ஜாலியன் வாலாபக் படுகொலை

அக்காலகட்டம் வெள்ளை அரசு ஆடிகிடந்தது, காரணம் 1917 அதாவது 1919ன் ஈராண்டுகளுக்கு முன்னர்தான் ஜார் மன்னனை வீழ்த்தி புரட்சியாளன் லெனின் ரஷ்யாவில் ஆட்சி அமைத்திருந்தார், அது உலகெங்கும் உரிமைக்காக போராடும் மக்களுக்கு நம்பிக்கை ஊட்டிற்று, ஏகாதிபத்தியம் அச்சமுற்ற நேரம்.

உலகின் சரிபாதியினை ஆண்டுகொண்டிருந்த ஏகாதிபத்திய ஆங்கிலேயன் அச்சமுற்று, இதனை தடுக்க ரவுலட் என்பவர் தலமையில் குழுபோட்டு ஆலோசித்தான், முடிவில் அது சட்டமாயிற்று.

கொடுமையான சட்டம் அது, “ம் என்றால் சிறைவாசம், ஏன் என்றால் வனவாசம்.” என்ற வசனத்தின் வடிவம் அது. அரசுக்கு எதிரானவன் என்ற சந்தேகம் மட்டும்போதும், காவல்துறை அவன் தலைவிதியினை இஷ்டபடி எழுதலாம், நீதிமன்றம் எல்லாம் தலையிடமுடியாது, ஜாமீன், வழக்கு எல்லாம் கனவிலும் நடக்காது.
வெள்ளையன் அப்படித்தான் எல்லாம் சட்டமியற்றிவிட்டுத்தான் செய்வான், அவன் வழக்கம் அது.

புல்லினை புடுங்கவேண்மென்றாலும் சட்டம் என்ன சொல்கிறது என பார்த்துவிட்டுதான் செய்வான்.அப்படி ஒரு சட்டம் இல்லாவிட்டால் இயற்றிகொள்வான்.

இந்நாளில் இஸ்ரேலியசட்டம், பிரபாகரனை கொடும்தீவிரவாதியாக உருவாக்கிய ஜெயவர்த்தனேவின் பாதுகாப்பு சட்டம், இந்தியாவின் பொடோ சட்டம் என எல்லாவற்றிற்கும் இந்த ரவுலட்சட்டம்தான் தாய் அல்லது முப்பாட்டி.

நாடு முழுக்க அச்சட்டத்தினை எதிர்ப்புகள் வெடித்தபொழுது அது பஞ்சாபிலும் உணர்ச்சி கணல் ஊட்டிற்று, இன்றுபோல் அன்றும் பஞ்சாபியருக்கு அறுவடை திருவிழா, அந்த பைசாகி எனப்படும் பண்டிகை அன்றுதான் மக்கள் அந்த அமிர்தசரஸ் பூங்காவில் மாலையில் கூடினர், விழாக்காலம் என்பதால் பெருங்கூட்டம், கிட்டதட்ட 10000 பேர் கூடியிருக்கலாம் என்பது கணக்கு.

அந்த பூங்காவின் பெயர்தான் ஜாலியன் வாலா பாக். நாலுபக்கம் மதில் கொண்ட பூங்கா அது, நுழைய ஒரு குறுகிய வாயில்தான் உண்டு. பழம் அரசர் காலத்தின் தொடர்ச்சியான வரலாற்று திடல்
அன்றைய கமிஷனர் பெயர் ஜெனரல் ரெஜினால்ட் டயர், ஒரு காவல் படையோடே வந்தான் அதில் 50 இந்தியரும் உண்டு,

வந்தவன் எச்சரிக்கை கூட கொடுக்காமல் சுட சொன்னான், மக்கள் செத்துமடிந்தனர், வாசலை அடைத்துகொண்டு சுட்டதால் சுவர் ஏறி குதித்த நெரிசல், கிணற்றில் தவறிவிழுந்து, மிதிபட்டு என கிட்டதட்ட 1500க்கு மேற்பட்டவர் செத்தனர், நிதானமாக கடமையாற்றிய டயர் தோட்டாவும், பீரங்கிகுண்டுகளும் தீருமட்டும் சுட்டான்,

அவை தீர்ந்ததால் மீதிமக்கள் கொல்லபடவில்லை எனினும் மாலை ஆனதால் ஊரடங்கு உத்தரவு என சொல்லி திறந்தவெளி சிறைவத்து காலையில்தான் வெளியில் விட்டான் டயர். அவன் கடமை உணர்ச்சி அப்படி.

அதாவது சட்டபடி சுடமட்டும் செய்தானாம், கத்தியால் குத்தவில்லையாம், சட்டபடி ஊரடங்கு உத்தரவில் அவர்களை பிணகுவியல்நடுவே அழவும் வைத்தானாம், சுற்றி சொந்தம் இறந்துகிடக்க,நடுவிலிருந்தவருக்கு எப்படி இருந்திருக்கும்?? பெண்களும் குழந்தைகளும் கூட ஏராளம்.

செத்தது 379 பேர் என சொன்னது பிரிட்டன் அரசு, அரசுகள் என்று உண்மையினை சொல்லும்? கிட்டதட்ட 2000 பேர் இறந்திருக்கலாம் என்பது உண்மை. நடந்த நாள் ஏப்ரல் 13, 1919.

இந்திய சுதந்திரவரலாற்றில் பெரும் திருப்பத்தினை ஏற்படுத்தியது இந்த படுகொலை, வங்கநவாப்,திப்பு,கட்டபொம்மன் என பலரின் படைகளின் தொடர்ச்சியாக இந்த மக்களும் மொத்தமாக உயிர்கொடுத்து சுதந்திர தீ எரித்தனர்.

நாடு கொந்தளிக்க வெள்ளை அரசாங்கம் அவனை பணிமாற்றி லண்டனுக்கு அனுப்பியது, அங்கு அவர் பெரும் ஹீரோ என கொண்டாடபட்டார். வெள்ளையர்கள் அவனை உள்ளூர ரசித்தான். லண்டன்வாசிகள் இப்படித்தான் சுதந்திரம் கேட்பவர்களை கொல்லவேண்டும், நாம் ஆள, கொல்ல பிறந்தவர்கள் என அறுதியிட்டு சொன்னது. அவனை கொண்டாடியது.

எந்த பெரும் ஆணவ கொலைகாரனை பழிவாங்க காலம் ஒருவனை உருவாக்கும் அல்லவா? இறைவனின் விதி அது. அப்படி உருவானான் பஞ்சாபின் உதம்சிங்.

தொடர்ந்த தேடுதலில் 21 ஆண்டுகளுக்கு பின் உதம்சிங்கிற்கு வாய்ப்பு கிடைத்தது, லண்டனின் பெரும் ஹீரோவான கொடியவன் டயர் கலந்து கொண்ட கூட்டத்தில் உத்தம்சிங்கும் கலந்தான், டயர் கூட்டத்தில் உரையாற்றினான் இப்படி,

“ஆப்ரிக்க பிரிட்டன் காலணிநாடுகளில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பினை அடக்க என்னைபோல ஆட்கள் அவசியம், அன்று அமிர்தசரஸில் இன்னும் ஆயுதம் இருந்திருந்தால் ஒருவரையும் விட்டிருக்கமாட்டேன், என் கடமையினை முழுமையாக செய்யாதற்கு வருந்துகிறேன்(எப்படி?), இன்னுமோர் வாய்ப்பு ஆப்ரிக்காவில் அரசு தருமா?” என இன்னும் வீரமுழக்கம் எல்லாம் இட்டு இறங்கினான் டயர்.

கொஞ்சம் கூட அத்தனை பேரினை, அப்பாவிகளை கொன்ற வருத்தம் கொஞ்சம் கூட அவனிடம் இல்லை, அத்தனை அகம்பாவம்.

அவன் முன்னால் சென்றான் உதம் சிங், தன் கையில் உள்ள புத்தகத்தை பிரித்தான், உள்ளே இருந்து துப்பாக்கி எடுத்தான்,”இன்னொரு வாய்ப்பு தரமாட்டோம்” என சொல்லி சுட்டான், இன்னும் இருவருக்கும் சூடு விழுந்தது, இறந்து வீழ்ந்தான் கொடியவன் டயர்.

எங்கும் ஓடாமல் அமைதியாக நின்றான் உதம்சிங், மெதுவாக புன்னகைத்து சொன்னான், ” உன் பெயர் என்ன என்றதற்கு? ராம் முகம்மது சிங் ஆசாத், (எப்படி மத சமத்துவம் சொல்லியிருக்கின்றான்) நான் ஒரு இந்தியன், இந்த டயரால் கொல்லபட்ட மக்களின் ஆன்மா, நான் என் கடமையினை முடித்துவிட்டேன், இனி என்ன மரணம்தானே, கொடுங்கள்”

ஒரு புத்தகத்தின் உள்பக்கத்தை வெட்டி துப்பாக்கி மறைத்து, கைகளில் கொண்டு, பாதுகாப்பான அந்த மண்டபத்தில் நுழைந்தான் உதம்சிங், (பின்னாளில் ராஜிவ் கொலையாளி சிவராசனும் திருப்பெரும்புதூரில் இப்படியான துப்பாக்கிபுத்தகத்தோடுதான் நின்றான்,எப்படிபட்ட காப்பியக்காரர்கள் புலிகள்)

தன் தலைநகரிலே புகழ்மிக்க(?) டயரினை ஒரு இந்தியன் கொன்றதை வெள்ளையனால் தாங்கமுடியவில்லை. எப்படியாவது உதம்சிங் ஒரு மனநிலை சரியில்லாதவன் என நிரூபிக்க படாதபாடுபட்டது வெள்ளையன் அரசு, ஆனால் முடியவில்லை. ஒரு இந்தியன் வெள்ளை ஜெனரலை சுட்டது அவனுக்கு அவ்வளவு பெரும் அவமானம்.

பின்னாளில் கென்னடி கொலையில் கூட, விசாரித்து இந்த சின்ன கொசுவா அமெரிக்க அதிபரை கொன்றது? வெளியில் சொன்னால் அவமானம் அல்லவா? என சொல்லி அந்த கொலைகாரன் ஆஸ்வால்ட்டினை மெண்டல் என தீர்பளித்தது நினைவிருக்கலாம்.
இன்றுவரை கென்னடி கொலை தீர்ப்பு அப்படியானது.

