அந்த கால திமுகவினர் நடத்திய பத்திரிகைகள் இதோ

அந்த கால திமுகவினர் நடத்திய பத்திரிகைகள் இதோ

மதியழகன் -தென்னகம்; 
அண்ணாதுரை -திராவிட நாடு; 
என் வி நடராஜன் -திராவிடன்; 
ஆசைத்தம்பி- தனியரசு; 
சி பி சிற்றரசு -போர்வாள்; 
கண்ணதாசன்-தென்றல்;
கருணாநிதி-முரசொலி; 
ஆர் எஸ் தங்கபழம்-கிளர்ச்சி; 
அரங்கண்ணல்-அறப்போர்; 
மனோகரன்-விந்தியம்;
பி எஸ் இளங்கோ -மாலைமணி கட்சி பத்திரிகை – நம்நாடு; 
எம் ஜி ஆர்-சமநீதி; 
மாறன்-மறவன் மடல்;
நெடுஞ்செழியன் -மன்றம்

உண்மையில் இதை தொடங்கி வைத்தது பெரியாரின் வேலை, அவர்தான் முதலில் தொடங்கினார் ஆனால் பாமர தமிழ்

பெரியாரின் கருத்துக்கள் என்றாலும் விடுதலை குடியரசில் அதை தேன் தடவி கொடுத்தவர் அண்ணா

ஆம், அவரே எப்படி எழுத வேண்டும் என்ற புதுபாணியினை அறிமுகபடுத்தினார்

அவரை விட்டு விலகி வந்ததும் இவர்கள் ஆளாளுக்கு நடத்தினார்கள்

அதில் வந்த கட்டுரைகள் ஒவ்வொன்றிலும் தமிழ் துள்ளிவிளையாடும்

பொங்கிவரும் காவேரியினை பார்ப்பது போல் அந்த தமிழில் அப்படி ஒரு பரவசமும் அழகும் கொட்டி கிடக்கும்

மேற்கண்டோர் அதில் கடும் தேர்ச்சி பெற்றனர், (ராமசந்திரன் மட்டும் ஆள்வைத்து எழுதினார்), கருத்துக்கள் வில்லங்கமாயினும் அந்த தமிழ் அவ்வளவு அழகானது

கருத்து சரியில்லை என்றால் கூட அவர்களின் வாதமும் அழகு சொல் அடுக்கும் விதமும் மிக பொருத்தமான உவமைகளும் நம்மை விலக சொல்லாது

மேற்கண்ட பத்திரிகைகளை பழைய புத்தக கடைகளில் பலமுறை படித்திருகின்றேன்,

அண்ணா , கலைஞர் தவிர ஆசைதம்பி, சிற்றரசு, மதியழகன் போன்றோரின் தமிழும் அந்த நடையும் அவ்வளவு அழகு

கண்ணதாசன் அதை பூமாலை போல தொடுத்து கொடுத்தார்

நிச்சயம் அழகு தமிழ் பொக்கிஷமது, அவ்வளவு சுவையான சத்தான தமிழ்

அதில் திராவிட கருத்து மட்டுமல்ல, மாறாக உலக வரலாறு ஐரோப்பிய வரலாறு மதம் தத்துவம் பொருளாதாரம் போர் என எல்லாமும் கொட்டி கிடந்தது

அன்று அதற்கு வரவேற்பு எப்படி இருந்ததோ தெரியாது, ஆனால் நான் வாசித்து அசந்திருக்கின்றேன். அப்படியான தகவல்களும் வரலாறும் கொட்டி கிடக்கும்

ஜூலியஸ் சீசர் முதல் கடல் கொண்ட கபாடபுரம், ராஜராஜ சோழன் வரை அப்படி எழுதினார்கள்

அதன் கடைசி நீட்சிதான் கலைஞரும் அவரின் முரசொலியும், கலைஞருக்கு பின் முரசொலியும் சுரமில்லை

இப்போதுள்ள திமுகவினரில் அப்படி யாரும் வசீகர எழுத்து கொண்டிருப்பதாக தெரியவில்லை, அப்படி இருந்தாலும் கை கொடுக்க அண்ணாவுமில்லை கலைஞருமில்லை

