திராவிட புரட்சி

இந்துக்களின் திருமணத்தில் அய்யர் சொல்லும் மந்திரத்திற்கும் ஆயிரம் பொய்யான கருத்துக்களை பரப்புபவர்கள் திராவிட கோஷ்டிகள், முக ஸ்டாலினும் அதற்கு விதிவிலக்கு அல்ல‌

ஒரு திருமணத்தில் இந்துக்களின் திருமணமுறையினை கடுமையாக பழமையான புளித்துபோன பாணியில் விமர்சித்திருக்கின்றார்

“இங்கே அய்யர் இல்லை, யாகம் இல்லை, இந்த மணமக்கள் செத்துவிடுவார்களா? மணமகள் வாழாவெட்டி ஆகிவிடுவாரா? இவர்கள் அல்பாயிசில் போய்விடுவார்களா? இவர்கள் குழந்தைகள் உருப்படாமல் போகுமா?” என்றெல்லாம் அன்றே மேடையில் பேசியவர்கள் திராவிட கும்பல்

உண்மையில் எல்லா இந்து திருமணங்களும் அய்யர் தலமையில் நடப்பவை அல்ல, ஆனால் அக்னி சாட்சியாக நடப்பவை

பல இந்து திருமணங்கள் அய்யர் இல்லாமலே நடக்கும், சில இடங்களில் சிவாச்சாரியார்கள், சில இடங்களில் குடும்ப பெரியவர்கள், அய்யா வைகுண்டர் வழியில் அந்த மார்க்க பெரியாவ்ர்கள் என அய்யர் இல்லா திருமணம் ஏராளம் உண்டு

அய்யர் சொல்லும் மந்திரத்தில் கூட உண்மை பொருள் இவர்கள் சொல்வது போல் வராது. பெற்றோராலும் பஞ்சபூதத்தாலும் காக்கபடும் பெண், இனி இவனுக்கு சொந்தமாகின்றாள், இவனே இவளின் பாதுகாப்பு என்ற பொருளிலே வரும்

நெருப்பினை ஏன் தேர்ந்தெடுத்தார்கள்?

நெருப்பு உலகிற்கு ஆதாரமானது தூய்மையானது, கெட்டுபோன நீர் உண்டே தவிர, கெட்ட நெருப்பு என்பது இல்லை

அந்த அக்னி சாட்சியாக திருமணம் செய்வது தமிழர் மரபு மட்டுமல்ல, உலக மரபே ஏறக்குறைய அப்படித்தான்

கிறிஸ்தவ திருமணங்களில் கூட மெழுகுவர்த்தி நெருப்பு முன்பே மோதிரம் மாட்டபடும்

இந்திய கலாச்சாரத்திற்கு அது நெய் ஊற்றபட்ட யாகதீ ஆனது

திருமணம் முடிந்து நெருப்பினை மணமக்கள் சுற்றிவருவது எதற்கு? எதும் பழி வந்தால் நெருப்பே என்னை நிரூபித்து காட்டு என்பதற்கே

சீதை அப்படித்தான் தீயில் இறங்கினாள், இன்னமும் பக்தர்கள் அம்மனுக்கு தீக்குளி இறங்குவதும் அப்படியே

சாட்சிக்கு நெருப்பை அழைப்பது இங்குள்ள தர்மம்

அம்மி மிதிப்பது மன உறுதிக்கும், அருந்ததி பார்ப்பது வாழ்வியல் தத்துவத்திற்கும் உதாரணமானது

கெட்டிமேளம் என இந்து திருமணங்களில் ஒலிப்பதும், ஆலய மணி என கிறிஸ்தவ ஆலயங்களில் ஒலிப்பதும் ஒன்றே

எல்லோர் கவனமும் மணமக்கள் ஆசிமேல் திரும்பவேண்டும் என்ற எற்பாடு அது

இந்துக்களின் திருமணம் மிக பழமையானது அதன் ஆதாரங்கள் எல்லா மத திருமணங்களில் இன்றும் உண்டு

அதில் ஆயிரம் அர்த்தங்கள் உண்டு

முக ஸ்டாலினுக்கு அரசியல் செய்ய ஆயிரம் விஷயங்கள் இருக்கும்பொழுது இன்னமும் ஏன் பழைய திராவிட இம்சையிலே தொங்குகின்றார் என்பதுதான் தெரியவில்லை

மக்களை விட்டு திமுகவினை அந்நியபடுத்திகொண்டே இருக்கின்றார் என்பது மட்டும் புரிகின்றது

இந்துக்களின் திருமணத்தினை கண்டிப்பவர் கிறிஸ்தவ ஆலயங்களில் திருமண உரைக்கோ திருப்பலிக்கோ போதகர்கள் வாங்கும் பல ஆயிரம் பற்றி வாய்திறப்பதாக தெரியவில்லை

இதுதான் திராவிட புரட்சியோ என்னமோ..

11/02/2019