ஜல்லிகட்டுக்கு தமிழகமே பொங்கி மீட்டு வந்தது

images.jpg

ஜல்லிகட்டுக்கு தமிழகமே பொங்கி மீட்டு வந்தது, ஆனால் அதில் நடக்கும் உயிர்பலி பற்றி எந்த தமிழனும் கவலைபட்டதாக தெரியவில்லை

நேற்று ஒருவர் களத்தில் செத்திருக்கின்றார், இனி அவர் குடும்பம் என்னாகும்? யார் அக்குடும்பத்திற்கு பொறுப்பு?, அவர்கள்தான் இனி அழுது அலறி காலம் முழுக்க வலியோடு வாழவேண்டும்

இதெல்லாம் கேட்டால் தமிழின துரோகி ஆகிவிடுவோம்

ஜல்லிகட்டிற்கு மாட்டு கொம்பை பிடித்து துன்புறுத்த கூடாது எனும் விதிகளை எல்லாம் வகுத்து நடத்துகின்றார்களாம். அப்படியே வீரர்களுக்கும் தகுந்த பாதுகாப்பு முறைகளை, சில முறைகளை , சிறப்பு பாதுகாப்புகளை நடைமுறைபடுத்த சொல்லி போட்டியினை நடத்தலாம்

ஆபத்தான விளையாட்டுகளை தற்காப்பு விஷயங்களை அணிந்து விளையாடுவதால் அது வீரத்தை காட்டாத விளையாட்டு ஆகிவிடாது

என்னதான் செய்கின்றது பீட்டா?

wa

நியுசிலாந்தில் இதுவரை ஆயிரத்திற்கு மேற்பட்ட திமிங்கலங்கள் இறந்துவிட்டன, நிச்சயமாக மானிட தவறு என்கின்றார்கள்

பெரும் உயிர்வதை அங்கு நடந்திருக்கின்றது

ஆனால் அங்கு பீட்டாவினையும் காணோம், ராதா ராஜன் என்பவரையும் காணவில்லை, ஒரு புளூகிராஸ் அமைப்புகளையும் காணவில்லை

காரணம், இந்த திமிங்கல சாவுக்கு காரணம் பெரும் கைகள் எனும் சர்ச்சை வருகின்றது,

ஆக பீட்டா நம் ஜல்லிகட்டு என்றால் பாயும், திமிங்கலங்கள் சாவு என்றால் வாயினை மூடி கொள்ளும்.

சென்னையில் எண்ணெய் கசிந்து ஆமைகளும் மீன்களும் சாகும் பொழுதும் பீட்டாவினை காணவே இல்லை, ஏன் இந்த மவுனம்?

என்னதான் செய்கின்றது பீட்டா?

பாலமேடு, அலங்காநல்லூர் வீடியோக்களை படையப்பா ரம்யாகிருஷ்ணன் போல பலமுறை பார்த்து முறைத்து கொண்டிருப்பார்களோ?

தமிழகம் பீட்டாவிற்கு எதிராக‌ பொங்கியதில் எவ்வளவு அர்த்தம் இருந்திருகின்றது

 
 

மறுபடியும் அந்த கும்பல் ஆரம்பித்துவிட்டது

மறுபடியும் அந்த கும்பல் ஆரம்பித்துவிட்டது

லாரன்ஸ் வந்தேறி, அந்த ஹிப்காப் (அது என்ன ஹிஹிஹிஹ் காப்?) தமிழன் வந்தேறி, பாலாஜி வந்தேறி, அவர்கள் துரோகம் செய்ததால் போராட்டம் கலைக்கபட்டது என ஓப்பாரி தொடங்கிவிட்டது

அடேய்

காவல்துறையினை கைவசம் வைத்திருக்கும் முதல்வர் பச்சை தமிழன், அவரின் ரிமோட்டை வைத்திருக்கும் சசிகலா தமிழச்சி, சசிகலாவினை ஆட்டிபடைக்கும் நடராஜன் பச்சை தமிழன்

நடராஜனின் தோழர்கள் நெடுமாறன், சீமான் எல்லாம் பச்சோந்தி தமிழர்கள்

ஆக காவல்துறையினை ஏவிவிட்டது தமிழர்கள், காவல்துறையின் கலவர தடுப்பு பிரிவாக வந்த துணை கமிஷணரும் தமிழர், அந்த காவலர்களும் தமிழர்கள்.

இத்தனை களபேரம் நடக்கும் பொழுதும் ஆட்சியின் நிழல் முதல்வரான நடராஜனின் பெரும் கூட்டாளிகளான நெடுமாறன், கொளத்தூர் மணி, சீமான் எல்லாம் ஏதும் அவரிடம் கோரிக்கை வைத்து பார்த்தீர்களா?

நடராஜன் நினைத்தால் நடக்காத காரியம் தமிழகத்தில் உண்டா?

