கோஹினூர் வைரத்தை மீட்போம்

ஒரு துரதிருஷ்டத்தின் அடையாளம். 02

காகதீய பேரரசு தென்னகத்தின் உச்சத்தில் இருந்தது, இன்றளவும் அதன் சாதனை பெரிது, கோஹினூர் வைரம் கிடைக்கபெற்று கொஞ்சகாலத்தில் சரிந்தது.
அதன்பின் மாலிக்காபூர் டெல்லி எடுத்துசெல்ல, அதுவரையில் மிக பலம்பொருந்திய கில்ஜி அரசர்களில் மிக முக்கியமானவரான அலாவுதீன் கில்ஜி சிக்கலில் மாட்டினார், அதாவது வடக்கே மங்கோலியரிடம் அவர் பெரும் எதிர்பினை சந்திக்க வேண்டி இருந்தது.
அவர் காலத்திற்கு பின் டெல்லியினை ஆண்ட லோடியிடம் அது சிக்கியது, ஆனால் சொற்ப காலத்திலேயே, மொகலாயரான பாபரிடம் ராஜ்ஜியத்தை இழந்தார் லோடி.
பாபரும் டெல்லியில் பெரும் எதிர்ப்பினை சந்நித்தார், ஆனால் திரும்பிசெல்லும் திட்டம் இல்லை. அரசை ஸ்தாபித்த அவருக்கு பெரும் சிக்கல் மகன் ஹூமாயுனின் வடிவத்தில் வந்தது, பெரும் கடவுள் நம்பிக்கையாரான அவர், மகன் உயிருக்கு பதிலாக தன் உயிரை எடுக்க மன்றாட அப்படியே நடந்தது. அதாவது நிறைவான மரணம் இல்லை.
அதன் பின் ஹூமாயுன் இந்த வைரத்தினை வைத்திருக்க, ஷெர்ஷாவிடம் ஆட்சியினை இழந்து ஓடி திரிந்தார், பாபரின் மகனாக இருந்தும் விதி அவரை ஓடவிட்டது, இக்காலத்தில் வைரம் பாரசீகம் சென்றது. இதன் பின் ஹூமாயுன் மறுபடிம் பேரரசன் ஆனார்.
வைரத்தை வாங்கிய பாரசீக மன்னனின் ஆட்சி குலைந்தது, பின் தக்காண நிஜாமிடம் விற்கபட்டது. கொஞ்சநாளில் கடும் சிக்கலில் மாட்டிய நிஜாம் அதனை ஷாஜகானிடம் வழங்கினார்.
இந்தியாவின் சாலமோன் எனும் அளவிற்கு கட்டக்கலையில் சாதித்து கொண்டிருந்தவர் ஷாஜகான், அவரின் ரசனை அப்படி. கொஞ்சநாளில் ஒளரங்கசீப்பினால் படாதபாடு பட்டு, சிறையில் கைதியானார். நெஞ்செல்லாம் ஆற்றாமையும், கண்ணெல்லாம் ஏக்கமுமாக நொந்து மறைந்தார்.
அதன்பின் டெல்லி முகமது மன்னரை படாத பாடு படுத்தி வைரத்தை பாரசீகம் கொண்டு சென்றார் நாடிர் ஷா. இரண்டாம் அலெக்ஸாண்டர் எனும் அளவிற்கு பராக்கிரமசாலி, ஆனால் உள்வீட்டு தகராறால் பாகுபலிபோல வஞ்சகமாக கொல்லப்ட்டார்.
அதன்பின் சீக்கிய மாமன்னனிடம் வந்தது வைரம், ஒப்பற்ற தலைவன் ரஞ்சித்சிங் அதனை கொண்டாடினார், ஆனால் 59 வயதில் திடீர் நோயில் மறைந்தபின் அது ஆங்கிலேயர் வசமானது.
அது பிரிட்டன் அரச குடும்பத்திற்கு சென்றபின் அங்கும் குழப்பங்கள் தோன்றின, பிரிட்டன் அரசு கொஞ்சம் கொஞ்சமாக அதிகாரம் இழந்தது. உலகத்தினை ஆண்ட, சூரியன் மறையாத சாம்ராஜ்யம் பக்கிங்ஹாம் அரண்மனைக்குள் முடக்கபட்டது.
இன்றைய ராணி எலிசபெத் காலத்தில் அது இந்திய அரசுடன் வழக்கினை சந்திக்கின்றது.
இப்படியாக அதன் துரதிருஷ்ட வரலாறு பெரிது, மீட்டே திருவோம் என இந்திய கலாச்சார அமைப்புக்கள் அரசு ஆதரவுடன் களமிறங்குகின்றன. மீட்டுவிட்டால் என்ன நடக்கும்? பொதுவாக இந்த வைரம் வைத்திருப்பவர்களை வீழ்த்தும் துரதிருஷ்டம் உள்ளதாக சொல்லபடுவதால் இந்தியாவில் அரசியல்வாதியோ அல்லது தொழிலதிபரோ தொடகூட சாத்தியமில்லை.
ஆதலால் திருச்செந்தூர் வைரவேல், மரகத லிங்கம் வரிசையில் இந்த வைரம் நிச்சயம் சேராது.
தஞ்சாவூர் கோயில் செண்டிமெண்டிற்கே அஞ்சி ஓடுபவர்கள், இந்த வைரத்தின் கதை தெரிந்தால் அருகில் செல்வார்கள்? செல்லமாட்டார்கள். ஆனால் இந்தியாவின் பெரும் அடையாளம் இந்த வைரம்.
தென்னகம் அப்படியான வைரங்களை கொடுக்கும் பகுதியாகத்தான் இருந்திருக்கின்றது, கோல்கொண்டா போன்ற பகுதிகள் மட்டும் அல்ல. களக்காடு மலையிலும் முன்பு நீலக்கல் வைரம் அபூர்வமாக கிடைத்தாக சில செய்திகள் உண்டு.
எப்படியோ அந்த வைரம் பாஜகவினரின் சாதனையாக மீட்டெடுக்கபட்டால் அதன் ராசி அவர்களை அழித்துகட்டிவிடும் என்பதால் கொண்டு வந்தால் நாட்டுக்கு மிக நல்லது
முற்றும்..
No automatic alt text available.

