வெளிநாட்டில் இருக்கும் இந்திய தூதரங்கள்

வெளிநாட்டில் இருக்கும் இந்திய தூதரங்கள், அங்கு பணியாற்றும் இந்தியர் நலனுக்காக இயங்குபவை என சொல்ல்படுகின்றது, அவர்களை தவிர யார் இந்தியருக்கு உதவ முடியும்?

எனக்கு 2009ல் திருமணமானது, அதை சென்னை அரசு அலுவலகத்தில் பதிந்து சான்றிதழும் வாங்கியாயிற்று, மூத்தமகளுக்கு அதை காட்டி 2011ல் பாஸ்போர்ட்டும் வாங்கிஆயிற்று

இப்பொழுது மகனுக்கு பாஸ்போர்ட் வாங்க சென்றால் திருமண சான்றிதழ் செல்லாதாம், 2011ல் இதே சான்றிதழுக்குத்தானே கொடுத்தீர்கள் என்றால் அந்த அதிகாரியோடு மல்லுகட்ட முடியவில்லை

அவருக்கு ஆங்கிலம் தெரியவில்லை, எனக்கு இந்தி தெரியவில்லை

அவர் அரைகுறை ஆங்கிலத்தில் சொன்னது இதுதான், அவர்கள் சட்டதிட்டத்தை எல்லாம் மாற்றிவிட்டார்களாம், 2015க்கு பின் சட்டம் இதுதானாம்

சரி 2009ல் செய்த திருமணமும் , 2011ல் பெற்ற குழந்தையும் செல்லாதா? இதர்காக நான் இன்னொரு முறையா திருமணம் செய்யமுடியும் என கேட்டால் பதிலே இல்லை

முடிந்தவரை மல்லுகட்டியாயிற்று, இந்தியா சென்று சான்றிதழ் வாங்கி வா இல்லை என்றால் பையனுக்கு பாஸ்போர்ட் இல்லை என்கின்றார்கள்

இந்தியாவில் விசாரித்தால் கணவன் மனைவி இருவரும் வரவேண்டுமாம், பாஸ்போர்ட் இல்லா மகனை தூக்கிகொண்டு எப்படி வருவது என கேட்டால் பதில் இல்லை

வெளிநாட்டில் தூதரகம் இருப்பது எதற்காக? அங்கிருக்கும் உணவினை சாப்பிட்டு மல்லாக்க கிடக்கவா? நாட்டு மக்களுக்கு உதவி செய்வதற்காக‌

ஆனால் இவர்களுக்கோ துளியும் அப்படி ஒரு எண்ணமில்லை

கோலலம்பூர் இந்திய தூதரகத்தில் கெஞ்சி பார்த்தாலும் ஒன்றும் ஆவதில்லை, இன்னொரு திருமணம் செய், இல்லை இந்தியாவிற்கு போய் சான்றிதழ் வாங்கு ஆனால் பையனுக்கு தரமாட்டோம் என்பது போல் பதில்

சரி 3 மாத குழந்தையினை அதுவும் இந்திய குடிமகனை இத்தேசத்தில் அனாதையாக விட்டுவிட்டா வரமுடியும் என்றால் பதிலே இல்லை

சுத்தமாக , ஒரு மனிதாபிமானமோ இல்லை , இந்தியருக்கு கொஞ்சமும் உதவும் மனப்பான்மையோ இல்லா அதிகாரிகளை அங்கே வைத்திருக்கின்றார்கள்

முடிந்தவரை நண்பர்கள் மற்றும் உறவினர்களோடு சென்னையில் அந்த சான்றிதழை பெற போராடி கொண்டிருக்கின்றேன், அதுவும் சில வாரங்களை தாண்டுகின்றதே தவிர ஒன்றும் நடப்பதாக தெரியவில்லை

நாள் அதிகமானால் சட்ட சிக்கலில் குழந்தை சிக்க நேரிடும்

இந்நிலையில் மகா அவசரமாக நானும் மனைவியும் இந்தியா வரவேண்டி உள்ள சூழல் வந்தாலும் வரலாம், ஆனால் குழந்தையினை கொண்டுவர முடியாது

என்ன செய்வது என தெரியவில்லை, தூதரக வாசலில் விட்டுவிட்டுத்தான் வரவேண்டும் போல.

