டெங்கி கொசு கும்பல்கள்

பாஜகவின் சில சங்கி கும்பல்தான் அள்ளிவிடும் என்றால் இந்த திமுகவின் டெங்கி கொசு கும்பல்கள் அதை விடமோசமாக அள்ளி விடுகின்றது

இதோ இப்படியாக‌

//கலைஞர் பிறந்தது திருவாரூர் சுற்று வட்டாரத்திலேயே அதிக வசதியான குடும்பத்தில்தான். அவர் பெற்றோர் அன்றாடம் காய்ச்சிகளில்லை.செல்வந்தர்கள்.

அவரது வீடு பெரிய வசதியான ஓட்டு வீடு. திருக்குவளையின் மையத்தில் அமைந்திருந்த்து அது.

அந்த காலத்திலேயே ஆங்கில மீடிய பள்ளியில் சேர்ந்து படித்தவர் கலைஞர்.//

தன் நெஞ்சுக்கு நீதியிலும் இன்னும் பல இடங்களிலும் தன் குடும்ப நிலைபற்றி தெளிவாக சொல்கின்றார் கலைஞர்

அவர் படித்தது அக்காலகட்டத்தில் ஆங்கிலம் அதிகமாக பள்ளியில் இருந்த காலம், அக்காலத்தில் 10ம் வகுப்பு ஒழுங்காக படத்தவனிடம் இக்காலத்தில் ஆங்கிலத்தில் பி.எச்டி படித்தவன் கூட பேசமுடியாது

கலைஞர் ஆரம்ப பள்ளியினை திண்ணை பள்ளியில் படித்தேன் என்கின்றார், திருவாரூரில் 7 வரை படித்தார் அதுவும் பெயில்

அதன்பின் என்னை பாஸ் செய்துவிடவில்லை என்றால் தெப்பகுளத்தில் குதித்து சாவேன் என்ற மிரட்டல் எல்லாம் அப்பள்ளியில் வெற்றிபெறவில்லை, அத்தோடு படிப்புக்கு விடை கொடுத்தார் கலைஞர்

ஆனால் எழுத்து அவருக்கு கை வந்த கலை, பேச்சு அதைவிட நா பழக்கம்

பின் கை எழுத்து பத்திரிகை, நாடகம் என பலத்த நஷ்டத்தை சந்தித்த அவர் பெரியாரிடம் சேருகின்றார்

அதை இப்படி எழுதுகின்றார்

“பெரியாரிடம் எனக்கு 5 ரூபாய்தான் சம்பளம் , அதுவும் தங்க சாப்பாடு எல்லாம் போக 3 ரூபாய்தான் மிஞ்சும்

அதைத்தான் என் அருமை மனைவி பத்மாவதிக்கு அனுப்புவேன்

இரு வேட்டிகள்தான் என்னிடம் உண்டு, தோட்டத்தில் குளிக்க சென்றால் ஒன்றை கட்டி கொள்வேன் இன்னொன்றை துவைத்து தலைக்கு மேல் விரித்து பிடித்தபடி நடந்து வருவேன், அது மறுநாள் உடுத்த‌

இப்படித்தான் என் ஆரம்ப நாட்கள் இருந்தன”

ஆம் அவரே தன் வறுமையினையும் இன்னபிற விஷயங்களையும் உருக்கமாக சொல்லியிருக்கின்றார்

கலைஞரின் தந்தை முத்துவேலர் நாதஸ்வர கலைஞர் என்பதும், கிராம கை மருத்துவர் என்பதுமே தகவல். அவர் பண்ணையாரெல்லாம் அல்ல‌

அந்த சாதியில் பண்ணையார்கள் இருந்ததுமில்லை, அதற்கு வாய்ப்புமில்லை

ஏதோ ஒரு இடத்தில் தன் நிலையினை “கால் காணி சொந்தமாக இருந்தாலும் அந்த நந்தவனத்தை விட்டு வந்திருப்பானா இவன்?” என அவர் வசனம் எழுதியதாக கூட சொல்வார்கள்

அதை எல்லாம் மறைத்துவிட்டு திருக்குவளை பண்ணையார் கலைஞர் கருணாநிதி அளவுக்கு அவரை கொண்டு வந்து கொண்டிருக்கின்றனர், டெங்கி திமுகவினர்

ஆம் டெங்கி கொசுவினை விட இவர்கள் ஆபத்தானவர்கள்