“ஓவியா வாழ்க..” என சொல்லாவிட்டால் வெளியேறு…

Image may contain: 1 person, smiling, sitting and indoorபாகம் பிரியாளும் ஓவியா ரசிகையாகிவிட்டார், அதுவும் அதி தீவிர ரசிகை, ஓவியா அழுததால் கிட்டதட்ட பத்ரகாளி கோலத்தில் இருக்கின்றார், அந்த காயதிரியோ ஜூலியோ இந்த வீட்டு பக்கம் வந்தால் கொலைதான், அதுவும் பலமுறை கொல்வார் போல‌..

சுப்பிரமணியபுரம் கிளைமாக்ஸ் காட்சி போல படுகொலை நடத்த கிளம்பிவிடுவாரோ என பேரச்சமாக இருக்கின்றது, அது கூட சிக்கல் இல்லை, அடுத்து வருவதுதான் சிக்கல்

நானும் ஓவியாவினை ஆதரித்து வாக்களிக்காவிட்டால் வீட்டில் சாப்பாடு கிடைக்காது என மிரட்டல்

ஒரு அதிதீவிர ஏக குஷ்பூ ரசிகன் ஓவியாவினை ஆதரிப்பது என்பது ஏற்றுகொள்ளமுடியாத விஷயம், அதற்கு பதிலாக சயனைடு கடிக்கலாம். ஓவியாவினை எல்லாம் நாம் ஆதரித்தால் குஷ்பூவிற்கு என்ன மரியாதை?? சங்கத்திற்கு என்ன மரியாதை? முடியாது என சொல்லியாயிற்று

ஆனாலும் இது அவர் இல்லாத பட்டியல் அதனால் நீ ஓவியாவினை ஆதரிக்கலாம் என்றெல்லாம் மூளையினை சலவை செய்யும் விஷயம் வேகமாக நடந்தது, முடியவில்லை

மூளை இல்லாத இவனை எப்படி மூளை சலவை செய்வது என பாகம்பிரியாளுக்கு தாமதமாக புரிந்திருக்கின்றது, அதனால் நீ குஷ்பூ ரசிகனாகவே இருந்து தொலை, ஆனால் ஓவியாவிற்கு வாக்களித்துவிடு என சாம, பேத தான, தண்ட முறையில் ஆதரவு கோருகின்றார்

எல்லா முறையும் தோல்வியுற்று இப்பொழுது தண்ட கட்டம் வந்திருக்கின்றது

“நீ ஓவியாவினை குஷ்பூவின் விசிறி என சொல்ல சொல், அதன் பின் எங்களுக்கு தயக்கம் இல்லை..” என சொன்னாலும் பிரச்சினை தீரவில்லை,

“ஓவியா வாழ்க..” என சொல்லாவிட்டால் வெளியேறு என மகாத்மா காந்தி பாணியில் மிரட்டல் வருகின்றது, அது விரைவில் ஹிட்லர் பாணியாக மாறும் போல் தெரிகின்றது

“நானும் கோடி பொருள் கொடுத்தாலும் கோமகளை மறவேன்…” என சொல்லிகொண்டேதான் இருக்கின்றேன்

விரைவில் தசவதாரம் கமல் போல என்னை தூக்கி கடலில் போடும் திட்டத்தில் பாகம்பிரியாள் இறங்கியிருப்பது போல் தெரிகின்றது,

இந்த ஓவியா இன்னும் எத்தனை குடும்பத்தில் குழப்பம் விளைவிக்க போகின்றாரோ தெரியவில்லை

 
 

அவானி மூவிஸின் இந்த “மீசையினை முறுக்கு” படம் வெற்றி பெற வாழ்த்துவோம்

Image may contain: 1 person, textஇது யார் நடித்த படம்? நடிகர் யார்? நடிகை யார்? இயக்குநர் யார்? என்ன கதை என்பதெல்லாம் தேவையே இல்லை

இதில் ஹிப்காப் தமிழாவோ அல்லது டண் டண் ஆப்ரிக்கனோ நடித்திருந்தாலும் பார்த்தே தீரவேண்டும், கதை யாருக்கு வேண்டும்? அது சிம்பு படத்து கதையோ அல்லது சிங்கி அடிக்கும் கதையோ பிரச்சினையே இல்லை