அண்ணா ஏன் இன்னும் நிற்கின்றார் என்றால் மாபெரும் எழுத்தாளர்களையும் அழகுதமிழ் சொந்தக்காரர்களையும் கைதூக்கிவிட்டார்

ஒரு எழுத்து தலைமுறையினையே உருவாக்கினார்

தன்னை போல பலர் உருவாக வேண்டும், இன்னும் ஏராளம் எழுதவேண்டும் என தீரா ஆவல் கொண்டார் அண்ணா. தன்னால் முடிந்த உதவிகளை ஊக்குவிப்புகளை எல்லாம் அவர் செய்தார்

அந்த பாதிப்பில்தான் கலைஞர் ஏராளமான எழுத்தாளர்களை அருகிலே வைத்திருந்தார்

அப்படிபட்ட திமுவுக்கு இப்பொழுது மனுஷ்யபுத்திரன் போன்றோர் ஒருவகை சாபம், தீரா சோகம்

மேலவை உதிக்கட்டும்

தேர்தல் அறிக்கைகள் என ஆயிரம் வந்துகொண்டிருக்கின்றன, இன்னும் வரலாம்

தமிழக கட்சிகள் ஒன்றாவது தமிழக மேலவை அமைக்கபாடுபடும் என சொல்லவே இல்லை என்பதுதான் சோகம்

இந்தியாவுக்குள் எல்லா சிக்கலும் எங்களால் தீர்க்கபடும் என்கின்றார்கள், ஆனால் மேலவையினை மட்டும் மறக்கின்றார்கள்

அதில் பலத்த அரசியல் உண்டு

கற்றோராலும் சிந்தனையாளராலும் நிரம்பபட்டிருந்தது அந்த அவை, ராமசந்திரன் வரும்வரை அது நன்றாய் இருந்தது

பொதுவாக தன்னைவிட படித்தவர்கள் தனக்கு அடங்கி இருக்க வேண்டும் என்ற எண்ணம் ராமசந்திரனுக்கு இருந்தது கட்சிக்குள் அது பலித்தது

ஆனால் மபொசி போன்றவர்கள் இருந்த மேலவையில் அது பலிக்கவில்லை

சட்டமன்றம் போலவே அதையும் நாடகமேடையாக்க நினைத்த ராமசந்திரன் வெண்ணிற ஆடை நிர்மலாவினை அங்கு அனுப்ப முயன்று தோற்று அந்த அவமானத்தில் அதை கலைத்தே விட்டார்

அது திரும்ப வரகூடாது என்பதில் கவனமாய் இருந்தது டெல்லி, அதில் அதற்கொரு சந்தோஷம்

கலைஞர் கடைசி வரை தமிழக சட்டசபையில் தனி மெஜாரிட்டி இல்லை என்பதால் அவராலும் கொண்டுவரமுடியவில்லை

தன்னால் முடிந்தவரை அதை அமைக்க போராடினார் கலைஞர் ஆனால் சில சக்திகள் அதை முறித்துகொண்டே இருந்தது

ஜெயா ராமசந்திரன் வழி , இப்போதைய பழனிச்சாமி என்ன வழி என அவருக்கே தெரியாது

தமிழகத்தில் அந்த மேலவை நிச்சயம் கொண்டுவரபட வேண்டும்

நிச்சயம் இது நாடாளுமன்ற தேர்தல்தான் ஆயினும் இந்த கோரிக்கை இப்பொழுதே ஒலிக்க தொடங்கினால்தான் சரி

கலைஞரின் மிகபெரிய கனவு அது,நியாயமான கனவும் கூட‌

மேலவை மறுபடி இங்கு உதிக்கட்டும், சிந்தனையாளர்களால் அது நிரம்பட்டும்

சங்கிகளின் அட்டகாசம்

இந்த வெறிபிடித்த சங்கிகளின் அட்டகாசம் எல்லை மீறி செல்கின்றது, உலகில் ஐ.எஸ் கொடூர தீவிரவாதிகளை ஒடுக்கிவிட்ட உலகம் இனி இவர்களைகண்டு அஞ்சினாலும் ஆச்சரியமில்லை

