தமிழகம் 62

தமிழகம் 62..
கிட்டதட்ட 630 நாடுகளை பிடித்து வெள்ளையன் உருவாக்கியது பிரிட்டிஷ் இந்தியா, இரு வகையாக ஆண்டுகொண்டிருந்தான் ஒன்று வெள்ளையன் ஆளுநர், இன்னொன்று வைஸ்ராய்களின் மேலாண்மையினை ஏற்றுகொண்ட உள்ளூர் மன்னர்களால் சமஸ்தானம் என அழைக்கபட்டது,
உச்ச அதிகாரம் வெள்ளையனுக்கே.
மெட்ராஸ் ஸ்டேட் எனப்பட்ட பகுதிக்கு கவர்ணர் உண்டு, மைசூர், ஐதரபாத், திருவாங்க்கூர் எல்லாம் சமஸ்தான வகையறா, அதாது இவை 4ம் கலந்துதான் பெரியார் சொன்ன திராவிட நாடு
பிரிட்டன் அரசு கிழக்கிந்திய கம்பெனியிடமிருந்து இந்தியாவினை கையகபடுத்திய பின், பிரிட்ட்டிஷ் இந்தியா எனும் வகையில் அவனும் சில உள்ளாட்சி தேர்தல்களை எல்லாம் நடத்திகொண்டிருந்தான், நிலங்களை அளத்தல், ரயில் நிலையம் கட்டுதல் என பல வளர்ச்சிகளும் அதில் இருந்தன‌
சுதந்திரம் நெருங்க முதல் பிரிவு மத அடிப்படையில் நடந்தது, இந்தியவில் அப்படி பல மாகாணம் பாகிஸ்தானுக்கு செல்ல, இரு மாகாணம் பங்கிடபட்டன, ஒன்று பஞ்சாப் இன்னொன்று வங்கம்
முதல் பிரிவுகள் இப்படி மத அடிப்படையில் நடந்தன‌
சுதந்திரம் அடைந்த அடுத்த 3 ஆண்டுகளிலே மொழிவாரியாக மாநிலங்களை அமைக்கவேண்டும் என்ற கோரிக்கை எழுப்பபட்டது, எழுப்பியர் பெரியார் அல்ல, அவர் திராவிட நாடு வேண்டுமென்றாரே தவிர மொழி அவருக்கு பிரச்சினை அல்ல‌
அன்று அவரே அண்ணா கும்பல் பிரிந்த கலக்கத்தில் இருந்தார், திமுக அன்று ஏதோ சொல்லிகொண்டிருந்தது, ஆனால் முணுமுணுத்துகொண்டிருந்தது, தமிழ்நாடு எனும் பெயரெல்லாம் கனவில் கூட இல்லை
பொட்ட ராமலு எனும் தெலுங்கர்தான் குளத்தில் முதலில் கல் எறிந்தவர், தனி ஆந்திரம் வேண்டுமென்று முதலில் அடம் பிடித்தவர் அவரே
பின் கமிஷன் அமைக்கபட்டு கன்னடம், கேரள, ஆந்திரம் என அமைக்கபட்டாலும், சென்னை மாகாணம் அதாவது மெட்ராஸ் ஸ்டேட் எனும் பழம்பெயர் தமிழகத்திற்கு தொடர்ந்தது
இப்போது இருக்கும் தமிழகம் இல்லை அது, திருத்தணியும் சென்னையும் ஆந்திரர்களிடமிருந்தது, மபொசி தலமையில் நடந்த போராட்டமே அதனை மீட்டெடுத்தது
கன்னியாகுமரி மாவட்டம் மார்ஷல் நேசமணி தலமையிலான போரட்டத்தில் தமிழகத்தோடு இணைந்தது. தேவிகுளம் பீர்மேடு எனும் தமிழக பகுதிகளை கேரளம் தர மறுத்தது, கன்னடத்திடம் சில பகுதிகளை இழந்தோம்
இது 62 ஆண்டுக்கு இதே நாளில் முன்பு நடந்த சம்பவங்கள்
பின் தியாகி சங்கரலிங்கம் இது தமிழ்நாடு என அழைக்கபடவேண்டும் என சொல்லி போராடி செத்தார், பின்னாளில் அண்ணா தமிழ்நாடு ஆக்கினார்
இன்றும் இந்தியாவில் நாடு என அமைந்திருக்கும் மாநிலம் இது மட்டுமே, அன்றிலிருந்தே டெல்லிக்கும் நமக்கும் இடையே சந்தேக பார்வை உண்டு.
உண்மையில் திருப்பதி தொடங்கி திருவனந்தபுரம் வரைக்கும் தமிழக பூமி, கொஞ்சம் பெயர்களை கவனித்தாலே புரியும் திரு என்பதே தமிழக வார்த்தை, தெலுங்கர்களுக்கு சம்பந்தமில்லா வார்த்தை
திருப்பதியும், திரு அனைந்த புரம் எனும் அந்த பகுதியும் தமிழர் நிலமே, சந்தேகமே இன்றி சொல்லமுடியும், இன்றும் திருவனந்தபுரம் வரை உள்ள மலையாளமும், அதற்கு வடக்கே இருக்கும் கொடு மலையாளமே அதற்கு சாட்சி