காரணம் இந்த படம் குஷ்பூவின் கம்பெனியால் தயாரிக்கபட்டிருக்கின்றது, அதனால் எப்படி இருந்தாலும் தலைவிக்காக இந்த படத்தினை பலமுறை பார்த்தே தீரவேண்டும் என சங்கம் முடிவு செய்திருக்கின்றது

தலைவி தயாரித்த படம், 2.30 மணிநேரம் வெற்றுதிரையாக‌ ஓடுகின்றது என்றாலும், ஒரு கல் நடித்திருக்கின்றது என்றாலும் தவமாக தியானம் ஏற்றுகொள்பவர்கள்த்தான் தலைவியின் தொண்டர்கள்

இப்படத்தை மாபெரும் வெற்றிபடமாக்கி தலைவிக்கு வெற்றியளிப்போம் என சங்கம்Babu Rao , Chandran Kannan தலையில் சூடமேற்றி சத்தியம் செய்கின்றது

அவனியில் எந்தபடமும் பெறாத வெற்றியினை அவானி மூவிஸின் இந்த “மீசையினை முறுக்கு” படம்    பெற வாழ்த்துவோம்

சங்கத்தோரே, தலைவி ஆணையிடுகின்றார், அலைகடலென திரள்வீர் தியேட்டருக்கு, அவானியின் குஷ்பூ யார் என அவனிக்கு காட்டும் கடப்பாடு நம் எல்லோருக்கும் உண்டு

 
 

உன்னத நடிகனின் நினைவு நாள்…

 Image may contain: 3 people, people smiling, close-up

முகத்தை காட்டி நடிக்க தெரியாத நடிகர்கள் மத்தியில் தன் நகத்தை கூட நடிக்க வைத்த உன்னத நடிகனின் நினைவு நாள்.

நாடகத்தமிழுக்கு சர்வதேச புகழ்பெற்றுகொடுத்த பெரும் கலைஞன் அவர். நவரசம் மட்டுமல்ல ஆய கலைகள் 64க்கும் உருவம் கொடுத்து கண்ணில் நிறுத்திய நடிகன் அவர். 64 கலைகளையும் முகத்திலே காட்டினார்.

அவரின் காந்த பார்வையும், புன்னகைத்த வசீகர முகமும் எத்தனை எத்தனை மனிதர்களை உணர்வோடு நம் கண்முன் காட்டிற்று, தெய்வத்தின் கருணையினையும் அம்முகமே அப்பழுக்கற்று காட்டியது.

எந்த மன்னனும் கொடுக்காத கம்பீரத்தையும் அவன் கொடுத்தான், எந்த மத துறவியும் கொடுக்காத சாந்தமான பாத்திரத்திலும் அவன் ஜொலித்தான், எல்லா மத துறவியாக அப்படியே பொருந்தினான்

கொடும் தீவிரவாதி முதல் கடமை தவறா காவல்துறை அதிகாரி வேடம் என அசத்தினான். வழக்கறிஞர் பாத்திரத்திற்கு இன்றுவரை பாரிஸ்டர் ரஜினிகாந்த் ஒரு கனவு

அந்த குட்டியானை நடையழகும், சிங்கத்தின் கர்ஜனையுமாய், புலியின் கம்பீரமுமாய் அவர் வலம் வந்த காலங்கள் தமிழ்சினிமாவின் பொற்காலங்கள்

அவராலே தான் சிவபெருமான், கர்ணன்,கட்டபொம்மன் முதல் , முதல் மரியாதை கிராமத்து வெகுளி மனிதர் வரை கண்முன் நிறுத்தபட்டது.

அரசனாக அவர் காட்டிய கம்பீரத்தை அலெக்ஸாண்டராலும் காட்ட முடியாது, மகாகவி காளிதாஸில் அவன் ஆடுமேய்த்த அழகு, ஒரு கோனார் செய்யமுடியாதது, மக்களை பெற்ற மகராசியில் செய்யும் உழவு விவசாயி செய்யமுடியாதது, பிராமண வேடத்தில் அவர் சந்தியா வந்தனம் செய்யும் அழகில் அந்தணர்கள் அவுட்.

இவை எல்லாம் சிறுதுளிதான்.

