காட்மேன் டிரைலர் நிறுத்தபட்டதில் பலருக்கு கடும் வருத்தம்.

இந்த காட்மேன் டிரைலர் நிறுத்தபட்டதில் பலருக்கு கடும் வருத்தம் சிலருக்கு கண்ணீர் அழுகை

அதில் திருமாவும் பா.ரஞ்சித் என்பவரும் முக்கியமானவர்கள்

அதாவது இவர்கள் தொழிலே மேல்சாதி என எதையாவது சொல்லி, இந்துமதத்தை சீண்டிகொண்டே இருப்பது என்பதால் அப்படித்தான் சொல்வார்கள்.

டிரைலர் நிறுத்தபட்டது ஆதிக்கசாதியின் வெறி என்கின்றது இந்த கோஷ்டி

கவனியுங்கள்

குடியரசு தலைவர் ஒரு தலித், தமிழக சபாநாயகர் ஒரு தலித், தமிழக எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் ஒரு தாழ்த்தபட்ட சாதி, ஸ்டாலினின் பலம்வாய்ந்த கூட்டாளி திருமா தலித்

ஸ்டாலினுக்கு பெரும் அடித்தளம் அமைத்த 60 வருடம் தமிழக அரசியலை ஆட்டி வைத்த கருணாநிதி ஒரு தலித்

திமுகவின் பலம் வாய்ந்த கனிமொழி தலித், ஆ.ராசா தலித்

மீடியாவில் கோலோச்சும் சன்டிவியின் கலாநிதிமாறன் வரை யார்? தலித் வம்சம், மறுக்க முடியுமா?

இது போக பாஜகவின் மாநில தலைவர் முதல் ஏகபட்ட தலித்துக்கள் மேல் மட்டத்தில் எங்கும் நீக்கமற நிறைந்துள்ளனர்

இது போக ஏகபட்ட சட்டங்களும் இப்பொழுது அவர்களுக்கே சாதகம்

கல்வி, வேலைவாய்ப்பு என எல்லாவற்றிலும் இட ஒதுக்கீடு என ஆதிக்கம் செலுத்தும் சாதி எது?

உயர்சாதியா? மற்ற சாதியா? எது ஆதிக்கம் செலுத்தும் சாதி?

ஆக இப்பொழுது ஆதிக்க சாதி யாரென்றால் சாட்சாத் இவர்கள்தான்

ஆம், “பார்ப்பபானை ஏ பார்ப்பானிய பயலே, ஆரியனே, பூனூலே..” என கண்டபடி திட்டலாம், சட்டம் பார்த்துவிட்டு “ஓ அவர்களையா திட்டட்டும், அவர்களை சாதிபெயர் சொல்லி திட்டினால் தண்டிக்க இடமில்லை” என அதன் போக்கில் இருக்கும்

ஆனால் வேறு சாதிகள் பெயரை உச்சரித்தாலோ , தொழிலை சொன்னாலோ சட்டம் இரும்புகரமாய் பாயும், கொடும் வழக்கு பாயும்

ஆக யாருக்கு இருக்கின்றது பாதுகாப்பு? யாருக்கு இருக்கின்றது ஆதிக்கம்? எது ஆதிக்க சாதி?

தாங்கள்தான் ஆதிக்க சாதி என தெரியாமல் இப்பொழுதும் வேறு யாரையோ கைகாட்டி அவர்கள்தான் ஆதிக்கசாதி என சொல்பவர்களை நினைத்தால் பரிதாபமே மிஞ்சுகின்றது

அய்யன்மீர்… இப்பொழுது ஆதிக்கம் செலுத்தும் ஆதிக்க சாதி நீங்கள்தான், அதை முதலில் உணருங்கள்