எந்த பைத்தியம் அப்படி மிக சரியாக சுடும் என்பதும் தெரியவில்லை, வெள்ளையன் இறுமாப்பு அப்படி. ஒரு பைத்தியம் இப்படி வந்து கொல்லுமளவிற்கா உங்கள் பாதுகாப்பு இருக்கின்றது? என ஒருநாடும் பதில்கேட்கவுமில்லை என்பது இன்னொரு விஷயம்.
மொத்தத்தில் பெரிய மனிதன் அடிபட்டால் வெளியில் சொல்லமாட்டான் என்ற பழமொழியின் வடிவம் இது,

உதம்சிங்கினை அப்படி பைத்தியமாக்க முயன்ற வெள்ளையன் முயற்சி படுதோல்வி,பைத்தியம் என உதம்சிங் வழக்கறிஞர் நிரூபித்துவிட்டால் உதம்சிங் வழக்கிலிருந்து தப்பும் வாய்ப்பும் இருந்தது, இந்திய வழக்கறிஞர்கள் அவரிடம் சொல்லியும் பார்த்தனர், ஆனால் உதம்சிங்கிற்கும் அடிபணிந்து வாழ விருப்பமில்லை. சிங்கமாகவே இறந்தார்.

ஜாலியன் வாலாபக் படுகொலைக்கு அழுத காந்தி, டயரின் கொலைக்கும் அழுதார், அவர் அப்படித்தான், இது வன்முறை கலாச்சாரம் என்றார்.யாரும் உதம்சிங்கினை பற்றி ஒன்றும் சொல்லவில்லை,

ஒரே ஒரு குரல் மிக தைரியமாக உதம்சிங் செயலினை வரவேற்றது, அது நேதாஜியின் குரல். நேரு உதம்சிங்கினை புகழ்ந்தபொழுது இந்தியா சுதந்திரம்பெற்று 15 வருடம்தான் ஆகி இருந்தது.

1940ல் உதம்சிங் தூக்கிலிடபட்டு லண்டனில் புதைக்கபட்டார், பின்னாளில் இந்திராவின் இந்திய கோரிக்கைபடி அவரது எலும்புகள் இந்தியாவிற்கு அனுப்பபட்டு, நினைவுசின்னம் எழுப்பபட்டது.

இந்திய சுதந்திர பொன்விழாவினையொட்டி இந்தியா வந்த அரசி எலிசபெத் கணவன் எடின்பரோவுடன் அங்கு சென்று அஞ்சலி செலுத்தினார், அந்த கல்வெடினை பார்த்து, 379பேர் இறந்திருக்கமாட்டார்கள், எண்ணிக்கை கொஞ்சம் அதிகமாக சொல்லியிருக்கலாம் என எடின்பரோ சொன்னது சர்ச்சையானது, 2000 பேர் செத்ததை 379 என மறைத்ததே கொடுமை, இதில் இவர் வேறு.

லண்டன் பெருமிதம் அப்படியானது, இவர்களுக்கெல்லாம் ஹிட்லரும், சதாம் உசேனும், வடகொரிய அதிபரும், புட்டீனும்தான் சரி.

ஜாலியன் பூங்கா போல பல‌ தியாகங்கள் நிறைந்தது இந்திய வரலாறு, இப்படுகொலை நிகழ்ந்தாவது அடிமை இந்தியா. இன்று என்ன நடக்கின்றது?

மணலை கடத்தாதே என்றாலும் காவல்துறை அடி, மது வேண்டாம் என்றாலும் சாவு, அணுவுலை வேண்டாம் என்றாலும் அடி. சுதந்திர இந்தியாதான், ஆனாலும் ஜாலியன் வாலாபாக் மறைமுகமாக தொடரத்தான் செய்கிறது.

நேற்று கூட திருப்பூரில் செய்தார்கள்

ஜாலியன் வாலாபாக் ஒரு திட்டமிட்ட கொடூரம் என்றாலும் அவர்களின் சாவு இந்தியாவில் சுதந்திர தீயினை மூட்டியது, வெள்ளை அரசாங்கமே ஆடியது, ஆனானபட்ட சர்ச்சிலே முகத்தினை மறைக்க வைத்த சம்பவம் அது.

அக்காலத்திலிருந்தே அடிமேல் அடிவாங்கும் ஒரு இனம் என்றால் அது சீக்கிய இனம். கிட்டதட்ட 1500 வருடமாக அது வாங்கும் அடி கொஞ்சமல்ல, ஒரே காரணம் அதன் வளம்.

மதம்தான் சிக்கல் என்றால் நாங்கள் புதிதாக மதமே தொடங்குகின்றோம் எங்களை வாழவிடுங்கள் என ஒதுங்கிபார்த்த இனம் அது, அப்படியும் விடவில்லை உலகம்.

இதோ இன்று அவர்களின் தாயகம் பிளக்கபட்டு ஒரு பங்கு பாகிஸ்தானுக்கு சென்றுவிட்டது, இன்னொரு பங்கு இரண்டாக பிளக்கபட்டு ஹரியானா பஞ்சாப் என துண்டாடபட்டிருக்கின்றது, இடையில் தீவிரவாதம் + இந்திரா கொலை + கலவரகொலைகள் வேறு.

இவ்வளவு பாதிக்கபட்டும் இந்திய ராணுவத்தில் அவர்கள்தான் 60% , அவர்கள் பாதிப்பில் 100ல் 2 பங்கு கூட தமிழினம் பாதிக்கபட்டிருக்குமா என்றால் நிச்சம் இல்லை. ஆனால் அவர்கள் யதார்தத்தினை உணர்ந்துகொண்டார்கள், எது சாத்தியமோ அதனை புரிந்துகொண்டார்கள், இந்திய தேசிய தூணாக தாங்கி நிற்கின்றார்கள்.

அந்த ஒற்றுமையில்தான் ஒரு சிங் பஞ்சப் முதல்வராக அல்ல இந்திய பிரதமராக இருமுறை வரமுடிந்தது. பஞ்சாபியரிடமிருந்து ஒவ்வொரு இந்தியனும் கற்றுகொள்ளவேண்டியது ஏராளம் உண்டு.
பரோட்டாவும், சப்பாத்திக்கும் கோதுமையும், பாசுமதி அரிசியும் வழங்கும் அவர்களுக்கு இன்று வைசாகி எனும் அறுவடை நாள்

அந்த வாழ்த்துக்களை நன்றியோடு சொல்லலாம், அதே நேரம் அவர்கள் பட்ட ரத்த வரலாற்றிற்று உச்சமான ஜாலியன் வாலாபாக்கின் குருதி நொடிகளையும் நினைவில் கொண்டு அஞ்சலி செலுத்ததலாம்.

நிச்சயம் உதம்சிங்கின் போராட்டமும் அவரின் வீர தியாகமும் மறக்கமுடியாதது.

அமிர்தசரஸ் என்றால் பொற்கோயில் மட்டுமல்ல, அந்த ஜாலியன் பூங்காவும் மறக்கமுடியாதது, இரண்டும் இரத்தத்தால் ஒரு காலத்தில் கழுவபட்டதுதான் கால‌ சோகம்.

இப்படி ஏராளமான சோகங்களை, தியாகங்களை கடந்துதான், சோதனைகளை வென்றுதான் இத்தேசம் உயர்ந்துகொண்டிருக்கின்றது

அந்த தியாகமிக்க பஞ்சாபிய சகோதரர்கள் அனுபவித்த கொடுமையில் 1000ல் ஒரு பங்கு கூட தமிழர்கள் அனுபவித்திருக்க மாட்டோம், ஆனாலும் தமிழர்களை இந்தியா அழிக்கின்றது என சொல்லிகொண்டே இருப்பார்கள், அரைப்பைத்தியங்கள்

அந்த ஜாலியன் வாலாபாக் பூங்கா இன்றும் மிக அமைதியாக தியாகத்தின் அடையாளமாக, பிரிட்டன் அடக்குமுறையின் சாட்சியாக, இந்திய விடுதலையில் புது திருப்பம் கொடுத்த வடுவாக பல விஷயங்களை சொல்லிகொண்டே இருக்கின்றது

இந்திய விடுதலை போராட்டத்தில் 98 ஆண்டுகளுக்கு முன்னால் பெரும் எழுச்சியூட்டிய தியாக சம்பவம் அது…

இந்த கொடுமை நடந்து இன்றோடு 100 ஆண்டுகள் ஆகிவிட்டது

பாரதம் அக்கொடுமையினை நினைத்து அழுகின்றது

அக்கொடுமையால் பாதிக்கபட்ட உறவுகள் இன்று இந்தியா பாகிஸ்தானாக பிரிந்து கிடந்தாலும் இன்று அதை நினைத்து அழுகின்றன‌

இந்த தியாகம் மாபெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது, அந்த எழுச்சி தேசத்தில் பெரும் நெருப்பினை ஏற்றியது

அதில்தான் தேசம் 1947ல் விடுதலை பெற்றது

இந்த மாபெரும் கொடுமையினை செய்த பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் அது பற்றி கொஞ்சமும் அலட்டிகொள்ளவில்லை

சமீபத்தில் பிரிட்டன் பிரதமர் தெரசே மே கூட இப்பொழுதுதான் வருத்தம் தெரிவிக்கின்றார், அப்பொழுதும் மன்னிப்பு கேட்கவில்லை

போகட்டும்

இந்த தேச விடுதலைக்காக மாபெரும் தியாகத்தை செய்த அந்த வீர தியாகிகளுக்கு அந்த ரத்த பூங்கா இருக்கும் இடம் நோக்கி அஞ்சலி செலுத்த வேண்டியது இந்தியரின் கடமை.

Advertisements

பகத்சிங்

மிக இளம்வயதிலே சுதந்திர இந்தியா பற்றி சிந்தித்து, போராடி வெறும் 23 வயதிலே தனது வாழ்க்கையை முடித்த தியாகி, நிச்சயம் நினைவுகூற தக்கவர்.

1919ம் ஆண்டு நடந்த ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்த பின்னால் 12 வயது சிறுவனாக, இரத்தம் சிந்தியமண்ணை எடுத்து தனது ஆடையில் முடிந்துகொண்டு போராட புறப்பட்ட ஒரு இளைஞன்,

அமைதியான முறையில் போராடிகொண்டிருந்த பஞ்சாப் சிங்கம் லாலா லஜபதிராயின் படுகொலை அவனை போராளியாக்கி கொலைகுற்றவாளி ஆக்கிற்று.

சாண்டர்ஸின் கொலையில் தேடபடும்பொழுதே ஆட்சியாளர் மன்றத்தில் ஒரு சட்டத்தை கண்டித்து குண்டுவீசி, அதன் நியாத்தை அமைதியாக வெளிகாட்டிய போராளி.

அக்குண்டுவீச்சில் யாரும் கொல்லபடவில்லை எனினும், இவரால் ஏற்பட்ட எழுச்சியினை கண்டு பயந்த அரசாங்கம் அவரை கொல்ல இது பெரும் வாய்ப்பாக கருதிற்ற, தூக்கு தண்டனை விதித்தது.