கோஹினூர் வைரத்தினை மீட்போம்

ஒரு துரதிருஷ்டத்தின் அடையாளம். 01

நாட்டில் ஏதாவது செய்கின்றார்களோ இல்லையோ, தற்போதைய மத்திய அரசிற்கு நாட்டிற்கு வெளியே ஏதாவது செய்வதில் அலாதி பிரியம். அப்படித்தான் கோஹினூர் வைரத்தினை மீட்போம் என கிளம்பி இருக்கின்றார்கள்.
இப்பொழுது தொல்லியல் துறையும் தகவல் அறியும் சட்டமும் நீதிமன்றத்தில் முட்டி கொண்டிருக்கின்றது, நாட்டை விட்டு வைரம் எப்படி வெளியே போனது என கிளம்புகின்றார்கள்
மீட்க கிளம்பியவர்கள் இப்பொழுது எப்படி வைரம் லண்டன் சென்றது என கிளம்பிவிட்டதுதான் கொடுமை
அந்த வைரத்தினை மீட்பது அவ்வளவு எளிதா? என தெரியவில்லை. காரணம் லண்டனின் அனைத்து கலை பொருளும் எகிப்து பிரமிடு, அரேபியா,இந்தியா என சுருட்டியதாக இருக்கும், எல்லாம் திரும்ப‌ கொடுக்க ஆரம்பித்தால் குதிரை வண்டி கூட மிஞ்ஞாது என்பது அவர்களுக்கும் தெரியும். இப்பிரச்சினை கிளம்பும் பொழுதெல்லாம் அது பாகிஸ்தானுக்கு சொந்தமானது (அவர்கள் எடுத்த இடம் லாகூர்) என கிளப்பிவிடுவது பிரிட்டிசார் ஸ்டைல்.
இது மத்திய அரசிற்கும் தெரியும், எப்படியாவது பாகிஸ்தானுடன் உரசாமல் இவர்களால் அரசியல் செய்யமுடியாது, வேறு எந்தவகை அரசியலும் தெரியவில்லை. என்ன செய்வது? இதனை இழுத்தால் பாகிஸ்தான் வரும், இமேஜினை வளர்க்கலாம்.
ஆட்சிக்கு வந்தால் காஷ்மீரின் 370ம் சிறப்புபிரிவினை ரத்துசெய்வோம் என முழங்கியவர்கள், உயர் நீதிமன்றம் நாக்கை மடக்கி, விரலை ஆட்டி எச்சரித்தபின் 80,000 கோடி வளர்ச்சிதிட்டம் என மாறிவிட்டார்கள் அல்லவா? அப்படித்தான் இவர்கள். சரி இவர்கள் பிரிட்டனிடமும் பின் பாகிஸ்தானிடமும் மல்லுகட்டி பின் வாய்மூடி அமைதியாகும் முன் கொஞ்சம் வைரத்தினை பார்க்கலாம்.
விலை உயர்ந்த கல்தான் வைரம், ஆனால் சில நம்பமுடியாத நம்பிக்கைகளை கொண்டது, எல்லா கற்களையும் எளிதாக வாங்கும் இந்திய சமூகம் வைரத்திற்கு மட்டும் ஆயிரம் கட்டுப்பாடுகளை விதித்திருந்தது, அப்படியல்லாமல் வாங்கினால் வைரம் அதன் உரிமையாளரின் வம்சத்தை அழித்துவிடும் என்பார்கள்.
அதற்கு பெரும் உதாரணம்தான் கோஹினூர் வைரம்.
அது தென்னிந்தியாவின் கோல்கொண்டா சுரங்கத்தில் கிடைத்தது என்பார்கள், சாதாரண வைரத்தின் அளவு 8 கேரட் என்றால் இது கிடைக்கும்பொழுது இருந்த அளவு 200 கேரட் அளவுக்கு இருந்தது, அதாவது சிட்டுகுருவி முட்டை சாதாரண வைரம் என்றால் வான்கோழிமுட்டை இந்த வைரம்.