நீங்கள் கண்டிப்பதாக இருந்தால் அடிக்க உத்தரவிட்ட, அடித்த அந்த “தமிழர்களை” கண்டிக்க வேண்டுமா?

அல்லது அமைதியாக போராட ஊக்கம் கொடுத்து, வெற்றி கிடைத்தபின் கலைந்து செல்ல சொன்ன, ஒரு உயிருக்கும் கேடின்றி போராட்டத்தை முடித்த இவர்களை கண்டிக்க வேண்டுமா? ஆனால் ஏன் ஒருவரும் செய்யவில்லை?

இதனை கண்டிக்காத உங்களை எல்லாம்…….

உங்களுக்கு தேவை என்ன? கலவரம், பிணம் அதனை வைத்து அரசியல்

அவ்வளவுதானே சிரியாவிற்கு செல்லுங்கள், ஈராக்கிற்கு செல்லுங்கள், கலிங்கப்போர் பிணமாக கிடக்கும் அந்த குவியலை கண்டு அலறுங்கள், அறற்றுங்கள்

இல்லை இல்லை, தமிழர் பிணம் தான் வேண்டுமென்றால் அது நிச்சயம் கிடைக்கும் ஆனால் அதனை காண நீங்கள் இருக்கமாட்டீர்கள்

எவனும் தன் பிணத்தை தன்னால் பார்க்க முடியாது அல்லவா? அந்த வகையில் நீங்களும் பார்க்கமுடியாது.

ஜல்லிகட்டு எழுச்சியில் அந்த தீபா என்ன ஆனார்? இன்னும் பிற …

ஜல்லிகட்டு எழுச்சியில் அந்த தீபா என்ன ஆனார்?

ராஜபக்சேயே மெரினா வந்து, கூட்டத்தில் நின்று “தமிலெருக்கு ஜொல்லிகொட்டு வோணும்” என பிரபாகரன் படத்தோடு நின்றிருக்கலாம்..

வாட்டாள் நாகராஜ் கூட ஒரு ஜல்லிகட்டு பேனருடன் மெரினா வந்து போயிருக்கலாம்,

யாருக்கு தெரியும்?

இதில் தீபா எல்லாம் எந்த மூலைக்கு…

சென்னையா? இல்லை பெங்களூருக்கே போய்விட்டாரா?


எல்லாவற்றையும் தீர விசாரிக்க வேண்டும்

கர்ப்பிணி வேடத்தில் வயிற்றில் குண்டு கட்டி மருத்துவமனைக்குள் புகுந்தல், ராணுவ வீரன் உடையணிந்து அரச கட்டத்துக்குள் புகுந்து சுடுதல் போன்ற பெரும் வீர தந்திரங்கள் புலிகளிடம் உண்டு

அது புலிபடம் பிடித்தவர்களிடமும் இருக்காதா என்ன?

காவலர் உடையில், கேமரா முன் ஆட்டோ கொளுத்த எவ்வளவு நேரமாகும்?

இதற்கெல்லாம் என்ன ஆதாரம் என கேட்டால்…
அங்கிள் சைமன் முன்பு ஈழம் செல்லும் பொழுது வியப்பும் திகைப்பும் நிறைந்த ஈழபயணம் செல்லும்பொழுது அவரையே மாறுவேடம் போட சொன்னதாக அவரே சொல்லியிருக்கின்றார்

இதனை விட பெரும் ஆதாரம் என்ன வேண்டும்?


டேய் இந்த இத்துப்போன பஸ்டாண்டுக்கு எல்லாம் என்னால வரமுடியாது, ஒரு சுத்தமான டீக்கடைக்கு கூட வழிய காணோம்.

டீக்கடைய விடு, பஸ்டாண்டு போர்டுக்கே பெயிண்ட் இல்லை. அது காந்திஜி பேருந்து நிலையமா? இல்ல சாந்தினி பேருந்து நிலையமாண்ணு கூட தெரியல..

நீ ஆம்பிளைனா லண்டன் ஹீத்ரு ஏர்போர்ட்டுக்கு வாடா, டேய் வாடா. நீ சுத்தமான நாடார் என்றால், உன் உடம்புல ஓடுறது சுத்தமான நாடார் ரத்தம் என்றால், சுத்தமான லண்டன் ஏர்போர்ட்டுக்கு வந்து என்ன பாருடா.

அந்த ஏர்போர்ட்ல தாண்டா பர்கர் சாப்பிட்டு கொண்டிருகின்றேன்

சாதி சண்டைய லண்டன் ஏர்போட்டிலோ அல்லது லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்திலோ வைத்துகொள்ளலாம் வாடா..

நீ ஆம்பிளைனா வாடா, நான் லண்டன் ஏர்போர்ட்ல இருக்கேன் வாடா ….