ஆசிரமம்,சத்தியாகிரகம்,ஆண்மீக சோதனை இன்னும் என்னவெல்லாமோ செய்துகொண்டிருந்த காந்தி, பகத்சிங்கினை காப்பாற்ற எந்த முயற்சியும் எடுக்கவில்லை, (காந்தி எனும் பெயர்கொண்டோர் யாரையும் தூக்கில் இருந்து காப்பாற்றமாட்டார்கள் போல..)
வன்முறைக்கு நான் எதிரி என சொல்லிவிட்டு “ரகுபதிராகவ ராஜாராம்” என பாட சென்றுவிட்டார் காந்தி,

அப்படியானால் லாலா லஜபதிராய் தானே தலையில் அடித்து செத்துவிட்டாரா என கேட்டால் அமைதியாக ஆட்டுப்பால் குடித்துகொண்டிருந்தார்.

வன்முறைக்கு வன்முறை தீர்வாகாது என சொன்னார் காந்தி, பகத்சிங்கினை அவர் ஆதரிக்கவில்லை.

அதே நேரம் பகத்சிங்கிற்கும் நாட்டுக்காக சாவதில் தயக்கமேதுமில்லை.

24 வயதில் சர்ச்சைக்குள்ளான முறையில் தூக்கிலபட்டதாக அறிவிக்கபட்ட பகத்சிங்கின் மரணம் மிகுந்த சர்ச்சைக்குள்ளானது, அதில் மறைக்கபட்ட பல விஷயங்கள் உண்டு.

குறுகிய காலம் வாழ்ந்தாலும் மாபெரும் எழுச்சியினை அவரின் மரணம் தோற்றுவித்து அடுத்த 15 ஆண்டுகளில் விடுதலை கொடுக்கும் அளவிற்கு பிரிட்டன் நாடாளுமன்றத்தில் மாற்றம் கொண்டுவந்தது.

ஆனால் ஒரு வகையில் பகத்சிங் அதிர்ஷ்டசாலி, அவன் விரும்பிய சுதந்திரத்தினை காணாவிட்டாலும், அவனால் தாங்கமுடியாத இந்திய பிரிவினையும்,அதுவும் சொந்த பஞ்சாப் 3 துண்டாக உடைக்கபட்ட கொடுமையும் காண அவன் இல்லை.

அன்று

சாண்டர்ஸ் கொல்லபட்டபொழுது மொத்த இந்தியாவும் ஆர்ப்பரித்தது, பகத்சிங் தீர்ப்பு அறிவிக்கபட்டபொழுது ெல்லி,மும்பை,கல்கத்தா,சென்னை, லாகூர், கராச்சி என மொத்த‌ இந்தியாவும் கதறியது.

இன்று

அவன் போராடிய லாகூரில் இருந்து பல ஏவுகனைகள் அணுகுண்டோடு இன்று டெல்லியையும்,மும்பையும் குறிபார்த்து நிற்கிறது.

அவனுக்காக பாரதியோடும், வ.வு.சிதம்பரத்தோடும் அழுத தமிழகத்தின் கடற்கரையில் இந்திய கப்பல்களால் லாகூரும்,கராச்சியும் 24 மணிநேரமும் குறிவைக்கபடுகிறது.
காலம்தான் என்ன விசித்திர விளையாட்டுக்களை எல்லாம்ஆடுகிறது..

இன்று அந்த மாவீரனின் இறந்தநாள், அவன் பிறந்த லாகூர் இந்தியாவில் இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவன் நினைவுகளை இத்தேசம் ஒருநாளும் மறக்காது, இந்திய மண்ணோடும் , காற்றோடும் கலந்தவன் அவன்

அவனுக்கு வீர வணக்கம்…

மருதுபாண்டியர்

சுதந்திர போராட்டத்தை இந்தியாவில் தொடங்கிய வீரர்களில் முக்கியமானோர் மருது சகோதரரர்கள் அவர்களின் வீரமும் தியாகமும் பெரிது .

சாதரண குடும்பத்து சகோதரர்கள், ஆனால் தங்கள் வீரத்தாலும் விசுவாசத்தாலும் சிவகங்கை அரசின் தளபதிகளாயினர், முத்துவடுகநாதரின் நம்பிக்கைகுரியவர்களாயினர்.

இருவருமே மருதநாயகம் போல பலசாலிகளாகத்தான் இருந்தார்கள், பீரங்கிகளை அனசாயமாக‌ தூக்கி திருப்பும் அளவிற்கு உடல்கட்டு இருந்திருக்கின்றது

மருதநாயகம் எனும் கான்சாகிப்பின் நாடு என அறியபட்ட அப்பகுதி நாட்டின் காடும், கான் நாடு என்றே அறியபட்டது. அந்த கான் நாட்டின் புலிகள் கூட அவர்களுக்கு அஞ்சி இருக்கின்றன.

முத்துவடுகநாதர் காலத்திற்கு பின் வேலுநாச்சியார் பதவியிழந்து அலையும் பொழுது அவரை காடுகளிலும் பின் ஹைதர் அலி பாதுகாவலிலும் வைத்திருந்தவர்கள் அவர்களே

பின் போர்தொடுத்து வெள்ளையனை விரட்டி மறுபடியும் வேலுநாச்சியாரை அரசி ஆக்கியதும் அவர்களே

வேலுநாச்சியார் வீழ்த்தபட்டபின்னும் சிவகங்கை மன்னர்களாக வெள்ளையனை எதிர்த்து நின்றதும் அவர்களே

கட்டபொம்மனுக்கு பின் ஊமைத்துரைக்கு அடைக்கலம் கொடுத்ததும், பாஞ்சாலங்குறிச்சியில் ஊமைதுரை பெரும் போர் நடத்தவும் காரணம் அவர்கள்.

தென்னகத்தாரை எல்லாம் திரட்டி திருச்சி கோட்டையில் தென்னகம் சுதந்திர நாடு என ஜம்புதீவு அல்லது ஜம்வீத்யூத் பிரகடனம் என சுதந்திர நாட்டினை அறிவித்ததும் அவர்களே

த‌மிழ் இலக்கியங்களில் நாவலன் தீவு என தமிழகத்தினை சொல்வார்கள் அல்லவா, அந்த நாவலந்தீவுதான் சமஸ்கிருதத்தில் ஜம்பு தீவு

எப்படியோ இந்நாட்டு சுதந்திர பிரகடன உரையினை வாசித்த மாவீரர்கள் முதலில் அவர்கள்தான், இந்திய வரலாற்றில் அவர்கள்தான்.

அதன் பின்பு 1947ல் நேருதான் வாசித்தார்.

பின் ஹைதரும் திப்புவும் கொல்லபட, மருதுபாண்டியருடன் இருந்த பலர் உள்நாட்டு காட்டிகொடுப்பால் கொல்லபட, குறிப்பாக இந்த புதுகோட்டை மன்னன் தொண்டைமான் போன்றோரின் சதிசெயல்களால் மருதுபாண்டியர் தோற்றனர்

பின்னும் அகபடவில்லை, ஆனால் கோவில்களுக்கு அள்ளி கொடுத்தவர்கள் மருதுபாண்டியர். அதுவும் காளையார் கோவில் கோபுரம் அவர்களால் கட்டபட்டது.

மருதுபாண்டியரை அவர்களால் பிடிக்க முடியவில்லை. சில விஷேஷ ஆயுதங்களில் அவர்கள் பாதுகாப்பாய் இருந்தனர், குறிப்பாக வளறி (வளை எறி) போன்ற ஆயுதம் அது

தாக்கிவிட்டு திரும்ப கைக்கே வரும் பூமராங் வகையது, தமிழரின் சிறப்பான ஆயுதம். மருதிருவர் அதில் கைதேர்ந்திருந்தனர்

ஆங்கிலேயர் அதில் தடுமாறினர், அப்படியான பல வகை சாகசங்களால் வெள்ளையரை அடித்திருந்ததால் அவர்களுக்கு அச்சம் இருந்தது.

மருதுபாண்டியர் இருக்கும் வரை தென்னகம் தங்களுக்கு இல்லை என்பதில் அஞ்சி இருந்தனர் ஆங்கிலேயர்

அதனால் மருதுகளின் பலவீனத்தில் அடித்தனர், மருதிருவரின் பலஹீனம் பக்தி

மருதுபாண்டியர் சரணடையாவிட்டால் காளையார் கோவில் கோபுரத்தை தகர்ப்போம் என் அறிக்கையிட்டனர் வெள்ளையர்.

அது பொறுக்காது, தம்மை விட ஆலயமே முக்கியம் என சரண்டைந்து, தங்கள் உடலை அந்த ஆலயத்திற்கு முன்பே புதைக்குமாறும், இதுகாரும் ஆலயங்களுக்கு தாங்கள் செய்த உதவிகள் தொடர்ந்து நடக்குமாறும் வெள்ளையனிடம் உறுதிபெற்றுகொண்டே தூக்கு மேடை ஏறினர் அவர்கள்

“தேசியமும் தெய்வீகமும் இரு கண்கள்” என்ற பசும்பொன் தேவரின் புகழ்மிக்க வாசகம் இவர்களிடமிருந்தே பிறந்தது.

மருது சகோதர்கள் முடிவுக்கு பின் வெள்ளையன் செய்த காரியம் வளறி எனும் ஆயுத தடை. அது செய்யவும் கற்பிக்கவும் தடை விதிக்கபட்டது

இன்று வழக்கிலே இல்லாமல் ஒழிக்கபட்டது, வெள்ளையனின் சதி அப்படி இருந்திருக்கின்றது.

(இம்மாதிரியான தமிழக அடையாளம் எல்லாம் மீட்டெடுக்கபட வேண்டும், ஆனால் கீழடியிலே நம்மால் ஒன்றும் செய்யமுடியாத பொழுது இதெல்லாம் எப்படி)

இன்று அந்த மாவீரர்கள் தூக்கிலடபட்ட நாள், இந்த தேதியில் ரகசியமாக கொல்லபட்டாலும், மக்களுக்கு அஞ்சி அவர்களின் உடலை வெள்ளையன் உடனே கொடுக்கவில்லை

27ம் தேதிதான் அவர்கள் உடல் காளையார் கோவில் எதிரில் புதைக்கபட்டது

மண்ணும், மதமும் உயிரைவிட மேலானது என வாழ்ந்த அந்த மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்துவது நம் கடமை

இத்தேசம் கண்ட மாபெரும் வீரர்களில் என்றுமே மருதுபாண்டியருக்கு உயர்ந்த இடம் உண்டு, தமிழரின் வீரம் அது

அந்த வீர வேங்கைகளுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்

பெரிய மருதுவின் மகனை வெள்ளையர் பினாங்கு தீவிற்கு நாடு கடத்தினர், மலேசிய பினாங்கு நகருக்கு செல்லும் பொழுதெல்லாம் மருதுபாண்டியர் நினைவும் வரும்.

