நாளைக்கு சித்திரை 1

நாளைக்கு சித்திரை 1

தமிழ்புத்தாண்டு வாழ்த்து என சொல்லாவிட்டால் தலைகாட்ட முடியாது, சொல்லிவிட்டால் தலைஞர் சமாதிபக்கம் செல்ல முடியாது

ஆனால் சொல்லாமல் தேர்தல் நேரம் சமாளிக்கவும் முடியாது

பூரா பயலும் ஒரு வெறியோடு சுற்றிகொண்டிருக்கின்றான், தொலைத்துவிடுவான்

வெரி டெலிகேட் பொசிஷன்.. சத்திய சோதனை

ம்ம்.. இப்படி செய்யலாம்

இனி புத்தாண்டு வாழ்த்துக்கு பதிலாக‌ ஒவ்வொரு மாதபிறப்புக்கும் வாழ்த்து சொல்லிவிடலாம் , சிக்கல் இல்லை

இனி புத்தாண்டே தமிழனுக்கு கிடையாது மாத பிறப்பு மட்டுமே..

பகுத்தறிவு சிந்திக்கவா போகின்றது?

முத்துவேலருக்கு பல தலைமுறைக்கு முன்பே சமூக நீதி காத்த ஆரிய பார்ப்பானிய அட்டகாசத்தை ஒடுக்கிய திராவிட போராளி சிலை முன் கனிமொழி ஆசி பெற்ற காட்சி

(அது மன்னன் சிலை, அவன் காலத்தில் அவன் கடவுள்,அவனே சர்வாதிகாரி, அவனே பாசிஸ்ட்

பார்ப்பான் முதல் சூத்திரன் வரை அவனுக்கு கட்டுபட்டே இருந்தனர், திமுக குறீயிட்டில் சொல்ல வேண்டுமென்றால் அவன் ஆதிக்கவாதி, அடக்குமுறையாளன்

இதை எல்லாம் சொன்னால் அவர்கள் பகுத்தறிவு சிந்திக்கவா போகின்றது? அதுவும் தேர்தல் நேரத்தில்.

ஒரு பாசிஸ்ட் சிலையினை வணங்குகின்றார் கனிமொழி.)

நாட்டுக்கு நல்லது

இந்த வருடம் இந்த குருத்து ஞாயிறு பெரிய வெள்ளி எல்லாம் தேர்தலையொட்டி வருகின்றது

பொன் ராதாகிருஷ்ணன் குருத்தோலையுடன் “ஓசான்னா..” பாடபோகின்றார்

அப்படியே பெரிய வியாழன் கிறிஸ்தவ சடங்கான பாதம் கழுவுதல் நிகழ்ச்சியில் 12 பேருக்கு என்ன 12 ஆயிரம் பேருக்கும் பாதம் கழுவி முத்தி செய்ய அவர் ரெடி

தமிழிசை அக்கா முக்காடு இட்டுகொண்டு “பொறுத்தருளும் கர்த்தாவே எனது ஜனத்தின் பாவங்களை பொறுத்தருளும்” என சிலுவை பாதை சொல்ல போகின்றது

“உம் ரத்ததால் சிகப்பு தாமரை மலரட்டும் இயேசப்பா..” என கேட்டுகொண்டே பிரார்திப்பார்

எவ்வளவு உருக்கமான காட்சிகள்?

இந்த யழவு தேர்தல் ரம்ஜானை ஒட்டி வந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் தெரியுமா?

இவர்கள் அவர்களுடன் நோன்பிருப்பார்கள் இரவில் ஆடுவெட்டி சமைத்து கொடுப்பார்கள், நோன்பு கஞ்சி எல்லாம் காய்ப்பார்கள்

தேர்தல் கமிஷன் இதை குறித்து கொள்வது நாட்டுக்கு நல்லது

வழக்கம் போல காணவே இல்லை..

ராஜிவ் கொலைவழக்கு பற்றி ரகோத்தமன் எழுதிய புத்தகத்தில் இப்படி ஒரு காட்சி வரும்

இந்த சின்ன சாந்தன் என்பவன் இப்படி சொல்வான்

“அய்யா அவர் யாரென்று தெரியாது வெள்ளை ஆடை அணிந்து வருவார், அவரும் சிவராசனும் வை.கோ அடுத்த முதலமைச்சர் என்பதையும் அவர் முதலமைச்சர் ஆனபின் என்ன செய்ய வேண்டும் என்பதையும் சீரியசாக பேசிகொண்டிருப்பார்கள்”

கவனியுங்கள் சீரியசாக பேசுவார்களாம்

என்னது வைகோ முதலமைச்சராவார் என அந்த புலிகூட்டம் அவ்வளவு நம்பியதா , 
பின்னர் ஏன் மொத்தமாக அழிந்துபோக மாட்டார்கள்?

