சொல்லட்டும்

அவரை சுடலை என பல சங்கிகள் சொல்லிகொண்டே இருக்கின்றன‌

சொல்லட்டும்

சுடலை என்பது தென்னகத்தின் மிகபெரும் காவல் தெய்வம், அவரை மீறி அவரின் ஏரியாவுக்குள் இன்னொரு சக்தி சென்றுவிட முடியாது

சிவபெருமானின் சுடுகாட்டு ஆட்டத்தை மையபடுத்தி நிற்கும் சாமி அவர், சிவனின் அவதாரமாகவே அவர் கருதபடுகின்றார்

கேரளா முதல் மதுரையின் எல்லை வரை அவர் ராஜ்யம்

கோவில்களில் ஆடுமாடு வெட்ட கூடாது என ஜெயா சொன்னபொழுது சிறுமளஞ்சி “சுடலையே தடை அகலும், தடை போட்டவரும் சரிவர்” என முதலில் சொல்லிற்று

அதன் பின் தடையினையும் காணோம், ஜெயாவினையும் காணோம்

ஸ்டாலினும் அப்படிபட்ட மூர்க்கமான சுடலை என மனமார நம்புவார்கள் போலிருக்கின்றது

ஆக ஸ்டாலினும் சங்கிகளுக்கு காவல் தெய்வம்
ஆகிவிடார்

விதுர நீதி

“எவன் துன்பமும் எதிர்ப்பும் கண்டு வருந்துவதில்லையோ, எவன் தேடிச்சென்று கவனமாகவும், கடுமையாகவும் உழைக்கிறானோ, சூழ்நிலை கருதித் துன்பங்களைப் பொறுத்துக் கொள்கிறானோ,

அவனே மனிதர்களில் முதன்மையானவன்.

அவன் எல்லா எதிரிகளையும் வென்று விடுவான்” :

– விதுர நீதி.

தமாகாவில் ஒருவர்தான் உண்டு

“அமர் விலங்கி, ஆற்ற அறியவும்பட்டார்
எமர், மேலை இன்னரால்; யார்க்கு உரைத்தும்’ என்று, தமர் மறையால் கூழ் உண்டு சேறல் அதுவே- மகன் மறையாத் தாய் வாழுமாறு.”

அதாவது ஒருவன் தான் களத்தில் இறங்கி போரிடாமல் தங்கள் முன்னோரின் பெருமை பேசி திரிவதும், அதை சொல்லி உணவு பெறுவதும் இழிவானதாகும்

தன் மகன் இவன் என சொல்ல ஒரு தாய் அஞ்சும் அளவு அது இகழ்ச்சியாகும்

இதெல்லாம் வாரிசு அரசியல் என சொல்லி திரிவோருக்கு பொருத்தமாக இருக்கலாம்

அவ்வகையில் காங்கிரசிலும், திமுகவிலும் நிறைய பேர் உண்டு, தமாகாவில் ஒருவர்தான் உண்டு

மகா கவனமாக இருக்க வேண்டும்

செருக்குடை மன்னர் இடைப் புக்கு, அவருள்
ஒருத்தற்கு உதவாத சொல்லின், தனக்குத்
திருத்தலும் ஆகாது, தீதரம்;-அதுவே
எருத்திடை வைக்கோல் தினல்.

பொல்லாத‌ அரசர்கள் இருவர் இடையே புகுந்து ஏதும் லாபம் பெற நினைப்பவன் மகா கவனமாக இருக்க வேண்டும்

இலலையேல் இரு எருதுகளின் காலுக்குள் விழுந்த “வைக்கோ”லாகிவிடும் நிலை

நாம் நினைப்பதெல்லாமா நடந்து விடும்??

“எழுதியவா றேகாண் இரங்கு மடநெஞ்சே
கருதியவா றாமோ கருமம் – கருதிப்போய்க்
கற்பகத்தைச் சேர்ந்தார்க்குக் காஞ்சிரங்காய் ஈந்ததேல் முற்பவத்தில் செய்த வினை..”.

அதாவது பெரும் திட்டத்தோடும் எதிர்பார்ப்போடும் கற்பக மரத்திடம் சென்றாலும், எட்டிக்காயே கிடைத்ததென்றால் அது நம் முன் வினைப் பயனே.

விதியில் எழுதியுள்ளபடிதான் நமக்குக் கிடைக்குமே அல்லாது நாம் நினைப்பதெல்லாமா நடந்து விடும்??

அம்மணி நினைகின்றாரோ

என் கட்சி தலைவியே என்னை அடித்தார், தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என அழுத இந்த அரசியல்வாதியினை இந்த‌ தேர்தலில் காணவே இல்லை

பழனிச்சாமி ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பாக இருக்கின்றார் என அமைதியாகிவிட்டாரோ?

தூத்துகுடியில் கனிமொழி வென்றுவிட்டால் பெண் பாதுகாப்பு ஏராளம் கிடைக்கும் என அம்மணி நினைகின்றாரோ என்னமோ..

இருவர் அதிகாரம்

உற்றால், இறைவற்கு உடம்பு கொடுக்கிற்பான்,
மற்றவற்கு ஒன்னாரோடு ஒன்றுமோ?-தெற்ற
முரண் கொண்டு மாறு ஆய உண்ணுமோ? உண்ணா,
இரண்டு ஏறு ஒரு துறையில் நீர்.

நிறைந்த வலிமையைப் பெற்று மாறுபாடுகொண்டுளவாகிய இரண்டு காளைகள் ஒரு நீர்த்துறையில் ஒன்றாக மேயுமோ? ஒன்றாக‌ தண்ணீர் உண்ணுமோ? உண்ணாது ,

அது போல மாறுபாடு கொண்ட இருவர் அதிகாரத்தில் ஒற்றுமையாக‌ இருக்க முடியாது

(ஆனால் இரு காளைகளையும் அடக்கி வண்டியில் பூட்டும் வல்லமை கொண்ட ஒருவன் முன்னால் அவை அடங்கி வண்டி இழுக்கும்)