 

Image may contain: outdoor
Image may contain: text

கர்நாடகாவில் எருது பந்தய வீரவிளையாட்டுக்கு அனுமதி வேண்டும் : சித்தராமையா

டேய் வாட்டாள் நாகராஜ், இந்த உரிமையினை கூட இழந்துவிட்டுத்தான் காவேரியில் குப்புற படுத்து அடம்பிடிக்கின்றீரா?

இதனை எல்லாம் மீட்கவேண்டும் என விருப்பம் இல்லையா? அல்லது முடியவில்லையா?

உங்கள் மாநிலத்தில் தடை என்றால் அந்த எருது விளையாட்டை தமிழகத்தில் வந்து நடத்துங்கள், எவனும் தடுக்கமுடியாது

ஒரே நிபந்தனை என்னவென்றால், வரும்பொழுது காவேரியோடு வாருங்கள்..


சில வீணர்களால் இறுதிநேரத்தில் பெரும் குழப்பமாயிற்று

தமிழக மாணவர்களின் பெருமை மிகு போராட்டம், பெரு மகிழ்வோடு முடியவேண்டிய நேரத்தில் சில விஷமிகளால், சில வீணர்களால் இறுதிநேரத்தில் பெரும் குழப்பமாயிற்று

நிச்சயமாக மாணவர்களின் போராட்டம் கண்ணியமும், மிகுந்த கட்டுப்பாடோடும் நடந்தது, உலகமே உற்று கைதட்டிகொண்டிருந்தது எல்லாம் எதுவரை?

அரசுகள் ஜல்லிகட்டுவிளையாட தடையில்லை என சொல்லும் வரை

அதன் பின் தான் இந்த ஜல்லிகட்டினை வைத்து தமிழ்நாட்டை இந்தியாவிற்கு எதிராக கொம்பு சீவிவிடும் கொடூர சிந்தனையாளர்களின் மனதில் அச்சம் உதித்தது, போராட்டம் அவ்வளவுதானா? வெற்றியோடு முடிந்துவிடுமா? விட கூடாது என களமிறங்கினர்

அவர்களுக்கு இந்த போராட்டம் தொடக்கத்திலிருந்தே மகிழ்ச்சி அளிக்கவில்லை, பிரபாகரன் எனும் அந்நியநாட்டு தீவிரவாதிக்கு வராத கூட்டம், ராஜிவ் கொலைபாதகர்களுக்கு வராத கூட்டம், எப்படி ஜல்லிகட்டிற்கு மட்டும் குவியலாம் என அவர்கள் மனம் வெம்பிற்று

அதனால்தான் இந்த போராட்டம் அமைதியாக முடியகூடாது என திட்டமிட்டும், மாணவர்களை கேவலபடுத்தும் விதமாகவும் இறுதியில் குழப்ப தொடங்கினர்.

போராட்டம் எதற்கு நடந்தது? சுப்ரீம் கோர்ட் உத்தரவினை மீறி ஜல்லிகட்டு வேண்டும் என கேட்டு நடந்தது. அரசுகளும் அவசரசட்டம் எல்லாம் இயற்றி விளையாடவிட்டன‌

இனி சுப்ரீம்கோர்ட் தீர்ப்பு எப்படிவந்தாலும் தமிழக எதிர்ப்பினை காட்டி மாற்றும் அளவிற்கு அரசின் கரங்களையும் வலுப்படுத்தியாயிற்று

பெரும் வெற்றியுடனும், உற்சாகத்துடனும் மாணவ செல்வங்கள் கரை ஏறும்பொழுதுதான் இந்த விஷமிகள் குழப்பிவிட்டனர்

தொடக்கம் முதல் நாம் தமிழர், மே 17 போன்ற ஈழமாட்டு அறிவு கொண்ட கும்பலை மாணவர்கள் விலக்கித்தான் வைத்திருந்தனர் , ஆனால் எப்படியோ அவை ஊடுருவிவிட்டன‌

இப்பொழுது போராட்டம் முடியும் நிலையில் கடும் குழப்பம்

யாரால்? இந்த தனிநாடு கேட்ட அழிச்சாட்டிய கும்பல்களால். அவர்ர்கள் நோக்கம் உண்மையில் தனிநாடும் அல்ல, தனி கழிப்பறையும் அல்ல. சும்மா இப்படி கூப்பாடு போட்டு ஒரு கொதிநிலையினை வைத்து குழப்புவதில அவர்களுக்கொரு ஆசை

10 பேர் சாகவேண்டும், 20 பேர் சாக கிடக்கவேண்டும், 30 பேர் ரத்த வெள்ளத்தில் அலையவேண்டும், 100 பேர் பெட்ரோல் ஊற்றிகொள்ளவேண்டும். அதாவது குறைந்தது 500 பேராவது சாகவேண்டும்

அந்த பிணத்தினை வைத்து பாரீர் இனி இந்தியாவில் வாழமுடியாது, தனிநாடு தேவை , கொடுக்கமாட்டான் அடிபட்டு சாவதை விட சயனைடு கடித்து சாவு என பலரை கொன்று கொண்டே இருக்கவேண்டும்