வைகோவினை எல்லாம் நம்பி ஒரு உலகை எதிர்த்த போராட்டத்தை நடத்திய புலிகள் எவ்வளவு அறிவு கெட்டவர்களாக இருந்திருப்பார்கள்?

இப்படி அறிவுகெட்ட ஒரு கூட்டத்திடம் ஈழம் சிக்காமல் சென்றதற்கு ராஜபக்சேவுக்கு ஈழமக்கள் நிச்சயம் நன்றி சொல்ல வேண்டும்…

இந்த தேர்தலிலும் வைகோ என்பவரை வழக்கம் போல காணவே இல்லை..

தேர்தல் துளிகள் 12/04/2019(1)

ஆக’ ன்னு சொல்லாம அடுத்த வார்த்தை ஸ்டாலினை பேச சொல்லுங்க பார்ப்போம் : சீமான்

ராசா, அவர் உளறினாலும் உண்மையினை உளறுகின்றார்

நீர் கத்தி கத்தி பேசினாலும் உண்மை என்பது கொஞ்சமும் இல்லை

அவர் ஆக என பேசுவது இருக்கட்டும், நீர் ஒரு உண்மையினை பேசிவிடும் பார்க்கலாம்

என்னதான் தமிழகத்தில் தாமரை மலராது கருகும் என திமுகவினர் சொல்லிகொண்டே இருந்தாலும், கலைஞர் வீட்டில் ஏற்கனவே தாமரை மலர்ந்துவிட்டது

ஆம் முக ஸ்டாலின் மகளின் பெயர் “செந்தாமரை”

அக்கா தமிழிசை இதை எப்படி மறந்தார்?

தூத்துகுடி கருவாட்டு சந்தையில் நெத்திலி கருவாடு விற்றுகொண்டிருக்கும் அக்கா தமிழிசைக்கு தகவல் சொல்லியாயிற்று

திமுக பேனரில் பெரியார் இடத்தை பிடித்துகொண்ட கண்ணன் உண்மையிலே கெட்டிக்காரன்

இனி பெரியார் சிலைகளை இடித்துவிட்டு கண்ணன் சிலையினை திமுகவினரே வைத்துவிடுவார்கள் போல..

அப்பொழுது ஸ்டாலின் பெயர் பரந்தாமன் எனவும் அவர் மகனின் பெயர் உதய கிருஷ்ணா எனவும் மாற்றம் பெறும்

ஆம் திமுக இந்துக்களுக்கு எதிரான கட்சியே அல்ல, கிருஷ்ணனை அவர்களுக்கு ரொம்ப பிடிக்கும்

அதனால்தான் “கோபால”புரத்தில் குடியேறினார் கலைஞர், அதுவும் வேணுகோபாலசாமி கோவில் அருகிலே குடியேறினார்

இனியாவது நம்பி தொலையுங்கள்

“சுவாமி நான் பாவியாய் இருக்கின்றேன் என் பாவங்களுக்காக மன்றாடும்

மகனே நீ பாவியாய் மட்டுமல்ல காவியாகவும் இருக்கின்றாய்

சுவாமி என் பாவங்களுக்காகவும் தேர்தலில் நான் வெற்றி பெறவும் ஜெபம் செய்யுங்கள்

கர்த்தரே ஏப்ரல் 18 வரை கிறிஸ்தவனாய் இருக்கும் இவரைமன்னிப்பீராக, அப்படியே வேறுவழியின்றி பல கல்லூரிகளையும் பள்ளிகளையும் இவர்கள் அனுமதியின்றி நடத்தமுடியா காரணத்தால் இவர்கள் பின்னால் செல்லும் எங்களையும் மன்னியுங்கள் தேவனே…”

“தம்பி சித்திரை 1 வருது, “தமிழ்புத்தாண்டு வாழ்த்து” என சொல்லி சிக்கி கொள்ளாமல் இரும், நமக்கு தை 1 தான் புத்தாண்டு. இதை நீர் சொல்கின்றீரா? நான் சொல்லட்டுமா?

