சென்னை ஜார்ஜ் கோட்டை

சென்னை கோட்டையினை வெள்ளையர் கட்டி பியாபாரம் செய்து, பின் ஆட்சிக்கு வந்தபின் அக்கோட்டை முக்கியத்துவம் வாய்ந்ததானது, அன்று தென்னிந்தியாவின் தலமை செயலகம் அதுதான்.

அன்று கிழக்கிந்திய கம்பெனி யாருக்கும் கட்டுபடாத கம்பெனி, இந்தியாவில் அது கிளப்பிவிட்ட ஊழலும், கையூட்டும் கொஞ்சமல்ல, கிளைவ் வரும்பொழுது அது அப்படித்தான் இருந்தது

இந்த லஞ்சமும் ஊழலும் ஜார்ஜ் கோட்டையின் ஒரு அம்சமாகவே அதன் தொடக்கத்தில் இருந்திருக்கின்றது, இன்றும் அப்படித்தான் இருக்கின்றது

சென்னை கோட்டை அந்த லஞ்சம் மற்றும் கொள்ளைபணத்த்தால் நிரம்பி கிடந்திருக்கின்றது

அப்பொழுது கிளைவிற்கு முன்பே 1700களில் தலமை செயலாளராக‌ வந்தவர் யேல்,

வந்து என்ன செய்தார்? வழிகாட்டினார், யாருக்கு? இன்றுள்ள அரசியல்வாதிகளுக்கு

குட்கா ஊழல் வரை யேல் என்பவரின் தொடர்ச்சியே

ஆம், சென்னை கோட்டையில் முதன் முதலில் ஊழலில் ஈடுபட்டவர் என வரலாறு அவரைத்தான் சொல்கின்றது, மிக கடுமையான ஊழல் பேர்வழி அந்த ஏல்

ஒரு கட்டத்தில் தமிழக அரசு போல் கிழக்கிந்திய கம்பெனி திவாலாக, கடைசியில் கம்பெனி பணத்தை சுருட்டியது யேல் என்பவர் என்பதை கண்டுபிடித்தார்கள்

கொள்ளையடிக்க இந்தியா வந்த கம்பெனிக்காரன் தன்னிடமே ஒருவன் கொள்ளையடித்தால் விடுவானா? விரட்டினான்

ஆனால் யேல் அமெரிக்கா தப்பினார், அங்கு ஒரு கல்லூரி தொடங்கினார் , பின் அது பல்கலைகழகமாயிற்று அதன் பெயர் யேல் பல்கலைகழகம்

இந்த யேல் பற்றிய ஊழல் குறிப்புகளும் இன்னும் ஏராள குறிப்புகளும் சென்னை மியூசியத்தில் சிக்கின, இப்படிபட்ட கீழ்தரமானவனா யேல் என மேற்குலகம் ஒருமாதிரி பேசிற்று

பிரிட்டனுக்கும் அமெரிக்காவிற்கும் மோதல் தொடங்கியபொழுது யேலின் பல்கலைகழக பெயரை கெடுக்க இக்குறிப்புகளை பயன்படுத்தியது பிரிட்டன்

யேலின் குறிப்புகள் சென்னை கோட்டையிலேதான் இருந்தது, சுதந்திரத்திற்கு பின்பும் அங்குதான் இருந்தது

தாமதமாக தெரிந்துகொண்ட யேல் பல்கலைகழத்தினர் அதனை மீட்க நினைத்தபொழுது இந்தியா கொடுக்கவில்லை. என்ன இருந்தாலும் தங்கள் நிறுவணர் ஊழல்வாதி என்பது அவர்களுக்கு அவமானம் அல்லவா?

பின் என செய்தது? அண்ணாவிற்கு டாக்டர் பட்டம் கொடுத்து ஐஸ் வைத்தது, அண்ணா ஆட்சிக்கு வந்தபின் அந்த யேல் பற்றிய குறிப்புகளை, அவர் கைபட எழுதிய பிரதிகளை சென்னையில் காணவில்லை

ஏன் எப்படி என நீங்கள் கேட்க கூடாது, காணவில்லை அவ்வளவுதான்

ஆக சென்னை கோட்டையில் முதல் ஊழல் செய்த தலமை செயலாளர் யேல், பின் அவரின் குறிப்புகள் அண்ணா காலத்தில் மர்மமாயின‌

அதே சென்னை கோட்டையில் இப்பொழுது ஏராளமான ஊழ ல் சர்ச்சைகள் வருகின்றன‌ , ஆனால் ஆட்சி அண்ணா திமுகவுடையது

சென்னை கோட்டையினை உலுக்கிய ஊழல் வழக்குகளில் யேலுக்கு பின் அண்ணா திமுக சிக்கிவிட்டது

இந்த ஊழல்பேர்வழியான யேலுக்கும் அண்ணா பெயருக்கும் சென்னை கோட்டைக்கும் ஏதோ பூர்வஜென்ம தொடர்பு இருக்கின்றது

அதிமுகவினரை தப்ப விட்டால் என்னாகும்?

தப்ப விட்டிருந்தால் கனடாவிலோ, நியூஸிலாந்திலோ இவர்கள் பல்கலைகழகம் கட்டியிருக்கலாம், பின் அவர்கள் பன்னீர்செல்வத்திற்கும் சசிகலாவிற்கும் பழனிச்சாமிக்கும் டாக்டர் பட்டம் அளித்திருப்பார்கள், எல்லாம் நடந்திருக்கும்

நாமும் டாக்டர் பன்னீர் செல்வம், டாக்டர் சசிகலா, டாக்டர் பழனிச்சாமி என அழைத்துகொண்டிருப்போம், இந்த பாழாய்போன வருமான வரிதுறை எல்லாவற்றையும் கெடுத்துவிட்டது.

என்ன விசித்திரமோ?

கலைஞர் ஆட்சியில் ஒரு கட்டை பீடியோ, அரை கிலோ உப்பு காணாமல் போனாலே ஆட்சியினை டிஸ்மிஸ் செய் என கொடிபிடிப்பவர்கள் இந்த மாபெரும் ஊழலிலும் அவமானத்திலும் வாயே திறக்கவில்லை

அது ஆச்சரியமல்ல‌

திமுகவே அதுபற்றி ஒரு குரலும் எழுப்பவில்லை என்பதுதான் ஆச்சரியம்

என்ன மர்மமோ

யேல், யேல் ஊழல், பல்கலை கழகம், அண்ணாவின் டாக்டர் பட்டம், யேல் குறிப்புகள் காணாமல் போகுதல் என திராவிட கட்சிகளுக்கும் யேலுக்கும், அண்ணாவிற்கும், அண்ணா திமுகவிற்கும் உள்ள தொடர்புகள் ஏராளம்

ஒரே வித்தியாசம்

அன்று கிழக்கிந்திய கம்பெனி, இன்று அனைதிந்திய அதிமுக‌

மற்றபடி அதே சென்னை கோட்டை

அண்ணாவிற்கு உலகில் ஒரு பல்கலைகழகமும் டாக்டர் பட்டம் கொடுக்காதபொழுது, ஏன் சோவியத் ரஷ்யா கூட அவரை கவுரவிக்காதபொழுது அமெரிக்காவின் யேல் பல்கலைகழகம் மட்டும் ஏன் கொடுத்தது என்பதும், அதன் பின் சென்னையில் யேல் குறிப்புகள் காணாமல் போனது என்பதெல்லாம் பற்றி நாம் பேச கூடாது

Image may contain: 1 person