அப்படி ஒரு மண்ணாங்கட்டியும் தெரியாமல் வெறிபிடித்து அலைகின்றார்கள்

அதாவது கிறிஸ்தவம் இங்கு பரவதொடங்கியது 1500களில், கிபி 2ம் நூற்றாண்டிலே அது கேரளாவில் உண்டென்றாலும் 15ம் நூற்றாண்டில் அதுவும் பிரான்ஸிஸ் சேவியர் எனும் துறவியின் வருகைக்கு பின்பே அது வேகமாக பரவியது

15ம் நூற்றாண்டின் மிக பழமையான கிறிஸ்தவ ஆலயங்கள் உண்டு, அவை வெகு சில‌

அதன் அமைப்பு எப்படி இருக்குமென்றால் அன்றைய வழக்கபடி கல்தூண்கள் அமைத்து கல் கூரை அமைத்து கிட்டதட்ட இந்து ஆலயங்கள் போலவே இருக்கும்

பிரசித்திபெற்ற வடக்கன்குளம் பழைய ஆலயமும் அப்படியானதே

அன்று உறுதியான கட்டடம் அமைக்க கற்களையே பயன்படுத்தியதால் கிறிஸ்தவ ஆலயம் சிலவும் அப்படி அமைக்கபட்டது

இதை கண்ட சங்கி கும்பல்கள் பாபர் மசூதி கண்ட கரசேவகர்கள் போல் துள்ளி குதிக்கின்றன, இதோ நமது ஆலயத்தை கிறிஸ்தவ ஆலயமாக மாற்றிவிட்டார்கள் என பொங்குகின்றன‌

அதிலும் அறிவுகெட்ட சங்கிகள் ஆதாரத்தோடு வருகின்றதாம், என்ன ஆதாரமாம்?

அந்த பழைய கோவில்களில் “இதோ உன் தாய் ” என தேவமாதாவினை சொல்லும் வசனத்தை பொறித்திருப்பார்கள், சிலுவையில் சாகும்பொழுது இயேசு தன் தாயினை தன் சீடரிடம் ஒப்படைத்து சொன்ன புகழ்பெற்ற வசனம்

சிலுவையில் தொங்கியபடி இயேசு சொன்ன வலிமிக்க வசனம்

அந்த வசனத்தை பிடித்து கொண்டு, இது காளிதாசன் காளியினை நோக்கி சொன்னது, கம்பன் காளியினை நோக்கி சொன்னது அதனால் இது இந்து ஆலயம் , கிறிஸ்தவர் மாற்றிகொண்டார்கள் என வெறிபிடித்து அலைகின்றது அக்கோஷ்டி

சங்கிகளின் ஒருமுகம் ஆபத்தானது, எங்கெல்லாம் காலூன்ற நினைப்பார்களோ? அங்கெல்லாம் அவர்கள் முதலில் செய்வது கலவரமே

அது மண்டைக்காடு, கோயமுத்தூர், அயோத்தி , குஜராத் என எல்லா இடமும் பிரசித்தி

அதனை சில புனிதமான கிறிஸ்தவ ஆலயங்கள் மேலும் காட்ட வெறியோடு அலைகின்றதுசில கோஷ்டி

தமிழகத்தில் சாதி கலவரம் உண்டே தவிர மதரீதியான மோதல் வெகு குறைவு அல்லது இல்லை

ராமநாதபுரம் ஆன்மீக பூமியில் கூட இந்துக்களுக்கும் இஸ்லாமியருக்கும் உரசியதில்லை

பாஜகமேல் அபிமானம் கொண்ட கிறிஸ்தவர் கன்னியாகுமரியில் உண்டு

ஆனால் புதிதாக ஒரு வன்மத்தோடு களமிறங்கியிருக்கின்றது சில சங்கிகள்

அவையே கல்லால் அமைந்த கிறிஸ்தவ மாதா கோவில்கள் காளிகோவில் என சொல்லி இங்கும் ஒரு அயோத்தியினை உருவாக்க துடிக்கின்றன‌

இவைகளால் இங்கு ஒரு நல்லதும் நடக்காது, பாஜகவுக்கு டெப்பாசிட்டும் கிடைக்காது

எனினும் நல்ல இந்துக்கள் இந்த வெறியர்களிடம் கவனமாக இருக்கவும்.

