட்டது, ராகுல்காந்தி என்பவரிடம் ஆலோசனை கேட்டார்களோ என்னமோ?

திமுக தொண்டர்களை பார்த்து பரிதாபபடுவதை தவிர ஏதும் செய்யமுடியாது.

Image may contain: 1 person, indoor

நிச்சயம் அவர் கோடீஸ்வரர், அவரின் அப்பாவும் மாமன் மச்சானும் கோடீஸ்வரர்கள், அதனால் கோடிகளில் அவர் டீல் பேசுவது ஒன்றும் விஷயமே அல்ல‌

ஆனால் கொரோனாவில் இறந்தவர்களுக்கும் ஒரு கோடி அரசு கொடுக்க வேண்டும் என்பதுதான் அவரின் பொறுப்பற்றதனத்தை காட்டுகின்றது

உலகெல்லாம் போர்காலம் போல் மக்கள் இறக்கும் நேரம் , பெரும் வல்லரசுகளே மூச்சுவிட திணறும் நேரம் எவ்வளவு அசால்ட்டாக செத்தவனுக்கு ஒரு கோடி என சொல்லிகொண்டிருக்கின்றார் இந்த மனிதர்

அப்பொழுதும் எம்.எல்.ஏ சம்பளத்தை கொடுக்க மனமில்லை, அரசு ஊழியர் சம்பளத்தை குறைக்க சொல்ல மனமில்லை, எதுவுமே சொல்லாமல் ஆளுக்கு ஒரு கோடி என்பது எப்படி சாத்தியம்?

நல்லவர் தீவிரவாதத்தால் கொல்லபட்ட கோவை மக்கள் 196 பேருக்கு ஆளுக்கொரு கோடி என சொன்னாரா? இல்லை ராஜிவோடு கொல்லபட்டவர்களுக்கு சொன்னாரா?

இன்றும் ஆங்காங்கே நடக்கும் கலவரங்களில் செத்தவர்களுக்கு சொன்னாரா?

கன்னியாகுமரி வில்சன் எனும் காவலருக்கு சொன்னாரா? முன்பு கோவையில் கொல்ல்பட்ட செல்வராஜ் என்பவருக்கு சொன்னாரா?

அதெல்லாம் சொல்லமாட்டார், நாட்டுக்காக செத்தாலும் சொல்லமாட்டார், தேசவிரோதிகளால் கொல்லபட்டாலும் சொல்லமாட்டார்

ஆனால் கொள்ளைநோயில் செத்தால் சொல்வார், அதுவும் எதிர்கட்சியாக இருந்தால் சொல்வார் என்பதெல்லாம் அபத்தம்

நோய்களில் இம்மாநிலத்தில் சாவோர் ஏராளம், விபத்துக்களிலும் புற்றுநோய் இதயநோய் இன்னும் பல நோய்களில் அனுதினமும் சாவோர் ஏராளம்

கொரோனா நிச்சயம் ஒரு விபத்து போன்ற கொள்ளை நோய், அதற்கு ஒரு கோடி என்பது எவ்வகையில் நியாயம்

நல்ல வேளையாக இரு வருடங்களுக்கு முன் ஸ்டாலின் ஒன்றை சொல்லவில்லை இரு மாதங்களுக்கு முன்பும் சொல்லவில்லை

ஆம், கருணாநிதி இறந்தபொழுது முதியவர் வருமானத்தில் வாழ்ந்த அந்த ஏழை குடும்பத்துக்கு 5 கோடி நிதி என சொல்லவில்லை, அன்பழகன் இறந்தபொழுதும் 1 கோடி நிதி என கோரவில்லை

அவ்வகையில் தமிழகத்துக்கு நல்லது

நல்லவர் கொரொனாவில் மருத்துவர் செத்தால் 1 கோடி என சொல்லட்டும் , இல்லை 10 கோடி கொடுங்கள் என தமிழகமே சொல்லும் அவர்கள் படும் அவஸ்தை அப்படி, செய்யும் தியாகம் அப்படி