சரி 60 ஆண்டுகளில் என்ன நடந்திருக்கின்றது?
அன்று எங்களுக்கு சென்னையினை விட்டால் வேறு சொல்லிகொள்ள நகரமில்லை என கதறிய தெலுங்கர்கள் ஐதரபாத்தினை பிரமாண்டமாக உருவாக்கினார்கள், அது தெலுங்கானாவிடம் போன்போதும் இன்று அமராவதியினை கன ஜோராக உருவாக்கிகொண்டிருக்கின்றார்கள்
அன்று கன்னடத்தின் மிகசிறிய நகரமான பெங்களூர் இன்று உலகின் முண்ணணி நகரமாயிற்று
நாகர்கோவிலை விட பின் தங்கி இருந்த திருவனந்தபுரம் பெரும் நகரமாயிற்று, கொச்சின், திருச்சூர் எல்லாம் வளர்ந்திருக்கின்றன‌
தமிழகத்தின் நிலை என்ன? வெள்ளையன் விட்டுசென்ற அதே சென்னை, நிச்சயம் மும்பை போல வளர்ந்திருக்கவேண்டிய நகரம் அதற்குரிய இடத்தினை பெறவில்லை, விமான நிலையம் கூட இடிந்துகொண்டே இருக்கின்றது
கன்னடமும், கேரளமும், ஐதராபாத்தும் கட்டங்களில் அசத்த நாமோ இன்னும் வெள்ளையன் கோட்டையிலே சட்டமன்றம் நடத்துகின்றோம்
அவர்கள் இந்தியும் படித்து தங்கள் மொழியினையும் காத்துகொள்ள, நாமோ இந்தியும் படிக்காமல் தமிழையும் காக்காமல் மொழிகொலை செய்துகொண்டிருக்கின்றோம்,
இன்றைய தமிழக தமிழனுக்கு ஒரு மொழியும் உருப்படியாக தெரியாது தமிழ் உட்பட‌
நீர் மேலாண்மையில் அவைகள் எல்லாம் தன்நிறைவு பெற்றிருக்க நாமோ அவன் தரவில்லை, இவன் தரவில்லை என அழுதுகொண்டிருக்கின்றோம், தண்ணீர் வந்தால் கடலுக்கு அனுப்புவோம்
இரு காரணங்களை உறுதியாக சொல்லமுடியும் ஒன்று சினிமா மோகமும் இன்னொன்று அதன் மூலம் ஆட்சிக்கு வந்த திராவிட அரசியலும்
இந்த இரண்டாலும் தமிழகம் அடைந்திருக்கும் நாசம் கொஞ்சமல்ல, ஆந்திரா ராமராவோடு திருந்திற்று ஆனால் மாநில பிரிவு எனும் பெரும் விலை கொடுத்தது. காரணம் இதுதான் இந்திய அரசியல்
ஒரு மாநில கட்சி வளர்ந்தால் மாநிலத்தையே பிரிக்க மத்திய கட்சிகள் தயங்காது, இது ஒருவகை உத்தி ராஜதந்திரம்
இன்று ஆந்திராவில் சினிமா நட்சத்திரம் அரசியலுக்கு வரமுடியாது, சிரஞ்சீவியின் வீழ்ச்சி அதனை சொல்கின்றது. சந்திரபாபு சினிமாக்கரர் அல்ல, ஆனால் சினிமா மூலம் கிடைத்த ஆட்சியினை நல்லாட்சியாக மாற்றிகொடுத்துகொண்டிருப்பவர்
கேரளமும், கன்னடமும், தெலுங்கானாவும், சீமாந்திராவும் இன்று வரை தேசிய நீரோட்டத்தில் விலாகது பயணிப்பதும் அவர்களின் வெற்றிக்கும் வளர்ச்சிக்கும் மகா முக்கிய காரணம். இந்தியர்களாக உணர்கின்றனர், வாக்களிக்கின்றனர் அதே நேரம் தம் மாநில நலனை காத்தும் கொள்கின்றனர்
தமிழகத்தில் தாங்கள் தனிநாட்டில் இருப்பது போல் நாம் இருக்கின்றோம், இந்திய தேர்தல் என்றால் நாம் கலைஞரை அல்லது அம்மையாரை ஆதரிப்போம், அவர்கள் காங்கிரசை அல்லது பிஜேபியினை ஆதரிப்பார்கள்
இதற்கு நேரடியாக மத்திய கட்சிகளை ஆதரித்தால் என்ன என நாம் யோசிக்கமாட்டோம், நாம் அப்படித்தான்
திராவிட அரசியல் அப்படி பல விமர்சனங்களுக்கு உட்பட்டது, இம்மாநிலம் அடைந்திருக்கும் பல கேடுகளுக்கு அவர்கள் காரணம் என்பதை மறுக்க முடியாது, மகா உண்மை
