சமஸ்தானங்களை இணைத்தவர் பட்டேல்

பல சமஸ்தானங்களை இணைத்தவர் பட்டேல் என்கின்றார்கள், ஆனால் எப்படி இணைத்தார்?

வெள்ளையன் காலத்தில் உல்லாச வாழ்க்கை வாழ்ந்த எந்த மன்னனும் தன் அந்தஸ்தை இழக்க விரும்பவில்லை, அவர்களுக்கு கணிசமான தொகை தரப்படும் என சொல்லித்தான் பட்டேலால் வழிக்கு கொண்டுவர முடிந்தது

அப்படி பல மன்னர்களுக்கு வழங்கபட்டும் வந்தது, மிக பெரும் தொகை அது, வெள்ளை யானைக்கு இடப்படும் தீனி என அதற்கு பெயர்

இந்திரா வந்துதான் அதை நிறுத்தினார், இவர்களுக்கு எதற்கு பணம் என அவர் அடித்த அடியில் மன்னர்கள் எல்லாம் தங்கள் மாளிகைகளை ஸ்டார் ஹோட்டல்களாக , ஹால்களாக மாற்றிவிட்டு பறந்தனர்

அவ்வகையில் இந்திராவும் நினைவு கூறதக்கவர்

பட்டேல் செய்திருக்க வேண்டிய விஷயம் கிழக்கு பாகிஸ்தானை அன்றே உடைத்திருக்க வேண்டியது ஆனால் செய்யவில்லை

விளைவு இஸ்லாம்பாத்திலிருந்து டாக்காவிற்கு இந்தியா வழியாக சாலை வேண்டும் என பல குரல்கள் பாகிஸ்தானில் இருந்து வந்தன‌

இந்திரா துணிந்து அடித்து கிழக்கு பாகிஸ்தானை வெட்டி பாகிஸ்தானின் வாலை நறுக்கினார்

இந்திய ஒருமைபாட்டில் பட்டேல் ஒரு அடி பாய்ந்தால் இந்திரா 16 அடி பாய்ந்தார்

ஆனாலும் அந்த கோஷ்டிக்கு அதெல்லாம் தெரியாது, தெரிந்தால் அவர்கள் அந்த கும்பலில் ஏன் இருக்க போகின்றார்கள்?

[ October 31, 2018 ]

============================================================================

அந்த பட்டேல் அந்த ஐதரபாத் நிஜாமிடம் இருந்து நாட்டை பிடுங்கினார், இன்னும் பெரும் அரசர்கள், ஜமீன்களை எல்லாம் விரட்டி அவர்கள் சாம்ப்ராஜ்யத்தை நாட்டோடு இணைத்தார்

நிச்சயம் பட்டேலால் பதவி, சொத்து இழந்த மன்னர்கள் ஏராளம்

ஆனால் இவர்கள் செய்வது என்ன?

சாதாரண அதானி, அம்பானியினை மன்னனாக்கி கொண்டிருகின்றார்கள்

பட்டேலை எந்த வழியில் இவர்கள் பின்பற்றுகின்றார்கள் என்றால் ஒரு வழியிலும் இல்லை, செய்வதெல்லாம் பட்டேலுக்கு துரோகம்

அரசர்களை நாட்டுக்காய் ஒழித்தவர் பட்டேல், இங்கோ நாட்டை ஒழித்து அரசர்களை உருவாக்குகின்றார்கள்

இவர்கள்தான் பட்டேலுக்கு சிலை திறக்கின்றார்களாம், அதற்கு இவர்களுக்கு என்ன தகுதி இருக்கின்றது என கேட்டால் சீறுவார்கள்

[ October 31, 2018 ]

==========================================================================