3 மாத குழந்தைக்கு அதுவும் அதன் சகோதரிக்கு கொடுத்துவிட்டு இக்குழந்தைக்கு இல்லை என்பதெல்லாம் எவ்வகை நியாயமோ தெரியவில்லை

குழந்தை பிறந்த மறுநாளில் பிறப்பு சான்றிதழை 3 நிமிடத்தில் கொடுத்தது மலேசிய அரசு அலுவலகம், ஆனால் பாஸ்போர்ட்டிற்காக 3 மாதமாக அலைந்தும் முடியவில்லை

இப்படிபட்ட நிர்வாகிகளை கொண்டு வெளிநாடுகளில் அரசு எப்படி குடிமக்களை காக்குமோ தெரியாது

அறிவுகெட்ட அதிகாரிகளால் நிரம்பி இருக்கின்றது கோலாலம்பூர் இந்திய தூதரகம்.

முடிந்தால் பாஜக உறுப்பினர்கள் யாராவது இந்திய வெளியுறவு துறைக்கு இதனை கொண்டு சேர்த்தால் உங்களுக்கு நன்றி உடையவனாக இருப்பேன், என் மகனும் நன்றியோடு இருப்பான்

இல்லாவிட்டால் ஏதும் “இந்திய தூதரகம் பாஸ்போர்ட் மறுத்ததால் அனாதை ஆன இந்தியன்” 
என அவனை அனாதை ஆசிரமத்தில் சேர்ப்பதை தவிர வழி தெரியவில்லை


 

வெளிநாட்டுவாழ் இந்தியருக்கு ஒன்று என்றால் சுஷ்மாவிற்கு டிவிட்டினால் போதும் , பறந்து வந்து உதவுவார். ஓடி வந்து உறுமுவார் என்பதெல்லாம் சுத்த பொய்

அவருக்கு நம் பிரச்சினையினை சுட்டி மூன்றாம் நாள் ஆகின்றது, அவர் கண்டுகொள்ளவே இல்லை

சுஷ்மா வெளிநாட்டுவாழ் இந்தியருக்கு உதவுவார் என்பதெல்லாம் எங்கே முட்டுசந்தில் இருந்து கொண்டு பாஜகவினர் செய்யும் பொய் பிரச்சாரம்

அப்படி இந்த அப்பாவிகள் நம்பவைக்கபட்டிருக்கின்றார்கள்

இதற்கு மேலும் கேட்டால், நாங்கள் எப்பொழுது சுஷ்மா உதவுவதாக சொன்னோம், அப்படி சொல்லவே இல்லை என நழுவிவிடுவார்கள்

அங்கு உண்மையினை ஒரு பயலும் பேசவில்லை அல்லது பேச தெரியாது.

ஆக எவனாவது சுஷ்மாவிற்கு டிவிட் செய்தால் உடனடியாக நடவடிக்கை எடுப்பார் என இப்பக்கம் வந்தால் எச்.ராசா சுப்ரீம்கோர்ட்டை எப்படி சொன்னாரோ அப்படி சொல்லி விரட்டபடுவார்கள்…


 

நிச்சயம் நமது பாஸ்போர்ட் பதிவுக்கும் இந்த மலேசிய தமிழ் நாளிதழிளின் தலைப்பு செய்திக்கும் சம்பந்தம் இருப்பதாக நாம் கருதவில்லை

பத்திரிகை என்பது பெரும்பான்மை மக்களின் கருத்தை வெளியிடும் சாதனம், அப்படியாக மலேசியாவில் பணியாற்றும் இந்தியர்களின் குரலாக, குறிப்பாக தமிழக இந்தியர்களின் குரலாக இன்றைய தலைப்பு செய்தி வந்திருக்கின்றது

நாம் சந்தித்த பிரச்சினைகளை சொல்கின்றது, இந்திபேசும் அதிகாரிகளின் அழிச்சாட்டியத்தை சொல்கின்றது

இனியாவது மலேசிய இந்திய தூதரகம் இங்கு பணியாற்றும் தமிழர்களை அலட்சியமாக கையாள்வதை நிறுத்தட்டும்

வெளிநாட்டு பத்திரிகையில் செய்தி வந்தபின்பாவது இந்திய வெளியுறவுதுறை நடவடிக்கை எடுக்கட்டும்

Image may contain: 2 people