இன்னொன்று யதார்த்த நிலையில் இந்தியா முழுக்க ஒரு கட்சிஆட்சியும் தமிழகத்தில் தனி கட்சி ஆட்சியும் நடப்பது எப்படி தமிழகத்திற்கு நல்ல பலன் தரும்? ஒரு காலமும் தராது. இது யதார்த்த நடைமுறை
இந்தி படிக்கமாட்டோம், ஈழ புலிகள் ஆதரவு என பல விஷயங்களில் தமிழகம் தனிகொடி பிடித்தே தன்னை சீரழித்தது, சரி ஆள்பவர்களாவது ஒழுங்காக ஆண்டார்களா என்றால் ம்ஹூம்.
கொஞ்சம் கூட அரசியல் ஞானமில்லா, கேமராவிற்கு முன் கூத்தடிக்கும் கும்பல் எல்லாம் நாடாளதுடிக்க இவர்களே காரணம், கேரளாவிலும் கன்னடத்திலும் இதெல்லாம் சாத்தியமில்லை, அறவே இல்லை
அட உலகில் எங்கும் சாத்தியமில்லை, பின் தங்கிய சோமாலியாவிலோ, ஆப்கனில் கூட சாத்தியமில்லா முட்டாள்தனம் தமிழகத்தில் மட்டும் சாத்தியமென்றால் திராவிட கட்சிகளே முதல் காரணம்.
மொத்தத்தில் இந்த மொழிவாரி பிரிவினையால் ஒரு மாநிலம் நாசமாக போய்கொண்டிருக்கிறது என்றால் அது தமிழகம் மட்டுமே, ஒரே காரணம் திராவிட கட்சிகள்
இந்த மொழிவாரி பிரிவுக்கு பின் ஒரே ஒரு இந்திய அடையாளம் தமிழகத்தில் நிறுவபட்டது என்றால் அது விவேகானந்தர் பாறை மண்டபம் மட்டுமே, எப்படி அது அமைக்கபட்டது என்றால் ஏக்நாத் ராணடே எனும் மனிதனின் ராஜதந்திரம் எல்லோர் வாயினையும் கட்டிபோட்டது
இல்லை என்றால் வங்கத்து காவி பரதேசிக்கு எங்கள் கடலில் மண்டபமா என கிளம்பியிருப்பார்கள்
ஆக மொழிவாரி மாநிலத்தால் நாம் இழந்தது மகா அதிகம், இன்னும் இழப்போம் இருந்து பாருங்கள்
ஆனால் இந்த சர்ச்சைகளுக்கு அப்பாற்பட்டு ஒரு மனிதரை பார்க்கலாம், அம்மனிதருக்கு அன்று வயது 32 இருக்கலாம், பிரமாதமான வசனகர்த்தா கூடுதலாக அரசியல்வாதி
அப்பொழுதுதான் இப்பிரிவினைகள் எல்லாம் நடந்து தமிழ் மாநிலம் உருவாகின்றது,
மற்ற மாநிலங்கள் எல்லாம் தேசிய கட்சிகளை ஏற்றுகொள்ள, தமிழகத்தில் பிரளயமே வெடிக்கின்றது, நேருவே நான்சென்ஸ் என திட்டுகின்றார், பதிலுக்கு அந்த வசனகர்த்தா உனக்கு நோ சென்ஸ் என சொல்ல இந்தியா அதிர்கின்றது
ஒரு கட்டத்தில் தமிழகத்திலிருந்து காங்கிரசை விரட்டி ஆட்சியினை பிடிக்கின்றது அந்த கட்சி, அந்த நபர் முதல்வராகின்றார், அதாவது மாநிலம் அமைந்து 12 வருடம் ஆகியிருந்தது
அதன்பின் அம்மனிதர் பெரும் விஸ்வரூபமெடுத்தார், யாராலும் அவரை தமிழகத்தில் அசைக்கமுடியவில்லை, இந்திராவின் எதிரிகள் கூட அவரை நெருங்கினர்
யோசித்த டெல்லி அவர் கட்சியினையே இரண்டாக உடைத்து இனி என்ன செய்வாய்? என்பது போல பார்த்தது.
இங்குதான் அம்மனிதரின் ஆற்றல் அப்பட்டமாக தெரிகின்றது
என்ன மாயமோ? என்ன மந்திரமோ? உடைந்த கட்சியும் தேசிய கட்சிகளோடு இணையவுமில்லை, அவற்றை வளரவிடவுமில்லை
இந்திரா தமிழகத்தில் போட்டி இட இருந்ததை இரு கட்சிகளும் நுட்பமாக தடுத்ததே இதற்கு பெரும் உதாரணம்.
இருவரும் மாறி மாறி ஆண்டுகொள்கின்றார்களே தவிர, இன்னொரு கட்சி வளரவோ, தேசிய கட்சிகள் நுழையவோ வாய்ப்புகொடுத்ததே இல்லை