பாகபிரிவினை படம் வந்தபின் ஒருவிழாவில் பார்த்துவிட்டு வெள்ளையன் சொன்னான், கதைக்கேற்ப ஒரு மாற்றுதிறணாளியினை டைரக்டர் நடிக்க வைத்திருக்கின்றார், அரங்கம் கை தட்டலில் அதிர்ந்தது.

இந்திய விடுதலை போராட்ட தலைவர்களாக வஉசி பாத்திரத்தினை காணும்பொழுது நாட்டுபற்று மேலோங்கும், அந்த வரலாறு கண்முன் வரும்.

சிந்துநதியின் மிசை நிலவினிலே என அந்த பாரதிபாடலில் வரும் சிவாஜிகணேசனில் மொத்த இந்தியாவையும் காணலாம், இன்றும் பாகிஸ்தானின் சிந்துநதியினை காணும்பொழுதெல்லாம் பாரதியும் கூடவே சிவாஜியும் நினைவுக்கு வராதவன் இந்திய தமிழனாக இருக்க முடியாது.

கொஞ்சம் தன் இமேஜினை காப்பாற்றிகொள்ளும் நடிகனாக, தந்திர நடிகனாக இருந்திருந்தால் இன்று ஆட்சிகட்டில் அவனுக்கு கீழேதான் இருந்திருக்கும்.

ஆனால் நடிப்பிற்கு துரோகம் செய்ய அவன் விரும்பவில்லை, குடிகாரன் முதல் சிகரெட் வரை கையிலேந்தி நடித்தான், பெண் பித்தனாக , கோமாளியாக , இரக்கமில்லாதவானக நடிக்க அவனுக்கு தயக்கமே இல்லை.

காரணம் அது அவன் வணங்கிய தொழில். 

அதுதான் அவனின் திரை பலம் மற்றும் ஒரே அரசியல் பலவீனம்.

திரையினை நிஜமென நம்பிய தமிழகத்தின் சாபக்கேடுதான் அந்த வளர்ப்புமகன் திருமணத்தில் ஓரமாக அவர் நின்றதும் அப்படியே இறந்தும் போனதும், இது தமிழக சிக்கல் விடுங்கள்.

ஆசிய ஆப்ரிக்க படவிழாவில் அவன் கொண்டாடபட்டான், அமெரிக்காவில் ஒருநாள் மேயராக அமரவைக்கபட்டான், சோவியத் யூனியன் அவனை உலகின் மிகசிறந்த கலைஞரில் ஒருவன் என்று கைதட்டி சொன்னது.

அன்றைய உலகின் நடிப்பு சக்கரவர்த்தி மார்லன் பிராண்டோ வாய்விட்டு சொன்னான் “என்னை போல அவன் எளிதாக நடித்துவிடுவானே அன்றி, அவனை போல நடிக்க என்னால் ஒருபோதும் நடிகக்க முடியாது”

அப்படிபட்ட கலைஞனுக்கு மத்திய அரசு பெரும் விருதுகள் ஒன்றையும் அளிக்கவில்லை, ரிக்ஷாகாரன் படத்தில் எம்ஜிஆரின் சிறப்புமிக்க நடிப்பிற்காக ஒரு விருது வழங்கியது, அந்த படத்தினை எத்தனை முறை பார்த்தாலும் ஏன் கொடுத்தார்கள் என இன்றுவரை விளங்காது

உதட்டை சரித்து கொண்டு ஆஆஆ.. என இறுதிவரை முகத்தை மட்டும் காட்டினார் எம்ஜிஆர், மஞ்சுளா வரும் காட்சியில் மட்டும் முகம் மாறிற்று, மற்றபடி அதே ஆஆஆ.. அந்த விருது வழங்கிய அதிகாரிகள் ரசனை அப்படி இருந்திருக்கின்றது

சிவாஜிகணேசனுக்கு அப்படியான விருதுகள் எல்லாம் இல்லை, பின்னாளில் பால்கே விருது வழங்கினார்கள், அது எப்பொழுது பிரான்ஸ் அரசு செவாலியே விருது வழங்கிய பின் பிரான்ஸ் தூதரகம் சிரிக்கும் முன் வழங்கினார்கள்,

இது அரசியல், விட்டுவிடுங்கள்

பராசக்தி முதல் முதல்மரியாதை வரை அவர் நடித்த படங்கள் காலத்தால் அழியாதவை. எத்தனை எத்தனை வேடங்கள் எத்தனை அற்புதமான நடிப்பு

