சமூக வலைதளம் என்பது ராகுவின் கருவியாம்

ஹிலாரி கிளிண்டன் முதல் ஏஞ்சலோ மெர்கல் வரை இணையத்தில் இருக்கின்றார்கள்

இன்னும் ஏகபட்ட சாதித்த பெண்கள் உண்டு, சிவநாடாரின் மகள் கூட கணிணி துறையில் கலக்கி கொண்டிருக்கின்றார்

உலகெல்லாம் கணிணியில் பெண்கள் வெற்றிகொடி நாட்டி கொண்டிருக்க இந்த சாஸ்திர மூளை என்ன சொல்கின்றது பார்த்தீர்களா?

சமூக வலைதளம் என்பது ராகுவின் கருவியாம் , வங்கியில் வேலை பார்க்கும் பெண்கள் எல்லாம் குரு, சுக்கிரன் உச்சம் பெற்றவர்களா சார்?

இன்னும் செல்போன் யாரின் கருவி, கணிணி யாரின் கருவி, செயற்கைகோள் யாரின் கருவி, டிவி எல்லாம் யாரின் கருவி என அன்னார் சொல்வார் என எதிர்ப்பார்க்கலாம்

ஒவ்வொரு விஞ்ஞான கருவியாக வெள்ளையன் கண்டுபிடிப்பான், இங்கே அதற்கு ஜோசிய கோள்களின் பெயர்களை நாம் சூட்டிகொண்டிருப்போம்

உருப்படுமா இந்த சமூகம்?

இந்த அரைகுறை ஜோசியர்களை அடித்து விரட்டாமல் நாடும் சமூகமும் ஒரு காலமும் உருப்படாது

மின்சாரத்தால் நற்பயன் உண்டு, ஆளை கொல்லும் சக்தியும் உண்டு. அணுவும் அப்படியே

பயன்படுத்துவதில்தான் விஷயம் இருக்கின்றது

ஜாதகம் எனும் பெயரில் பெண்களின் வாழ்க்கையினை கெடுப்பவர்கள் இப்பொழுது அவர்களின் உரிமைகளையும் பறிக்க தொடங்கிவிட்டார்கள் அயோக்கிய பாவிகள்

ஆக இனி சமூக தளங்களுக்கு வரும் பெண்கள் இவரிடம் அனுமதி கேட்டுவிட்டே வரவேண்டும் போலிருக்கின்றது

( ஒருவேளை இந்த தமிழிசை போன்றவர்களுக்கு ராகு காலமோ, ச்சே நம்மையும் குழப்புவிடுவார்கள் போலிருக்கின்றது..)

மனைவியினை ஏமாற்றி கைவிட்டால்தான் சட்டம் பாயுமாம்

மனைவியை கைவிட்ட 45 பேரின் ‘பாஸ்போர்ட்’ ரத்து , மேனகா காந்தி தகவல்

இதெல்லாம் மய்யத்து கமலஹாசனை பாதிக்குமா என்றால் இல்லை

ஆம் , திருமணம் செய்து கைவிட்டால்தானே பாதிக்கும், திருமணமே செய்யாமல் கைவிட்டால் எப்படி பாதிக்கும்

அதனால் கமலஹாசனின் பாஸ்போர்ட்டுக்கு ஆபத்தில்லை என்பதால் தேர்தல் முடிந்தபின் அவர் மனவெறுப்பில் இருக்கும் பொழுது வெளிநாடு செல்ல தடை இல்லை

பிரதமர் மோடிக்கு இந்த தடை பொருந்துமா இல்லையா என கேட்டால் மேனகா காந்தியிடம் பதில் இருகின்றது

மனைவியினை ஏமாற்றி கைவிட்டால்தான் சட்டம் பாயுமாம்

சிதறல்கள்

சர்க்கரை இருக்குமிடம் எறும்புகள் படையெடுக்கும், பழமரத்தினை வவ்வால்கள் சுற்றும்

தேர்தல் நேரம் நெருங்குவதால் பாஜகவின் பெருந்தலைகள் தமிழக பக்கம் சுற்றுகின்றன, மறைந்த வாஜ்பாய் ஒய்வுபெற்ற அத்வானி தவிர எல்லோரும் இங்கு குவிகின்றார்கள்