இந்த நுட்பத்தில் ஒன்றும் செய்யமுடியாமல் கையினை பிசைந்த டெல்லி சில வழக்குகளை போட்டு இருவரையும் ஏதோ செய்யபார்த்தும் ஒன்றும் நடக்கவில்லை. கூட்டணி வைத்து திருப்திபட்டு கொண்டது, அதுவும் பிரயோஜனமில்லை, கருணாநிதியின் பெரும் ராஜதந்திரமிது
ஆக கிட்டதட்ட 50 ஆண்டுகளாக அம்மனிதர் டெல்லி கட்சிகளுக்கு பெரும் சவாலாகவே திகழ்ந்தார், சில இடங்களில் அவை கூட்டு சேர்த்து கட்டியழுகின்றதே தவிர முழு மனதோடு அல்லவே அல்ல‌
இந்த மொழிவாரி தமிழகத்தின் மிக சுவாரஸ்யமான மனிதர் அந்த கலைஞர் கருணாநிதி
தன் கட்சி உடைந்து எதிர்கட்சி ஆனபின்பும் பொது எதிரி யார்? என்பதில் எவ்வளவு கவனமாக இந்த நொடியளவும் இருக்கின்றார் பார்த்தீர்களா? அதுதான் கலைஞரின் சாமர்த்தியம்
எல்லா மாநிலங்களையும் ஆளும் தேசிய கட்சிகள் தமிழகத்தில் திருவோட்டுடன் நிற்பதும் அவராலே, அவர் ஒருவராலே
இந்த திராவிட ஆட்சிகளால் மாநிலம் அடைந்த நன்மை என்ன என்பது உங்களுக்கே வெளிச்சம்
ஆனால் அப்படி ஒரு வில்லாதி வில்லன் 50 ஆண்டுகளாக இம்மாநிலத்தில் சமார்த்தியமாக, அசைக்கமுடியா சக்தியாக பெரும் மாயாவியாக அமர்ந்திருந்தார் என்பது வேறு வகையில் ரசிக்க கூடியது
இது மாறிவிட்ட காலம், அந்நாளில் கொடூரமாக கொள்ளையடித்தவன் அலெக்ஸாண்டர், மாவீரன் என சொல்கின்றோம், காரணம் வென்றுவிட்டான் திறமை
அப்படி இம்மாதிரியான நாகரீகமான உலகில் வாக்குதான் ஆயுதம், அதனை கவர்வதுதான் சாமர்த்தியம்.
அவ்வகையில் கலைஞர் பெரும் சாமார்த்தியசாலி,
மொழிவாரியாக மாநிலங்கள் அமைந்தால் நாட்டில் குழப்பமிருக்காது என மத்திய அரசு நினைத்துதான் பிரித்தது, இல்லையேல் இன அடிப்படையில் விபரீத பிரிவினை நடந்திருக்கும்
மற்ற மாநிலங்களில் அந்த கணிப்பு பலித்தது
ஆனால் தமிழகம் டெல்லியின் தீரா தலைவலியாக மாறிபோனது, அது இன்றுவரைக்கும் தொடர்கின்றது, இன்னும் தொடரும்
ஆனால் இதில் தமிழகம் இழந்துகொண்டிருப்பதுதான் அதிகம் , இதனை மக்கள் சிந்திக்கும்பொழுது மாற்றம் நிகழலாம்
அதனை விட்டு தனிதமிழ்நாடு தீர்வு என கிளம்புவார்களாயின், கொஞ்சநாளில் தனி பாண்டிய நாடு, தனி கட்டபொம்மன் பாளையம் என குரல்கள் கேட்கும் காலம் வரும்
மானிட மனம் அப்படிபட்டதுதான், அதாவது பிரிய நினைத்தால் பிரிந்து கொண்டே இருக்கலாம், சேர்ந்து வாழ நினைத்தால் வாழ்ந்துகொண்டே இருக்கலாம்
ஒற்றுமைதான் பலம்
உலகில் ஓரளவு இந்தியாவிற்கு மரியாதை இருக்கிறதென்றால் அதன் பெரும் மக்கள் தொகையும், அது கொடுக்கும் பலமுமே
மொழிவாரியாக பிரிந்தாலும், இந்தியன் எனும் உணர்வில் ஒன்றாய் இருப்பதே உயர்வுக்கு வழி, அமைதிக்கும் வழி.
மொழிவாரியாக பிரிந்ததில் தமிழகத்தில் யாருக்கு லாபம் என்பது உங்களுக்கு புரிந்திருக்கும்,
ஆனால் நிச்சயமாக தமிழருக்கு ஒரு நலனும் இல்லை, தொல்லைகள் தான் கூடிகொண்டே இருக்கின்றன,
ஆனால் அவை நிச்சயமாக மாநில அரசியலால் அதிகரித்த தொல்லைகள் என்பதில் மாற்றுகருத்து இருக்க முடியாது.
[ November 1, 2018 ]
No automatic alt text available.

