மனித தன்மை இல்லாதது

ஒரு கிறிஸ்தவன் இறந்துவிட்டார் , அவர் உடலை இந்துமதபடி அடக்கம் செய்ய இந்துத்வா கும்பல்கள் மல்லுகட்டின என்றொரு வீடியோ காணமுடிந்தது

இப்பொழுது வரும் வீடியோக்களில் அங்கிள் சைமனின் வீடியோ தவிர ஏதும் நம்ப கூடியவை அல்ல, அங்கிள் ஒருவரை முழுக்க நம்பலாம்

இந்த வீடியோ சம்பவத்தின் மூல சிக்கல் எதுவென தெரியவில்லை, ஒருவேளை அவர் மதமாற்றம் செய்யபட்டிருக்கலாம்

சில நாடுகளில் “நீ எந்த மதத்தையும் பின்பற்று ஆனால் உன் அடையாளம் இந்தமதம்தான் , அரசு ஆவணபடி அதுதான். நீ எந்த மதத்தில் செத்தாலும் ஆவணம் சொல்லும் மதம்தான் உனது, அதுபடிதான் இறுதிகாரியம்” எனும் மவுன சட்டங்கள் உண்டு

இங்கு அப்படியாக ஊர்கட்டுபாடு என ஏதோ இருந்திருக்கலாம், அது சர்ச்சையாகியிருக்கலாம்

என்ன இருந்தாலும் இறந்தவர் உடலில் மதபேதம் பார்ப்பது சரியல்ல‌

“ஒருவன் இறந்தால் அந்த இடத்தில் நீ ஞானம்பெறும் பொருட்டு அவன் பகைவனாக இருந்தாலும் போ, இறந்தவன்னை தகனமோ அடக்கமோ செய்வது வாழும் மனிதனின் கடமை” என்றுதான் எல்லா மதமும் சொல்ல்கின்றன,

இந்த சர்ச்சை நிச்சயம் மனித தன்மை இல்லாதது

ஆயினும் சாதி அடிப்படையில் பிரிந்து இந்த சாதி கிறிஸ்தவன் உடலை அந்த‌ சாதி கிறிஸ்தவர்களின் கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்ய விடமாட்டோம் எனும் கொடூர கிறிஸ்தவர்கள் செய்யும் காரியத்தை விட இது ஒன்றும் கொடியதல்ல‌

சாதி கொடுமையினை பின்பற்றும் கிறிஸ்தவர்கள் இதை கண்டிக்க தகுதியே இல்லாதவர்கள்

இது கண்டிக்கதக்கது

ஏர் இந்தியா நிறுவனத்தில் விமான டிக்கெட்டுகளில் பிரதமர் மோடியின் படம் இடம் பெற்று இருந்தது, தேர்தல் வீதி மீறல் என்பதால் டிக்கெட்டுகளை உடனடியாக திரும்ப பெறுகிறது

இது கண்டிக்கதக்கது, மோடி நாட்டின் பிரதமர் மன்னர் அல்ல‌

ஏதோ இது மன்னராட்சி போலவும் , ஏர் இந்தியா அவரின் குடும்ப சொத்து போலவும் டிக்கெட்டில் எல்லாம் அவர் படம் அச்சிடபட்டிருந்தது சரியல்ல‌

அதை நீக்கிவிட்டார்கள்

தேர்தல் ஆணையம் என ஒன்று இல்லாவிட்டால் ராணுவத்தின் ஏகே 47 முதல் சுகோய் விமானம் வரை இவர் படம் ஒட்டியிருப்பார்கள்

இம்மாதிரியான ஓவர் விளம்பரங்களும் அதை மோடி கண்டிக்காததும் அவர்களுக்கு பெரும் பின்னடைவே..

நாஸ்டர்டாமஸ் இந்தியா பற்றி சொன்னது

“உலகின் முடிவில் கிழக்கிலிருந்து பெரும் ராணுவம் ஒன்று வரும், சில நதிகள் காய்ந்துவிடும் அது வழியாக அந்த மாபெரும் சேனை வரும்

அந்த வலிமையான சேனை மாபெரும் யுத்தத்தை தொடுக்கும், அதை தடுப்பார் யாருமிலர்.”