நர்ஸுகளுக்கு கொடுக்க சொல்லுங்கள் அர்த்தமுணு

காவலருக்கு, துப்புறவு தொழிலாளருக்கும் கொடுத்தாலும் அர்த்தமுண்டு

இதையெல்லாம் இவர் ஏன் சொல்லவில்லை என்றால் சொல்லமாட்டார், அதற்கெல்லாம் பொது நல அபிமானமும் தியாக உணர்வும் இன்னும் பல நல்ல குணங்களும் வேண்டும், அவருக்கு அது சுத்தமாக வராது

இவர் ஒருமாதிரியான ஆசாமி என்பது தெரியும், ஆனால் யாருமற்ற தனி அறையில் மாஸ்க் போட்டு கொண்டு ஒருவர் வீடியோ கான்பரன்ஸில் பங்கேற்றதில் இப்பொழுது முழுவதுமாக அவரைபற்றி தெரிகின்றது

ஆன்லைன் மூலமாக கொரொன பரவும் என நம்புவார் போலிருக்கின்றது

திமுக தொண்டர்களை பார்த்து பரிதாபபடுவதை தவிர ஏதும் செய்யமுடியாது.

(ஒருவேளை பழனிச்சாமி கொரோனா நோயால் செத்தால் 1கோடி என அறிவித்தால் என்னாகும்? அதில் சிக்கினால் உயிர்தப்பலாம் எனும் நிலையிருக்கும் போது என்னாகும்?

அவனவன் கொரோனாவினை வலிய இழுக்க ” “டாக்டர் கொரோனான்னு சர்டிபிக்கேட் கொடுங்க டாக்டர், உங்களுக்கு 10% கமிஷன் டாக்டர்” என கிளம்ப மாட்டானா?

அந்த நாடகத்தை திமுக எதிர்பார்க்கின்றது, நாடக கோஷ்டிக்கு வேறு என்ன தெரியும்)

உலகம் எப்பொழுதும் ஒரு ஆட்டத்தை ஆடும்.

உலகம் எப்பொழுதும் ஒரு ஆட்டத்தை ஆடும், அது அந்த நகரம் அல்லது நாடு செய்யும் காரியங்களை பொறுத்தது

மாபெரும் வல்லமையுடன் விளங்கும் அந்நகரங்கள் ஆடாத ஆட்டமெல்லாம் ஆடும், பின் ஒரு கட்டத்தில் ஏதோ ஒரு கோபத்தின் வெளிப்பாட்டில் பெரிதாக அடிவாங்கி கொண்டிருக்கும்

பாபிலோன், எகிப்தின் நகரங்கள், டமாஸ்கஸ், தாஷ்கண்ட், காபூல் , உலன்பட்டார் (மங்கோலியா) என் ஆசிய நகரங்களாகட்டும். பாரீஸ், ரோம் உட்பட ஐரோப்பிய நகரங்களாகட்டும் எவ்வளவு உயர்ந்து ஒளிவீசுமோ அந்த அளவு அழிவுகளையும் சந்திக்கும்

அப்படி 400 ஆண்டுகால பாரம்பரியம் கொண்ட நியூயார்க் முதல் முறையாக பேரழிவினை சந்திக்கின்றது, கண்ணுக்கு தெரியாத சக்தி அதை நொறுக்கி தள்ளுகின்றது

பாபிலோன் போன்ற பெரு நகரங்களின் வீழ்ச்சியினை அது சந்திக்கின்றது

எமக்கு நன்றாய் நினைவிருக்கின்றது, பண்டைய பெருமையான பாபிலோனை மறுபடியும் கட்டி எழுப்பினான் சதாம், தன் பாரம்பரியத்தை மீட்கும் அவன் ஆர்வம் அப்படி இருந்தது

