மனித தன்மை இல்லாதது

ஒரு கிறிஸ்தவன் இறந்துவிட்டார் , அவர் உடலை இந்துமதபடி அடக்கம் செய்ய இந்துத்வா கும்பல்கள் மல்லுகட்டின என்றொரு வீடியோ காணமுடிந்தது

இப்பொழுது வரும் வீடியோக்களில் அங்கிள் சைமனின் வீடியோ தவிர ஏதும் நம்ப கூடியவை அல்ல, அங்கிள் ஒருவரை முழுக்க நம்பலாம்

இந்த வீடியோ சம்பவத்தின் மூல சிக்கல் எதுவென தெரியவில்லை, ஒருவேளை அவர் மதமாற்றம் செய்யபட்டிருக்கலாம்

சில நாடுகளில் “நீ எந்த மதத்தையும் பின்பற்று ஆனால் உன் அடையாளம் இந்தமதம்தான் , அரசு ஆவணபடி அதுதான். நீ எந்த மதத்தில் செத்தாலும் ஆவணம் சொல்லும் மதம்தான் உனது, அதுபடிதான் இறுதிகாரியம்” எனும் மவுன சட்டங்கள் உண்டு

இங்கு அப்படியாக ஊர்கட்டுபாடு என ஏதோ இருந்திருக்கலாம், அது சர்ச்சையாகியிருக்கலாம்

என்ன இருந்தாலும் இறந்தவர் உடலில் மதபேதம் பார்ப்பது சரியல்ல‌

“ஒருவன் இறந்தால் அந்த இடத்தில் நீ ஞானம்பெறும் பொருட்டு அவன் பகைவனாக இருந்தாலும் போ, இறந்தவன்னை தகனமோ அடக்கமோ செய்வது வாழும் மனிதனின் கடமை” என்றுதான் எல்லா மதமும் சொல்ல்கின்றன,

இந்த சர்ச்சை நிச்சயம் மனித தன்மை இல்லாதது

ஆயினும் சாதி அடிப்படையில் பிரிந்து இந்த சாதி கிறிஸ்தவன் உடலை அந்த‌ சாதி கிறிஸ்தவர்களின் கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்ய விடமாட்டோம் எனும் கொடூர கிறிஸ்தவர்கள் செய்யும் காரியத்தை விட இது ஒன்றும் கொடியதல்ல‌

சாதி கொடுமையினை பின்பற்றும் கிறிஸ்தவர்கள் இதை கண்டிக்க தகுதியே இல்லாதவர்கள்