தென்னிந்தியா வைரங்களுக்கு அக்காலத்தில் பெயர் பெற்றது, பின்னர் தென் ஆப்ரிக்காவில் கிடைக்க ஆரம்பித்ததால் வெள்ளையர் கண் அங்கு சென்றுவிட்டது, இல்லை என்றால் தென்னிந்தியாவின் எல்லா பக்கமும் தோண்டிபார்த்திருப்பார்கள் வெள்ளையர்கள்.
இந்த வைரத்தின் வரலாறு மிக பெரிது, தலைவர் கவுண்டமணி சொல்வது போல, இந்த காரை யார் யாரெல்லாம் வச்சிருந்தாங்க தெரியுமா? என்பது போல அதன் வரலாறு மிக பெரியது, சுருக்கமாக சொன்னால் அதன் 900 வருட நாடோடி பயணம் மட்டும் தனி புத்தகம் 10 எழுதலாம்.
ருத்ரம்மா கதையில் பார்த்தோம் அல்லவா? காகதீய பேரரசு, அவர்களின் ஆட்சியில் ஒரு அம்மன் சிலை தலையினை வாரங்கல் பக்கம் அலங்கரித்துகொண்டிருந்தது அது. மாலிக்காபூர் தென்னகம் வரும்பொழுது (இவர்தான் இன்றைய தெலுங்கு வந்தேறிகள் பிரச்சினையின் பிதாமகன், இவர் கிருஷ்ணா நதியில் விழுந்து செத்திருந்தால் இன்று பாரதிராஜாவின், சீமானின் ஒப்பாரிக்கு வேலை இல்லை) இதனை கொள்ளையிட்டு டெல்லிக்கு கொண்டு சென்றான், கில்ஜியின் அரண்மனையினை அது அலங்கரித்தது.
பின் குவாலியர் மகாராஜாவிடம் (ராஜஸ்தான் முதல்வர் வசுந்திராவின் குடும்பம்) கொஞ்சநாள் இருந்தது, அதன் பின் இப்ராஹிம் லோடி பிடுங்கி கொண்டார். டெல்லிக்கு முதன் முதலில் பீரங்கியுடன் வந்த பாபரிடம் பின் இந்த வைரம் சரணடைந்தது.
அதன் பின் ஹூமாயுன் கொஞ்சகாலம் தடுமாற இந்த வைரம் அண்டை நாடான பாரசீகம் அதாவது ஈரான் அரசனிடம் சென்றது, அதன் பின் அந்த வம்சம் நிலை குலைய ஒரு வைர வியாபாரி மூலம் தக்காண நிஜாமினை அடைந்தது. (பார்த்தீர்களா அன்று வைரத்தை வாங்க கூட ஒரு வெள்ளை பணக்காரன் இல்லை, இன்றைய நிலை என்ன?)
இந்த காலகட்டத்தின் இதன் பெயர் “பாபரின் வைரம்”.
நிஜாம் மாமன்னன் ஷாஜகானுக்கு அதனை அளித்தார், அதனை தன் காலத்திற்கு பின் தாஜ்மகால் அருகே ஒரு கருப்புதாஜ்மஹால் கட்டி அதில் இதனை பதிக்க வேண்டும் என ஷாஜகான் விரும்பி இருந்தார். ஆனால் ஓளரங்க சீப் அட்டகாசத்தில் அவர் சிறையில் தள்ளபட்டார், அங்கு தாஜ்மஹால் நோக்கி ஜன்னல் ஓரம் அமர்ந்திருக்கும் ஷாஜகான், அந்த கட்டடத்தின் அழகினை, இந்த வைரத்தில் பிரதிபலித்து கண்ணீர் விட்டுகொண்டிருந்தார்.