யூதன் ஜெருசலேமினை எழுப்பினால் கர்த்தரின் ஆசீர்வாதம், ஆனால் சதாம் பாபிலோனை எழுப்பினால் அது இறுமாப்பு என்பது கிறிஸ்தவ அழிச்சாட்டிய கும்பலின் நம்பிக்கை

வளைகுடா போர் மற்றும் 2004ல் நடந்த போரில் அமெரிக்கா சதாமின் கனவான பாபிலோனை நொறுக்க்கி தள்ளியது

“பார்த்தீர்களா , பாபிலோன் கடவுளின் சாபமிக்க நகரம், 4 ஆயிரம் ஆண்டுக்கு முன்பே கடவுள் சபித்தார், அற்ப சதாம் அதை நீக்க முடியுமா?, பாபிலோனை தொட்டதே சதாமின் அழிவு” என உரக்க கத்தினார்கள்

நியூயார்க்கின் அழிவு பாபிலோனில் அவர்கள் செய்ய ஆரம்பித்த சில காரியங்களின் வெளிப்பாடாக இருக்கலாம் என்கின்றது இந்த பிரமீடு கோஷ்டி ஆய்வுகள்

ஆம் அலெக்ஸாண்டரும் நெப்போலியனும் எகிப்து பிரமீடில் கைவைத்த பின்பே பெரும் அழிவுகளை சந்தித்தார்கள் , அப்படி பாபிலோன் எனும் ஈராக்கின் பூமியில் கைவைத்த சில சூட்சும சக்திகளின் சாபம் அமெரிக்காவினை மிரட்டுகின்றது என கிளம்புகின்றது கோஷ்டி

இந்த நேரம் நாம் சும்மா இருந்தால் எப்படி?

காசி எனும் மகா புண்ணிய நகரில் கைவைத்ததாலும், சோம நாதபுரி போன்ற ஆலயங்களை இடித்து கொண்டு செல்லபட்ட கொள்ளை செல்வத்தால் வாழ நினைத்த ஆப்கானிஸ்தான் இன்று தரித்திர தேசமாய் அனுதினமும் ரத்தத்தில் குளிக்கும் தேசமாய் அலைபாய்கின்றது, அதன் சாபங்கள் அவர்கள் காசி பூமியில் மன்னிப்பு கேட்கும் வரை தீராது..

உலகுக்கே வழிகாட்டுகின்றது இந்தியா.

Image may contain: indoor

உலகம் ஒரு விஷயத்தில் இந்தியாவினை ஆச்சரியமாக பார்க்கின்றது, விஷயம் அவ்வளவு தீர்க்கமானது

ஆம், உலகின் மிகபெரிய ரயில்வே என அழைக்கபடும் இந்திய ரயில்வே கொரோனா காரணமாக சேவையினை நிறுத்தியது நமக்கு தெரியும், அதைவிட மகா முக்கிய காரியம் ஒன்றை செய்கின்றது

ரயில் பெட்டிகளை மகா அவசரமாக கொரோனா மருத்துவ பெட்டிகளாக மாற்றுகின்றது, ஒரு பெட்டிக்கு 16 பேர் தங்கலாம், 20 ஆயிரம் பெட்டிகள் தயார்

ஆக இந்தியாவில் 3.2 லட்சம் பேர் ரயிலிலே சிகிச்சை பெறலாம்

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் இது நடமாடும் மருத்துவமனை, டெல்லி முதல் கன்னியாகுமரி வரை எங்கே கொரோனா அதிகமென்றாலும் இந்த ரயில் பறந்து செல்லும், நோயாளிகளை ஏற்றி அப்புறபடுத்தும்

நோயாளியினை தேடி மருத்துவமனையே செல்லும் ஏற்பாடு இது, அட்டகாசமான உத்தி, கொரோனா காலத்தில் மிக சரியான ஏற்பாடு

