ரஷ்யாவின் சோயுஸ் விண்கலம்

இந்த ரஷ்யாவின் சோயுஸ் விண்கலம் விண்வெளி வீரர்களோடு பழுதானதில் உலகம் ஆடிபோயிருக்கின்றது

1950களின் ரஷ்யாவின் லூனார், ஸ்புட்னிக் காலங்களிலே அமெரிக்கா அதோடு போட்டியிட்டது. மனிதரை நிலவுக்கு அனுப்புவோம் என்றார்கள், விண்வெளியில் அமெரிக்கா ஆதிக்கம் செலுத்தும் என சவால் விட்டார்கள்

மடமடவென 6 விண்கலங்களை செய்தார்கள். அப்பல்லோ, எண்டேவர், கொலம்பியா, சாலஞ்சர், டிஸ்கவரி, அட்லாண்டிஸ் என செய்து குவித்தார்கள்

இவை 6ம் விண்வெளிக்கு சென்று திரும்பும் வகை

ரஷ்யா தன் சோயுஸ் ரக கலத்தை மட்டும் பயன்படுத்தி வந்தது, ஆனால் கூடுதலாக மிர் எனும் விண்வெளி நிலையத்தையே வைத்திருந்தது

1990க்கு பின் ரஷ்யா சிதற அது மிர் நிலையத்தை கைவிட்டது, அதன் பின் உலக நாடுகள் எல்லாம் சேர்ந்து விண்வெளியில் சர்வதேச விண்வெளி நிலையத்தை கட்டியிருக்கின்றன‌

இப்பொழுது சிக்கல் என்னவென்றால் அமெரிக்காவின் 6 விண்கலங்களில் சில விபத்துக்குள்ளானது, நமது கல்பனா சாவ்லாவின் ஓடம் வெடித்ததில் இருந்து அந்நாடு தன் கலன்களை எல்லாம் மூட்டைகட்டிவிட்டது

இப்பொழுது அமெரிக்காவிடன் மனிதர்கள் சென்று திரும்பும் விண்வெளி ஓடம் கிடையாது, தனியார் நிறுவணமான ஸ்பேஸ் எக்ஸ் போன்றவை புதிய மாடல் தயாரிப்பில் இருக்கின்றன‌

ஆனால் அன்றிலிருந்து இன்றுவரை ரஷ்யாவின் சோயுஸ் பாதுகாப்பனதாக அறியபட்டது, அமெரிக்க வீரர்களே சர்வதேச நிலையத்திற்கு அதில்தான் செல்வார்கள்

இது அரசியலுக்கு அப்பாற்பட்ட விஷயம்

சர்வதேச விண்வெளி நிலையத்தில் அமெரிக்க ரஷ்ய வீரர்கள் உண்டு, இப்பொழுது இந்த சோயுஸ் கலத்து வீரர்கள் சென்றபின் அவர்கள் திரும்ப வேண்டும்

ஆனால் இந்த ஓடம் பழுதானதால் இவர்கள் திரும்பிவிட்டார்கள், மேலிருப்பவர்கள் திரும்ப வாய்ப்பில்லை

ஆனாலும் அவர்களுக்கு உணவு முதல் எல்லாம் இன்னும் ஒருவருடம் தாங்கும் என்பதால் இப்போதைக்கு சிக்கல் இல்லை எனினும் உடனே ஓடம் வேண்டும்

அமெரிக்காவிடம் விண்கலம் இல்லா நிலையில் மிக நம்பகமான சோயுஸின் பழுது உலகை அதிர்ச்சி அடைய வைத்திருக்கின்றது

இதெல்லாம் சொல்லும் விஷயம் ஒன்றுதான்

விண்வெளி ஒடம் தயாரிப்பது சாதாரண விஷயம் அல்ல, ஆனானபட்ட அமெரிக்காவே அதில் சலித்துவிட்டது, அவ்வளவு பெரும் பட்ஜெட் விஷயம் அது

ரஷ்யாவொ பழமையான மாடலை வைத்திருக்கின்றது, புதிய ரக மாடல் ஆராய்ச்சியில் அது இருக்கலாம் ஆனால் வெளி சொல்லவில்லை

விண்வெளியில் செயற்கைகோளை நிறுத்தி இன்னும் பல விஷயங்களை செய்தபின் வல்லரசுகள் ஒரு சலிப்பிற்கு வந்துவிட்டன போல‌

ஏதோ சண்டையில் நிலவில் மனிதனை இறக்கியதாக சொல்லிகொண்டாலும் செவ்வாய்க்கு மனிதன் செல்வதெல்லாம் இன்னும் நெடுங்காலம் ஆகும் என்பதை இப்போதைய சம்பவங்கள் சொல்கின்றன‌

இப்போது சொயுஸ் ராக்கெட்டிற்கான பழுது பார்க்கபடுகின்றது, கொஞ்ச நாளைக்கு கடும் ஆய்வில் இறங்கியிருக்கின்றோம் பயணங்கள் ஒத்திவைக்கபடுகின்றன என ரஷ்யா சொல்லியாயிற்று

இந்த சந்தர்பத்தில் போயிங் நிறுவணமும், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவணமும் தங்களால் மனிதர்களை அனுப்ப முடியும் என அமெரிக்காவிடம் சொல்கின்றன‌

ஏற்கனவே சரக்கு ஏற்றிசென்ற ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் வெடித்து சிதறியதால் மனித உயிரில் சவால் எடுக்க அமெரிக்கா தயாராக இல்லை

விஷயம் சீரியசாக இருக்கின்றது. இப்போதைக்கு உலகம் ஒப்புகொண்டிருக்கும் விஷயம் அமெரிக்க கலங்களை விட ரஷ்ய நுட்பம் பழமையானாலும் பாதுகாப்பு மிக்கது, இப்பொழுது கூட வீரர்கள் காக்கபட்டிருக்கின்றார்கள் என்பது

உலகில் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பிய இரு நாடுகள் நிலை இப்படி இருக்க, 2022ல் மனிதரை விண்வெளிக்கு அனுப்புவோம் என மோடி அரசு சொல்லிகொண்டிருக்கின்றது

இந்தியாவோ அவர்கள் அரசை வீட்டுக்கு அனுப்ப தயாராகின்றது

விண்வெளிக்கு மனிதனை இந்தியா அனுப்பினால் என்னாகும்? மோடி ஓடி போய் அமர்ந்துவிட மாட்டாரா?

எவ்வளவு நாள்தான் அவர் உலக நாடுகளையே சுற்றுவார்? அதனால் விண்வெளிக்கு ஹாயாக ஓடிவிடுவார், இந்த விசா சிக்கலும் இல்லை, தீவிரவாத ஆபத்தும் இல்லை எதிர்கட்சிகளும் இல்லை பின் எப்படி போகாமல் இருப்பார்?

[ October 13, 2018 ]

Image may contain: sky and outdoor