இவர்களுக்கு யார் கொடுத்தார்?

திராவிட பெயர்களான பேரறிஞர் , கலைஞர், புரட்சி தலைவன், தலைவி, தியாக தீபம் போன்ற பெயர்களை பற்றி சொன்னால் அதெல்லாம் அடுத்தவன் கொடுத்ததாம்?

மகாத்மா, நேதாஜி, மூதறிஞர், கர்மவீரர் என்ற பட்டங்கள்தான் மக்களால் வழங்கபட்டது

இவர்களுக்கு யார் கொடுத்தார்?

மூதறிஞர் ராஜாஜி என அவர் அழைக்கபட்டால் இவர்கள் பேரறிஞர் என அண்ணாவினை அழைத்து கொண்டார்கள், இவர்கள் அழைக்காமல் ஐ.நா சபையா அழைத்தது?

தளபதி என பாகிஸ்தான் அரசா பட்டம் கொடுத்தது?

புரட்சி நடிகன் என அவரை திமுகவினரே அழைத்தார்கள், அவரே பின்பு தன்னை புரட்சி தலைவர் ஆக்கினார்,

அவர் வழியில் புரட்சி தலைவியும் வந்தார்

தியாக தலைவி, திராவிட செல்வன் எல்லாம் எங்கிருந்து வந்தது என்பது யாருக்குமே தெரியாது

உறுதியாக சொல்லலாம், சவுக்கிட்டாருக்கு முன்னோடி திராவிட அரசியலின் அடைமொழியன்றி வேறு எதுவுமல்ல