3.2 லட்சம் பேர் வரை ரயிலிலே எங்களால் சமாளிக்க முடியும் என இந்தியா சொல்லியிருப்பதை கண்டு உலகம் கைதட்டி வரவேற்கின்றது

உலகுக்கே வழிகாட்டுகின்றது என மகிழ்ந்து சொல்கின்றது சர்வதேச ஊடகங்கள்

உலகின் மிகபெரிய ரயில்வேயினை, மிகபெரும் மக்கள் தொகை கொண்ட இத்தேசத்துக்கு எப்படி பயன்படுத்த வேண்டுமோ அப்படி பயன்படுத்துகின்றார் மோடி

உலகம் அம்மனிதனை மகா வித்தியாசமாக பார்த்து உற்சாகமாய் கைதட்டுகின்றது. உலகுக்கே வழிகாட்டுகின்றார் மோடி

(இந்நாட்டிலும் சில தேசவிரோதிகள் ரயிலை கொரோனா மருத்துமனையாக்கினால் பின்னாளில் பயணிகளுக்கு பரவுமென கோர்ட்டுக்கு சென்றது, கோர்ட்டில் மத்திய அரசு பல விளக்கங்களை கொடுத்துள்ளது..

அதுவும் இது முன் தயாரிப்பு மட்டுமே என்றும், இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை என்றும் நிலமை மிக மிக மோசமானால் மட்டுமே வரும், இன்னும் ஏக விஷயங்களை தெரிவித்துள்ளது

நாட்டுக்கு அத்தியாவசிய நேர உதவி தேவைபட்டால் கோர்ட்டே இருக்காது எனும் நிலையில் இதையெல்லாம் கணக்கில் எடுக்க கூடாது)

நாகரீகம் எனும் பெயரில் எவ்வளவு விஷயங்களை தொலைத்துவிட்டோம்.

கிறிஸ்துவத்தை ஏற்ற முதல் ரோமை மன்னன் கான்ஸ்டான்டைன் இது 4ம் நூற்றாண்டு வாக்கில் நடந்தது, அதிலிருந்து ஐரோப்பாவில் மிக விமரிசையாக அனுஷ்டிக்க பட்ட நாள் பெரிய வியாழன்

உலகபோர் காலத்திலும் பாதிக்கபடாத அந்த பெரிய வியாழன் இப்பொழுது கடுமையாக பாதிக்கபட்டு வாடிகனில் கூட வழக்கமான அனுசரிப்பு இல்லை

இன்று அந்த‌ பெரிய வியாழன் , அதாவது இயேசுபிரான் தான் மரணிக்கபோவதை உணர்ந்து தன் சீடர்களுக்கு பிரியாவிடை கொடுத்த நாள்.

அந்த யூத பண்டிகையின் கலாச்சாரம் அது, அதை தன் சீடர்களுக்கான கடைசி விருந்தாகவும் மாற்றினார் இயேசு

அன்று தன் கடைசி நாளில் சீடர்களின் கால்களை தானே கழுவினார், அப்படி இந்நாளில் கத்தோலிக்க ஆலயங்களிலும் அச்சடங்கு நடக்கும், போப் ஆண்டவரே தன் சீடர்களின் பாதங்களை கழுவுவார்

கடைசி பிரியாவிடையினை இயேசு அற்புதமாக செய்தார், விவேகானந்தர் வாழ்வின் கடைசியிலும் இந்த சாயல் உண்டு

இதே பாதம் கழுவுதல் என்பது இந்துக்களிலும் உண்டு, சாமி சிலையினை சுமப்போர், கோவில்களுக்கு செல்வோர் பாதங்களை மஞ்சள் நீரினால் கழுவுவார்கள்,. காடு கடந்து வரும் பாதங்களுக்கு கிருமி நாசினி என ஒரு புறம் , உச்சமான பக்தி என ஏக காரணம் உண்டு