மருதுபாண்டியர்

சுதந்திர போராட்டத்தை இந்தியாவில் தொடங்கிய வீரர்களில் முக்கியமானோர் மருது சகோதரரர்கள் அவர்களின் வீரமும் தியாகமும் பெரிது .

சாதரண குடும்பத்து சகோதரர்கள், ஆனால் தங்கள் வீரத்தாலும் விசுவாசத்தாலும் சிவகங்கை அரசின் தளபதிகளாயினர், முத்துவடுகநாதரின் நம்பிக்கைகுரியவர்களாயினர்.

இருவருமே மருதநாயகம் போல பலசாலிகளாகத்தான் இருந்தார்கள், பீரங்கிகளை அனசாயமாக‌ தூக்கி திருப்பும் அளவிற்கு உடல்கட்டு இருந்திருக்கின்றது

மருதநாயகம் எனும் கான்சாகிப்பின் நாடு என அறியபட்ட அப்பகுதி நாட்டின் காடும், கான் நாடு என்றே அறியபட்டது. அந்த கான் நாட்டின் புலிகள் கூட அவர்களுக்கு அஞ்சி இருக்கின்றன.

முத்துவடுகநாதர் காலத்திற்கு பின் வேலுநாச்சியார் பதவியிழந்து அலையும் பொழுது அவரை காடுகளிலும் பின் ஹைதர் அலி பாதுகாவலிலும் வைத்திருந்தவர்கள் அவர்களே

பின் போர்தொடுத்து வெள்ளையனை விரட்டி மறுபடியும் வேலுநாச்சியாரை அரசி ஆக்கியதும் அவர்களே

வேலுநாச்சியார் வீழ்த்தபட்டபின்னும் சிவகங்கை மன்னர்களாக வெள்ளையனை எதிர்த்து நின்றதும் அவர்களே

கட்டபொம்மனுக்கு பின் ஊமைத்துரைக்கு அடைக்கலம் கொடுத்ததும், பாஞ்சாலங்குறிச்சியில் ஊமைதுரை பெரும் போர் நடத்தவும் காரணம் அவர்கள்.

தென்னகத்தாரை எல்லாம் திரட்டி திருச்சி கோட்டையில் தென்னகம் சுதந்திர நாடு என ஜம்புதீவு அல்லது ஜம்வீத்யூத் பிரகடனம் என சுதந்திர நாட்டினை அறிவித்ததும் அவர்களே

த‌மிழ் இலக்கியங்களில் நாவலன் தீவு என தமிழகத்தினை சொல்வார்கள் அல்லவா, அந்த நாவலந்தீவுதான் சமஸ்கிருதத்தில் ஜம்பு தீவு

எப்படியோ இந்நாட்டு சுதந்திர பிரகடன உரையினை வாசித்த மாவீரர்கள் முதலில் அவர்கள்தான், இந்திய வரலாற்றில் அவர்கள்தான்.

அதன் பின்பு 1947ல் நேருதான் வாசித்தார்.

பின் ஹைதரும் திப்புவும் கொல்லபட, மருதுபாண்டியருடன் இருந்த பலர் உள்நாட்டு காட்டிகொடுப்பால் கொல்லபட, குறிப்பாக இந்த புதுகோட்டை மன்னன் தொண்டைமான் போன்றோரின் சதிசெயல்களால் மருதுபாண்டியர் தோற்றனர்

பின்னும் அகபடவில்லை, ஆனால் கோவில்களுக்கு அள்ளி கொடுத்தவர்கள் மருதுபாண்டியர். அதுவும் காளையார் கோவில் கோபுரம் அவர்களால் கட்டபட்டது.

மருதுபாண்டியரை அவர்களால் பிடிக்க முடியவில்லை. சில விஷேஷ ஆயுதங்களில் அவர்கள் பாதுகாப்பாய் இருந்தனர், குறிப்பாக வளறி (வளை எறி) போன்ற ஆயுதம் அது

தாக்கிவிட்டு திரும்ப கைக்கே வரும் பூமராங் வகையது, தமிழரின் சிறப்பான ஆயுதம். மருதிருவர் அதில் கைதேர்ந்திருந்தனர்

ஆங்கிலேயர் அதில் தடுமாறினர், அப்படியான பல வகை சாகசங்களால் வெள்ளையரை அடித்திருந்ததால் அவர்களுக்கு அச்சம் இருந்தது.

மருதுபாண்டியர் இருக்கும் வரை தென்னகம் தங்களுக்கு இல்லை என்பதில் அஞ்சி இருந்தனர் ஆங்கிலேயர்

அதனால் மருதுகளின் பலவீனத்தில் அடித்தனர், மருதிருவரின் பலஹீனம் பக்தி

மருதுபாண்டியர் சரணடையாவிட்டால் காளையார் கோவில் கோபுரத்தை தகர்ப்போம் என் அறிக்கையிட்டனர் வெள்ளையர்.

அது பொறுக்காது, தம்மை விட ஆலயமே முக்கியம் என சரண்டைந்து, தங்கள் உடலை அந்த ஆலயத்திற்கு முன்பே புதைக்குமாறும், இதுகாரும் ஆலயங்களுக்கு தாங்கள் செய்த உதவிகள் தொடர்ந்து நடக்குமாறும் வெள்ளையனிடம் உறுதிபெற்றுகொண்டே தூக்கு மேடை ஏறினர் அவர்கள்

“தேசியமும் தெய்வீகமும் இரு கண்கள்” என்ற பசும்பொன் தேவரின் புகழ்மிக்க வாசகம் இவர்களிடமிருந்தே பிறந்தது.

மருது சகோதர்கள் முடிவுக்கு பின் வெள்ளையன் செய்த காரியம் வளறி எனும் ஆயுத தடை. அது செய்யவும் கற்பிக்கவும் தடை விதிக்கபட்டது

இன்று வழக்கிலே இல்லாமல் ஒழிக்கபட்டது, வெள்ளையனின் சதி அப்படி இருந்திருக்கின்றது.