மறக்க முடியா வீரமும் தியாகமும் அவர்களுடையது.

அவர்கள் உடல் கொல்லபட்டிருக்கலாம்,

ஆனால் இந்நாட்டு விடுதலையிலும் அவர்கள் அள்ளிகொடுத்த ஆலயங்களும் அவர்கள் செய்வித்த தேர்களும், அவர்களால் கட்டி காக்கபட்ட காளையார் கோவில் கோபுரமும் உள்ளவரை அவர்கள் வாழ்ந்து கொண்டே இருப்பார்கள்.

[ October 24, 2018 ]

Image may contain: one or more people

வீரபாண்டிய கட்டபொம்மன்

ஆழ்ந்த தூக்கத்திலிருக்கும் தமிழர்களை எழுப்பி இந்திய சுதந்திரபோராட்டத்தில் தமிழக பங்களிப்பு பற்றி கேட்டால் கூட முக்கால் தூக்கத்திலே கட்டபொம்மனை பற்றி சொல்வார்கள், தமிழக வரலாற்றில் ஏக்கர் கணக்கில் இடம்பிடித்து பெரும்புகழ் அடைந்தவர் கட்டபொம்மன்,

கட்டபொம்மன் காலத்திற்கு சற்றுமுன் நாயக்க அரசு ஆற்காடு நவாப்பிற்கு கைமாறிற்று, மொத்த தமிழக பகுதிக்கும் நவாப் தான் முதல்வர். ஆனால் பாளையக்காரர் எனப்படும் குறுநிலமன்னர்கள் அப்படியே நாயக்கர்களாய் இருந்தார்கள், அப்படி மதுரை அரசின் 72 பாளையங்களில் ஒன்று பாஞ்சாலங்குறிச்சி,

வீரபாண்டியபுரம் எனும் ஊரில் பிறந்து வளர்ந்த கெட்டிபொம்மு எனும் பெயரால் வீரபாண்டிய கட்டபொம்மன் ஆனார் (அய்யம்பேட்டை அறிவுடைநம்பி கலியபெருமாள் சந்திரன் கதைதான்)

ஒருவழியாக கிளைவின் அதிரடியில்,கல்கத்தா தொடங்கி வெள்ளையன் ஒவ்வொரு அரசனாக பெண்டு நிமிர்த்தி மொத்த இந்தியாவை விழுங்கி தென்னகம் வந்து ஆற்காடு நாவாப்பையும் பிடித்தனர். நவாப் வடிவேலு பாணியில் “சொன்னார் நாட்டை நான் வச்சிக்கிறேன்..கப்பத்தை நீ வச்சிக்க”

இதுதானே வெள்ளையருக்கு வேண்டும், நவாப் பாளையத்தாரிடம் வரிபிரிப்பார், அதனை கமிஷன் எடுத்துகொண்டு வெள்ளையருக்கு கொடுப்பார், அவர்களும் “தேங்க் யூ..தேங்க் யூ” என வாங்கிகொள்வர். யாராவது வரிகொடுக்காமல் அடம்பிடித்தால் அவர்களை வெள்ளையனுக்கு கை காட்டிவிடுவார், அவர்கள் வந்து அன்னாரை தண்டிப்பார்கள், வல்லாட்சி நடந்தது.

அப்படி நவாப் முதலில் கைகாட்டியது பூலித்தேவன், ஒரு குறுநிலமன்னர் எப்படியோ நாயக்கரை மீறி ஆட்சி செய்த தமிழ்மன்னன். பெரும் படையோடு வந்து அவரை ஆட்சி அகற்றியது யூசுப்கான் எனும் ராமநாதபுர தளபதி, சினிமா தமிழருக்கு அவர் பெயர் நன்றாக தெரியும், வேறுயாருமல்ல கமலஹாசனின் கனவில் வரும் அபூர்வமாக வரும் ஆண்களில் ஒருவர்,

அவர் மருதநாயகம்.

பூலித்தேவனை இறுதி வரை யாரும் கைதுசெய்யவில்லை. பெர்முடா மர்மம் போல இவரும் விடை தெரியா மகா மர்மம்.

ஆனால் நாயக்க மன்னர்களின் உதவி கிட்டவில்லை, தனிமனிதனாக போராடினார்,வீழ்ந்தார்.

மிக சரியாக 40 வருடம் கழித்து ஒரு நாயக்க மன்னனும் அதேபோல வெள்ளையனை எதிர்க்க ஆரம்பித்தார், ஆச்சரியமாக அவருக்கும் எந்த பாளையமும் உதவவில்லை, உயிரை விட்டார்.

அந்த நாயக்கமன்னன் தான் கட்டபொம்மன், எல்லோருக்கும் அவரைபற்றி தெரியும் என்பதால் அ,ஆ,இ.. என தொடங்கவேண்டாம். ஆனால் அவரை ஆழ்ந்து படித்தால் பல உண்மைகள் தெரியும்.

அதாவது அந்த காலத்தில் வெள்ளையருக்கு பெரும் சவால் மாவீரன் திப்புசுல்தான். சவால் என்றால் ராக்கெட் வீசி வெள்ளையனை அதிரசெய்யும் அளவிற்கு திகில் கொடுத்தார், இவரை அடக்காமல் இந்தியா நமக்கெல்ல என கம்பெனி முடிவுசெய்த நேரம். கடும் பண நெருக்கடியால் வரிகளை உயர்த்தினர்.

பெட்ரோல் விலை உயர்ந்தால், காய்கறிவிலையும் உயரும் அல்லவா?, நவாப்பும் வரி உயர்த்தினார். இங்குதான் கட்டபொம்மனுக்கு கோபம் வந்தது, ஆனால் நியாயமான வரியை அவன் செலுத்த்திதான் வந்தான்.

“வாருங்கள் இதற்கொரு முடிவு கட்டுவோம்” என எல்லா பாளையத்தையும் அழைத்தான் யாரும் வரவில்லை, மறைமுகமாக அந்த பாளையத்தாரை எச்சரித்தான், எச்சரிப்பு என்றால் எல்லை தகறாறு, “நீங்கள் வரவில்லை என்றால் உங்கள் கிராமங்களில் வரிபிரிப்பேன்” என்ற அதிரடி, அப்படி செய்த் காட்டினார்.

மற்ற‌ பாளையத்தார் கட்டபொம்மனை குறிவைத்தார்கள். வரிசை பெரிது எட்டயபுர பாளையம்,சிவகிரிபாளையம் என எல்லோருக்கும் கட்டபொம்மன் எதிரி ஆனார்.
உச்சமாக கூடுதல் வரியை செலுத்தவில்லை என கட்டபொம்மனுக்கு உரித்தான‌ திருவைகுண்டம் பகுதியை வெள்ளையர் கைபற்றினர்.

அப்பகுதி முப்போகம் விளைந்து அள்ளிகொடுக்கும் பகுதி சுருக்கமாக சொன்னால் இன்றைய பெட்ரோல் கிணறு.
பாஞ்சாலங்குறிச்சி வானம்பார்த்த பூமி.

வரி வசூல் பிரச்சினை இருந்தபொழுதே ஒரு பஞ்சகாலத்தில் திருவைகுண்டம் நெல்குடோனை அடித்து சென்றான் கட்டபொம்மன், இங்குதான் பிரச்சினை பெரிதானது.
ஆனால் திப்பு சுல்தானை தீவிரமாக எதிர்கொண்ட வெள்ளையர், கட்டபொம்மனை பின்னாளுக்கு மாற்றினர்.

அதாவது சர்ச்சைக்கிடமான கலெக்டர் ஜாக்சன் துரையை கூட இடம்மாற்றி தாங்கள் உத்தமர் என்பது போல காட்டிகொண்டனர், அதே நேரம் கட்டபொம்மனுக்கு பின்னால் எந்த பாளையமும் செல்லாதவாறு தந்திரமாக பார்த்தும் கொண்டனர்.

அக்காலம் கம்பெனி ஆட்சி, கம்பெனியி எப்படிபட்ட ஆட்களை இந்தியாவிற்கு கொண்டுவந்தது? லண்டன் தெருக்களில் ரவுடிதனம் செய்தவர்கள், படிக்காதோர், கொஞ்சமும் மனிதாபிமானம் இல்லாதோர், கொலை செய்துவிட்டு தலைமறைவானோர் எல்லோரையும் பிடித்து இந்தியாவில் நீ கலெக்டர், நீ தாசில்தார், நீ எழுதுவியா? அப்படியானால் கவர்ணர் என அனுப்பிகொண்டிருந்தார்கள்

ஜாக்சன் துரை அப்படி பட்டவன். கட்டபொம்மன் முதலில் செலுத்திய வரிகளை குழப்பி அவனுக்கு சினமூட்டியதே ஜாக்சன் துரைதான், அது பெரும் சர்ச்சையாகி ஜாக்சன் மாற்றபட்டாலும் கட்டபொம்மன் வெள்ளையன் கண்களில் அச்சமூட்டுபவனாகவே இருந்தான்.

ஒருவழியாக மைசூர் புலியினை மதவெறி தூண்டிவிட்டு சாய்த்தபின் மொத்த கோபத்தை கட்டபொம்மன் மேல் காட்டினர், பின்னர் விரட்டினர். வீரமங்கை வேலுநாச்சியாருக்கு பின் மருது சகோதரர்கள் ராமநாதபுரம் பக்கம் போராடிகொண்டிருந்தனர்.

அவர்களிடம் உதவிபெரும் பொருட்டுதான், கட்டபொம்மன் புதுகோட்டை ராமநாதபுரம் பகுதிகளில் சுற்றிகொண்டிருந்தார், அப்படி நடந்திருந்தால் வரலாறு மாறி இருக்கலாம்.

எட்டப்பன் காட்டிகொடுத்தான் என்பது வரலாற்று பதிவாயினும் உண்மையில் கட்டபொம்மன் கைதுக்கு காரணம் புதுகோட்டை சமஸ்தானம் என்பது இன்னொரு கோணம்.

புதுகோட்டையில் கைது செய்து பெரும் குற்றபத்திரிகை வாசித்தனர். அடுத்த பாளையங்களை அச்சுறுத்தியது,நெல்குடோனை கொள்ளையிட்டது (அது கொள்ளையா?), வரிகட்ட மறுத்தது, என என்னவெல்லாமோ குற்றம் சொல்லி அவரை தூக்கிலிட்டது கம்பெனி.

