இதுதான் புரட்சி என கிளம்புவது சரியல்ல..

களம்புகும் எழுத்தாளர் இலக்கியவாதிகள் என ஒரே பரபரப்பு என பத்திரிகைகள் அழிச்சாட்டியம்

எழுத்தாளரும் இலக்கியவாதிகளும் இதற்கு முன்பு அரசியலில் இருந்ததே இல்லையா?

ராஜாஜி, அண்ணா, கலைஞர், வலம்புரி ஜாண் என எவ்வளவு பெரும் பிம்பங்கள் எல்லாம் உண்டு

கண்ணதாசனைவிடவா இன்னொரு இலக்கியவாதி உண்டு?

திமுக எழும்பியதே அதன் எழுத்துக்களாலும் பல இலக்கியங்களாலும்

ஆசைதம்பி முதல் எத்தனை எழுத்தாளர்கள் அதில் இருந்தனர்?

அண்ணா அப்படி ஒரு எழுத்தும் இலக்கியமுமிக்க படையினை உருவாக்கி அரசியல் களத்திற்கு கொண்டுவந்தார், அதை மறுக்க முடியாது

அவர்களை விடவா இப்போது உள்ளவர்கள் எழுதிவிட்டார்கள்?

தமிழக அரசியல் எப்பொழுதும் எழுத்தாளர்களையும் இலக்கியவாதிகளையும் அரவணைத்தே சென்றிருகின்றது

அதில் திமுகவுக்கு முதலிடம், என்றுமே முதலிடம்

எழுத்தாளர்களையும், திறமையானவர்களையும் கைதூக்கிவிடும் கட்சி அது. அதன் வாத திறமைக்கும் போராட்டத்திற்கும் அந்த அஸ்திவாரமே காரணம்

எழுத்தாளர்கள் முகம் தமிழகத்தில் எப்பொழுது மறைந்ததென்றால் அதிமுக அராஜகத்தில்

ஆம் நடிகர்களை கொண்டாடும், வெற்று மேக் அப்பினை கொண்டாடும் யுத்தியினை அவர்கள்தான் அறிமுகபடுத்தினார்கள்

விந்தியா, குண்டுகல்யாணம் வரை வந்தது இப்படித்தான்

அந்த வெளிச்சத்தில் எழுத்தாளருக்கான இடம் மங்கியிருந்தது, இப்பொழுது பழைய சிறப்பு திரும்பிவிட்டது

திமுக இதை என்றோ செய்துவிட்டது

மற்ற கட்சிகளுக்கு இப்பொழுதுதான் அந்த திட்டம் வந்திருக்கலாம்

அதற்காக இதுதான் தொடக்கம், இதுதான் புரட்சி என கிளம்புவது சரியல்ல..