சவுக்கித்தார்

Chow என்றால் என்ன பொருள் என தேடினால் அது ஏற குறைய சீன மொழியிலும் (Chow ) வடமொழியிலும் ஒரே பொருளில் வருகின்றது

சவுக்கி என்பது மக்களை கூடும் இடத்தையும், சவுளி என்பது மக்கள் உடுத்தும் ஆடை விற்கபடும் இடம் என்ற பொருளில் வருகின்றது

அந்த சவுளி ஜவுளியாகி இன்றும் துணிக்கடை இங்கு ஜவுளி என்றே அழைப்படுகின்றது, மூலம் அந்த பெயர்தான்.

இன்னும் ஆழமாக நோக்கினால் சவுக்கம் என மக்கள் கூடும் இடமே பின்னாளில் சதுக்கம் ஆயிற்று

Chokidar என்றால் யாரை பாதுகாப்பவர் என்றால்? சந்தையில் அல்லது எல்லையில் வரிவசூல் செய்யும் அந்த பாதுகாவலர் என்ற பொருளில் வருகின்றது

சவுக்கிதார் என்பது “சுங்கசாவடி” வசூலிப்பவர் என்றொரு பொருளிலும் வருகின்றது

சீனமொழி இதை (Chow Kit) என சொல்கின்றது

ஆக வரிவசூல் செய்து மக்களை நோகடித்த பாஜக கட்சிக்கு அந்த “சுங்கசாவடி கோஷ்டி” என்பது மிக சரியாக பொருந்துகின்றது

இனி அது “சவுக்கி ” என மிக கோபத்தோடு அக்கட்சியினரை அழைப்பது சால பொருந்தும்

தான் ஒரு “சுங்க சாவடி தலைவன்” என பெருமையாக சொல்கின்றார் மோடி

அதை மிக பெருமையாக பின் தொடர்கின்றன தமிழக பாஜக கோஷ்டிகள்

சவுக்கி எனும் “சுங்கசாவடி கோஷ்டி” ஒழிக என எதிர்தரப்பு கோஷமிட வழிசெய்தாயிற்று

சௌகார் ஜாணகி…..வரலாற்றில் முந்தி கொண்டவர், மோடி கூட இவருக்கு அடுத்துதான்

“இவர் போக்குல சவுக்கித்தார்னு சொல்லிட்டாரு, அவனுக “சவுக்கி” அளவுக்கு போயிட்டானுக‌

இனி “சாவுகிராக்கி” அளவுக்கு கொண்டு போயிருவானுக, இவர வச்சிட்டு என்ன செய்ய போறோமோ..”

சங்கிகள் எல்லாம் “சவுக்கி”கள் ஆகும் நேரமிது….