இது நடந்த வீர சம்பவம், ஒரு பெரும் வரலாறு, ஒரு சுதந்திர போராட்டம். நடந்தநாள் அக்டோபர் 16

நெல்லை பகுதியில் 1940வரை கதைபாடலாக அல்லது ஜக்கம்மா கோயில்கொடை போன்ற கொண்டாட்டங்களில் நடைபெற்ற நாடகம் இது. அப்பொழுதெல்லாம் கட்டபொம்மனை பற்றி நெல்லை தாண்டி யாருக்கும் தெரியாது.

சிலம்பு செல்வர் ம.பொ.சி தான் முதன்முதலாக “அட இங்கேயும் ஒருத்தன் வெள்ளைக்காரனை அடிச்சிருக்கான்” என ஆச்சரியபட்டு அந்த வரலாற்றை வெளிகொணர்ந்தார்.
உண்மையில் தமிழருக்கும், தமிழக உரிமைகளுக்கும், வரலாறுகள் நிலைத்திருக்கவும் பாடுபட்ட தமிழர்களுள் தலையானவர் ம.பொ.சி.

இன்று கட்டபொம்மனின் நினைவுநாள், ம.பொ.சி கண்ணில் பட்டபின் கட்டபொம்மன் தமிழகம் தாண்டி,இந்தியா தாண்டி எகிப்து அதிபரால் கூட கொண்டாடபட்டார் , உபயம் சிவாஜி கணேசன்

தனக்கு மங்கா புகழ் கிடைக்க காரணமான கட்டபொம்மன் தூக்கிலடபட்ட இடத்தினில் சிவாஜி கணேசன் சொந்தமாக நினைவு சின்னம் நிறுவினார்

கயத்தாறில் முன்பு கட்டபொம்மன் தூக்க்கிலிடபட்ட இடத்தில் மக்கள் கல் வைத்து அஞ்சலி செலுத்துவார்களாம், மிக பெரும் கல் குவியல் குவிந்து கிடந்தது என்கின்றார்கள்

பின்னாளில் சிவாஜி சிலை வைக்கும்பொழுது அதெல்லாம் அப்புறபடுத்தபட்டு விட்டதாம், என்ன தான் சிவாஜி கணேசன் கட்டபொம்மனுக்கு சிலை வைத்தாலும், மக்கள் குவித்து வைத்த அந்த கற்குவியலே மாபெரும் நினைவு சின்னம்

அது அழிந்திருக்க கூடாது.

மக்கள் நாடி பார்ப்பதில் கலைஞருக்கு நிகர் இல்லை, மக்கள் அபிமானம் பெற்றவர் யாராக இருந்தாலும் கலைஞர் ஓடிப்போய் இணைத்துகொள்வார், அவர் இறந்திருந்தால் சிலைவைத்து போற்றுவார், அவரின் அரசு ஒரு பாஞ்சாலங்குறிச்சியில் மாதிரி கோட்டையை கட்டிவைத்து அவரின் அடையாளத்தை பாதுகாத்தது.

ஆயினும் பழம் கோட்டையின் அழிவுகளை கலைஞர் கை வைக்கவில்லை. அது வேலியிடபட்டு அப்படியே இருக்கின்றது.

இன்று கட்டபொம்மன் மாவட்டம் பெயர் மாற்றமாகிவிட்டது, கட்டபொம்மன் போக்குவரத்து கழகும் மாறிற்று,

ஆனால் ஐ.என்.எஸ் கட்டபொம்மன் ஒருகாலமும் மாறபோவதில்லை, காரணம் ராணுவத்திற்குத்தான் போராட்டத்தின் கடினமும்,பெருமையும் புரியும்.

கட்டபொம்மனை தூக்கிலிட்ட மரம் இப்போது இல்லை, அவரை விசாரித்த சிறை பாழ்பட்டு கிடக்கிறது. கோட்டை தரைமட்டமாக்கபட்டிருக்கின்றது. அவரை தூக்கிலிட்ட கயிறு நெடுங்காலம் பத்திரமாக இருந்தது இப்பொழுது காணவில்லையாம்,

என்ன செய்வது அரசாங்க கோப்புகளே காணாமல் போகும் தேசம் இது.

அங்கிருந்து 90 கி.மீ தொலைவில் பத்மநாபபுரம் அரண்மனை மிக அழகாக எழுந்து நிற்கிறது நிற்கட்டும். ஆனால் இரண்டையும் காணும் ஒரு இந்தியனின் மனதில் உயர்ந்து நிற்பது இன்னும் பாஞ்சாலங்குறிச்சி மண்கட்டை இடம்தான் சந்தேகமே இல்லை ,

இதுதான் கட்டபொம்மனின் வெற்றி.

தாமிரபரணி நதிக்கரை நெல்லின் மீது உங்களுக்கு என்ன உரிமை என கேட்ட கட்ட பொம்மனுக்கும், ஈராக்கிய எண்ணையின் மீது உங்களுக்கு என்ன உரிமை என கேட்ட சதாம் ஹூசைனுக்கும் என்ன வித்தியாசம் காட்டமுடியும்?

இருவரும் தூக்கு கயிற்றுமுன் வீரமாக முழங்கினார்கள், அவர் அரேபியாவின் கட்டபொம்மன் என்றால் இவர் நெல்லையின் சதாம் உசைன். நிச்சயமாக சொல்லலாம்.

வீரபாண்டிய கட்டபொம்மன் படம், எகிப்திலும் இன்னபிற சினிமா விரும்பும் அமைப்புக்களாலும் கொண்டாடபட்டுகொண்டிருந்த பொழுது, தமிழக நிலமை எப்படி தெரியுமா? சென்னையில் சினிமா முடிந்து வெளியே வரும்பொழுது இருவர் பேசிகொண்டார்கள்

“இந்த சிவாஜி கணேசனே இப்படித்தாம்பா, முடிவுல செத்துபோய்ருவாரு..இது மட்டும் நம்ம வாத்தியார் படமா இருந்துண்ணு வச்சிக்கோ”..அப்புடியே அவ்ளோபேரையும் சாய்ச்சிபுட்டு அந்த பாணார்மேன பந்தாடிருப்பாரு..

ஒரு வெள்ளக்கார பயலும் பாஞ்சாலங்குறிச்சிகுள்ள நுழைச்சிருக்க முடியாது..”

கனவு காண்பது மட்டுமல்ல, கனவிலே வரலாற்றையும் மாற்றி மகிழ்வான் தமிழன். இந்த மகோரா எனும் சனியன் அப்படி தமிழகத்தை கெடுத்து வைத்திருக்கின்றது

எப்படியோ நல்ல வேளையாக அவர் கட்டபொம்மன் படத்தில் நடிக்கவில்லை நடித்திருந்தால், அது வெளிநாட்டில் திரையிடபட்டிருந்தால் உலகம் என்ன சொல்லியிருக்கும்??
நல்ல வேளையாக இந்திய மானம் தப்பியது.

நெல்லை சீமையின் பெரும் வீரனும் இந்நாட்டின் மிகபெரும் சுதந்திர போராட்ட வீரனுமான அந்த கட்டபொம்மனுக்கு வீர வணக்கம்.

[ October 16, 2018 ]

Image may contain: one or more people and people standing
Image may contain: one or more people, people standing, sky and outdoor
=====================================================================

முன்பெல்லாம் கட்டபொம்மன் விழா என்றால் முதல் ஆளாக பாஞ்சாலங்குறிச்சி சென்று தேம்ஸ் நதிகரையிலே.. கிரேக்க மன்னன் டிரோடமஸ்.. என்றெல்லாம் சீறி கொண்டிருப்பார் வைகோ

இப்பொழுது அறிவாலயத்தில் ஸ்டாலினை முதல்வராக்க படாதபாடு பட்டு கொண்டிருகின்றார் [ October 16, 2018 ]