இந்த பெரிய வியாழன் பொதுவாக கத்தோலிக்க ஆலயங்களிலே சிறப்பு, இந்த பிரிவினைகள் எல்லாம் இதில் வராது, கேட்டால் இதனை செய் என பைபிளில் உண்டா என சீறிவிட்டு வானம் பார்த்து பரவசம் அடைவார்கள்

ஒருமாதிரியான கூட்டம் அது, ஏதும் அதனை மீறி கேட்டால் நாம் சாத்தான் அல்லது ஆர்.எஸ்.எஸ் ஆகிவிடுவோம்

கிறிஸ்தவ கத்தோலிக்க‌ ஆலயங்களில் அதனை நினைவு கூறும் விதமாக பல அசனம் எனப்படும் விருந்து நடைபெறும். அதிலும் கத்தோலிக்க ஆலயங்களில் இயேசு செய்தது போல பாதம் கழுவும் சடங்கும் நடைபெறும்.

முன்பெல்லாம் கிறிஸ்தவ கிராமங்களில் வீடுவீடாக துக்கபாட்டு படித்து ஊர்வலமாக வருவார்கள், வீட்டில் இருக்கும் நெல் அல்லது உளுந்தினை மக்கள் கொடுப்பார்கள், அது இந்த கிறிஸ்தவ விரத காலங்களில் தெரு தெருவாக ஏழை மக்களுக்கு கஞ்சியாக ஊற்றபடும்.

இது போக எல்லா விவசாய வீடுகளிலும் இந்த காலங்களில் குறிப்பாக பெரிய வியாழன் காலத்தில் இந்த உணவு உபசரிப்புகள் மிக பலமாக இருக்கும்.

இப்பொழுதெல்லாம் இவை மாறிவிட்டன, ஏதோ ஆலய சம்பிரதாயத்திற்கு நடத்தபடும் சடங்குகளாக அவை தோற்றமளிக்கின்றன.

காரணம் விவசாயி பசிபோக்க தெரிந்தவனே அன்றி வியாபாரம் செய்ய தெரியாதவன், விவசாயம் குறைந்த பின் சகலமும் வியாபாரநோக்கில் பார்க்கபடும் காலம், பத்து பேருக்கு உணவளிக்க எவ்வளவு அரிசி வேண்டும் என கணக்கு பார்த்தவன் விவசாயி,

ஆனால் அதனால் எவ்வளவு செலவாகும்? அதனால் தனக்கு என்ன லாபம் என பார்க்கும் வியாபார காலம் இது.

விவசாயி, வியாபாரி வித்தியாசம் இதுதான். விவசாயம் அழிந்ததும் வியாபாரி வாழ்வதும் இப்படித்தான்

இப்படியான வெள்ளந்தி விவசாய காலம் மறைந்த பின், இந்த அசன வைபவங்களும் கொஞ்ச கொஞ்சமாய் மறைந்துகொண்டிருக்கின்றன. சில இடங்களில் கேட்டரிங் சிஸ்டமாம், இன்னும் வரும் காலங்களில் இவை நின்றாலும் நின்றுவிடும்

அசனம் என்றால் சனத்தின் எதிர்மறை என்பார்கள், அதாவது திமுக அதிமுக போல, சொந்தமில்லாத சனம். கிறிஸ்தவ பாஷையில் அந்நியர்கள்.

ஆனால் இன்று பெரும்பாலான அசனங்களில் அந்நியர்களை பார்க்கமுடியாது, சபையினை சார்ந்தவர்கள் மட்டும் உணவருந்துவார்கள், அந்நியர்களுக்கு பெரும்பாலும் இடமில்லை,

அதாவது கிறிஸ்தவமில்லா கிறிஸ்தவம்.

நீங்கள் பந்தியமரும்பொழுது குருடரும் சப்பாணியும் நோயாளியோடும் அமருங்கள் என்ற அந்த போதனை எல்லாம் யார் காதிலும் கேட்பதில்லை.