தாஜ்மஹால் உருவம் இந்த வைரத்தில் தெரிந்தால் எப்படி இருக்கும்? அதனை பார்த்து அழவா தோன்றும்? என்ன செய்வது துன்பத்தில் இன்பம், இன்பத்தில் துன்பம் என்ற நியதிக்கு மன்னனும் விதிவிலக்கல்ல.
உண்மையில் ஓளரங்கசீப் ஒரு வித்தியாசமான மன்னர், அவரின் எளிமை அப்படி. மற்றவர்கள் என்றால் இதனை விட்டிருப்பார்கள்? தலைக்கு மேல் ஒரு ஸ்டாண்ட் வைத்து அதன்மேல் இதனை வைத்துகொண்டு அலைந்திருப்பார்கள்.
ஆனால் அவுரங்கசீப் அந்த வைரத்தையும் கண்டு கொள்ளவில்லை, மயிலாசனத்தையும் கண்டுகொள்ளவில்லை , ஒரு மாதிரியான ஆசாமியாஅக இருந்திருக்கின்றார்
ஒளரங்க சீப்பிற்கு பின் சொல்லிகொள்ளும் பரம்பரைகள் இல்லை, எல்லாம் எங்க தாத்தா பாட்டன் யார் தெரியுமா? என்றே காலத்தை கழித்துகொண்டிருந்தன, அப்பொழுது பாரசீக புயல் அதாவது இரண்டாம் அலெக்ஸாண்டர் என்ற மாவீரன் கிளம்பினார்.
மேற்கே சென்றால் ஓட்டமான் துருக்கியர் தொலைத்துவிடுவார்கள், வடக்கே ஒன்றுமில்லை, மாவீரன் என்ன செய்வான், டெல்லி மீது பாய்ந்தான்.
அவர் நாடிர் ஷா அல்லது நாடர் ஷா (“நாடார் சங்கத்து சங்கத்து” ஆட்கள் கவனிக்கலாம், முடிந்தால் ஈரானில் எங்கள் வம்சம் என பொளந்து கட்டலாம் யார் கேட்கபோகின்றார்கள்  ) அவன் டெல்லியினை கைபற்றினான், இந்த வைரத்தை முன்னமே அறிந்திருந்தபடியால் ஒரு இடுக்கு விடாமல் தேடினான் ஆனால் கிடைக்கவில்லை.
காரணம் மன்னர் முகமதுவும் அதனை உணர்ந்து தலைப்பாகையில் வைத்திருந்தார், அவர் சமாதான உடன்படிக்கைக்கும் வந்திருந்தார், வைரத்தை எங்கும் தேடியும் கிடைக்காத நாதர் ஷா, இறுதியாக மன்னன் தலைப்பாகையினை கண்டான் அது வித்தியாசமாக இருந்தது.
புன்னகைத்த நாடிர்ஷா அதனை அதனை அவிழ்த்தான், அந்த ஒளிமலை ஒளிர்ந்தது, வாய்விட்டு சொன்னான் “இதோ ஒளிமலை” அதாவது பெர்சிய மொழியில் “கோ ஹி நூர்”, தமிழில் “அழகான ஒளி மலை”.
(இந்த வரலாற்று பெயரினை கண்ட கருமத்திற்கெல்லாம் வைத்து, வரலாற்றினை பாதுகாக்கின்றனர்  )
அந்த வைரத்திற்கு அவன் அன்று சூட்டிய பெயர் காலத்திற்கும் நிலைத்துவிட்டது.
(அப்படியே பாபரின் வைரம் எனும் பெயர் நீடித்திருந்தால் இந்த அரசு என்ன செய்திருக்கும்? இது ஒரு வேளை ஆப்கானிய வைரமாக இருக்கலாம் எமக்கு வேண்டாம், தாலிபன்களிடம் கொடுங்கள் யார் மீதாவது எறிந்து கொல்லட்டும் என்ற வாய்ப்பு உண்டு, எப்படியோ நாடிர் ஷா வாழ்க  )
