இதை விட மோசமான நோய் உண்டா?

“அரம் போல் கிளை. அடங்காப் பெண், அவியாத் தொண்டு, மரம் போல் மகன், மாறு ஆய் நின்று கரம் போலக் கள்ள நோய் காணும் அயல், ஐந்தும் ஆகுமேல், உள்ளம் நோய் வேண்டா, உயிர்க்கு.”

அதாவறு சூழ்ந்திருக்கும் மோசமான சொந்தம், அடங்கா மனைவி, உதவிக்கு யாருமில்லா தனிமை, என்ன சொன்னாலும் திருந்தா மகன் என ஒருவனை பல விஷயங்கள் சூழ்ந்திருக்க, அவனுக்கு வெளியிருந்து வரும் நோய் எதற்கு? இதை விட மோசமான நோய் உண்டா?