அதனை காட்டி அரசியல் செய்யவேண்டும், இப்படி ஒரு கேடுகெட்ட சிந்தாந்தம் அவர்களுடையது, நிச்சயம் அவர்கள் மனிதர்கள் அல்ல‌

அவர்கள் ஆசைக்கு பலிகடா ஆகாமல், ஈழம் அல்ல, ராஜிவ் கொலை அல்ல மாறாக எதற்கு? எப்படி? போராடவேண்டும் என மாணவர்கள் தனியாக சாதித்தை பொறுக்கமுடியாமல் குழப்பிவிட்டார்கள்

தங்களை மீறி மாணவர்கள் போராடி வெற்றியும் பெற்றுவிட்டதில் மகா அப்செட்டான தமிழக அரசியல் கட்சிகளும் இதனை ரசிக்கின்றன, உண்மை.

செத்த வீட்டில் பிணமாகவும், கல்யாண வீட்டில் மாப்பிள்ளையாகவும், போராட்டம் என்றால் பிராதனாகவும் இருக்க ஆசைபடும் கட்சிகள் அவை, இவற்றை எல்லாம் எப்படி பொறுக்கும்?

அதனால்தான் அவை குறும்பு சிர்ப்புடன் இன்று வேடிக்கை பார்க்கின்றன‌

இந்த ஜல்லிகட்டு பிரச்சினையினை கொண்டு மோடி மீது ஒரு ஆட்டுபுழுக்கையாவது வீசமுடியாதா? என அலைந்து குழம்பிய கும்பல்கள் இன்னொருபக்கம்…

ஆக இதனை எல்லாம் மீறித்தான் மாணவர் போராட்டம் வெற்றிபெற்றுவிட்டது, அந்த வெற்றியினை பெற்றுதந்த நல்ல சிந்தனை மாணவர்களுக்கு நன்றியும் வணக்கமும்

அரசியல்வாதிகள், சினிமாக்காரர்களின் பொய்முகங்களை நீங்கள்தான் உரித்துகாட்டினீர்கள்

போராட்டம் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் நீங்கள்தான் காட்டினீர்கள, உரிமையினை எப்படி மீட்க வேண்டும் என்பதையும்
நீங்கள்தான் காட்டினீர்கள்

அப்படியே இறுதிநேரத்தில் யார் புகுந்தார்கள்? என்ன நடந்தது? எப்படி குழப்பினார்கள்? என்பதும் உங்களுக்கு தெரியும்

அந்த தேசதுரோகிகளை, மதி கெட்ட தேவாங்குகளை, குதர்க்க புத்தி கொண்ட கூமுட்டைகளை மட்டும் அடையாளம் காட்டுங்கள்

அது நிச்சயம் இந்த திருட்டு முருகன் கும்பலும், இந்த அங்கிள் சைமனின் மங்கி கூட்டங்களாகத்தான் இருக்கும்

அவைகளை கைகாட்டிவிட்டு ஒரே ஒரு முறை சொல்லிவிட்டு படிப்பினை தொடருங்கள்

லட்சகணக்கான மாணவர்கள் மாநிலத்திற்காய் போராடினீர்கள், இந்த உறுதியினை கல்வியில் காட்டி பெரும் பதவிக்கு வந்து இந்த சமூகத்திற்கு நல்வழி காட்டுங்கள்

உங்களால் உரிமைகளை பெற்றுகொண்ட சமூகம் உங்களை கையெடுத்து கும்பிட்டு மறுபடியும் கல்லூரிக்கு செல்ல கேட்கின்றது

செல்லுமுன் உங்களின் பெரும் தியாகத்தை கொச்சைபடுத்த துணிந்த அந்த பைத்தியங்களை ரகசிய அடையாளம் காட்டும்படியும் கேட்டுகொள்கின்றது

மாணவ செல்வங்களே, உங்களை உச்சி முகர்ந்து பாராட்டி சொல்கின்றோம், உங்களால் புது நம்பிக்கை பிறந்திருக்கின்றது. உங்களால் பெருமை அடைகின்றோம், ஆனால் உங்கள் பெயரை பயன்படுத்தி குழப்பம் விளைவித்த அந்த கும்பல்களை தேடுகின்றோம்

கவலை வேண்டாம், நீங்கள் படிக்க செல்லுங்கள், அந்த பதர்களை நாங்கள் பார்த்துகொள்கின்றோம்

நெல்மணி எல்லாம் பிரிந்தபின் கற்கள் தான் கிடக்கும், அப்படித்தான் அவைகள் இன்று மிஞ்சி இருந்து கற்களை எறிந்து அழிச்சாட்டியம் செய்திருக்கின்றன‌

இனி தமிழகத்தின் உரிமைகள் எதனையும் அவ்வளவு எளிதில் பறிக்கமுடியாது எனும் உச்சகட்ட அடியினை கொடுத்தபின்னும் என்ன இருக்கின்றது?