ஆனால் ஒன்றை மறக்கின்றார்கள்

தமிழகத்தில் ஏன் காங்கிரஸ் சுருங்கியது என்பதும் எப்படி திராவிட கட்சிகள் வளர்ந்தன என்பதும் ரகசியமல்ல‌

இங்கு வரும்பொழுது தமிழர் கலாச்சாரத்தோடும், அவர்களின் பழக்க வழக்கங்களோடும் வரவேண்டும் இல்லை அதையொட்டி கட்சி வளர்க்க வேண்டும்

மாறாக ஒருவித மதகெடுபிடியும், உடையும் இன்னபிற அடையாளங்களும், ஜி போன்ற அந்நிய வார்த்தைகளும் இங்கு ஒருநாளும் பலன் அளிக்காது

இங்கு சாதி, இன மோதல்கள் இருக்கலாமே தவிர மதம் என்பது தமிழகத்தின் சிக்கல் அல்ல‌

மண்டைக்காடு, கோவை என மிக சில கலவரங்கள் நடந்திருக்கலாம் அவை நிச்சயம் மதத்தை முன்னிறுத்தி தொடங்கியது அல்ல. எங்கோ தொடங்கி மத கலவரமாக முடிந்தவை அத்தோடு சரி

மற்றபடி தமிழகம் மத நல்லிணக்கம் உள்ள மாநிலம், இங்கு கிறிஸ்தவம் இஸ்லாம் இன்னபிற மதங்களும் பெரும்பான்மை இந்து மக்களும் நல்லிணக்கத்தோடே வாழ்கின்றார்கள்

பன்னெடுங்காலமாக அப்படித்தான் வாழ்கின்றார்கள், இன்னமும் வாழ்வார்கள்

பாஜக‌ மத நல்லிணக்கத்திற்கு அச்சமூட்டும் கட்சியாகவும் , தமிழக கலாச்சாரங்களுக்கு அந்நியமான கட்சியாகவும் இருக்கும் வரை இங்கு அது உருப்பட போவதில்லை

அவர்கள்தான் அந்நிய சாயல் என்றால் இங்கு இருக்கும் மாநில தலமைகளும் உருப்படி இல்லை

தமிழிசை, எச்.ராசா, எஸ்.வீ சேகரை வைத்துகொண்டு இங்கு கட்சி நடத்துவது நிச்சயம் பலனளிக்காது

ஆலமரமாக இருந்த காங்கிரஸ் எப்படி இங்கு சுருங்கியது என்ற காரணத்தை பாஜக படிக்காமல் இங்கு கட்சிவளர்க்க முடியாது, இவ்வளவிற்கும் காங்கிரஸ் மதவாத கட்சி அல்ல‌

தமிழக களத்திற்கு காங்கிரஸே அன்னியபட்டது என்றால் பாஜக எப்படி துளிர்விட முடியும்? இப்போதிருக்கும் பாஜகவினை தமிழகம் ஒருபோதும் ஏற்காது

அதிமுக கூட்டணிக்கு தயங்குவதும், தம்பிதுரையினை விட்டு பல்ஸ்பார்ப்பதும் இதற்காகத்தான்

உபியின் சாயலுக்கும் யதார்த்தத்துக்கும் பாஜக வெல்லலாம், ஆனால் தமிழக சாயலும் தன்மையும் வேறு

அதற்கேற்றபடி பாஜக மாற வேண்டும்,

மதமும் இஸ்லாமிய எதிர்ப்பும் தமிழர்களின் தேவை அல்ல, அல்லவே அல்ல.