விவசாயத்தின் வீழ்ச்சி பல மாறுதல்களை கொண்டுவந்துவிட்ட காலம், அக்காலத்தில் வீட்டு அரிசியும், விறகடுப்பும், உருளி போன்ற வார்ப்பு பாத்திரத்தில் மணக்க வைக்கபடும் கூட்டுவகைகளும் பெரும் ருசிகொடுத்தன.

எல்லாவற்றிற்கும் மேல் வாழை இலையிட்டு ஒரு மனமார்ந்த பரிமாறும் தன்மை அந்த சுவையினை கூட்டிற்று

அந்த அசன சோற்றினை ஒருமுறை உண்டால் ஈஸ்டர் வரைக்கும் வயிறு அப்படி நிறைந்திருக்கும், பெரிய வெள்ளி விரதங்களை அசால்ட்டாக கடக்கலாம்

அக்கால உணவின் சுவையும், மணமும் அப்படி இருந்தது

அக்காலம் ந‌ன்றாய் இருந்தது. இன்று தலைகீழாக நின்றாலும் அச்சுவை வருவதில்லை

காரணம் அன்று எல்லாமே அங்கே விளைந்த பொருட்கள் அரிசி முதல் காய்கறி எல்லாமே கிராம உற்பத்தி, விறகு அடுப்பு, பாத்திரம் எல்லாவற்றிற்கும் மேல் கிராம கைபக்குவமும் இருந்தது

இன்று விலையரிசியும், கலப்பட பருப்பும், என்றோ பறிக்கபட்ட காய்கறிகளும்,அலுமினிய பாத்திரங்களும் அக்கால சுவையினை கொடுப்பதே இல்லை,

எனினும் மிகச்சில கிராமங்களில் பழம் பாரம்பரிய அசனம் நடக்கின்றது என்கின்றார்கள் அந்த கிராமங்கள் கொடுத்துவைத்தவை.

எங்கள் பக்கம் வைக்கும் அந்த சம்பா அரிசி சோறு, அக்கால பருப்பு சாம்பாரும், தேங்காய் எண்ணெய் கத்தரிக்காய் பச்சடி போன்ற கூட்டும் நாவில் நின்றுவிட்ட சுவைகள்

எங்கு தேடினாலும் அது கிடைப்பதே இல்லை, எவ்வளவு பெரும் வித்தகர்கள் சமைத்தாலும் அந்த ருசி வரவே இல்லை. சுவையினை விடுங்கள் மணம் கூட வருவதில்லை

தாளிக்கும் மணமே ஊரெல்லாம் பரவி பந்திக்கு தயார் என அறிவித்த காலங்கள் அவை

இன்று அதெல்லாம் சுத்தமாக இல்லை..

உணவுபொருட்கள், பாத்திரங்கள், அடுப்பு என பலவும் மாறிவிட்ட உலகில் அக்கால சமையல் முறைகளும் மாறிவிட்டது நன்றாக தெரிகின்றது, அந்த மக்கள் தலைமுறை தலைமுறையாக கொண்டுவந்த அந்த சுவையினை இந்த தலைமுறை தொலைத்துவிட்டது..

நாகரீகம் எனும் பெயரில் நல்ல சமையல் உட்பட‌ எவ்வளவு விஷயங்களை தொலைத்துவிட்டோம்..

அந்த காலங்கள் அருமையானவை, அவர்கள் ரசித்து, ருசித்து வாழ்ந்திருக்கின்றார்கள். ஏக்க பெருமூச்சுடன் விட்டுவிடலாம்.

அந்த காலங்கள் இனி வாரா.

ஆனாலும் ….

நீங்கள் பந்தியமரும்பொழுது குருடரும் சப்பாணியும் நோயாளியோடும் அமருங்கள் என்ற அந்த கிறிஸ்தவ போதனை எந்த கிறிஸ்தவன் காதிலும் கேட்பதில்லை.