இரு பெரும் அரசாங்கங்களை அலறவிட்ட பெரும் பணியினை செய்துவிட்ட நீங்கள், வருஙகாலத்தில் அந்த அராசங்கத்டின் பொறுப்புமிக்க அதிகாரிகளாக வாருங்கள்

வாழ்த்துகின்றோம்

நாம் அன்றே இந்த திருட்டு முருகனையும், இந்த நாம் குரங்குகளையும் பற்றி சொல்லிகொண்டே இருந்தோம். இவர்களால் ஒரு நாள் பெரும் குழப்பம் தமிழகத்தில் வரும் என்று

எதனையுமே ஒழுங்காக செய்ய தெரியாத பைத்தியங்கள் இதனையும் பெரிதாக செய்வதாக எண்ணி செய்து, பெரும் விவரம் உள்ளவர்கள் போல செய்து மாட்டிகொண்டது

நிச்சயம் விரைவில் சிக்கும், தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன, அதன் பின் இருக்கின்றது அவர்களை எல்லாம் மாட்டு கொம்பில் கட்டி விடவேண்டும்

மாணவர்களே இம்மாதிரி ஆட்களை கூட அடையாளம் காட்டிவிட்டுத்தான் சென்றிருக்கின்றீர்கள், அவ்வகையில் இத்தேசத்திற்கு பெரும் தொண்டாற்றியிருக்கின்றீர்கள்

உங்களை வணங்கி வழியனுப்புகின்றொம், இந்த அரைபயித்தியங்களை நாங்கள் ஒரு வழி செய்ய கைகளை முறுக்குகின்ரோம்

திருட்டு முருகனுக்கும், திண்ணை வீரன் சைமனுக்கும் நாடுகடத்தபடும் நேரம் நெருங்கிகொண்டிருக்கின்றது..

முன்பே அவர்களை அடிக்கடி குறிப்பிட்டு சொன்னவர்களும் நாமே

இப்போது அந்த கும்பலின் சுயநல அழிச்சாட்டியத்தை தமிழகம் பார்த்துகொண்டிருக்கின்றது

நிரந்தர தடை நீக்கம் என்பதனை விட இப்போதைக்கு மகா முக்கியமானது, இவர்களின் நிரந்தர சிறைவாசம்..

நமக்கும் காலம் வரும், நிச்சயம் வரும்

சட்டசபையில் இருந்து திமுக வெளிநடப்பு

பின்ன, மெரினாவில் அவ்வளவு பெரிய கலவரம் நடக்கும் பொழுது இவர்கள் எப்படி உள்ளே இருப்பார்கள், இப்பொழுது மெரீனா நோக்கி நடந்து போராடும் மாணவர்களை காக்க போகின்றார்கள். அதான் வெளிநடப்பு செய்து நடக்கின்றார்கள்.

இன்னும் ஸ்டாலின் தலமையிலான திமுக குழு மெரீனாவினை அடையவில்லை, இன்னும் 500 கிமீ தூரம் இருப்பதால் சென்று அடைய இன்று சில நாட்கள் கூட ஆகலாம்


அடிவாங்குங்கள் தமிழர்களே, வோட்டு போட்ட விரலை காட்டி அதனை நொறுக்க சொல்லி அடிவாங்குங்கள்.

அவர்களுக்கு மாலையும், அவர்களுக்கு சுவரொட்டியும் சுமந்த கைகளில் அடிவாங்குங்கள், அந்த அரசியல்வாதிகளுக்காக கால்கடுக்க நின்ற அந்த கால்களில் அடிவாங்குங்கள்

எந்த கட்சியினை தோளில் சுமந்தீர்களோ அந்த கட்சியின் அரசின் அடியினை அதே தோளில் வாங்குங்கள்

நம்மை ஆள அல்ல, அடித்துநொறுக்க நாமே ஒரு அரசினை அமைத்திருக்கின்றோம் அல்லவா. அந்த தவறுக்கு அடிவாங்குவோம்.

எந்த கட்சியின் தலைவி இறந்தார் என உண்ணாமல் உறங்காமல் அழுதீர்களோ அந்த கட்சி அரசுதான் அடிக்கின்றது, இப்பொழுதும் அழுங்கள்

ஒரு பாரம்பரிய உரிமைக்காக மக்களோடு மக்களாக இறங்கிவரமுடியாத அரசினை அமைத்திருக்கின்றோம் அல்லவா? அதற்காக அடிவாங்குங்கள்

என் பதவியே முக்கியம், அதற்கு இடைஞ்சலாக யார் வந்தாலும் கொல்ல துணியமாட்டோம் என இரங்கியிருக்கும் அரசின் கோரமுகத்தை பார்த்துகொண்ட ரத்தம் சிந்துங்கள்

பாழ்பட்ட நாட்டில் நம் உழைப்பினையும், உரிமையினையும்தான் உறிஞ்சினார்கள் என்றால், இன்று ரத்ததத்தையும் உறிஞ்சுவதையும் பார்த்துகொண்டே அடிவாங்குங்கள்.