கிறிஸ்தவர்கள் இந்த கும்பலை புன்னகையோடு கடப்பார்கள், அப்படித்தான் கடக்க வெண்டும்

பொது அமைதியினை குலைக்கவும் மத நெருப்பினை மூட்டி அதில் ஆதாயம்பெறவும் ஒரு கோஷ்டி சுற்றுகின்றது

தேவமாதா அவர்களை மன்னிக்கட்டும், காளிதேவி அவர்களுக்கு நல்லபுத்தி அருளட்டும்

ஆயிரம் மடங்கு அழகு

எங்கு போனாலும் உயர்ந்த பட்டுடுத்தி, கவனமாக ஒப்பனையிட்டு, தலையெல்லாம் பூச்சூடி , நகையெல்லாம் பூட்டி கிட்டதட்ட கிளியோபாட்ரா தோரணையில் வருபவர் அவர்

பெரும் போராட்டமோ இல்லை நாட்டுக்காக சில கருத்துக்களோ சொன்னதே இல்லை அவர், தந்தை வழியில் அவரால் மட்டுமே அரசியலுக்கு வந்தவர்

நாகரீகமான மேடைகள், மேலிடத்தோர் வீற்றிருக்கும் அவைகள் தவிர அவரை காணமுடியாது

ஆனால் டாக்டராயினும் எங்கு சென்றாலும் பரட்டை தலையுடனும், வயலுக்கு செல்லும் பெண்ணின் பாமர தோற்றத்துடனும் மனதில் பட்டதை மிக தைரியமாக சொல்லியும்

தந்தை தடுத்தும் மாற்றுகட்சியில் சேர்ந்து அங்கும் இடம்பிடித்து இன்று தனியொருத்தியாய் பல கல்லடி சொல்லடிகளை அனுதினமும் தாங்கி , கொஞ்சமும் அசராமல் தன் வழியில் செல்பவர் இவர்

பாமரத்தி, ஆடை முதல் தோற்றம் பேச்சுவரை பராரி கோலமே, துளியும் மேல்குடி பேச்சு நடையோ ஆங்கில கலப்போ அவரிடம் தெரியாது , இவ்வளவிற்கும் மருத்துவர்

இதில் யார் அழகு என்றால், மிக தைரியமாக சொல்லலாம் நிச்சயம் தமிழிசைதான் அழகு

தமிழச்சி கமலஹாசன் வகையறா, தமிழிசை ரஜினி , கலைஞர் வகையறா

தன் இயல்பான தோற்றம், இயல்பான பேச்சு என கொஞ்சமும் போலியின்றி வளையவரும் தமிழிசை அந்த தமிழச்சியினை விட ஆயிரம் மடங்கு அழகு

இதுதான் தமிழக அரசியல்

மூத்தவர்களை மோடி மதிப்பது இல்லை, இதோ அத்வாணியினை ஒதுக்கிவிட்டார்கள் என பலர் கிளம்பிவிட்டார்கள்

வரலாற்றில் இக்காட்சியினை கொண்டுவந்தது காங்கிரஸ்

இந்திராவும், சஞ்சயும் அதற்கு வழிகாட்டிகள். இந்திரா என்ன மூத்தோரை மதித்தாரா? காமராஜர் முதல் கிருபாளினி வரை அவர் எப்படி மதித்தார் என்பது தெரியாதா?

கொஞ்சமும் மதித்தது இல்லை

அவர்களை ஒப்பிடும் பொழுது 91 வயது அத்வானிக்கு ஓய்வு கொடுத்திருப்பது கவுரவமே..

அத்வாணிக்கு சீட் கொடுக்கவில்லை “ஹேய்ய்ய்ய் பாசிச பாஜக..” என பொங்குபவர்கள் எல்லாம்

க‌.அன்பழகனுக்கு ஏன் சீட் திமுக‌ கொடுக்கவில்லை என பேசவே மாட்டார்கள், இதுதான் தமிழக அரசியல்..