சுப்பிரமணிய சிவா

சுப்பிரமணிய சிவா

அவர் பெயர் சுப்பராமன், ஆனால் பேசிவிட்டால் சிவ நடனம் போல பேச்சில் தாண்டவம் இருக்கும் அதனால் சிவம் என்றழைக்கபட்டார்,சுப்புராமன் சிவம் என்பது பின்னாளில் சுப்பிரமணிய சிவா ஆயிற்று
தமிழகம் தந்த மாபெரும் தியாகி அவர். மிக சிறந்த மேடை பேச்சாளர், இந்துமதத்தின் மீது அபார பற்றுகொண்டவர். காந்திக்கு முந்தைய காலத்தின் தியாகி
சுதந்திர போராட்டத்தில் காந்தியின் வருகை முக்கியமெனினும் இவர் போன்ற தியாகிகள் ஏற்றிவைத்த நெருப்பைத்தான் காந்தி பெரிதாக்கினார் என்பதில் அய்யமில்லை.
சுப்பிரமணிய சிவா கிட்டதட்ட பசும்பொன் தேவரின் முன்னோடி போன்றவர். தமிழ் பேச்சும் சரி வீரவிளையாட்டுகளிலும் சரி , சிறந்து விளங்கினார்.
திருவனந்தபுரத்தில் தான் வளர்ந்தார் இந்து மதம் அவருக்கு மிக பிடித்த மதமாயிற்று. கிறிஸ்தவ பள்ளிகளிலும் பின்பு படித்தாலும் இந்து மதத்தின் மீது அவருக்கான அபிமானம் அப்படியே இருந்தது.
1905ல் நடந்த ரஷ்ய ஜப்பான் போரில், மாபெரும் நாடான ரஷ்யாவினை தோற்கடித்தது ஜப்பான்
ஆசிய நாடென்று ஐரோப்பிய நாட்டை தோற்கடிக்க முடியும் எனும் நம்பிக்கையினை அதுதான் கொடுத்தது, அது இந்தியாவிலும் எதிரொலித்தது
இந்தியாவில் அது உணர்ச்சியூட்டுவதை கண்ட ஆங்கிலேயன் பிரித்தாளும் சூழ்ச்சியில் கடுமையாக இறங்கினான், வங்கம் பிரிந்ததும் முஸ்லீம் லீக் உருவானதும் அதன் பிறகுதான்
இக்காலகட்டத்தில்தான் சிவா கடுமையாக போராடினார், பலமுறை சிறைக்க்கு சென்றார்
பாரதியுடனும், வஉசியுடனும் அவருக்கு நெருக்கமான நட்பு இருந்தது, மூவரும் பாரத தாயின் தவப்புதல்வர்காளகவே போராடினர்
சிவாவினை சிவாஜி என தேசம் கொண்டாடியது.
சில இதழ்களையும் நடத்தினார். அவ்வபோது ராஜதுரோக வழக்கிலும் சிக்கினார்
1923ல் இந்திய ஒற்றுமைக்காக பாரதமாதா கோவில் அமைக்கும் வேலையில் இறங்கினார். இந்தியாவிலே முதன்முறையாக பாரதமாதா கோவில் அமைக்க பாப்பாரபட்டி அருகே இடம் வாங்கினார்
கல்கத்தாவிலிருந்து தேசபந்து சித்தரஞ்சன் தாஸை அழைத்து வந்து அடிக்கல் நாட்டினார்.
இனி பொறுப்பதில்லை என கொதித்த அரசு அவரை இம்முறை கடும் சிறையில் அடைத்தது, அங்கேதான் அவரை தொழுநோய் தாக்கியது,
அந்நோய் தாக்க வைக்கபட்டது, அதன் காரணமாக அவர் பொதுவிடத்தில் நடமாட முடியாதவாறு தடை விதித்தது பிரிட்டிஷ் அரசு
ஆனாலும் உடலை மூடியபடி சுற்றிவந்து பேசி கொண்டே இருந்தார் சிவா
தொழுநோயாளியாக சுற்றிவந்தார் சிவா, அவரின் நண்பர் வ உசி செக்கிழுத்துகொண்டிருந்தார், பாரதியார் வறுமையில் வாடிகொண்டிருந்தார்
இம்மூவருமே ஆங்கில புலமை மிக்கவர்கள், பெரும் அறிவாளிகள், கொஞ்சம் தலைவணங்கியிருந்தால் வெள்ளையன் அரசில் பெரும் பதவிகளை வகித்திருப்பார்கள்
ஆனால் அந்த வெள்ளை மனத்தோருக்கு பொதுநல பற்று இருந்தது, தகுதி இழந்து கொடுநோய்க்கும் கடும் வறுமைக்குள் ஆளானார்கள்
மிக பெரும் காரியத்தில் இறங்கிய சிவா, தன் 41ம் வயதிலே தொழுநோய்க்கு பலியானார்.
இன்று அவரின் பிறந்தநாள்
பாரத தாய்க்கு அவர் கட்ட நினைத்த கோவில் கட்டபடாமலே போய்விட்டது, சுதந்திர இந்தியாவிலும் அது கட்டபடாமல் இருப்பதுதான் வினோதம்
தேசம் முழுக்க தேச பக்தி பொங்கும் இக்காலத்தில், தமிழகத்தில் சில சில்லறை பிரிவினைவாதிகள் அதிகம் பேசும் காலத்தில் உடனடியாக செய்யவேண்டியது அந்த சிவாவின் கனவான பாரதமாதா கோவிலை கட்டவேண்டியது
தேசபக்தர்கள் அதனை செய்யலாம் அதற்கு பாஜக, ஆர்.எஸ்.எஸ், காங்கிரஸ் என்ற எந்த பேதமும் இல்லை. தேசம் என்பது கட்சிகளுக்கு அப்பாற்பட்டது
ராமர் கோவிலை விட பாரதமாதா கோவில் முக்கியமா இல்லையா என்றால், நிச்சயம் மகா முக்கியம்.
அந்த பாரதமாதா ஆலயம் அமைப்பதே சுப்பிரமணிய சிவா போன்ற உன்னத தியாகிகளுக்கு செய்யும் மரியாதை
தேசத்திற்காக தன் வாழ்வினையே தியாகம் செய்த அந்த மாபெரும் தேசபக்தனின் பிறந்த நாளில் இத்தேசம் அவரை நன்றியோடு வணங்குகின்றது
[ October 4, 2018 ]
Image may contain: one or more people, people standing and beard