காவல்துறை அடிக்கும் ஒவ்வொரு அடியும் அரசாங்கத்தின் அடி என்பதை உணர்ந்து கல்லை தேடாதீர்கள், கையில் இருக்கும் வோட்டினை தேடுங்கள்

உங்களிடம் வோட்டு கேட்க வந்தவர்கள்தான் இன்று அடிக்கவும் சொல்லியிருக்கின்றார்கள்

ஆளும் கட்சி அடிக்கின்றது, எதிர்கட்சிகள் அமைதிகாக்கின்றன என்றால் என்ன அர்த்தம் என்பதை எண்ணிகொள்ளுங்கள்

என்ன தவறு செய்தோம்? உரிமைக்காக கூடியது தவறா? ஒற்றுமையாக எழும்பியது தவறா?

அது தவறே அல்ல, மாறாக யாரிடம் ஆட்சியினை ஒப்படைத்திருக்கின்றோமோ அதுதான் பெரும் தவறு.

வலிக்கும்தான்,

நம்மை காக்கவேண்டிய காவல்துறையே நம்மை போட்டு அடிக்கும்பொழுது உடல்வலியினை விட மனவலி அதிகம்தான்

ஆனால் அந்த வலியினை தேர்தல் வரை தாங்குமளவு மனம் இறுகட்டும்

அடித்து இன்று விரட்டலாமே ஒழிய, அடித்து வோட்டினை நாளை வாங்கிவிட முடியுமா?
அடிபட்டு கங்கிநிற்கும் ஒவ்வொருவருக்காகவும் அழுகின்றோம்

நமக்கும் காலம் வரும், நிச்சயம் வரும்


சென்னை பேருந்து கண்ணாடி உடைப்பு

அரசு பேருந்துகளில் உருப்படியாக இருந்தது அது ஒன்றுதான், அதனையும் உடைக்க தொடங்கியாயிற்று


ஜல்லிக்கட்டு எதிராக உச்ச நீதி மன்றத்தில் மேனகா மனு…. இன்னும் பிற ..

ஜல்லிக்கட்டுக்கு எதிராக பாஜக மத்திய அமைச்சர் மேனகா காந்தி உச்சநீதி மன்றத்தில் மனு தாக்கல்

இந்திரா காந்தி ஏன் இவரை விலக்கி வைத்திருந்தார் என்பது இப்போது புரியும்

அம்மா தமிழிசை, அய்யா பொன்னார் இதோ உங்கள் கட்சிக்காரரே தடை வாங்க சென்றிருக்கின்றாரே, இதனை பற்றி உங்கள் கருத்து?

இது மேனகாவின் சொந்த விஷயம் என்றுமட்டும் வழக்கம் போல சொல்லிவிடாதீர்கள்..


மேனகா காந்தியினை அனுமதிக்கும் பாஜக , தமிழகத்தில் ரத்த களறி ஏற்பட மறைமுக சிக்னல் கொடுக்கின்றது

இது பச்சை குழந்தைக்கும் புரியும் அரசியல், தமிழ்நாட்டினை ஒரு வழியாக்க முடிவு செய்துவிட்டார்கள்.

நெருப்பு அணையும் நேரத்தில் பெட்ரோலை ஊற்றுவது நிச்சயம் ஏற்றுகொள்ளமுடியாதது, இதன் விளைவுகள் விபரீதமானவை


இந்திய குடியரசு நாளை கொண்டாட இந்தியர்களை தமிழகத்தில் ஓட ஓட அடிக்கின்றது இந்தியா என்பது உலக அரங்கில் இந்தியாவிற்கு எவ்வளவு பெருமையான விஷயம்?

இனி எந்த மூஞ்சினை வைத்து கொண்டு உலக நாடுகளிடம் ஜனநாயகம் பற்றி பேசுவீர்கள் மிஸ்டர் மோடி


இன்று ஜெயாடிவி எப்படி செய்திகள் வெளியிடுமோ தெரியாது, ஆனால் அவர்கள் இப்படி வாசித்தாலும் வாசிப்பார்கள்

“ஆளுநர் உரைக்கு சின்னம்மா நன்றி தெரிவித்தார் , பதிலுக்கு ஆளுநர் காலில் விழுந்து நன்றி தெரிவித்தார்.

சட்டசபையும், முதல்வரும் எதற்கு?, சரி சின்னம்மா எந்த தொகுதி சமஉ?