(இம்மாதிரியான தமிழக அடையாளம் எல்லாம் மீட்டெடுக்கபட வேண்டும், ஆனால் கீழடியிலே நம்மால் ஒன்றும் செய்யமுடியாத பொழுது இதெல்லாம் எப்படி)

இன்று அந்த மாவீரர்கள் தூக்கிலடபட்ட நாள், இந்த தேதியில் ரகசியமாக கொல்லபட்டாலும், மக்களுக்கு அஞ்சி அவர்களின் உடலை வெள்ளையன் உடனே கொடுக்கவில்லை

27ம் தேதிதான் அவர்கள் உடல் காளையார் கோவில் எதிரில் புதைக்கபட்டது

மண்ணும், மதமும் உயிரைவிட மேலானது என வாழ்ந்த அந்த மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்துவது நம் கடமை

இத்தேசம் கண்ட மாபெரும் வீரர்களில் என்றுமே மருதுபாண்டியருக்கு உயர்ந்த இடம் உண்டு, தமிழரின் வீரம் அது

அந்த வீர வேங்கைகளுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்

பெரிய மருதுவின் மகனை வெள்ளையர் பினாங்கு தீவிற்கு நாடு கடத்தினர், மலேசிய பினாங்கு நகருக்கு செல்லும் பொழுதெல்லாம் மருதுபாண்டியர் நினைவும் வரும்.

மறக்க முடியா வீரமும் தியாகமும் அவர்களுடையது.

அவர்கள் உடல் கொல்லபட்டிருக்கலாம்,

ஆனால் இந்நாட்டு விடுதலையிலும் அவர்கள் அள்ளிகொடுத்த ஆலயங்களும் அவர்கள் செய்வித்த தேர்களும், அவர்களால் கட்டி காக்கபட்ட காளையார் கோவில் கோபுரமும் உள்ளவரை அவர்கள் வாழ்ந்து கொண்டே இருப்பார்கள்.

[ October 24, 2018 ]