நல்ல இந்தியனாக, நல்ல குடிமகனாக, நல்ல வழிகாட்டி நடிகனாக நிற்கும் அஜித் குமார்

Image may contain: 1 person

நடிகர்களின் ஒவ்வொரு அசைவுக்கும் ஒரு கணக்கு இருக்கும், அதில் சுயநலமின்றி எதிர்பார்ப்பு இன்றி அள்ளி கொடுப்பவர் வெகுசிலரே சிவகார்த்திகேயன் அதில் குறிப்பிடதக்கவர்

சில நடிகர்கள் பின்னணியில் பிரிவினைவாத சக்திகள் இருந்து சிலருக்கு கொடுக்க சொல்லி குழப்பும், சிலருக்கு ரசிகர் மன்ற கணக்கு, சிலருக்கு அரசியல் கணக்கு என ஏக கணக்குகள்

இந்நிலையில் கொஞ்சமும் அரசியல் கணக்கோ, ரசிகர் மன்ற அறுவடையோ எதுவுமின்றி உதவியிருப்பவர் அஜித்குமார்

மனிதர் பெப்சிக்கு 25 லட்சம், பிரதமர் நிதிக்கு 50 லட்சம், தமிழக அரசுக்கு 50 லட்சம் என கொடுத்திருகின்றார்

விளம்பரமில்லை, மாஸ்க் போட்டு கொண்டு காட்சியில்லை, வெட்டி வீடியோ இல்லை, ஆர்பாட்டம் துளியுமில்லை

யானை அள்ளி கொடுப்பது போல் அசால்ட்டாக கொடுத்துவிட்டார்

எந்த சமூகத்திடம் இருந்து எடுத்தோமோ அதே சமூகத்துக்கு திருப்பி கொடுக்க வேண்டும் என்ற சிந்தனை அவருக்கு இருந்திருகின்றது, அது எதிர்பார்ப்பு இல்லாமல் கொடுத்ததுதான் சிறப்பு

மழை போன்ற மனம் இது

தன் கடமையினை சிறப்பாக செய்து நல்ல இந்தியனாக, நல்ல குடிமகனாக, நல்ல வழிகாட்டி நடிகனாக நிற்கும் அஜித் குமாருக்கு வாழ்த்துக்க்கள்

“பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலிற் பெரிது” என்பான் வள்ளுவன்

இன்ன பயன் கிடைக்கும் என்று ஆராயாமல் ஒருவன் செய்த உதவியின் அன்புடைமையை ஆராய்ந்தால் அதன் நன்மை கடலைவிடப் பெரிதாகும்

அவர் மனம் போல் அவர் வாழட்டும், கடல் போல் நன்மைகள் அவரை சூழட்டும்

பிரபுதேவா!

அவருக்கு 47 வயதுதான் ஆகின்றது, பெரும் சாதனையாளர் என கொண்டாட இன்னும் காலமிருக்கின்றது

ஆனால் குறிப்பிட்டு சொல்லவேண்டியவர் அவர் மிகசிறு வயதில் இருந்தே சினிமாவுக்கு வந்து அதிலிருந்து பிரியாமல் அதில் கலந்து வரும் கமலஹாசன் போல அவரும் ஒருவர்

அவர் பிரபுதேவா

சந்திரபாபு தொடங்கி வைத்த ஒருவித மேற்கத்திய நடனத்தின் பின்னாளைய வாரிசு பிரபுதேவா

இவ்வளவுக்கு இவரின் தந்தை சுந்தரம் சந்திரபாபு ஆடுவது நடனமே அல்ல என விமர்சித்த காலமும் உண்டு ஆனால் இவரோ அவர் வழி வந்துவிட்டார்

சந்திரபாபு போலவே பன்முக திறமையாளர் பிரபுதேவா

நடனக்காரனாக தொடங்கி காமெடியன் நடிகர் இயக்குனர் என உயர்ந்தார், மும்பைக்கு சென்று இயக்குநராக அங்கும் வெற்றிகொடி நாட்டினார் பிரபுதேவா

ஒரு வகையில் கிட்டதட்ட 30 ஆண்டுகளாக தொடர்ந்து அட்டகாசமாக ஆடிவரும் அவரின் நடனமும் கவனிக்கதக்கது