ஸ்டைல் எனப்பதும் ஒருவித தனித்துவத்திலும் அவர்தான் முன்னோடி, கவனித்துபார்த்தால் ரஜினி எல்லாம் பிச்சை எடுக்கவேண்டும். ஆலயமணி, திருவிளையாடல், மகாகவி காளிதாஸ் போன்ற படங்களில் நடையிலே பல நடை காட்டியவன்

அட நடை என்ன நடை சிகரெட் குடிப்பதிலே பல ஸ்டைல் காட்டினான், அதுதான் கிளாசிக். அந்த பலவகை வசன உச்சரிப்பிற்கும் அவர்தான் இலக்கணம்.

மிகசிறந்த வில்லன் நடிகரும் கூட, அந்நநாள் எனும் படத்தினை விடுங்கள், பாசமலரிலும், ஆலயமணியிலும் வந்துபோகும் சிலநொடி வில்லத்தனமான முகம் நம்பியார் அப்பட்டமாக தோற்குமிடம்.

இன்று என்னமோ நடிகர் நடிகைகளுக்குள் கெமிஸ்ட்ரி, பிசிக்ஸ் பயாலஜி என என்னவெல்லாமோ சொல்கின்றார்கள், ஆனால் மிக்சிறந்த கெமிஸ்ட்ரி இருந்தது என்றால் அது சிவாஜிக்கும் பத்மினிக்குமான கெமிஸ்ட்ரி. ஹிஸ்டாரிக்கல் கெமிஸ்ட்ரி

இந்த இருவருமே இன்று இல்லை.

மகா திறமையான நடிகன். ஆனால் ஒரு வட்டத்திற்குள் அடைத்துகொண்டது தமிழ் திரையுலகம். அதுதான் இங்குள்ள பெரும் சிக்கல். ரஜினி தவிப்பதும், கமல் கை பிசைவதும் அப்படித்தான். அதாவது உனக்கு இதுதான் பாதை, இப்படித்தான் நீ நடிக்கவேண்டும் இல்லாவிட்டால் அவ்வளவுதான் எனும் மாதிரியான நிலை

அப்படித்தான் உருக்கமான பாத்திரங்களில் நடித்த சிவாஜி பின்னாளில் சிக்கிகொண்டார். இதனை கேரள இயக்குநர் ஒருவன் சொன்னான்

“சிவாஜி எனும் யானையினை பட்டினி போட்டு கொன்ற பாவம் ஒருநாளும் தமிழக திரையுலகினை சும்மா விடாது”

இதனைத்தான் அவன் இறந்த அன்று உலகமே சொல்லிற்று

ஆயிரம் கவிஞர்கள் தமிழில் இருந்தாலும் கம்பனின் இடம் என்றுமே நம்பர் 1. அவனின் வர்ணனைகள் அப்படியானவை, தமிழுக்கோர் அடையாளம் அது, அழகு அது.

அதனால்தான் இன்றுள்ள மூளை கிறுக்குள்ள முன்,பின்,இடை,கடை நவீனத்துவ‌ கவிஞர்களை எல்லாம் நம்மால் கவிஞர்கள் என சொல்லவே முடிவதில்லை, மார்டர் ஆர்ட் எனப்படும் பயித்தியகார ஓவியங்களுக்கும் ரவிவர்மனின், மைக்கேல் ஏஞ்சலோவின் ஓவியங்களுக்கும் வித்தியாசமில்லையா?

கம்பனின் இடம் அப்படியானது

அப்படி தமிழ்கலைத்தாயின் ஒரே மகன் சிவாஜி கணேசன். அவரின் நினைவுநாளில் அவருக்கு நினைவாஞ்சலி செலுத்தலாம்

அவர் இறந்த அன்று , இறுதி ஊர்வலத்தில் மரத்தில் இருந்து ஒருவன் கத்தினான், “ஒரே ஒரு நடிகன் இருந்தான் அவனும் செத்துவிட்டானே…” என ஒரு திசைபார்க்க கத்திகொண்டிருந்தான்

அவன் கத்திய திசையில் இன்றைய இம்சைகள் எல்லாம் நடந்துகொண்டிருந்தன.