தேசபிதா மகாத்மா காந்தி

அந்த மோகன்தாஸ் புரிந்துகொள்ள கொஞ்சம் சிரமான மனிதர், உணர்ச்சிவசபடாமல் அமைதியான மனதோடு சிந்தித்தால் அவர் ஒரு அற்புதமான பிறவி, அதனால்தான் உலகம் அந்த மனிதனை மனிதருள் சிறந்தவர் என கொண்டாடிகொண்டிருக்கின்றது.
அவர்தான் தேசபிதா மகாத்மா காந்தி,
உண்மையில் காந்தி என்பது அவரின் குடும்பபெயர், பின்னாளில் பாரத பெயராக நிலைத்துவிட்டது.
கொஞ்சம் வளமான பிண்ணனி கொண்ட குஜராத்தி குடும்பம் அது, மாணவன் காந்தி ஒன்றும் படிப்பில் சூரர் அல்ல, சராசரிதான். பின்னாளில் 18ம் வயதில் லண்டனுக்கு வழக்கறிஞருக்கு படிக்க சென்றார், சுருக்கமாக சொன்னால் அன்றைய இந்தியாவின் பெரும் சிக்கல் அவருக்கு தெரியவில்லை, வளமான குஜராத் வணிக வாழ்வும், சொர்க்கபுரியான லண்டனுமே அவர் அறிந்திருத்த உலகம் அல்லது மானிடம்.
வக்கீல் தொழிலுக்காக சிங்கப்பூருக்கோ அல்லது வேறு நாடுகளுக்கோ சென்றிந்தால் கூட இன்று இந்திய லஞ்ச,கருப்பு,டாஸ்மாக் பணங்களில் சிரிக்கும் அவமானம் அவருக்கு வந்திருக்காது, ஆனால் தென்னாப்ரிக்கா அவரின் விதியினை மாற்றிற்று.
அந்த காலத்திலிருந்தே இனவெறிக்கு பெரும் எடுத்துகாட்டு தென்னாபிர்க்கா, மிக சமீபம் வரை இனவெறி சிக்கல் உண்டு என்றால் அந்தகாலம் எப்படி இருந்திருக்கும்?. அங்குதான் இனவெறியின், அடிமைதனத்தின் கோரமுகத்தினை நேருக்கு நேர் காண்கிறார், புத்தனுக்கு வந்த ஞானம்போல காந்திக்கும் வந்தது, களத்தில் குதித்தார்.
காந்தி பெரும் திறமையான வக்கீலோ அல்லது பெரும் அறிவுஜீவியோ அல்ல, ஆனால் அடுத்தவர் படும் வதைகளை காண சகிக்காமல் தானே அவர்களுக்காக போராட வந்த மனித நேய மிக்க சாதாரண மனிதர்.
தென்னாபிரிக்காவில் பல போராட்டங்களை முன்னெடுத்து அவற்றில் குறிப்பிடதக்க வெற்றியும் பெற்றார், வெற்றி என்றால் வெள்ளையனை விரட்டினார் என்பதல்ல, சில உரிமைகளை அங்கு சுரங்க அடிமைகளாய் இருந்த இந்தியருக்கு பெற்றுகொடுத்தார், இன்று அங்குள்ள சிறுபான்மை இந்தியருக்கு வோட்டு உரிமையாவது உள்ளதென்றால் அதற்கு காரணம் காந்தியே.
அப்படியே இந்தியாவிற்கு அவர் வந்தபின், இந்திய போராட்டகளம் வேறுமாதிரி திரும்பியது, ஒட்டுமொத்த 30 கோடி மக்களும் அவரை தலைவராக ஏற்றுகொண்டனர், அவர் சொன்ன திசையினை நோக்கி மொத்த இந்தியா ஓடியது, அவர் சுட்டுவிரலுக்கு கட்டுபட்டது, அதுவரை துப்பாக்கி முனையில் இந்தியாவினை அடக்கிய வெள்ளையனுக்கு இது மகா குழப்பமாக தோன்றிற்று.
காரணம் பிரித்தாளும் கொள்கை, மதவாதம்,சாதி என பல பிரிவினை மூலம் இந்தியாவினை ஆண்டுகொண்டிருந்த வெள்ளையனுக்கு முதல் முதலாக ஜாதி,மதம்,மொழி கடந்த ஒரே இந்திய தலைவனாக காந்தி உருவானதே அவர்களுக்கு அச்சம் கொடுத்தது.
காந்தியின் போராட்ட வடிவம் மகா வித்தியாசமானது, எதிர்யினை பயமுறுத்தி ஓடவிடுவது அல்ல அவர்பாணி. எதிராளியினை சிந்திக்க வைப்பது, அவன் மனதினை உருகவைப்பது, எல்லாவற்றிற்கும் மேலாக மக்களை ஒற்றைபுள்ளியில் குவித்து உரிமைகுரல் எழுப்ப வைப்பது.
அவரின் சித்தாந்தம் மகா எளிது, 30 கோடிமக்களை ஆள்வது வெறும் 1 லட்சம் பிரிட்டானியர், இந்த பொன்கொழிக்கும் நாட்டை அவர்களின் வியாபார தலமாக பார்க்கின்றனர், அந்த வியாபாரத்தில் அடித்தால் ஓடிவிடுவார்கள். மொத்தத்தில் நாம் அவர்களுக்கு ஒத்துழைப்பதுதான் தவறு. அவர்கள் பொருளை வாங்குவதுதான் தவறு, அவர்களின் சட்ட திட்டங்களை மதிப்பதுதான் தவறு.
அதன் அடிப்படையில் ஒத்துழையாமை இயக்கம், அந்நிய பொருள் பகிஷ்கரிப்பு, சட்ட மறுப்பு, என ஒவ்வொன்றாக நடத்தினார். இந்தியாவில் விளையும் உப்பிற்கு உங்களுக்கு வரியா? என அவர் சிந்திக்க சொன்னபொழுது மொத்த தேசமும் சிலிர்த்து எழுந்தது.
அதாவது அடிமைமட்ட மக்களுக்கு வெறியூட்டுவதற்கு பதிலாக அறிவூட்டினார். அதனை பொறுமையாக ஊட்டினார். துப்பாக்கி என்றால் வெள்ளையன் எளிதில் வென்றுவிடுவான், 300 ஆண்டு போராட்டம் அதனைத்தன் சொன்னது. ஆனால் அஹிம்சையினை எப்படி வெல்வது என்பதில் அவன் தடுமாறினான்.
நீங்கள் கொடுமை செய்தால் எங்களை நாங்கள் வதைத்துகொள்வோம், சாவோம். பிணங்களின் மீது ஆட்சிசெய்தால் இங்கிலாந்து அரசுக்கு என்ன வருமானம்? என்ற நுட்பத்தில்தான் வெள்ளையன் சிக்கினான்.
அப்படி அவர் புகழ்பெற்ற போராட்டங்களை நடத்தி பின் விடுதலையும் பெற்று கொடுத்து, பின் வரலாற்றில் அழியா இடம் பிடித்ததெல்லாம் வரலாறு. இந்தியாவில் அவர் மறக்கபடிக்கபடலாம், ஆனால் உலகெல்லாம் வாழும் மனிதர்கள் அவரை மறக்கமாட்டார்கள்.
உண்மையில் வெள்ளையன் காந்தியிடம் தோற்றான், உள்மனதில் பழிவாங்க திட்டமிட்டான். என்று அவர்கள் அரசியல் கொலையினை நேரடியாக செய்வார்கள்? சில சர்ச்சைகளை பயன்படுத்தி பாகிஸ்தானை பிரிக்கும் நிலைக்கு தந்திரமாக கொண்டு சென்றார்கள்.
எவ்வளவோ காந்தி மன்றாடியும், ஜின்னாவினை அவரால் சமாதானபடுத்த முடியவில்லை, விளைவு இந்திய பிரிவும், ரத்த ஆறும் ஓடவைத்து தந்திரமாக அவரை பழிவாங்கினான் வெள்ளையன்.
காந்தி ஒரு இந்து, ஆனால் உன்னதமான இந்து. பாகிஸ்தான் பிரிந்து சென்றபொழுதும் அதற்கு கொடுக்கவேண்டிய பணத்தை கொடுக்க சொன்னர். இந்தியாவிலே தங்கவிரும்பும் இஸ்லாமியருக்கு இது தாய்நாடு என அறிக்கையும் விட்டார், இதுதான் அவருக்கு “இந்து எதிரி” எனும் பெயரினை கொடுத்து உயிரையும் பறித்தது.
அந்த சூழ்நிலை அவருக்கு மகா சிக்கலனாது, அவர் பாகிஸ்தான் பிரிந்ததில் மனம் நொந்துகிடந்தார், அந்த பணத்தை தாமதம் செய்தாலோ அல்லது கலவரங்களுக்கு காரணம் பாகிஸ்தான் என அறிக்கை இட்டாலோ அவர் இந்துமத வெறியராக அறிவிக்கபட்டிருப்பார்.
அப்படி ஒரு நிலை வந்திருந்தால் இந்தியாவில் மீதமிருந்த சிறுபான்மை இஸ்லாமியரின் நிலை இன்னும் படுமோசமாக மாறி இருக்கும். உண்மையில் மதவெறியர்கள் அதனைத்தான் எதிர்பார்த்தார்கள், நடக்கவில்லை வெறுப்பில் துப்பாக்கியால் பழிவாங்கினார்கள் அதுவும் பல முயற்சிகளுக்கு பின்னால்.
50 ஆண்டுகாலம் வெள்ளையன் பாதுகாத்த காந்தியினை வெறும் 1 ஆண்டுக்குள் கொன்றது அவரது கனவான சுதந்திர இந்தியா, காரணம் மதவெறி.
காந்திமேல் சர்ச்சைகளும் உண்டு, அதாவது பகத்சிங்கினை காப்பாற்றவில்லை, அல்லது நேதாஜியினை அவர் பகைத்தார் என ஏராளம் உண்டு.
இது பகத்சிங்கையோ, அல்லது நேதாஜியினையோ அல்லது காந்தியினையோ புரிந்துகொள்ளா வகையில் பரப்பபடும் செய்தி. அதாவது மூவரும் வேறுவேறு வழி. தன்னை விடுவிக்க பிரிட்டிசாரிடம் முறையிட்ட‌ தனது தந்தையினையே கடுமையாக எதிர்த்தவன் பகத்சிங், காந்தி முறையிட்டாலும் அதனையேத்தான் சொல்லி இருப்பார். நேதாஜி வெளிநாட்டவர் உதவியுடன் ராணுவவழி சாத்தியம் என எண்ணியவர், இந்தியாவிற்குள் ஒரு குண்டு கூட அவரால் வெடித்தது இல்லை. காந்தியினை துரோகி என்றெல்லாம் அறிவித்தவரில்லை.
வன்முறைக்கு காந்தி எதிரி, வன்முறையால் அமைக்கபடும் எந்த அமைப்பும்,விடுதலையும் நிலைக்காது என்றவர், சோவியத் யூனியனை அப்படித்தான் சொன்னார், அது உடைந்தும் போயிற்று. இன்னொன்று தீவிரவாதிகளை காந்தி ஆதரித்தால் எண்ணற்ற இளைஞர்கள் ஆயுதம் ஏந்துவார்கள், பெரும் ரத்தகளறி ஏற்பட்டிருக்கும்.
மொத்தத்தில் இந்திய இளைஞர்களை துப்பாக்கி ஏந்தவிடாமல் அவர்களை காமராஜர்,நேரு,சாஸ்திரி என வருங்கால தலைவர்களாக மாற்றி காட்டிவர் காந்தி. ஒரு தலைவன் தன்னை நம்பிய மக்களை ஒரு சிராய்ப்பும் இன்றி காப்பாற்ற வேண்டும். காந்தி அதனைத்தான் செய்தார்.
இதுதான் காந்தியின் வெற்றி மாபெரும் வெற்றி.
உலகில் அகிம்சையால் சாதித்த நெல்சன் மண்டேலா, மார்டின் லுத்தர் கிங் போன்றவர்கள் அவர் வழியில் போராடியதால்தான் இன்றளவும் வரலாற்றில் நிலைத்திருக்கின்றார்கள். அவ்வகையில் லுத்தரின் புகழ்மிக்க போராட்டத்தின் பலனில் வந்த ஒபாமா. இன்று அமெரிக்க அதிபராக காந்தியை புகழ்கின்றார் என்றால் அது காரணமில்லாமல் இல்லை.
எந்த லண்டன் ஏகாதிபத்தியம் அவரை எள்ளி நகையாடி பின் அங்கிகரீத்ததோ அதே லண்டன் பாராளுமன்றம் அவருக்கு சிலைவைத்து வணங்குகின்றது.
ரத்தகளறிகள் மிகுந்த இவ்வுலகில் மகாத்மாவின் வழிதான் சிறந்தது என ஐ.நாவில் பான் கீ மூன் மேற்கோள் காட்டுகின்றார், இவை எல்லாம் காந்தியின் வெற்றி, உலகம் உணர்ந்துகொண்ட உத்தமனின் வெற்றி.
ஆனால் பாரத திருநாட்டில் நடப்பது என்ன?
மதவெறியின் உச்சத்தில், அதுவும் பெரும் ரத்தகளறி ஏற்படும் நோக்கில் இஸ்மாயில் என பச்சை குத்திகொண்ட கோட்சே, அவரை கொன்ற கோட்சே தியாகி ஆக்கபட்டுகொண்டிருக்கின்றார், இதை எல்லாம் குஜராத்தில் பிறந்தவராக அல்ல, இந்திய பிரதமராக கண்டிக்கவேண்டிய உச்சம் இங்கு அமைதி காத்துவிட்டு, ஐ.நாவில் “ஆமாம் காந்தி உத்தமர்” என கேமரா நோக்கி தலையாட்டுகின்றது.
காந்தி என்ன தலைமைக்கு ஆசைபட்டாரா? இல்லை தன் பிள்ளைகள் எல்லாம் இந்தியாவினை ஆளவேண்டும் என ஆசைபட்டாரா? தான் வெள்ளையனை எதிர்ப்பதால் தன் மகனின் லண்டன் படிப்பினையே தடுத்து தீரா குடும்பழி சுமந்தவர்.
( என்ன தலைவர் இவர்? 4 பிள்ளைகளை பெற்றாரே ஒருவரையாவது “நமக்கு நாமே”, “நமது இந்தியா” என தெருவோடு அனுப்பி இருக்க வேண்டாமா?)
உலக சரித்திரத்தில் சுதந்திர போராட்ட தலைமேற்று, அதில் வெற்றியும் பெற்று ஆனால் அதிகாரம் வேண்டாம் என ஒதுங்கிய ஒரு தலைவனை காட்டமுடியுமா? அமெரிக்காவின் வாஷிங்டன், ரஷ்யாவின் லெனின், சீனத்து மாசேதுங், மலேசியாவின் துங்கு என யார் போராட்ட‌ தலைவரோ அவர்கள் அதிபர் ஆனார்கள்.
ஆனால் பெரும் வெற்றிபெற்ற பின்னும் அரசியல் வேண்டாம், இந்திய மக்களுக்கு உழைக்க இன்னொரு வழி இருக்கின்றது என சொல்லிகாட்டிய உத்தமர் காந்தி.
காந்திக்கும் தமிழகத்திற்கும் உள்ள உறவு மகத்தானது, தென்னாபிரிகாவில் 16 வயதில் கடும் மனவுறுதியுடன் போராடி உயிர்நீத்த தமிழ்ப்பெண் தில்லையாடி வள்ளியம்மைதான் என்னை போராட தூண்டியவர் என சொன்னவர் காந்தி.
மதுரை பக்கம் தமிழ் விவசாயிகள் மேலாடை இன்றி உழைப்பதை கண்ட காந்தி எனது சகோதரர்கள் போலவே நானும் என மேலாடை துறந்தார் (அதன்பின் கோர்ட் என்ன? சட்டை கூட அணியவில்லை), புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு அழைத்தபொழுது, எனது சகோதரர்களான தாழ்த்தபட்ட மக்களை அனுமதிகாத ஆலயத்திற்குள் நுழையமாட்டேன் என சொல்லிய இடமும் தமிழகமே.
கள்ளுகடை எதிர்ப்பு என்றவுடன், பெரியார் போன்றவர்கள் தென்னந்தோப்பையே அளிக்கும் அளவிற்கு காந்திபாசம் இருந்த மண்ணில்தான் இன்று டாஸ்மாகை அடைக்கமாட்டோம் என ஆட்சியும் நடக்கின்றது.
அப்படியே காந்தி நினைவு மியூசியம் மதுரையில் அமைக்கபட்டது, புதிதாக ஒரு கட்டடம் கட்டினால்தான் என்ன? அதனை செய்யாமல் புகழ்பெற்ற ராணி மங்கம்மாளின் மாளிகை காந்தி மியூசியம் ஆயிற்று.
கன்னியாகுமரியிலே அவருக்கு மண்டபம் கட்டபட்டது, அதை மட்டும் உருப்படியாக செய்தார்கள் இல்லாவிட்டால் நிச்சயம் விவேகானந்தர் பாறை போல வேறு சர்ச்சைகள் அங்கு எழும்பி இருக்கும்.
இன்று காந்தி பிறந்த தினம், இந்தியாவினை சுற்றி பார்த்து மக்களின் மனதினை இந்தியாவின் உண்மையினை கண்டறிந்து சில கருத்துக்களை சொன்னவர் காந்தி, அது இக்காலமும் பொருந்தும்.
இந்தியாவின் முதுகெலும்பு கிராமங்கள் அதன் விவசாயம் முக்கியம். பெண் சுதந்திரமே இந்தியாவின் வளமான எதிர்காலத்து ஆதாரம் (காவல்துறை உயர்பதவி பெண் அதிகாரிகளே வாழமுடிவதில்லை). அந்நிய பொருளை விரட்டுவது மட்டுமே இந்திய பொருளாதாரத்தினை காக்கும் பெரும் ஆயுதம்.
முக்கியமான ஒன்று, மதவெறி எக்காலமும் இந்த மண்ணின் பெரும் நோய். சமத்துவ மதநோக்கம் கொண்ட இந்தியாவே உலக அரங்கில் ஒளிவீசமுடியும்.
இன்று இந்த தேசத்தை வளப்படுத்துவதாக சொல்லிகொண்டு உலகெல்லாம் ஓடுபவர்கள் நிச்சயம் செல்லவேண்டியது அந்நிய தேசம் அல்ல.
மாறாக சென்று ஞானம் பெறவேண்டிய இடம் சபர்மதி ஆசிரமம், காரணம் இந்தியாவினை ஒளிர செய்யும் ஒளியின் தீப்பொறி அங்குதான் இருக்கின்றது.
இந்தியாவில் இன்று காந்தி பிறந்த நாள் எப்படி அரசு சிறப்பிக்கின்றது என தெரியாது, கொஞ்சம் அவசரபட்டு இந்திரா காந்தி பிறந்த நாளை மிக சரியாக கழிப்பறை தினம் என கொண்டாடியதால் இப்பொழுது யோசனையில் இருப்பார்கள்.
ஆனால் உலகம் பெருமையாக நினைவு கூர்கின்றது, உலகெல்லாம் சிலை அமைக்கபட்டிருக்கும் ஒரே இந்திய தலைவர் எனும் வகையில் அவர் உலகத்தாரார் எல்லோராலும் நினைவு கூற படுகின்றார்.
காரணம் அவர் இந்து மத நெறியாளர்தான், ஆனால் சாதி இல்லை என சொன்ன புத்தன், தன்னை வதைத்துகொண்டு அகிம்சையாக போராடிய யேசு கிறிஸ்து என‌ எல்லா மதங்களின் உயர்ந்த தாக்கங்களும் அவரிடம் இருந்தது,
“வையகத்து வாழ்வாங்கு வாழ்ந்தவர் வானுறை
தெய்வத்துள் வைக்க படும்”
அதனால்தான் மகா ஆத்மா எனும் பட்டமும் அவருக்கு தேடி வந்தது.
அவரை மனமார நேசித்து இறுதிவரை ஒரு இந்திய காந்தியவாதியாக வாழ்ந்த காமராஜரும், இந்நாளில்தான் காலமானார்.
காந்தியும், கருப்பு காந்தியும், லால்பகதூர் சாஸ்திரியும் இந்திய வரலாற்றின் தூய அர்ப்பணிப்பு பக்கங்களின் கல்வெட்டுக்கள்
[ October 2, 2018 ]
Image may contain: 1 person