Image may contain: one or more people

ராஜராஜ சோழன்

ராஜராஜ சோழன்

எங்கோ பாய்ந்துகொண்டிருந்தது காவேரி, அதனை தஞ்சைக்கு திருப்பினான் கரிகாலன்
கரிகாலன் செய்து கொடுத்த அந்த பெரும் காரியத்தில் சோழநாடு செழித்தது, நிரந்தர செழிப்பு அது. அந்த செழுமை கல்வி, கலை, வீரம் என எல்லாவற்றிலும் தஞ்சையினை முன்னுறுத்தியது
அதனால் எழுந்த செழிப்பான சோழ நாட்டில் பிறந்தவன் தான் ராஜராஜ சோழன்
ஒரு நாட்டின் செழுமை எப்படி நல்ல விஷயமோ, அதன் ஆபத்தும் அதுவேதான். எப்பொழுதும் எதிரிகள் தனியாகவோ, கூட்டமாகவோ பாய கூடும்.
அந்த ராஜ ராஜன் இதில்தான் உருவானான். அக்காலம் பாண்டியர், சிங்களர் இன்னும் சாளுக்கிய மன்னர்கள் என பல அச்சுறுத்தல் இருந்த நேரம் ராஜராஜன் முடிசூடினான்
அவனிடம் அன்றே எல்லா படையும் இருந்தது, கப்பல் படை இருந்தது, நாவாய் படை என்று அதற்கு பெயர், இன்று உலகம் கொண்டாடும் நேவி எனும் வார்த்தை அதிலிருந்தே வந்தது
சோழ்நாட்டை காக்கவும், சைவ சமயத்தை பரப்பவும் பெரும் போர்களை அவன் தொடுத்தான். பாண்டிய நாடு முதல் சேரநாடு வரை அவன் கட்டுபாட்டில் இருந்தது
சேரநாட்டில் காந்தளூர்சாலை என்றொரு இடம் இருந்திருக்கின்றது, அங்கு பகைவரின் கப்பல்கள் எல்லாம் வந்திருக்கின்றன, அங்கு சென்று அந்த கடற்கலன்களை எல்லாம் அழித்திருக்கின்றான், இது அவனது மெய்கீர்த்தியில் இருக்கின்றது
பாண்டியரும் சிங்களரும் சேர்ந்து தொடுக்கும் போர் அபாயத்த்தில் இருந்து தப்பிக்க பெரும் கடற்படையுடன் சிங்கள நாட்டைதாக்கி இருக்கின்றான், அநுராதாபுரம் எனும் சிங்கள நகரம் அவனால் நொறுக்கபட்டிருக்கின்றது
வடக்கே கலிங்கம் வரை அவன் கைபற்றியிருக்கின்றான்.
ராஜராஜன் காலம் புத்த மதத்தை வீழ்த்தி சைவ மதம் செழித்த காலம், தான் கைபற்றிய நாடுகளில் எல்லாம் சைவ மதம் வளர்த்திருக்கின்றான்
இன்றைய இந்தோனேஷியா , மலேசியா , கம்போடியா நாடுகள் அடங்கிய அன்றைய ஸிரி விஜயா நாட்டின் மீதும் தன் மகன் தலமையில் பெரும் போர் புரிந்து வென்று வெற்றிகொடி நாட்டி, சைவ மதம் வளர்த்திருக்கின்றான்
அவனது கடற்கலன்களும், அவனின் போர்முறையும் அவனுக்கு அப்படி பெரும் வெற்றிகளை கொடுத்திருக்கின்றன‌
உலகில் தோல்விபெறாத அரசர்கள் வரிசையில் ராஜராஜனின் பெயரும் உண்டு, ஆனால் மேல்நாட்டு வரலாற்று ஆய்வாளர்கள் அலெக்ஸாண்டர், சீசர் என வேறு வரிசை வைத்திருப்பார்கள் வைக்கட்டும்.
சிவன் மேல் தீராதபற்றுகொண்ட ராசராசன், தன் வெற்றிக்கெல்லாம் சிவனே காரணமென்றும், சிவனுக்கு காலத்தால் அழியாத ஆலயம் கட்டவும்ட் திட்டமிட்டான்.
ஆலய பணிகளில் சிவனடியாரான கரூர் சித்தரைத்தான் முன்னிறுத்தினான், அதுதான் அவன் அடியார்களை அற்புதமாக மதித்த விதம்.
பல நாடுகளில் திரட்டபட்ட செல்வமும், பல மன்னர்கள் கொடுத்த வரியும், அவன் அடிமைகளாக பிடித்த எதிரி நாட்டு வீரர்களும் அதற்கு பயன்பட்டன‌
காலத்தை வென்று நிற்கும் கற்காவியமான பெரிய கோவில் அவனால்தான் கட்டபட்டது, முழுக்க முழுக்க கல்லான் ஆன கோவில் அது.
இத்தனை பெரிய கற்களை எப்படி செதுக்கினார்கள், எப்படி கொண்டு வந்தார்கள், எந்த ஆயுதத்தால் செதுக்கினார்கள், எத்தனை பேர் வேலை செய்தார்கள் என்பதை கண்டவரும், எழுதி வைத்தவரும் எவருமில்லை, எல்லாம் யூகமே
ஆனால் அப்படி அற்புதமாக, பெரும் அதிசயமாக கட்டியிருக்கின்றான் என்பது நம் கண்முன்னே நிற்கின்றது
கற்தூண்கள் உச்சியில் பாரம் இல்லையென்றால் விலகிவிடும் என்பதற்காக பெரும் கல்லை உச்சியில் நிறுத்தி , ஆலயத்தை நிலைபெற்றிருக்க செய்வதில் நிற்கினது அவனின் கட்டட கலை அறிவு
ஆலய பாதுகாப்பும் அதுதான், எவனாவது அழிக்க முயன்றால் ஒரு தூணை தொட்டாலும் முடிந்தது விஷயம்.
அந்த கோவிலில்தான் அவன் ஒரு மூலையில் தங்கி அவை நடத்தியிருக்கின்றான், அக்கோவிலை சுற்றி இருக்கும் அகழி முதலானவை அதனைத்தான் சொல்கின்றன, அவனுக்கு எல்லாமுமாக இருந்தது அந்த ஆலயம், அவ்வளவு நேசித்திருக்கின்றான்
தன்வாழ்வின் மிகபெரும் வெற்றியாக அவன் அந்த அலயத்தைத்தான் கருதியிருக்கின்றான், அக்காலங்கள் வித்தியாசமானவை
