வடகிழக்கு பருவமழை பொய்த்துவிட்டதே

வடகிழக்கு பருவமழை பொய்த்துவிட்டதின் ஆபத்து இப்பொழுதே தெரியதொடங்கிவிட்டது

பெரும் சிக்கலின் தொடக்கம் இது வழக்கமாக மே மாதம் வரும் சிக்கல் இப்பொழுது பிப்ரவரியிலே தொடங்கியாயிற்று

மேற்கு தொடர்ச்சிமலையின் வனங்கள் வறட்சியின் பிடியில் சிக்க தொடங்கிவிட்டன, காட்டு விலங்குகள் நீர் தேடி ஊருக்குள் வரும் அவலம் தொடங்கிற்று, அவற்றில் சில இறந்துவிடும் கொடூரமும் நடக்கின்றது

யானைகள் புத்துணர்வு முகாம் என அரசு சிலிப்பிகொள்ளும் நேரத்தில்தான் காட்டில் யானைகள் நீரின்றி சாகின்றன‌

யானைகளுக்கு பிரத்யோக குணமுண்டு, வறட்சி காலங்களில் வயதான பெண் யானை கூட்டத்திற்கு தலமையேற்கும், எங்கே தண்ணீர் உண்டு எனும் ரகசியம் அதன் முன்னோர்களால் அதற்கு தெரிவிக்கபட்டிருக்கும்

அக்காலத்தில் வறட்சி என்றால் வயதான பெண் யானை பின்னால் மற்ற யானைகள் அணிவகுக்கும், சுனையொ இல்லை காலால் இடறினால் நீர் வரும் பகுதிக்கு அந்த யானை தன் கூட்டத்தை அழைத்து சென்று நீர்வார்க்கும்

காலம் காலமாக வந்த இந்த யானைகளின் வாழ்க்கை மனிதனின் நீர் வன அழிப்பாலும் போர்வெல் கொடுமையாலும் பாதிக்கபட்டாயிற்று, தனக்கு தெரிந்த இடத்தில் நீர் இல்லா அதிர்ச்சியில் யானைகள் என்ன செய்யும்?

சாகத்தான் செய்யும்

பன்னெடுங்காலமாக இருந்துவந்த யானைகளின் வாழ்க்கை இக்காலத்தில் மாற்றபடுகின்றது, இயற்கையுடனான அவற்றின் தொடர்பே அறுத்தெறியபடுகின்றது

இயற்கையுடனான தன் தொடர்பு அறுபடும் பொழுது யானைகளுக்கு வாழ தெரியவில்லை, என்னவெல்லாமோ செய்து குழம்பி திரிகின்றன‌

யானை மட்டுமல்ல பல விலங்குள் இப்படி திசைதெரியாமல் நீருக்காய் அலைகின்றன‌

வன விலங்குகள் நீர் நிலைக்கு அரசு ஏதாவது செய்தாக வேண்டும்

வனத்தின் நிலையே இப்படி என்றால் தமிழக நிலை? சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் காய்ந்தாயிற்று, கிருஷ்ணா நீரெல்லாம் தேவைக்கு தீராது

மழை பொய்த்ததின் விழைவினை தமிழகம் உணர தொடங்கி இருக்கும் நேரமிது

இவ்வளவிற்கும் காவேரி கடந்த ஆண்டு பலமுறை பொங்கி பொங்கி வந்ததும் குறிப்பிடதக்கது

மிகபெரும் வறட்சியினை நோக்கி தமிழகம் சென்றுகொண்டிருக்க ஆட்சியாளர்களோ கூட்டணி இன்னபிற கணக்குகளில் மூழ்கி முத்தெடுக்கின்றார்கள்

மிகபெரும் எச்சரிக்கையினை இயற்கை செய்ய தொடங்கிவிட்டதை அரசு உடனே புரிந்துகொள்ள வேண்டும்

இதுபற்றி கொஞ்சமும் கவலைபடாத கோஷ்டி பாஜக கோஷ்டி

அவர்களை பொறுத்தவரை கோதாவரி தமிழகத்திற்கு வந்து கொண்டிருக்கின்றது, அதை தமிழக குளங்களில் நிரப்பி தாமரை மலரை செய்ய தயாராக இருகின்றார்கள்