ஒரு புல்லும் புடுங்க வேண்டாம், தேர்தல் முடியும் வரை வெளிநாடு போய் தொலையும் , என் மனைவி கண்ணில் பட்டீரென்றால் தொலைத்துவிடுவார் ஜாக்கிரதை”

தி.மு.க., இந்து விரோத கட்சி அல்ல

“தி.மு.க., இந்து விரோத கட்சி அல்ல; விநாயகர் போற்றி, முருகன் போற்றி, திருமால் போற்றி, சிவன் போற்றி புத்தகங்களை வெளியிட்டவர் கருணாநிதி,” என தி.மு.க., தலைவர் ஸ்டாலின்…

தேர்தல் ஒரு கட்சி தலைவரை இப்படி எல்லாம் பொய் சொல்ல வைக்குமா?

திராவிட நாடு பத்திரிகையினை விடுங்கள் “அம்பாள் எந்த காலத்திலடா பேசினாள் அறிவு கெட்டவனே” என் பரபரப்பு வாழ்க்கையினை தொடங்கினார் கலைஞர்

புராணங்களும் இதிகாசங்களும் அவரிடம் படாதபாடு பட்டன‌

ராமனின் கதை என இலக்கிய சுவை மிகுந்த கம்பராமாயணத்தையே அவர் அதிகம் பேசவில்லை

திருகுறளில் கூட வரும் இந்திரன், அந்தணன் வேதம் போன்ற வார்த்தைகளை லாவகமாக பகுத்தறிவு வார்த்தைகளாக்கிய வித்தகர் அவர்

இந்து கடவுள்களை எல்லாம் மிதித்து தான் ஏறும் படிகட்டாக பயன்படுத்தினார்

எவ்வளவு ஏளனம்? எவ்வளவு கிண்டல்? எவ்வளவு கேலிகள்?

ஒன்றா இரண்டா? ராமனும் கண்ணனும் ஐயப்பனும் இன்னும் பலரும் அவரிடம் அவ்வளவு பாடுபட்டனர்

பாஞ்சாலி அவரால் பலமுறை துகிலுரியபட்டாள், சீதை தீயினுள் சென்றுவிட்டு இவர்களால் திரும்ப வரவே இல்லை அவ்வளவு அவமான கேள்விகள்

ஆனால் ஆட்சிக்கு வந்தபின் கொஞ்சம் நிதானமானார், அதுவும் ராமசந்திரன் பிரிவுக்கு பின்னும் ஜெயா எனும் பிராமணத்தி தன் சரிநிகர் தலைவி ஆனபின் அவரிடம் மாற்றம் இருந்தது

அப்பொழுதும் வீரமணி சுபவீ போன்ற தன் கட்சியின் “சி” பிரிவின் மூலம் இந்துக்களை சீண்ட அவர் தயங்கவில்லை

வாய்ப்பு கிடைக்கும் பொழுது அவரே இறங்கி அடித்தார் “இந்துக்கள் என்றால் திருடர்கள்” “ராமன் எந்த காலேஜில் படித்தான்” என கடைசி வரை அவர் தன் அடிநாத கொள்கையினை விடவில்லை

அவருக்கு விவேகானந்தர் மேல் ஒரு மதிப்பு இருந்தது அவரையும் மதவாதியாக பார்க்கவில்லை துணிச்சல் மிக்க சீர்திருத்தவாதி என சொல்லிகொண்டார், அப்படி விவேகானந்தர் என்ன சீர் திருத்தினாரோ அவருக்கே வெளிச்சம்

எல்லா மனிதனும் கடைசி காலத்தில் கடவுளின் காலடிக்கு வருவது போல ஆடி அடங்கிவிட்டு ராமனுஜர் வாழ்வினை எழுதினார் அப்படியே அவர் காலம் முடிந்தது

இந்துக்களை சீண்டி தன்வாழ்வினை தொடங்கிய கலைஞர் ராமானுஜர் வாழ்வினை படித்தபடி முடித்தார்

ஆக அவர் எங்கே முருகன் போற்றி, விநாயகர் போற்றி இன்னும் பல தெய்வங்கள் போற்றி என வெளியிட்டார் என்பதுதான் யாருக்கும் தெரியவில்லை