சின்ன அம்மாவின் வெண்டுகோளுக்கு இணங்க காவல்துறை தடியடி நடத்தியது, மக்களும் சின்ன அம்மா கோரிக்கைக்கு இணங்க அடிவாங்கி சென்றனர்

அடிவாங்கியவர்கள் திரும்ப வந்து, எங்களை கொல்லாமல் விட்ட சின்னம்மா வாழ்க., அதனால் அவர் முதல்வராக வேண்டும் என சொல்லியவண்ணமே இருந்தனர்

இதன் மூலம் தமிழமெங்கும் சின்னம்மாவிற்கான ஆதரவு பலமடங்கு அதிகரித்துள்ளது, இன்னும் ஆதரவினை திரட்டும் விதமாக காவல்துறை கடுமையான அடிதடியில் இறங்கியுள்ளது

இப்படி தமிழகத்தில் அமைதியினை திருப்பிய சின்னம்மாவினை பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்”


போராட்டத்தில் தலைவனோ தலைமையோ உருவாகவில்லை…

இவ்வளவு பெரும் போராட்டம் நடந்திருக்கின்றது, இதிலிருந்து கூட ஒரு தலைவனோ தலைமையோ உருவாகவில்லை

இதே போன்றதொரு போராட்டங்கள் பலவற்றில்தான் பெரியார், கலைஞர் எல்லாம் தானொரு மிகபெரும் ஆளுமையாக உருவெடுத்தார்கள் என்பது வரலாறு.

ஆக ஆற்றல்மிக்க வருங்கால தலைமுறை தலைவனுக்கு வாய்ப்பே இல்லை என்பதைத்தான் வருத்தம் மிஞ்ச பார்க்க வேண்டியிருக்கின்றது

நிச்சயம் இப்போராட்டம் ஒரு நம்பிக்கை தலைவனை காட்டியிருக்க வேண்டும், ஆனால் நடக்கவில்லை எனும்பொழுது நல்ல தலைவன் உருவாகவில்லை என்பது தெரிகின்றது

வருங்கால தமிழகத்தை வழிநடத்த ஒரு இளம் தலைவன் இல்லை என்பதைத்தான் இப்போராட்டம் சொல்லிவிட்டு சென்றிருக்கின்றது

அற்புதமான எழுச்சி, ஆனால் நெறிபடுத்தி செல்ல தலைவன் இல்லை. அவன் தான் இல்லை. ஒரு குழுவாவது உண்டாகியிருக்கலாம்

அடுத்த வருங்கால தலைமுறையினை நல்வழியில் நடத்த ஒரு தலைவன் இதில் தெரிவான் என்ற நம்பிக்கை இப்போது பொய்த்திருக்கலாம்.

ஆனால் இந்த எழுச்சியில் ஓசைபடாமல் உள்ளூர அப்படி ஒருவன் உருவாகிகொண்டிருக்கலாம், வருங்காலத்தில் அவன் வரலாம். வரவேண்டும்

வந்தால்தான் தமிழகம் புதுபாதையில் திரும்பும், எழுச்சியும் ஆற்றலும் புதிய சிந்தனையும் மிக்க ஒரு இளம் தலைவன் தமிழகத்திற்கு தேவை, வருங்காலத்தை அவனே நடத்தவேண்டும்

ஒருகாலத்தில் வந்து நடத்துவான்..

அக்காலம் வரும் வரை என்ன நடக்கும்?

சசிகலா கொண்டை முடியபடும்

பெரிய சாணக்கியனின் நீண்ட கொண்டை அல்லவா? ,

சபதம் வெல்லும் பொழுது அள்ளி முடியத்தான் வேண்டும்

சசிகலாவின் கொண்டை தமிழகத்திற்கு சிம்பாலிக்காக சொல்ல வருவது அதுவே…

30 வருட சபதத்தில் வென்று அள்ளி முடியபடும் கொண்டை அது..

மகிழ்ச்சியோடு கொண்டாட்டமாக முடித்திருக்கலாம்…


அம்மா இறந்த துக்கத்தில் குடியரசு தினவிழா கொண்டாட்டங்களை ரத்து செய்கின்றோம் என சொல்ல ஒருவனுமா அக்கட்சியிலோ அரசிலோ இல்லை?? 🙂

அப்படி சொல்லிவிடத்தான் முடியுமா?

ஆனாலும் கொஞ்சமேனும் துக்கம் இல்லையா? அது எப்படி இருக்கும், அவர் செத்து 50 நாட்களுக்குள் ராமசந்திரனுக்கு 100ஆண்டு என கொண்டாடிய கூட்டம்தானே அது.


ஜல்லிகட்டு போராட்டம் வெற்றியில்தான் முடிந்தது, போராடிய நோக்கம் நிறைவேறி விட்டது.