தமிழ் உள்ள காலம் வரை கம்பன் நிற்பது போல, தமிழ்திரை உள்ள காலம் வரை சிவாஜி கணேசன் நிலைத்து நிற்பார் தலைமுறைகளை தாண்டி.

அவரின் கடைசி முத்திரையான தேவர் மகனில் கமலஹாசனின் சட்டையினை இழுத்து கேட்பார் “போறியளா…என் மகன என்கூடவே வச்சிபாக்கணும்கிற ஆச எனக்கு மட்டும் இருக்காதா??…”

அந்த உருக்கத்தில் தந்தை பாசம் அப்படி வழியும்.

அக்காட்சியினை காணும் வெளிநாட்டு வாசி எவனும் தந்தையினை நினைத்து அழாமல் இருக்கமுடியாது,

அதுதான் சிவாஜி நடிப்பின் வெற்றி.

அந்த மாபெரும் கலைஞனுக்கு அவன் நினைவுநாளில் அவனுக்கு கலை அஞ்சலி, கண்ணீர் அஞ்சலி.

 
 குறிப்பு :  இது மீள்பதிவுதான் ஆனாலும் நம் பதிவே .

பிக் பாஸ் : ஓவியாவிற்கு இவ்வளவு ஆதரவா?

 

Image may contain: 1 person, smiling, standingஓவியாவிற்கு இவ்வளவு ஆதரவு பெருகும் என எதிர்பார்க்கவில்லை,

மதுரைக்காரரும், மலேசியாவின் கல்லூரி பேராசிரியரும், பொருளாதார மேதையுமான நண்பர் Omm Prakash ஓவியாவிற்கு ஆதரவு என தெரிவிக்கும் பொழுதுதான் நிலமையின் வீரியம் புரிகின்றது

பெரும் முனிவர்களை கூட தன் ஆதரவு பக்கம் இழுக்கின்றார் ஓவியா என்றால் இது நோக்கவேண்டிய விஷயம்

நண்பர் இன்னும் திருமணம் ஆகாதவர், “தவ வாழ்வு” வாழ்பவர், நைஷ்டிக பிரம்மச்சாரி. ஆண்டவன் கட்டளை சிவாஜி போல பேராசிரியராக கடமையே வெற்றிக்கு வழி என வாழ்பவர்

உலகின் எல்லா நாட்டு பெண்களுடன் பழகும் வாய்ப்பு கிடைத்தும் அவரை எந்த பெண்ணாலும் அடித்து வீழ்த்த முடியவில்லை, அவரின் கட்டுப்பாடான வாழ்வு அப்படி.

ஆசிய, ஆப்ரிக்க, அரேபிய அழகிகளை எல்லாம் சிரித்துகொண்டே கடந்து சென்ற கட்டுறுதி மிக்க நண்பர் அவர்.

அவர் எந்த பெண்ணாவது நின்றால் கூட சிசிடிவி கண்ட சசிகலா போல ஓடிவிடுவார், அல்லது அடித்து விரட்டிவிடுவார்

வாய்ப்பே இல்லாமல் ராமனாக இருப்பது சாதனை அல்ல, அனுதினமும் ஆயிரம் வாய்ப்புகள் இருந்தும் அப்படி இருப்பதுதான் சாதனை.

நண்பர் அப்படிபட்ட‌ அப்படி சாதனையாளர்.

எத்தனையொ சினிமா பார்த்தாலும் மனிதர் எந்த நடிகையினையும் அழகு என்று சொன்னதே இல்லை, சின்னதம்பி படம் போட்டு காட்டியபின்னும் மனிதர் அசரவில்லை என்றால் இது மானிட ஜென்மமே அல்ல, இவர் மனம் மண்ணால் செய்யபட்டது என என்றோ முடிவு செய்தாயிற்று

அப்படிபட்ட மாமனிதர், இரும்பு மனத்தோன், “தவ வாழ்வு” வாழ்பவர் ஓவியாவிற்கு ஆதரவாக கொடிபிடிக்க கிளம்புகின்றார் என்றால் இனி ஓவியாவிற்கு பிக்பாஸ், பிக்லேடி பட்டம் கொடுத்து இப்பொழுதே அனுப்பலாம்

அந்த மேனகை இன்னும் எத்தனை விசுவாமித்திரர்களை வீழ்த்தபோகின்றதோ தெரியவில்லை, அதற்குள் அந்த பிக்பாஸ் எனும் நெற்றிகண்ணன் தன் ஆட்டத்தை முடித்துகொள்வது நல்லது.