ஒரு சாதாரண மனிதன் அது நடிகர் பார்த்திபனோ இல்லை யாருமோ புத்தகம் எழுதி அவரை வெளியிட்டுவிழாவுக்கு அழைத்தால் அப்புத்தகத்தை கவனமாக படித்து அதைபற்றி பிரமாதமாக ரசிக்க ரசிக்க பேசுவது கலைஞர் ஸ்டைல்

பலமுறை படித்துவிட்டு மிக தயாராக வருவார், அதை படித்து தன்னை புதுபித்தும் கொள்வார்

ஆனால் இப்படி இந்துமத புத்தகத்தை வெளியிட்டு என்றாவது பேசகண்டோமா?

இல்லை ஒரு காலமும் இல்லை

முக ஸ்டாலினின் மொக்கைகள் அதிகமாகிகொண்டே செல்கின்றன, இதை சும்மா விட முடியாது

இனி அண்ணியார் துர்கா அம்மையாரிடம் புகார் அளிக்க சங்கம் முடிவு செய்திருக்கின்றது

இனி சிறையில் இருந்து சசிகலா வந்தவுடன் அரசியல் களம் சசிகலா X துர்கா என்றுதான் மாறும் போல‌

துர்கா அம்மையார் தன் மாமனாரிடம் அரசியல் கற்று தன் கணவன் மூலமும் மகன் மூலமும் பரிசீலிக்கும் மாபெரும் சாமார்த்தியக்காரர்

இனி அவரிடமே புகாரளித்து இந்த மொக்கை ஸ்டாலினின் அட்டகாசத்திற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும்

தேர்தல் துளிகள் 27/03/2019 (2)

இந்திராகாந்தி மாதிரி மூக்கு இருப்பதால் பிரியங்காவால் வெற்றி பெற முடியாது – பாஜக மந்திரி

செல்லூர் ராஜூக்கள் எல்லா கட்சியிலும் இருப்பார்களாம்

பிரியங்காவின் மூக்கு இந்திரா போல் கூர்மையாக இருப்பதால் அவர் பிரதமராவார் என யாரோ இவரிடம் சொன்னார்கள், இவர் மறுத்தாராம்

இந்திராவுக்கு மக்கள் மூக்கு பார்த்தா வாக்களித்தார்கள்?

வைகோவினை உடன்பிறப்புகள் பாதுகாப்பதும், சுப்பிரமணியன் சாமியின் அட்டகாசத்தை பாஜகவினர் பல்லை கடித்து பொறுத்துகொண்டிருப்பதும்

காங்கிரசார் திருமாவுக்கு பிரச்சாரம் செய்வதும்

பிரேமலதாவினை ராமதாஸ் கோஷ்டி சகித்துகொண்டிருப்பதும் விதியின் பலன் அன்றி வேறல்ல..

காவேரி வழக்கின் பிதாமகன் ரெங்கநாத அய்யரிடம் வாழ்த்து பெறுகின்றார் திமுகவின் பழனிமாணிக்கம்

இந்த வீரமணி, மதிமாறன் எல்லாம் இப்பொழுது கண்களை பொத்தி கொண்டிருப்பார்கள்..

ஆதிக்க சாதி அய்யர் வோட்டு வேண்டாம் என அக்கும்பல் இப்பொழுது சொல்லட்டும் பார்க்கலாம்..

நாட்டின் பொருளாதாரம் 7 சதவீதம் அதிகரித்தது என அருண்ஜெட்லி கூற, எந்த ஆதாரத்தின் அடிப்படையில் அப்படி சொல்லமுடியும் என திருப்பி கேட்கின்றார் ரகுராம் ராஜன்

முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன்

வழக்கம் போல பாஜக தரப்பு கனத்த மவுனம்.

ஏட்டு சுரக்காய் கறிக்கு உதவாது, போலி புள்ளிவிவர கணக்கு நாட்டுக்கு உதவாது.

பிரியங்கா காந்தி ராம பக்தையாகி விட்டாரா? : ஸ்மிருதி இரானி

ராமரை இந்த கட்சி மட்டும் குத்தகைக்கு எடுத்திருப்பதாக நினைத்து கொள்வார்கள் போல..

அக்கோவ்… நடப்பது “நாடாளுமன்ற தேர்தலா? நாடார் மன்ற தேர்தலா?