எப்படிபட்ட பல்டி பார்த்தீர்களா?

கொஞ்சநாளாக வடுக வந்தேறி எனும் பிரசித்திபெற்ற அங்கிளாரின் முழக்கம் காணாமல் போனதிலும் அர்த்தம் இருந்திருக்கின்றது

விஷயம் படுகாமெடியானது

அதாவது இந்த காளிமுத்து அதாவது சைமனின் மாமனாருக்கு இரு மனைவிகள் முதலாம் மனைவி நிர்மலா, அவர் தேவர் சாதி ஆனால் அதைவிட கிறிஸ்தவ வெறியர். இந்த காளிமுத்துவின் பகுத்தறிவு நிர்மலாவிடம் மண்டியிட்டது விளைவு புனிதா, டேவிட் அண்ணாதுரை, செந்தமிழ் சாம்ராஜ்,தென்றல் வேதமணி, ரோஸ்லின் கிரேஸ்

திராவிடமும் கிறிஸ்தவமும் இணைந்த கால்டுவெல் கனவு கண்ட பெயர்கள்

குடும்பம் இப்படி இருக்க காளிமுத்து திராவிட சிங்கம் அல்லவா? இரண்டாம் தாரம் ஒன்று கட்டாவிட்டால் கட்சி பாரம்பரியம் என்னாகும்?

அப்படி மனோகரி என்பவரை இரண்டாவது மணக்கின்றார், அம்மணி தெலுங்கு வம்சாவளி கம்மாள நாயுடுவும் தெலுங்கு விஸ்கர்மாவும் கலந்த கலப்பு, கொஞ்சமும் தமிழச்சி அல்ல‌

இவர்களுக்கு பிறந்ததுதான் மணிகண்ட பாண்டியன், அமுத பிரசன்னா, அருண்மொழிதேவன் மற்றும் கயல்விழி

(இந்த கயல்விழிதான் அங்கிள் சைமனின் மனைவி ஆண்டி கயல்விழி சைமன்)

இதெல்லாம் நடக்கும்பொழுது காளிமுத்து தமிழாசிரியர் அதன் பின் அமைச்சர் சபாநாயகர் அளவுக்கு வந்துவிட்டார்

வசதிவந்தால் என்னாகும்? இருதாரம் என்றால் என்னாகும்? அந்த அக்னி நட்சத்திரம் காட்சிகள்தான்

இரு குடும்பத்திற்கும் தீரா யுத்தம், மிக கடுமையான மோதல் எல்லாம் நடந்திருகின்றது, புலிகளுக்கும் சிங்களனுக்குமான மோதலை விட கடுமையான மோதல் எல்லாம் இருந்திருக்கின்றது

ஒரு கட்டத்தில் சுமார் 30 லட்சம் கடனில் காளிமுத்து மரிக்க, அவரின் வாரிசுகள் கடனை கட்டவேண்டும் என சொன்னது நீதிமன்றம்

அய்யய்யோ நாங்கள் காளிமுத்துவுக்கு சட்டபடி வாரிசே அல்ல என அலறி அடித்து மனோகரி குடும்பம் ஓடிய காலமெல்லாம் உண்டு

சரி இந்த “அக்னி நட்சத்திரம்” இப்பொழுது எங்கு வந்திருக்கின்றது?

இந்த காளிமுத்துவின் முதல் தாரத்து மகனான டேவிட் அண்ணாதுரையினை விருதுநகர் வேட்பாளராக தினகரன் அறிவித்துவிட்டார்

அதன் பின்பே காளிமுத்துவின் இளையதாரத்து மகனான அருண்மொழிதேவனை தன் கட்சி வேட்பாளராக நியமிக்கின்றார் சைமன்

புரிகின்றதா?

விஜயகாந்திற்கு ஒரு பிரேமலதா என்றால் அங்கிள் சைமனுக்கு ஆண்டி கயல்விழி

வாரிசு அரசியலுக்கு சைமனும் வந்தாயிற்று அதைவிட முக்கியம் தெலுங்கு வந்தேறிகளை அவரே தேர்தலில் நிறுத்தியுமாயிற்று

எப்படிபட்ட பல்டி பார்த்தீர்களா?

இந்த தும்பிகள் எல்லாம் மார்கழி மாத நாயாக ஒருமாதி பல்லை காட்டி திரிவதும், எவ்வளவு மிதித்தாலும் அமைதி காப்பதும் இதனால்தான்

மிக பகிரங்கமாக சைமன் வீட்டு குடும்ப அரசியலும் வந்தேறிகளை வாழவைக்க அவர் படும் பாடும் தெரிகின்றது

யாருமே திருமணம் செய்ய தயங்கும் சைமனை ஒரு பெண் திருமணம் செய்யும்பொழுது பலரின் புருவங்கள் உயர்ந்தன‌

மிக சரியாக அவரை வளைத்து வைத்து முதுகில் குத்துகின்றது காளிமுத்துவின் இரண்டாம் இன்னிங்க்ஸ் குடும்பம்

இனவிடுதலை என்பதை விட இனி அங்கிள் சைமனை இந்த தெலுங்கு குடும்பத்திடம் இருந்து விடுவிப்பதே முடியாது போலிருக்கின்றது

வீழ்ந்துவிடா வீரம் கயல்விழியிடம் வீழ்ந்து கிடக்கின்றது, மண்டியிடா மானம் மல்லாக்க கிடக்கின்றது

(நான் தெலுங்கச்சி மனோகரி குடும்பத்துக்கு அடிமை என அன்றே சைமன் உறுதியேற்ற காட்சி..

முப்பாட்டன் அருண்மொழிதேவன் என மேடைக்கு மேடை ஏன் அங்கிள் அலறினார் என்ற அர்த்தம் கயல்விழி அண்ணனான அருண்மொழிதேவனை மேடை ஏற்றும்பொழுதுதான் நமக்கே புரிகின்றது)