அதாவது அந்நியநாட்டு படைகள் முதலில் தாக்குவது அந்த ஆலயத்தைத்தான், காரணம் இந்திய முறைபடி அளவுக்கு அதிகமான செல்வம் அங்குதான் சேர்ந்திருக்கும்
அதனை எண்ணித்தான், தன் காலத்திற்கு பின்பு என்றாவது எவனாவது அதனை அபகரிக்கும் எண்ணத்தில் வந்தால் அவன் அழிந்து போகவேண்டும் என்று சில வரங்களை அவன் ஆலயத்தில் நிறுத்தியதாக சொல்லபடுகின்றது
நம்பாதவர்கள் விட்டுவிடலாம், ஆனால் நானே அதிபதி என சொல்லி அங்கு சென்ற அரச பிரதிநிதிகள், ஏன் மக்களாட்சி பிரதிநிதிகள் , நாத்திகர்கள் எல்லாம் கடும் அனுபவத்தில் அதன் பின் உணர்ந்திருக்கின்றார்கள்
அப்படி தன் மூச்சே அந்த ஆலயம் என வாழ்ந்திருக்கின்றான் ராச ராசன்
அக்கோவில் சென்டிமென்ட் பிற்காலமும் தொடர்ந்திருக்கின்றது, நாயக்க மன்னர்கள் ஆட்சியிலும், மாராட்டியர் ஆட்சியிலும் ஆட்சியாளர்கள் அதனை ஒதுக்கியே வைத்திருக்கின்றார்கள்
எல்லா கோவிலிலும் உருண்டு புரண்ட நாயக்கர்கள் தஞ்சை ஆலயத்தில் ஒரு வகையான விலகலை கடைபிடித்திருக்கின்றார்கள்
பின் வவ்வால்கள் கூடாரமாக ஆகிய ஆலய பகுதிகளில் சில வாவ்வால் கழிவுகளால் ஆன சுவர்களால் பிரிக்கபட்டன, ஆம் வாவ்வால் கழிவு சுவராகும் அளவிற்கு கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார்கள்.
வெள்ளையன் ஆட்சியில் இந்நாட்டிற்கு வந்த ஐரோப்பியன் ஒருவந்தான் உள்ளே புகுந்து தேடினான், அந்த வவ்வால் உருவாக்க்கிய சுவரை எல்லாம் இடித்து உள்சென்றான், பல கல்வெட்டுக்களை படித்தான்
அதில்தான் இக்கோவிலை கட்டியது ராஜராஜன் என்றிருந்தது, அதில் இருந்துதான் தமிழகம் அக்கோவிலை கட்டியது அவன் என நம்புகின்றது, அவன் ஆலய கல்வெட்டுகளே அவன் வரலாற்றினை சொன்னது.
அதுவும் இல்லையென்றால் அது ஏலியன்கள் கட்டிய ஆலயமாக மாறியிருக்கும்
அவன் மன்னர்களுக்கு எல்லாம் மன்னராக இருந்ததால் அவன் ராஜ ராஜன் என அழைக்கபட்டான், மற்றபடி அவன் இயற்பெயர் என்பது மிக சரியாக தெரியவில்லை.
(ராஜராஜன் வரலாறே இப்படி சிரமபட்டு வந்த நிலையில்தான் சிலர் அவன் எங்கள் சாதி எனவும் சொல்கின்றார்கள், அதனை விட அபத்தம் இருக்க முடியாது)
ஒரு விஷயம் உறுதியாக சொல்லலாம், தமிழர்களின் தனிபெரும் அரசன் ராஜராஜன், தமிழர்களின் தனிபெரும் அடையாளம் அந்த கோவில்
எகிப்தியருக்கு பிரமிடு போல, யூதர்களுக்கு சாலமோனின் ஆலயம் போல, தமிழரின் பெருமையினை சொல்வது அக்கோவில்
தமிழக அரசின் சின்னமாக நிச்சயம் அதுதான் அறிவிக்கபட்டிருக்க வேண்டும், ஆனால் பிற்காலங்களில் மாறிற்று. அதற்கு ஆயிரம் காரணங்கள்
தமிழகம் கண்ட அந்த தனிபெரும் அரசனுக்காக கலைஞர் கருணாநிதி ஆலயத்தில் சிலை நிறுவ விரும்பினார். கலைஞர் எது செய்தாலும் எதிர்ப்பது டெல்லியின் கொள்கை என்பதால் , அது தொல்பொருள் துறையின் கட்டுபாடு என சொல்லி மறுக்கபட்டது
அதனால் ஆலயத்தின் வெளியே அவன் சிலையினை நிறுவினார் கலைஞர்
தான் பெற்ற முடிகளை விட, தான் பெற்ற செல்வங்களை விட, தான் பெற்ற அரசுகளை விட தன்னால் கட்டப்ட்ட ஆலயமே சிறந்தது என உலகிற்கு தன் சிவபக்தியினை விட்டு சென்ற ராஜராஜன் அந்த சிலை வடிவில் அந்த ஆலயத்தை அனுதினமும் வணங்கிகொண்டே இருக்கின்றான்
ஐப்பசி மாதம், சதய நட்சத்திரத்தில் அவன் அவதரித்தான் என்கின்றது குறிப்பு
அப்படி இன்று அந்த தமிழகத்து அலெக்ஸாண்டருக்கு பிறந்தநாள்
சந்தேகமில்லை கிரேக்கருக்கு அலெக்ஸாண்டர், ரோமருக்கு ஜூலியஸ் சீசர், மங்கோலியருக்கு செங்கிஸ்கான், பிரான்சுக்கு நெப்போலியன் போல தமிழரின் தனிபெரும் அரசன் ராஜராஜ சோழன்
அவனை நினைக்கையில் அக்கால காவேரியும், செழித்த சோழநாடும், தென்கிழக்காசியா எங்கும் பறந்த சோழ புலிகொடியும் இன்னும் பிற காட்சிகளும் நினைவுக்கு வருகின்றன‌
அந்த மாபெரும் தமிழ் சாம்ராஜ்யத்தின் 
அடையாளமாக எஞ்சியிருப்பது இப்போது தஞ்சாவூர் ஆலயம் மட்டுமே.
வரலாற்றில் பெரும் அடையாளம் மிக்கவனும் , உலகின் மிக வலுவான கப்பல் படையினை முதலில் நிறுவியவனும், தென்கிழக்கு ஆசியாவினை ஆண்ட கடல்ராசனும் ஆன அந்த வீர தமிழனுக்கு பிறந்தநாள் மரியாதைகளை செலுத்துவதில் ஒவ்வொரு தமிழனும் பெருமையடைகின்றான் [ October 20, 2018 ]
Image may contain: one or more people and people standing