( நண்பர் Sadhu Sadhath இதெற்கெல்லாம் அச்சபடலாமா? இதோ கலஹாசனை கண்டு அதிமுக அஞ்சுகின்றது, திமுக அஞ்சுமா? நடக்காது

தன் பலம் அறிந்த யாரும் இன்னொருவரை பார்த்து அஞ்சமாட்டார்கள்

அதுவும் குஷ்பூ கோயில் கோபுரம், ஓவியா காற்றில் உயர பறக்கும் பட்டம், அது எப்படி கோபுரத்திற்கு ஈடாகும்?, ஆகவே ஆகாது.)


பிக்பாஸில் ஏதோ வைரத்தை காணவில்லையாம், அவர்கள் தேட தேட மொத்த தமிழகமும் அவர்களோடு சேர்ந்து தெடுகின்றது

அங்கே சிறைக்குள் சசிகலா இல்லை என ரூபா என்றொரு அதிகாரி தனியாக தேடிகொண்டிருந்தார், இங்கு ஒரு சத்தமும் இல்லை


 

அசரீரியாக பேசும் பிக்பாஸ், என்னவெல்லாமோ பூதம் போல மறைமுகமாக வீட்டில் கொண்டு வைக்கும் பிக்பாஸ், ஜூலிக்கு வயிற்றுவலி என்றால் மட்டும் கண்ணை மூடி கொள்வாராம்

நர்ஸ் என சொல்லிகொள்ளும் ஜூலிக்கும் என்ன செய்ய என தெரியாதாம், (சவத்து மூதி போலி நர்சாக இருக்குமோ?)

சிநேகன் உடனே சென்று அவர் வாந்தியினை தாங்க கைநீட்டுவாராம், நாம் இதனை நம்ப வேண்டுமாம்.

டேய் சுடுகாட்டு மூஞ்சி, இந்த நடிப்பை எல்லாம் பாக்யராஜ் டார்லிங் டார்லிங் படத்திலே நடித்துவிட்டார், புதிதாக எதாவது முயற்சி செய்

ஏம்பா பிக்பாஸ், ஒரு ஆம்புலன்ஸ் அனுப்பி அந்த ஜூலியினை அவர் பணியாற்றிய பழைய மருத்துவ மனைக்கே அனுப்பிவைக்க கூடாதா?

முதலில் உன் முகத்தை காட்டு மிஸ்டர் பிக்பாஸ், அதில் ஏகபட்ட குத்துக்கள் குத்த வேண்டியிருக்கின்றது.


 
 
 
 

நாங்கள் கமலுக்கு உறுதுணையாக இருப்போம் : விஷால்

கமலஹாசன் சலசலப்பு ரஜினியின் அரசியல் வருகைக்கு வைக்கபடும் மிரட்டல் அல்லது செக் என பலர் சொல்லிகொண்டிருக்கின்றார்கள்

உண்மையில் தமிழக அரசும் கமலஹாசனும் கட்டிபுரண்டு சண்டையிடுவதில் ரஜினிக்குத்தான் நிம்மதி, எப்படியோ தன்னை யாரும் கண்டுகொள்ளவில்லை என்பதில் அவருக்கு மகா மகிழ்ச்சி

ரஜினியினை உணர்ந்த யாரும் எளிதாக யூகிக்கும் விஷயம் அது, தனக்கு வந்தது கமலைபோட்டு தாக்குகின்றது என்பதில் அவருக்கே ஆறுதல்.

கமலஹாசனை சிலர் ஆட்டுவிக்கின்றனர் என பலர் சொல்கின்றனர், இருக்கலாமோ இல்லையோ தெரியாது.

ஆனால் எம்மிடம் கேட்டால் கமலை யாரோ தூண்டிவிடுகின்றார்கள் என்றால் அது சாட்சாத் அந்த ரஜினியாகவே இருக்கலாம்

ஏன்?

