ஜமால் கொலை

ஜமால் கொல்லபட்டதில் துருக்கி கடும் கொந்தளிப்பில் இருகின்றது, 18 பேரை கைது செய்திருக்கின்றது எங்கள் நாட்டில் நடந்த இந்த படுகொலைக்கு நியாயம் கிடைக்காமல் விடமாட்டோம் என கொந்தளிக்கின்றது

இவ்வளவிற்கும் ஜமால் துருக்கி குடிமகன் அல்ல, துருக்கிக்கு வந்தவர், கொலை நடந்த இடம் துருக்கி அவ்வளவுதான்

அருமை இந்தியாவிலோ முன்னாள் பிரதமரை கொன்ற அடுத்த நாட்டுகாரர்களை விடுவியுங்கள் என்ற குரல்கள் எல்லாம் வருகின்றன‌

துருக்கியருக்கு தன்மானமும், உணர்ச்சியும் இருக்கின்றது…

[ October 24, 2018 ]

============================================================================

ஜமால் கொலையினை சவுதி திட்டமிட்டுத்தான் செய்தது, மிக நுட்பமாக செய்தார்கள் எப்படி?

அந்த ஜமால் போல் ஒருவரை செட்டப் செய்து, அவர் துருக்கி தூதரகத்தில் நுழைவதையும் அவர் வெளியேறுவதை எல்லாம் வீடியோ எடுத்து ஜமால் பத்திரமாக வெளிவந்தார் என ஆதாரம் எல்லாம் செய்துவிட்டுத்தான் கொலை நடந்திருக்கின்றது

ஆரம்பத்தில் இந்த வீடியோவினை மாறி மாறி காட்டியது சவுதி, ஆனால் சிக்கி கொண்டது எப்படி?

ஜமாலை எங்கே என பெரும் கேள்விகள் எழும்ப்பட்டது, அவர் துருக்கியில் இல்லை, துருக்கியினை தாண்டவுமில்லை என்பதால் சந்தேகம் வலுத்தது

விஷயம் சர்வதேச‌ வில்லங்கம் ஆனபின் சவுதி அவர் கொல்லபட்டிருக்கலாம் என இறங்கி வந்தது.

துருக்கி உளவுதுறை மிக நுட்பமாக கவனித்திருக்கின்றது, கொலை நடக்க போவது அதற்கு தெரிந்திருக்கலாம் என்கின்றார்கள்

ஜமாலை அவர்கள் காப்பாற்றி இருக்கலாம், ஆனால் அவரை காப்பாற்றவா இருக்கின்றது துருக்கி உளவுதுறை?

அது அட்டகாசமாக சவுதி செய்த எல்லா காரியங்களையும் பதிவு செய்திருக்கின்றது, கொலையாளிகள் இரு விமானங்களில் வந்தது . அவர்கள் சவுதி தூதரகம் வந்தது பின் பெரிய பெட்டியில் ஜமால் உடலை கொண்டு சென்றது என எல்லாவற்றையும் பதிவு செய்திருக்கின்றது

இதிலும் ஒரு சறுக்கல் இருக்கின்றது, ஜமாலின் உடல் சவுதிக்கு வரவில்லை அப்படி ஏமாற்றி இருக்கின்றது சவுதி உளவுதுறை என்றும், துருக்கியில்தான் ஜமாலின் உடல் வீசபட்டிருக்கலாம் என்கின்றன சில செய்திகள்

துருக்கி உளவுதுறை அதில் கோட்டை விட்டிருகின்றது , ஜமாலின் உடலை துருக்கியிலே போட்டுவிட்டு துருக்கி உளவுதுறையினை ஏமாற்றி சென்றிருக்கின்றது சவுதி கோஷ்டி

மிக சரியான விஷயம் அது , பின்னாளில் ஏதும் சவுதியில் கொலை தொடர்பான ஆதாரம் கிடைத்தால் மகா சிக்கல் என்பதால் இந்த முன்னெச்செரிக்கை.

இதில் சவுதி அடுத்த கட்டத்திற்கு சென்றுவிட்டது, ஆம் கொலை விஷயம் தெரிந்தாகிவிட்டது இனி கொலையாளிகள் சிக்கினால் விஷயம் விபரீதமாகும்

என்ன செய்யலாம்? தமிழ் சினிமா வில்லன்கள் செய்யும் காரியத்தில் இறங்கிவிட்டது

அந்த கொலை கும்பலில் ஒருவர் மர்மமாக செத்துவிட்டார், இன்னும் சிலர் விரைவில் சாகலாம்

உளவுதுறை என்பது இதுதான், சாதிக்கும் வரை சிக்கல் இல்லை சாதித்தாலும் வெளிதெரியாது

சொதப்பிவிட்டால் அத்தோடு முடிந்தது வாழ்வு..

எப்படியோ துருக்கி சவுதி உளவுதுறைகளின் ஆட்டம் சுவாரஸ்யமாக இருக்கின்றது [ October 24, 2018 ]