இப்படி சொல்வது பைபிளின் திருவெளிப்பாடு

இதை முதலில் உலகம் நம்பவில்லை, கிழக்கில் இருந்து ஒரு பெரும் அரசா? வாய்ப்பே இல்லை என நம்பினார்கள்

ஆனால் செங்கிஸ்கான் அந்த அச்சுறுத்தலை கொடுத்தான், என்ன காரணமோ தெரியவில்லை அவன் மேற்காசியா பக்கம் பாயாமல் ஐரோப்பாவுக்குள் ரஷ்யா வழியாக சென்றுவிட்டான்

அதன் பின் அந்த கவலை மேற்கத்தியாருக்கு 800 வருடமாக இல்லை

சீனாவின் எழுச்சி அந்த கவலையினை மறுபடி உயிர்த்தெழ செய்தது, ஒருவேளை பைபிள் சொன்ன அந்த மாபெரும் கிழக்கு ராணுவம் சீனமோ என ஒரு தரப்பு அஞ்சுகின்றது

நல்ல வேளையாக பாஜக தரப்பின் வெறி சங்கிகளுக்கு இதெல்லாம் தெரியவில்லை

நாஸ்டர்டாமஸ் சொன்ன இந்திய ஆளுமை மோடி என நிறுத்திகொண்டார்கள், சங்கிகள் பைபிள் படிக்காததால் வந்த நல்ல விஷயம் இது

ஆனால் நாஸ்டர்டாமஸ் மோடி பற்றி ஏதும் சொல்லவே இல்லை

ஐந்துநதி கூடும் இடத்தில் இருந்து நீலநிற‌ தலைப்பாகையுடன் ஒருவர் வருவார், அவர் முப்பக்கம் கடல்சூழ்ந்த அந்த நாட்டை மாபெரும் சக்தியாக்குவார் என சொன்னார் நாஸ்டர்டாமஸ்

அது இந்தியா என்பதும் அவ்விடம் பஞ்சாப் என்பதும் கணிக்கலாம்

ஆச்சரியமாக நீல நிற தலைப்பாகையுடன் முதல் சீக்கிய பிரதமராக மன்மோகன்சிங் வந்தார், உலகம் உற்று நோக்கியது

ஆனால் மன்மோகன்சிங் வந்து சென்றாகிவிட்டது, ஒன்றும் மாற்றமில்லை

மன்மோகன்சிங்கினை கணித்த நாஸ்டர்டாமஸ் அவரை கெடுத்த திமுகவினை பற்றி கணிக்காமலா இருந்திருப்பார்?

ஆக மன்மோகன்சிங் அந்த மாபெரும் சக்தி அல்ல‌

மாறாக இன்னொரு சிங் வரலாம் அல்லது ராணுவபுரட்சியோ இல்லை வேறொதுவோ வந்து இந்தியா மாபெரும் சக்தி ஆகலாம்

நாஸ்டர்டாமஸ் இந்தியா பற்றி சொன்னது இதுவேதான்

அழுத்தமாக நீல நிற தலைப்பாகை என சொல்லிவிட்டு சென்றிருப்பதால் நாஸ்டர்டாமஸுக்கு கோடி நன்றிகள்

காவி தலைப்பாகை என்றால் என்ன ஆகியிருக்கும்?

இதுதான் தமிழக அரசியல்

மூத்தவர்களை மோடி மதிப்பது இல்லை, இதோ அத்வாணியினை ஒதுக்கிவிட்டார்கள் என பலர் கிளம்பிவிட்டார்கள்

வரலாற்றில் இக்காட்சியினை கொண்டுவந்தது காங்கிரஸ்

இந்திராவும், சஞ்சயும் அதற்கு வழிகாட்டிகள். இந்திரா என்ன மூத்தோரை மதித்தாரா? காமராஜர் முதல் கிருபாளினி வரை அவர் எப்படி மதித்தார் என்பது தெரியாதா?

கொஞ்சமும் மதித்தது இல்லை

அவர்களை ஒப்பிடும் பொழுது 91 வயது அத்வானிக்கு ஓய்வு கொடுத்திருப்பது கவுரவமே..

அத்வாணிக்கு சீட் கொடுக்கவில்லை “ஹேய்ய்ய்ய் பாசிச பாஜக..” என பொங்குபவர்கள் எல்லாம்

க‌.அன்பழகனுக்கு ஏன் சீட் திமுக‌ கொடுக்கவில்லை என பேசவே மாட்டார்கள், இதுதான் தமிழக அரசியல்..