ஒருவேளை கமல் அரசியலுக்கு வந்தால், “ஹஹஹஹா..” என வந்து “இப்போதைக்கு கமலுக்கு ஆதரவு, எனக்கான நேரம் வரும் பொழுது நிச்சயம் அரசியலுக்கு வருவேன்” என சொல்லிவிட்டு செல்ல அவருக்குத்தான் மிக வசதி


நாங்கள் கமலுக்கு உறுதுணையாக இருப்போம் : விஷால்

விஷாலேதான், ஆம் அவரேதான் இப்படி எல்லாம் பேசுகின்றார், சில ஆச்சரியங்களும் நடக்கத்தான் செய்கின்றன.

இப்படி கமலோடு நிலைத்து நின்றால் வாழ்த்துக்கள்.


ஸ்டாலின், ஓபிஎஸ், கமல் 3 பேரும் சேர்ந்து கூட்டு வைத்தது போல் தோன்றுகிறது: ஜெயக்குமார்

எங்களுக்கும் சசிகலா, சித்தராமையா, திருநாவுக்கரசர் எடப்பாடி, மோடிராகுல், சு.சாமி, கவர்ணர், கருணாஸ் என எல்லோரும் கூட்டு வைத்தது போலத்தான் தோன்றுகின்றது

அந்த கூட்டில் இவரும் உண்டு என ஆறாவது அறிவும் சொல்கின்றது


Image may contain: 1 person, textராமசந்திரனும், வி.என் ஜாணகியும், ஜெயலலிதாவும் ஆக்ஸ்போர்டிலும், கேம்பிரிட்ஜ்லிலும் பட்டம் பெற்றவர்களா?

இல்லை இவர்தான் பொருளாதார மேதையா?

கலைஞருக்கு பின் அரசியல் தெரிந்தவர் யார் முதல்வரானார் அய்யா?

அரசியல் தெரியாதவன் கமலஹாசன் என்றால், இவர் செய்த புளிவியாபாராத்தின் பெயர் என்ன?


 

குஷ்பூ குறுகுறு விழி எங்கே ….

Image may contain: 1 person, smiling, close-upஎலேய் திருட்டுமுழி கஞ்சா கண்ணா, செத்த மூஞ்சி சிநேகரே என்ன சொன்னீர்? அந்த ஓட்டைபல்லும், ஒட்டுபல்லுமாக இருக்கும் “சூர்ப்பநகை” சூலி அடுத்த குஷ்பூவா?

சித்தன்னவாசல் ஓவியம் போலிருக்கும் குஷ்பூவிற்கு, மாலிக்காபூரால் உடைக்கபட்ட சிலையின் முகம் போலிருக்கும் ஜூலி சமமா?? இதனை சும்மா விட மாட்டோம்

குஷ்பூ குறுகுறு விழி எங்கே, 
இந்த ஜூலியின் திருட்டு முழி எங்கே?

குஷ்பூ மயில் ஜூலி மந்தி, 
குஷ்பூ குளிர்நிலவு ஜூலி கொள்ளிகட்டை

கருவாடு மீனாகாது, ராமராஜன் ரஜினி ஆகமாட்டார், புரியாத மொழியில் கவிதை எழுதும் மனுஷபுத்திரன் எல்லாம் கமலஹாசன் ஆக முடியாது, ரோபோ சங்கர் கலாபவன் மணியாக முடியாது

Image may contain: 1 person, smiling, hat and close-up

 

கருவாடு மீன் ஆனாலும் ஜூலி குஷ்பூ ஆக முடியாது

ஜூலி எனும் காளான் எல்லாம் இந்த வைரச்சிலை முன் எப்படி வரமுடியும்?

இன்னொரு முறை சிநேகன் இப்படி சொன்னால், பிக்பாஸ் வீட்டை உடைத்து, அந்த நீண்ட முடியினை பிடித்து தூக்கி எறிவோம் என எச்சரிக்கின்றோம்

எங்கே துணிவிருந்தால் ஆயிரத்தில் ஒருவன் ஜெயா போலவோ, 1990களின் சசிகலா போலவோ ஜூலி இருக்கின்றார் என சொல்லுங்கள் பார்ப்போம்?

முடியாதல்லவா? அந்த சிநேகனை வன்மையாக கண்டிக்கின்றோம்

இதனை எல்லாம் பொறுக்க முடியாது, இன்னொரு முறை அந்த பிக்பாஸில் இருக்கும் இம்சைகளில் யாரையாவது எவனாவது அடுத்த குஷ்பூ என சொல்வாரானால் சங்கம் சும்மா இருக்காது

அது பிக்பாஸ் இம்சைகள், பிக்பாஸ், கமல், ஏன் அந்த ஆண்டவனே சொன்னாலும் விடமாட்டோம்.