அவர்களே சமைத்து அவர்களே உண்டு ஆனால் கிறிஸ்து எல்லா மக்களுக்காகவும் உலகை மீட்க வந்தார் என குதிப்பார்கள்

அதனால்தான் என்னவோ கொரொனா வந்து ஒரு மண்ணாங்கட்டி அனுசரிப்பும் வேண்டாம் என ஆலயங்களை மூடிவிட்டதோ என்னமோ

டிரம்பே கந்த சஷ்டி கவசம் படித்தாலும் படிக்கலாம்.

Image may contain: 1 person

பிரேசிலில் கொரோனா பரவுகின்றது, கொரோனாவுக்கென மருந்தே இல்லை.

டெங்கி காய்சல போன்றவற்றுக்கும் மருந்தே இல்லை

இந்த டெங்கி காய்ச்சலை பாராசிட்டமால் கொடுத்து கொடுத்து குறைப்பது போல, கொரோனாவுக்கு எய்ட்ஸ் மருந்து மற்றும் மலேரியாவுக்கான மருந்தை கொடுத்து குணபடுத்த முயற்சிக்கின்றார்கள் இதில் ஓரளவு பலன் உண்டு

இந்த மலேரியாவுக்கான மருந்தில் ஒன்றுதான் ஹைட்ரோகுளோரோயின், அமெரிக்கா கேட்டதும் இதுதான் இந்தியா இலங்கைக்கு கொடுத்ததும் இதுதான், இப்பொழுது பிரேசில் கேட்பதும் இதுதான்

இதில் பிரேசில் அதிபருக்கு அறிவு இருந்திருக்கின்றது, மகா கில்லாடியும் சாதுர்யமும் மிக்கவர் அவர், அன்னார் எப்படி கேட்டார் தெரியுமா?

“அன்புக்கும் கருணைக்கும் வீரத்துகும் உதாரணமான பகவான் ராமனின் நாட்டை ஆளும் மோடியே

ராமாயணத்தில் லட்சுமணன் மயக்கமுற்று விழுந்தபொழுது அனுமன் மூலிகை மலையினை தூக்கி வந்து காத்தாரே, அப்படி எமக்கு மருந்து அனுப்பி காப்பாற்ற கூடாதா?

ராமன் தன்னை நம்பிய எல்லோரையும் காத்தானாமே, ராமனின் நாடு சகோதர நாடான எங்களை காக்க கூடாதா?”

இப்படி கேட்டபின் மத்திய அரசு என்ன செய்யும் , ராமனை போல “ஏ பிரேசிலே இலங்கையோடு இருவரானோம், ரஷ்யாவோடு மூவரனாமோம், அமெரிக்காவோடு நால்வரானோம், உன்னோடு ஐவரானோம்” என சொல்லி கண்ணீரை துடைத்து கொண்டது.

ஆக இந்திய அரசிடம் எப்படி பேசினால் காரியமாகும் என உலக நாடுகள் அறிந்து, இப்பொழுது அவசரமாக ராமாயணம், மகாபாரதம் எல்லாம் படிகின்றார்கள்

பிரேசில் அரசு ராமாயண காட்சியினை சொன்னதை அடுத்து, கிருஷ்ணன் குசேலன் கதை இல்லை கிருஷ்ணன் பலராமன் கதை, கிருஷ்ணன் அர்ச்சுணன் கதை இல்லை ஏகலைவன் கதை என எதையாவ்து சொல்லி மருந்து கேட்க ஜெர்மன், பிரான்ஸ் போன்ற நாடுகள் அவசரமாக மகாபாரதம் படிகின்றன‌

ஆக உலகையே இந்து புராணங்களை படிக்க வைத்துவிட்டது கொரோனா, விரைவில் டிரம்பே கந்த சஷ்டி கவசம் படித்தாலும் படிக்கலாம்.

“காக்க காக்க இந்தியா காக்க‌
நோக்க நோக்க மோடி நோக்க..”