அவரின் தொழில்பக்தியும் அக்கறையும் சொல்லதக்கது, 1990களில் ஆடிய அதே நடனத்தை இன்றும் அவரில் காணமுடியும் ஒரு பிசிறும் தடுமாற்றமும் காணமுடியாது, அதுதான் ஆச்சரியமானது

ஒருவகையில் மனிதர் அதிர்ஷ்டசாலி அவர் களத்திற்கு வரும்பொழுது ரஹ்மானின் யுகம் தொடங்கியது, மிக மிக அட்டகாசமான துள்ளிசை பாடல்கள் அப்பொழுது ரகுமானால் கொடுக்கபட்டது

அந்த வாய்ப்பினை மிக அழகாக பயன்படுத்தினார் அவர் அந்த இசைபிண்ணனிதான் அவரை தமிழ்நாட்டு மைக்கேல் ஜாக்சன் என கொண்டாட வைத்தது

இப்பொழுது 47 வயதினை கடந்தாலும் அவரின் உடல் அளவு அன்று பார்த்தது போன்றேதான் இன்றும் உள்ளது , ரஜினிகாந்த் போல இவருக்கு அது ஒரு வரம்

அரசியலில் அந்த உடல்வாகு வைகோ என்பவருக்கு கிடைத்தது

கிட்டதட்ட 30 ஆண்டுகளாக சினிமாவில் இணைந்தோடும் நதி என்பதால் சமீபத்தில் பத்மஸ்ரி விருது அவருக்கு வழங்கபட்டது

பிரபுதேவா தமிழ்சினிமாவில் தவிர்க்க முடியா நடன அடையாளம், அது இந்திய அடையாளமாகவும் மாறிவிட்டது

ஆடல் கலை அவருக்கு இயல்பாய் வந்தது, அது நிச்சயம் தெய்வத்தின் அருள். அதுவன்றி வேறல்ல.

தென்றலில் அசையும் நாற்று போலவும் அவரால் ஆடமுடியும், சூறாவளியில் சிக்கிய தென்னையின் அசைவிலும் அவரால் ஆடமுடியும், கடலின் அலை போலவும் ஆடமுடியும் , மானின் வேகத்திலும் ஆடமுடியும், மயிலின் நளினத்தையும் கொடுக்க முடியும்

சில வகை நடனங்கள் வாளை மீன்கள் நீந்துவது போல அவர் நடனம் அப்படி ஒரு லாவகம்..

கமலஹாசன் நல்ல நடன கலைஞர் ஆனால் அன்று ஆடியபடிதான் என்றும் ஆடுவார் மாற்றமென ஏதுமில்லை.

சந்திரபாபு, நாகேஷ் , ஆனந்த்பாபு என பலர் தொடர்ந்து நிலைக்க முடியா நடன உலகில் அவர் சிம்மாசனம் போட்டு அமர்ந்துவிட்டார் நிச்சயம் அது சாதனை

அதைவிட பெரும் சாதனை அவரை பார்த்து பல நடன கலைஞர்கள் வந்தனர், குறிப்பாக சாய் பல்லவி

அந்த அம்மணியின் நடனம் அவ்வளவு அழகானது, குஷ்புவின் கன்னம் போல தனித்துவம் வாய்ந்தது,

தலைவியின் கண்களுக்கும் சாய்பல்லவியின் நடனத்துக்கும் ஒரு வித்தியாசம் சொல்ல முடியும்?

இதைவிட என்ன பெருமை வேண்டும் அவருக்கு?

நல்ல கலைஞனாகிய பிரபுதேவா என்பவருக்கு இன்று பிறந்தநாள், கடந்த 32 ஆண்டுகளில் தனி முத்திரை பதித்தவர் அவர்..

அன்னார் இன்னும் பல வெற்றிகளை விருதுகளை பெற வாழ்த்துகள்..