தமிழகம் உணர்ந்த உண்மை..

எழிலி உறை நீங்கின் ஈண்டையார்க்கு இன்னா;
குழல் இல் இயமரத்து ஓசை நற்கு இன்னா;
குழவிகள் உற்ற பிணி இன்னா; இன்னா,
அழகுடையான் பேதை எனல்

அதாவது அழகான மேகம் மழையைத் தராவிட்டால் துன்பமாம். இனிய புல்லாங்குழல் தரக்கூடாத ஒலியினை தருதல் துன்பமாம், குழந்தைகள் அடைந்த நோய் மிகவும் துன்பமாகும். அறிவில்லாதவன் அழகாயிருத்தல் மிகவும் துன்பமாம்.

ஆம் அறிவில்லாதவன் அழகாயிருந்தால் மிக மிக ஆபத்து எனபது தமிழகம் உணர்ந்த உண்மை..