பின் தங்கிய உபி, மபி அரசியல் சாயலை முன்னேறிய தமிழகத்தின் மீது திணிக்க முயல்வது சுத்த மடத்தனம். எந்த தமிழனும் அதை ஏற்க போவதில்லை

தமிழர்களின் எதிர்பார்ப்பும் தேவையும் வேறு ஏராளம், நிச்சயம் மதமோ அதன் துவேஷமோ அல்ல‌

பாஜக அதை உணராதவரை இங்கு உருப்பட போவதில்லை , அதுவரை மோடி என்ன? அமித்ஷா என்ன? ஆனானபட்ட ஆதிசங்கரர் வந்தாலும் பாஜக வளர முடியாது.

சிதறல்கள் …

அபுதாபியில் நீதிமன்ற அலுவல் மொழியானது இந்தி : செய்தி

அடுத்து அங்கு மலையாளம் அலுவல் மொழியாகும் காலம் தொலைவில் இல்லை என்கின்றன செய்திகள்.

தமிழருக்கு மலையாளம் கற்பது சுலபம் என்பதால் இப்பொழுதே கற்றுகொள்ளல் நலம்

______________________________________________________________________________

என்ன இருந்தாலும் ஒரு சில நியாங்களை சொல்லியாக வேண்டும்

நிச்சயம் இந்திராவின் மிசா காலங்கள் போல மோடி ஆட்சி கெடுபிடி நிறைந்ததல்ல, அன்று தமிழகத்தில் நடந்த அநியாயங்கள் எல்லாம் மோடி ஆட்சியில் இல்லை

அவர் வராவிட்டால் ஏன் வரவில்லை என்பதும், நலதிட்டங்களுக்காக வந்தால் Goback மோடி என கிளம்புவதும் சரி அல்ல‌

இவ்வளவிற்கும் இங்கு சல்லிவோட்டு வாங்கமுடியா கட்சி அது, அதன் மேல் எதற்கு இவ்வளவு வன்மமோ தெரியவில்லை

இங்கு மோடி என சொல்லிவிட்டு நாளை திமுகவினரோ வைகோவோ டெல்லி உட்பட சில இடங்களுகு சென்றால், ராஜிவ் கொலையாளிகளுக்கு ஆதரவான திமுகவினரே , தேசபிரிவினைவாத இம்சைகளே Goback என மற்றவர்கள் கிளம்ப நேரமாகாது

திமுக வேறு டெல்லியில் அலுவலகம் கட்டுகின்றதாம், நிச்சயம் ஒருநாள் அங்கும் இதே Goback சத்தம் கேட்கத்தான் போகின்றது

ஈழபோரை தடுக்காதவர் எனும் சோனியா வரலாமாம், இன்னும் பலர் வரலலாம்

ஆனால் மோடி வரகூடாதாம்

ஈழபோருக்கு சகல உதவிகளை பகிரங்கமாக செய்த இந்திய ராணுவத்தின் விமானங்களும் கப்பல்களும் இங்கேதான் சுற்றுகின்றன‌

அதை ஒருபயலும் Goback என சொன்னதாக தெரியவில்லை, அப்படி சொன்னால் என்னாகும் என்பது அவர்களுக்கும் தெரியும்

______________________________________________________________________________

நாட்டில் யாருக்குமே இரண்டாம் திருமணம் நடக்கவில்லையா?

அது தியாகராஜர் பாகவதர் முதல் ராமசந்திரன் , கலைஞர் என பலருக்கு நடந்தது

கனிமொழிக்கும் நடந்தது

அரசியல் சினிமா உலகில் மிக சாதாரணமாக நடக்கும் விஷயங்களுக்கு ஏன் இவ்வளவு பில்டப் என்பதுதான் தெரியவில்லை

ஊருக்கு இளைத்தவர் ரஜினி போல.

______________________________________________________________________________

மண்ணின் மைந்தன்?