அன்பழகனுக்கு 4 வயதுதான் அத்வாணி இளையவர்

மறுக்க யாராலும் முடியாது

ஜல்லிகட்டு போராட்டம் பெரும் எழுச்சியாய் இருந்தபொழுது தமிழக மக்களுக்கு ஆதரவாக சட்ட திருத்தம் தந்ததும் இந்த அரசுதான்

தமிழக மக்களின் நியாயமான உணர்வுக்கு இந்த அரசு மதிப்பு கொடுத்தது

தமிழன் கலாமிற்கு மாபெரும் நினைவிடம் கட்ட முனைந்தது இந்த அரசு, திராவிட சிங்கங்கள் கலாமிற்காக துரும்பு கூட கிள்ளி போட்டதில்லை

குலசேகரன் பட்டினத்தில் கலாம் பெயரில் ராக்கெட் ஏவும் நிலையம் அமைக்கபடுமென அறிவித்தது இந்த அரசுதான்

பாகிஸ்தானால் பாதிக்கபட்ட தமிழக விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு நியாயம் கிடைத்ததும் இந்த ஆட்சியில்தான்

எய்ம்ஸ் மருத்துவமனை முதல் தேஜஸ் ரயில்வரை கொண்டு வந்ததும் இவர்களே

ரயில் போக்குவரத்திலும் பல நன்மைகள் இங்கு கிட்டியுள்ளன

இணையம் போன்ற மாபெரும் துறைமுகங்களை நிர்மானிக்க முயன்றதும் இவர்களே

தனுஷ்கோடியினை மறுபடியும் பொலிவானதாக்க முயன்றதும், பாம்பன் பாலத்தை சீரமைத்ததும் இந்த அரசுதான்

தனுஷ்கோடியினை மற்ற அரசுகள் தொட்டும் பார்க்கவில்லை

தாதுமணல் தொழில் எனும் பெயரில் அட்டகாசம் நடந்ததை எல்லாம் முறித்து போட்டது இந்த அரசுதான்

தென் தமிழக கடற்கரைக்கு தனி கவனம் எடுத்தது இந்த அரசுதான்

மீணவர்கள் சுடபடுவதை நிறுத்திகாட்டியதும் இந்த அரசுதான்

ஆழ கவனித்தால் ஒன்று புரியும், இப்பொழுதுதான் கிழக்கு கடற்கரையில் நடக்கும் கடத்தல்கள் தடுப்பு பற்றிய செய்திகள் அதிகம் வருகின்றன‌

கடத்த தயாரான கஞ்சா போன்ற பொருட்கள் எல்லாம் அகப்படுகின்றன, கடத்தல்கள் முடிவுக்கு வருகின்றன இலங்கை துப்பாக்கி சூடு இல்லை

என்.ஜி.ஓ என கணக்கில்லாமல் வந்த பணங்களை நிறுத்தி பல தேசவிரோத மற்றும் பிரிவினை வாதசக்திகளுக்கு கடிவாளம் போட்டது இந்த அரசுதான்

நீட் தேர்வு என்றாலும் மாணவ உலகம் ஸ்தம்பிக்கவில்லை, மருத்துவ கல்லூரிகள் தகுதிமிக்க மாணவர்களை சேர்க்கத்தான் செய்தது

இனி குறையவே செய்யாது என்றிருந்த நிலத்து விலை இந்த ஆட்சியில் குறைந்தது, நல்ல விஷயம் அது

நடக்குமோ இல்லையோ, கோதாவரி காவேரி இணைப்பு பற்றி கொஞ்சமாவது சொன்னவர்கள் அவர்கள்தான்

காவேரி சிக்கலுக்கு மாற்றுவழி உண்டு என சொன்னது இவர்கள்தான்

என்னமும் அரசியலுக்காக ஆயிரம் சொல்லட்டும், காமராஜரின் காலத்திற்கு பின் பல நல்ல மத்திய அரசு திட்டங்கள் இப்பொழுதுதான் இங்கு வர தொடங்கியிருக்கின்றன‌

அதை மறுக்க யாராலும் முடியாது, இப்படி ஒரு சில பக்கங்கள் அவர்களுக்கு இருக்கத்தான் செய்கின்றது

டெங்கி கொசு கும்பல்கள்

பாஜகவின் சில சங்கி கும்பல்தான் அள்ளிவிடும் என்றால் இந்த திமுகவின் டெங்கி கொசு கும்பல்கள் அதை விடமோசமாக அள்ளி விடுகின்றது

இதோ இப்படியாக‌

//கலைஞர் பிறந்தது திருவாரூர் சுற்று வட்டாரத்திலேயே அதிக வசதியான குடும்பத்தில்தான். அவர் பெற்றோர் அன்றாடம் காய்ச்சிகளில்லை.செல்வந்தர்கள்.