கில்லாடி கிளைவ் 11

கில்லாடி கிளைவ் 11

பிளாசியில் ஒரு கரையில் இருந்தான் கிளைவ், 1 கிமி தொலைவில் இருந்தது நவாப் சிராஜ் உத்தவ்லாவின் படை
எண்ணிக்கையில் பெரும் மடங்கு நவாபின் படை. நால்வகை படைகளும் கூடவே பீரங்கி படைகளும், துணைக்கு பிரெஞ்சிக்காரரின் துப்பாக்கி படையும் இருந்தது
அக்கால பிரஞ்காரர்கள் இன்று பழனிசாமி அரசுக்கு பாஜக முட்டு கொடுப்பது போல கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிரானவர்களுக்கு துணைக்கு வந்து கொண்டே இருந்தனர்
பிளாசி மாமமரத்தின் அடியில் தனியே அமர்ந்தான் கிளைவ், அவன் உள்ளம் பெரும் வருத்தத்திலும் குழப்பத்திலும் இருந்தது.
ஆம் மீர்ஜாபர் படையுடன் தன்னோடு வரவேண்டும் என்பதுதான் அவனின் திட்டம், ஆனால் ஜாபரோ வருவதாக இல்லை
இதோ யுத்தம் தொடங்கபோகின்றது, இதுவரை வராத ஜாபரா இனி வரப்போகின்றான்? எப்படி எல்லாம் இந்தியாவில் துரோகிகள் இருக்கின்றார்கள்
ஓர்மிசென்ட், மீர்ஜாபர் என அவன் நினைவில் வந்துகொண்டே இருந்தார்கள், அவனோ யுத்தத்தில் வெல்ல வாய்ப்பில்லை என்றே கருதினான், தற்கொலை என்ணம் கூட வந்து போயிற்று
சாவதே சவாம் களத்தில் சாவோம் என என எண்ணி விடிந்ததும் யுத்த களம் சென்றான்
இந்திய வரலாற்றின் மிக மிக முக்கியமான யுத்தம் அது
ஆம், இந்தியாவின் மிக முக்கியமான அரசான முகலாய அரசில் பஞ்சாப் டெல்லி வங்கம் ஆகியவை மகா முக்கியமான பகுதிகள்
வங்கத்தில் ஆதிக்கம் செலுத்துவோர் அப்படியே முன்னேற வாய்ப்பு பிரகாசமாக இருந்தது, இது பிரெஞ்ச்காரருக்கும் தெரியும்
இந்தியாவினை யார் ஆளபோகின்றார்கள் என்பதை முடிவு செய்யும் அந்த யுத்தம் தொடங்கியது, பிளாசி போர்
அது ஜூன் 23, 1757
60 ஆயிரம் வீரர்கள் இருந்த நவாபின் படையினை நேருக்கு நேர் எதிர்கொண்டான் கிளைவ், அவர்களை முன்னேற விட்டால் தொலைத்துவிடுவார்கள் என்பது அவனுக்கு தெரியும்
ஆம் ஆள் அம்பு, கோடாரி, கத்தி என வந்தால் நொறுக்கிவிடுவார்கள்
இதனால் தன் பீரங்கிபடையினை முதலில் தாக்க உத்தரவிட்டான், அதற்கு தக்க பலன் இருந்தது
கிளைவின் பீரங்கிதாக்குதலில் நவாபின் படைகள் சமநிலை இழந்தன, முக்கியமாக நவாபின் பீரங்கி படைகள் சரியாக இயங்கவில்லை
நவாபின் படை பெரும் படைதான், ஆனால் யுத்த தயாரிப்பு இல்லாமல் இருந்தது , இதை பயன்படுத்தினான் கிளைவ்
நிச்சயம் கொஞ்சம் தாக்குபிடித்திருந்தால் நவாப் கிளைவ் படைகளை நொறுக்கி இருக்கலாம், ஆனால் பின் வாங்க உத்தரவிட்டதுதான் பெரும் தவறாயிற்று
கிளைவின் பீரங்கிக்கு பதில் சொல்லமுடியாமல் நவாப் படைகள் பின் வாங்க, முன்னேறினான் கிளைவ்
இந்த மீர்ஜாபர் என்பவர் என்ன செய்தார் என்றால், மிக மிக சாமார்த்தியமான விஷயத்தை செய்தான்
என்ன செய்தான்?
கிளைவ் சொன்னபடி அவனோடு ஓடியிருந்தால் நவாப் விட்டிருக்கமாட்டான், ஒருவேளை கிளைவ் பக்கம் தோற்றுவிட்டால் தன் கதி அதோ கதி
அதே நேரம் கிளைவினையும் பகைக்க முடியாது, இருவருக்கும் பொதுவான காரியத்தை செய்ய வேண்டும்
உண்மையில் மிகபெரும் தந்திரமான காரியத்தை செய்தான் மீர்ஜாபர்
நவாபோடு யுத்தம் செய்ய சென்றவன், யுத்தம் நடக்கும்பொழுது தன் படையினை கலைத்துவிட்டு ஓடிவிட்டான்
மீர்ஜாபர் ஓடியபின் கிளைவிற்கு யுத்தம் எளிதாயிற்று, அசால்ட்டாக அடித்தான்
ஆனாலும் அவன் அடிமனதில் ஆச்சரியம் இருந்தது, எப்படிபட்ட மனிதர் இந்த மீர்ஜாபர், காலத்தை கணித்தே முடிவு எடுக்கும் மாபெரும் தந்திரசாலி இவரிடம் மிக கவனமாக இருக்க வேண்டும்
நவாப் படைகள் தோற்று ஓடின, அவர்களுக்கு 500 பேர் செத்தனர், கிளைவ் படைக்கு இழப்பு வெறும் 40 பேர்
கிளைவ் பிடித்த நிலபரப்பு கிரேட் பிரிட்டனை விட பெரியது, அது இங்கிலாந்தில் பெரும் சாதனையானது
பின்னாளில் சூரியன் அஸ்தமிக்கா பெரும் சாம்ராஜ்யமான பிரிட்டன் இப்படித்தான் தொடங்கியது, தொடங்கியவன் கிளைவ்
யுத்தத்தை வெற்றிகரமாக நடத்தி வங்கத்தை கைபற்றி அலறவிட்டிருந்தான் கிளைவ், மீர் ஜாபர் அவனை பாராட்டி கடிதம் எழுதினான்
(அதற்கு முன்பு மிர் ஜாபர் என்ன செய்தான் என்றால் அவன் நவாப் சிராஜ் உத்தவிலாவிடமே சென்றான், பெரும் படை திரட்டி ஆங்கிலேயரை வெல்வோம் என்றான், நவாபும் சரி என்றார்
ஆனான் நபாபே நீர் இங்கு இருக்க முடியாது, அயோத்தி சுல்தானிடமோ இல்லை பாட்னாவிற்கோ சென்றுவிடுங்கள் என சொல்லி அவரை அனுப்பி வைத்தான்
சிராஜ் உட்டவ்ளா பாட்னாவிற்கு தப்பினான், பெரும் படை திரட்டி கிளைவினை வெல்லும் வெறி இருந்தது)
கிளைவும் அவனை தன்னை வந்து சந்திக்குமாறு கட்டளையிட்டான், ஓடிவந்து நின்றான் மீர்ஜாபர்
தன் கோபம் எதையும் வெளிகாட்டிகொள்ளாமல் தகுந்த நேரத்தில் நீர் ஓடியதாலே வெற்றி சாத்தியமாயிற்று, இனி நீரே நவாப் என அறிவித்தான் கிளைவ்
மீர் ஜாபர் வங்கத்து நவாபானார், கிழக்கிந்திய கம்பெனிக்கு வருமானம் கொட்டியது
கிளைவின் கீர்த்தி பெருகியது, கிட்டதட்ட 30 வயதிற்குள் பிரிட்டனை விட பெரும் நாட்டை வளமான நாட்டை பிடித்து காட்டியிருந்தான் [ September 30, 2018 ]
Image may contain: 3 people