அதன் பின் பஞ்சாபில் சீக்கிய அரசு எழும்பிற்று, மாவீரன் ரஞ்சித் சிங் தூள் பறத்தினார், அடித்த அடியில் ஈரானின் கோஹினூர் அவர் கைகளில் வீழ்ந்தது, சீக்கியர் அல்லவா? தலையில் வைக்காமல் கையின் மேற்புறத்தில் கங்கணம் போல கட்டிகொண்டு சந்தோஷபட்டுகொண்டார்.
அதன்பின் கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவினை விழுங்க, வீரமான சீக்கிய இனமும் வெற்றிகொள்ளபட, வைரம் கம்பெனிக்கு வந்தது. ஆனால் அப்பொழுது கம்பெனி ஆட்சி, வைரம் ஆளுநர் டல்ஹவுசியிடம் இருந்தது. இதனை அறிந்த பிரிட்டன் அரசு சும்மா இருக்குமா?
கம்பெனியினை மிரட்டி கைபற்றிகொண்டது, இங்கிலாந்து அரசர்கள் கிரிடத்தை அலங்கரிக்கும் விதமாக அது 106 காரட்டாக குறைக்கபட்டது, இன்று பிரிட்டன் மகாராணியின் கிரீடத்தை அலங்கரித்துகொண்டிருக்கின்றது.
இப்படியாக ராணி ருத்ரம்மா காலத்திலிருந்து தெரியவரும் இதன் வரலாறு, இன்று எலிசபெத் மகாராணியாரிடம் வந்து நிற்கின்றது. சும்மா சொல்லகூடாது, இதனை சுற்றிவந்தால் 900 ஆண்டுகால வரலாற்றினை புத்தகத்தை புரட்டாமலே படித்துவிடலாம்.
இந்த வைரத்தை வைத்திருந்ததால் என்ன ஆனது? எல்லா வம்சத்தையும் அது வீழ்த்தியதா? எப்படிபட்ட சம்பவங்களால் இது வினோதமாக பார்க்கபட்டது?
பார்க்கலாம்
[ October 17, 2018 ]
(தொடரும்)
No automatic alt text available.
============================================================================

கோஹினூர் வைரம் பற்றி சொன்னதும் அதை மீட்டு தலைவி குஷ்புவிற்கு காணிக்கையாக கொடுக்க வேண்டும் என்கின்றார் செயலாளர் Periya Samy

ஆனால் தலைவியின் தலைக்கு வர அதற்கு என்ன தகுதி? அதனால் தலைவியில் கால் செருப்பில் அதை பதிக்கலாம் என சங்கம் தீர்மானம் நிறைவேற்றி இருக்கின்றது

இங்கிலாந்து ராணி கீரிடத்தில் இருக்கும் வைரம் தலைவி கால் செருப்பில் இருக்க வேண்டியதுதான் தலைவிக்கான தகுதி என்பதை சங்கம் தீர்க்கமாக நம்புகின்றது

[ October 17, 2018 ]
Image may contain: 1 person, closeup
No automatic alt text available.
=========================================================================