இது குதிரை பந்தயம்

சில கட்சிகளில் குறிப்பாக பெரிய கட்சிகளில் சீட் கிடைக்காதவர்களிடம் கேட்டால் என்ன சொல்கின்றார்கள் தெரியுமா?

இப்படித்தான்

“நேர்முகம் எல்லாம் சும்மா, நேரடியாக 10 கோடிக்கு மேல் கேட்டார்கள், அவ்வளவு இல்லை என்றோம். அப்படியா சரி கட்சி முக்கியம் அல்லவா? அதனால் உங்களை விட யாரால் கொடுக்க முடியுமோ அவர்களுக்கு சீட், மற்றபடி உங்கள் ஒத்துழைப்பு தேவை

அடுத்த தேர்தலுக்குள் குறிப்பிட்ட‌ பணம் சேர்த்துவிட்டால் உங்களுக்கு அப்பொழுது கண்டிப்பாய் சீட் கொடுக்கபடும், கட்சி யாரையும் கைவிடாது”

மேற்கொண்டு சொன்னார்,

குதிரை பேர அரசுண்ணு சொல்வாங்கண்ணே, இது குதிரை பந்தயம்

ஜெயிக்கிற குதிரை மேல அதிகம் கட்டத்தான் செய்யணும் என்ன செய்றது? பணம் இல்லாவிட்டால் பேசாமல் வர வேண்டியதுதான்

பணம் இல்லாம இந்த குதிரை பந்தயத்துக்கு போறது நம்ம தப்புதாண்ணே.