அன்பழகனுக்கு 4 வயதுதான் அத்வாணி இளையவர்

அமெரிக்காவே கண்டிக்கும் அரசு

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்: அமெரிக்க அரசுத்துறை அறிக்கையில் கண்டிப்பு

உடனே இதோ பார் அமெரிக்காவே கண்டிக்கும் அரசு என கிளம்பிவிட்டார்கள்.

நாம் அப்பொழுதே சொன்னோம், தமிழ்நாடு அமெரிக்காவின் ஆதரவு பெற்ற சில சக்திகள் நடமாடும் பகுதி. இந்தியாவினை உடைக்க அவர்களை அமெரிக்கா தூண்டிவிடும் தூபமிடும்

சீனா தன் நாட்டில் செய்யாத அட்டகாசம் கிடையாது, அவர்களுடனெல்லாம் கைகுலுக்க தெரிகின்றது

இலங்கையின் முள்ளிவாய்க்கால் கொலையாளிகள் ராஜ்பக்சேயும் , சரத்பொன்சேகாவும் அமெரிக்க பிரஜைகள் ஒரு வார்த்தை கண்டிப்பு கிடையாது

அட அவ்வளவு ஏன்?

அன்றாடம் சுட்டுகுருவிகளை போல பாலஸ்தீனியரை கொன்றுகுவிக்கின்றது இஸ்ரேல், அதைபற்றி ஒரு வார்த்தை?

அமெரிகாவில் கருப்பர்களை அடிக்கடி வெள்ளை இன போலிசாரே சுட்டு கொல்கின்றனர்

அதுபற்றி எல்லாம் பேசாமல் தூத்துகுடி என்றால் ஒரு மாதிரி கிளம்புகின்றார்கள் அல்லவா? இதுதான் உலக அரசியல்

அன்றும் இன்றும் தமிழகத்தில் இந்திய எதிர்ப்பை பேசுபவர்களை கவனியுங்கள் அவர்கள் அமெரிக்க தொடர்பிலே இருப்பார்கள்

அது அண்ணா, வைகோ என யாராய் இருந்தாலும் சரி கூர்ந்து பாருங்கள் விளங்கும்

இன்னொரு நாடென்றால் இந்நேரம் சென்னை அமெரிக்க தூதரகம் முன் பொங்கியிருப்பார்கள், சென்னையில் அது சாத்தியமில்லை

அன்றொருநாள் அமெரிக்க தூதரகமே எம்மண்ணில் இருக்க கூடாது என ஈரானில் கோமேனி ஏன் அடித்து துரத்தினான் என்பது இப்பொழுது எல்லோருக்கும் புரியும்

இளையவன் என்று இகழ்ந்தால்

“போற்றுமின் மறவீர், சாற்றுதும் நும்மை,
ஊர்க்குறு மாக்கள் ஆடக் கலங்கும்
தாள் படு சின்னீர்க் களிறு அட்டு வீழ்க்கும்
ஈர்ப்பு உடைக் கராஅத்து அன்ன என்னை
நுண்பல் கருமம் நினையாது 
இளையன் என்று இகழின், 
பெறல் அரிது ஆடே.”

எதிரிப்டை வீரர்களே கேளுங்கள், சிறுவர்கள் விளையாடக் கலங்கும்படியான கால் அளவுள்ள நீருக்குள் யானையைக் கொன்று வீழ்த்தி இழுத்துச் செல்லும் முதலையைப் போன்ற வர் எம் தலைவன்,

அவன் செய்யும் பல செயல்களைக் கருத்தில் கொள்ளாமல், அவனை இளையவன் என்று இகழ்ந்தால், நீங்கள் வெற்றி பெறுவது அரிது.

சொன்னா கேளுயா

“சொன்னா கேளுயா, காங்கிரசும் நாட்டுக்கு நிறைய செஞ்சிருக்குய்யா, அதை கண்ணால கண்டவ நான்

அது உனக்கும் தெரியும், பின்ன ஏன்யா அவ்வளவு பொய்யா சொல்ற..?

இன்னொரு தடவை பெரிய பொய்ய சொல்லிட்டு இந்த பக்கம் வந்திராத ஆமா, பொய்யா சொல்லிட்டு நான் ஏழைதாயின் மகன்னு அழுதா யாருக்கு அவமானம்?”