அந்த மகிழ்ச்சியோடு கொண்டாட்டமாக முடித்திருக்கலாம்

ஒரு காரியத்திற்காக தமிழகம் அடித்த அடிதான், ஆனால் இனி ஓவ்வொரு காரியத்திலும் அது அரசின் சிந்தனையில் இருந்துகொண்டே இருக்கும்

ஆட்சியாளர்கள் கண்ணில் அந்த மரண பயம் தெரிந்துகொண்டே இருக்கும்

தங்களை தமிழகம் கண்காணிக்கின்றது எப்பொழுது வேண்டுமானாலும் அது திரளும் என்ற அந்த பயத்திலே அவர்கள் ஆளட்டும்


சும்மாவே கலையாத கூட்டம் அது…

பெண்களும், குழந்தைகளும் குவிந்திருக்கும் மெரீனா போராட்டகளத்தில் காவல்துறை புகுந்தாகிவிட்டது

அரசு தன் இரும்புகரத்தினை காட்ட ஆரம்பித்தாயிற்று. காவல்துறைக்கு எதிரான பெரும் கோஷம் கிளம்புகின்றது

இது எளிதில் தீராது,

காரணம் திரண்ட கூட்டம் ஜல்லிகட்டிற்காக மட்டும் திரண்டது அல்ல. அது பல காரணங்களால் சேர்ந்த கூட்டம், ஜல்லிகட்டு ஒரு புள்ளி அவ்வளவுதான்

உரிய அவசாகம் கொடுக்காமல் இந்த கூட்டத்தை வலுகட்டாயமாக கலைக்க நினைத்தால் அதன் பின்விளைவுகள் மிக கடுமையானதாகவே அரசுக்கு இருக்கும்

அலங்காநல்லூருக்கு சென்னை பொங்கியபொழுது, இனி சென்னைக்காக மற்ற பகுதிகள் பொங்காதா?

மொத்த தமிழகத்தையும் கட்டுபடுத்தும் சக்தி யாருக்கு உண்டு?

பெரும் குழப்பத்தினை நோக்கி செல்ல தொடங்கியாயிற்று,

தேன் கூட்டில் கைவைக்கின்றது அரசு ..எதனை செய்ய கூடாதோ அதனை செய்கின்றது,

மாணவர்கள் என்பது சாதாரண விஷயம் அல்ல..

பன்னீர்செல்வத்திற்கு பெரும் சிக்கல் ஆரம்பமாகும் நேரம்….

மக்களின் பெரும் ஆதரவினை பெற்றுவிட்ட போராட்டத்தை இனி இப்படி அணுகுவது மாநிலத்திற்கு அமைதி கொடுக்காது.

மாணவர்கள் கடலில் இறங்கி போராட்டம் எனும் தீவிரத்தில் இறங்குகின்றனர், அக்கடலும் அந்த அலைகளும் மிக ஆபத்தானவை என்பதில்தான் அடிமனம் கலங்குகின்றது

ஏதும் வீபரீதம் நிகழுமுன் காவல்துறைக்கு பொறுப்பான முதல்வர் வாய் திறப்பது நல்லது.


நடிகை நயன்தாரா சென்னை மெரினா கடற்கரையில் நடைபெறும் போராட்டத்துக்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்திருக்கிறார்.

சும்மாவே கலையாத கூட்டம் அது,

நயன் அடிக்கடி வர வாய்பிருக்கின்றது என் தெரிந்தபின் எப்படி கலையும்


 அது என்னவோ தெரியவில்லை, எந்த போராட்டம் என்றாலும் தமிழகத்தில் வரும் கோஷம் “முதல்வர் தார்மீக பொறுப்பேற்று பதவி விலக வேண்டும்” என்பது

அதுவும் கலைஞர் என்றால் அவர் பதவி விட்டு விலகி உடனே தற்கொலை செய்யவேண்டும் எனும் அளவிற்கு நிலமை கொந்தளிக்கும் , வைகோ போன்ற அல்லக்கைகள் எல்லாம் கரகாட்ம் ஆடும்,

சில வவ்வால் போல தலைகீழாக தொங்கும், நள்ளிரவு ஆந்தையாக, ஆற்றோரம் கழுதையாக அப்படி கத்திகொண்டே இருப்பார்கள்

ஆனால் அதிமுக அரசு என்றால் மட்டும் ஒரு பயலும் “தார்மீக பொறுப்பு” “ராஜினாமா” என சொல்லவே மாட்டான்.

இந்த களபேரத்தில் எங்காவது அப்படி ஒரு குரல் ஒலிக்குமா? ஒலிக்காது

இதே கலைஞர் அரசு என்றால் இந்நேரம் அவர் செத்தே தீரவேண்டும் என சொல்லி கொண்டிருப்பார்கள்


நாமெல்லாம் ஜல்லிகட்டு வேண்டும் என போராட, உலகமோ அந்த அமெரிக்க ஜல்லிகட்டு காளை வேண்டாம் என போராடுகின்றது

அதாகபட்டது டிரம்பிற்கு எதிராக அமெரிக்கா உள்பட உலக நாடுகளில் 670 இடங்களில் போராட்டம் நடைபெற்றது.