அவரது வீடு பெரிய வசதியான ஓட்டு வீடு. திருக்குவளையின் மையத்தில் அமைந்திருந்த்து அது.

அந்த காலத்திலேயே ஆங்கில மீடிய பள்ளியில் சேர்ந்து படித்தவர் கலைஞர்.//

தன் நெஞ்சுக்கு நீதியிலும் இன்னும் பல இடங்களிலும் தன் குடும்ப நிலைபற்றி தெளிவாக சொல்கின்றார் கலைஞர்

அவர் படித்தது அக்காலகட்டத்தில் ஆங்கிலம் அதிகமாக பள்ளியில் இருந்த காலம், அக்காலத்தில் 10ம் வகுப்பு ஒழுங்காக படத்தவனிடம் இக்காலத்தில் ஆங்கிலத்தில் பி.எச்டி படித்தவன் கூட பேசமுடியாது

கலைஞர் ஆரம்ப பள்ளியினை திண்ணை பள்ளியில் படித்தேன் என்கின்றார், திருவாரூரில் 7 வரை படித்தார் அதுவும் பெயில்

அதன்பின் என்னை பாஸ் செய்துவிடவில்லை என்றால் தெப்பகுளத்தில் குதித்து சாவேன் என்ற மிரட்டல் எல்லாம் அப்பள்ளியில் வெற்றிபெறவில்லை, அத்தோடு படிப்புக்கு விடை கொடுத்தார் கலைஞர்

ஆனால் எழுத்து அவருக்கு கை வந்த கலை, பேச்சு அதைவிட நா பழக்கம்

பின் கை எழுத்து பத்திரிகை, நாடகம் என பலத்த நஷ்டத்தை சந்தித்த அவர் பெரியாரிடம் சேருகின்றார்

அதை இப்படி எழுதுகின்றார்

“பெரியாரிடம் எனக்கு 5 ரூபாய்தான் சம்பளம் , அதுவும் தங்க சாப்பாடு எல்லாம் போக 3 ரூபாய்தான் மிஞ்சும்

அதைத்தான் என் அருமை மனைவி பத்மாவதிக்கு அனுப்புவேன்

இரு வேட்டிகள்தான் என்னிடம் உண்டு, தோட்டத்தில் குளிக்க சென்றால் ஒன்றை கட்டி கொள்வேன் இன்னொன்றை துவைத்து தலைக்கு மேல் விரித்து பிடித்தபடி நடந்து வருவேன், அது மறுநாள் உடுத்த‌

இப்படித்தான் என் ஆரம்ப நாட்கள் இருந்தன”

ஆம் அவரே தன் வறுமையினையும் இன்னபிற விஷயங்களையும் உருக்கமாக சொல்லியிருக்கின்றார்

கலைஞரின் தந்தை முத்துவேலர் நாதஸ்வர கலைஞர் என்பதும், கிராம கை மருத்துவர் என்பதுமே தகவல். அவர் பண்ணையாரெல்லாம் அல்ல‌

அந்த சாதியில் பண்ணையார்கள் இருந்ததுமில்லை, அதற்கு வாய்ப்புமில்லை

ஏதோ ஒரு இடத்தில் தன் நிலையினை “கால் காணி சொந்தமாக இருந்தாலும் அந்த நந்தவனத்தை விட்டு வந்திருப்பானா இவன்?” என அவர் வசனம் எழுதியதாக கூட சொல்வார்கள்

அதை எல்லாம் மறைத்துவிட்டு திருக்குவளை பண்ணையார் கலைஞர் கருணாநிதி அளவுக்கு அவரை கொண்டு வந்து கொண்டிருக்கின்றனர், டெங்கி திமுகவினர்

ஆம் டெங்கி கொசுவினை விட இவர்கள் ஆபத்தானவர்கள்