எலேய் சுடுகாட்டு மூஞ்சி, இந்த இரு படங்களையும் பார்த்துவிட்டு இனி பேசு..

 
 

டிவிட்டரில் இருந்து விலகினார் குஷ்பூ

Image may contain: 1 person, smiling, close-up

டிவிட்டரில் இருந்து விலகினார் குஷ்பூ

என்ன சொல்லிவிட்டு விடைபெற்றிருக்கின்றார் என்றால் , டிவிட்டர் அவரின் நேரத்தை விழுங்குகின்றதாம், அவர் வாசிப்பில் கவனம் செலுத்தபோகின்றாராம், இது தற்காலிகம் என சொல்லியிருக்கின்றார்

அவர் இப்படி சொல்லியிருந்தாலும் கடந்த இரு நாட்களாக சுருதிஹாசனை போட்டு காய்ச்சிகொண்டிருந்தார், சங்கமித்ரா படத்தில் இருந்து விலகிய காரணத்தை தவறாக ஸ்ருதி சொல்லிகொண்டிருக்க, குஷ்பூவிற்கு கோபம் வந்துவிட்டது, விளாசிவிட்டார்

ஸ்ருதியும் என்னமோ சொல்லிகொண்டிருக்கின்றார்

பதிலுக்கு பதில் பேசவேண்டியிருக்கும் என்பதால் கொஞ்ச நாளைக்கு அமைதியாக இருக்க வெளியேறியிருக்கலாம் என ரசிக பெருமக்கள் யூகிக்கின்றோம்

அவர் ஏன் விலக வேண்டும் என்பதுதான் கேள்வி?,

கண்மணிகளே இந்த ஸ்ருதியினை கவனியுங்கள் என கண்ணசைவினை காட்டியிருந்தால் கட்டப்பா போல குஷ்பூ ரசிகபடை பாய்ந்திருக்கும், ஸ்ருதி பசிபிக் கடலுக்கு அப்பால் எறியபட்டிருப்பார்

குஷ்பூ பெருந்தன்மையாக அமைதியாவதால் பெரும் கலவரம் தடுக்கபட்டிருக்கின்றது, ஏற்கனவே பெரும் சிக்கலில் இருக்கும் கமலஹாசனுக்கு இன்னும் பிரச்சினையினை கொடுக்க குஷ்பூ விரும்பவில்லை என்பது தெரிகின்றது

மேன்மக்கள் என்றும் மேன்மக்கள் அல்லவா? குஷ்பூ அப்படித்தான்.

டிவிட்டரும் அவர் நேரத்தை விழுங்கலாம், வெட்டியாக அதில் சும்மா ஏதாவது சொல்லிகொண்டிருக்க அவர் என்ன மோடியா அல்லது டிரம்பா?

இனி நிறைய வாசிக்க போகின்றாராம் தலைவி, நல்லது அப்படியே அந்தணன் அவர்களின் இணைய பத்திரிகையினையும் வாசிக்கட்டும்.

எப்பொழுதாவது தேர் ஊர்வலம் வந்தால்தான் திருவிழா, குஷ்பூ அப்படி வருடத்திற்கு ஒருமுறை டிவிட்டர் வந்தால் போதாதா?

அவருக்கான ரசிகர் கூட்டம் எங்கு சென்றுவிட போகின்றது? அந்த பெருங்கூட்டம் அவருக்காக‌ காத்துகொண்டே தான் இருக்கும்.

நல்ல வேளையாக தமிழிசையுடன் டிவிட்டர் யுத்தம் நடக்கும் பொழுது குஷ்பூ இந்த முடிவினை எடுக்க முடியவிலை, அப்படி எடுத்திருந்தால் தமிழிசையின் தகிட தகிடவினை யாரால் தாங்கியிருக்க முடியும்?

அப்படி ஒரு வாய்ப்பினை கொடுக்காமல் இப்பொழுது தற்காலிகமாக விலகியிருப்பது நல்லது.

இனி டிவிட்டருக்குத்தான் சோதனையான காலம், பல லட்சம் பேர் குஷ்பூ இல்லாத டிவிட்டரை விட்டு வெளியேறுவார்கள்