தமிழன் தமிழ் நாட்டு குடிமகன் இல்லையாம் அவன் லெமூரியாவில் இருந்து வந்த வந்தேறி எனச் சொல்கின்றது வைகோ கோஷ்டி ்

இனி என்ன அங்கிள் சைமன் பல்டி அடித்து வருவார்

மதிமுக ஒரு மாதிரி கன என்பது வைகோவை பார்த்து தெரியும் ஆனால் கட்சி முழுக்க அவரைப் போலவே இருப்பார்கள் போல

நான் கேட்பது ஒன்றே ஒன்றுதான்

தமிழ்நாட்டுக்கு தமிழன் வந்தேறி என்றால் ஈழத்தமிழன் இலங்கையில் வந்தேறி அவனும் லெமூரியாவில் இருந்து வந்தான் பிறகு என்ன மண்ணாங்கட்டிக்கு வந்தேறி ஈழத்தமிழனுக்கு இவர்கள் இவ்வளவு அழிச்சாட்டியம் செய்ய வேண்டும் பூர்வகுடி சிங்களவன் என்பவனை ஆதரித்தால் என்ன அவன்தானே மண்ணின் மைந்தன்?

தேசத்துரோகம்

இது ஒருங்கிணைந்த இந்தியா இந்துக்களுக்கான இந்தியா என முதலில் கலவரத்தை தொடங்கியது இந்து மகாசபை

இந்த இந்து மகாசபையின் அழிச்சாட்டியம் உச்சத்திற்கு செல்ல இனி இந்தியாவில் இஸ்லாமியர் வாழ முடியாது என தனி நாடு கே கேட்டார் ஜின்னா இந்தியா பிரிய இந்த இந்து மகா சபையே முழு காரணம் ஒரு காரணம்

ஆம் இந்நாடு கண்ட அனைத்து மதக் கலவரங்களுக்கு தாய் இந்த இந்து மகாசபை

இதோ இன்று ஆட்சி பீடம் ஏறி விட்டோம் இனி இறங்கவே மாட்டோம் நாம் கண்ட இந்து ராஜ்யம் அமைந்துவிட்டது என்ற பாசிச மனப்பான்மையில் அண்ணல் காந்தியடிகளை அன்று சுட்டுக்கொன்ற அதே வன்மத்தை இன்றும் காட்டுகிறார்கள்

இந்த தேசம் இனி அமைதியாக இருக்க ஒரே வழி இந்த மதவெறியின் மூல உச்சமான இந்த இந்து மகாசபையின் தடை செய்வதாகவும் நாடு அமைதியாக இருக்க முதலில் செய்ய வேண்டியது இந்த காவி கும்பல் அடித்து உள்ளே போடுவது

இவர்கள் செய்திருப்பது மாபெரும் தேசத்துரோகம் சமூக அமைதிக்கு பங்கம் விளைவிக்கும்

அரசு உடனே செய்ய வேண்டியது செய்யட்டும்

இவர்களை மகா வன்மையாக கண்டிக்கின்றோம் இவர்கள் அந்த ஒரு காலத்தில் அப்படி செய்ததால்தான் நாடு துண்டானது மறுபடியும் துண்டாட கிளம்பிவிட்டார்கள்

அரசு செய்ய வேண்டியதை உடனே செய்யட்டும்

கரசேவை

வைகோ தன் தொண்டர்களை வன்முறைக்கு தூண்டிவிட்டார் மாபெரும் களபலி கொடுக்கத் துணிந்தார் என்றெல்லாம் சிலர் சொல்லுகிறார்கள்

உடனே பாஜகவினர் ஓடிவந்து ஆமாம் இது திராவிட பாரம்பரியம் அவர்கள் அவர்கள் ரத்த வெறி கொண்டவர்கள் என்றெல்லாம் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்

ஆனால் அப்பாவி இந்துக்களை உணர்ச்சிகளை தூண்டி பாபர் மசூதியை இடித்து இந்நாட்டில் மாபெரும் கலவரத்தை செய்தவர்கள் யார் எனக் கேட்டால் பதில் இல்லை

வைகோ செய்தால் அது வன்முறையை தூண்டுதல் இதுவே இந்துத்துவ அமைப்புகள் செய்தால் அதன் பெயர் கரசேவை