கடன்பட்டான் நெஞ்சம் போல

இந்த தேர்தலை நிதானமாக எதிர்கொள்கின்றது திமுக, ஆம் அவர்களுக்கு இப்பொழுது எம்பிக்கள் என யாருமில்லை, இனி கிடைப்பது அவர்களுக்கு லாபம்

10 தொகுதி கிடைத்தாலும் அவர்களுக்கு மகிழ்ச்சி, ஆம் ஒன்றுமே இல்லாமல் இப்பொழுது இருப்பதை விட சில கிடைத்தாலும் மகிழ்ச்சி

காங்கிரஸின் நிலையும் அப்படியே

சிக்கல் அதிமுகவுக்கும் தினகரனுக்கும் இருக்கின்றது. 37 என்ற மாபெரும் எண்ணிக்கையுடன் வலம் வந்த கட்சி அதிமுக, அதை பறிகொடுக்க போகின்றார்கள் பரிதாபம்

தினகரன் என்பவர் வெல்லவில்லை என்றால் சந்தி சிரித்துவிடும் , கட்சி கலைந்துவிடும்

இது போக இடைதேர்தல் நெருக்கடியும் ஆளும்கட்சிக்கு தலைமேல் தொங்கும் கத்தி

திமுக அதன் போக்கிலே இயல்பாய் இருக்கின்றது, அவர்களுக்கு பலத்த நெருக்கடி ஏதும் இந்த நாடாளுமன்ற தேர்தலில் இருப்பதாக தெரியவில்லை

கலைஞர் இல்லாத காலத்தில் எப்படி வெல்லபோகின்றார்கள் என்ற ஒற்றை எதிர்பார்ப்பு மட்டுமே அவர்கள் மேல் திணிக்கபட்டிருக்கின்றது, அதை நிச்சயம் அவர்களால் பூர்த்தி செய்ய முடியும்

பாஜக ஒரு நாளும் தமிழகத்தினை பற்றி கவலைபட்ட கட்சி அல்ல , மாறாக இம்முறை அதிமுகவினை துப்பாக்கி முனையில் அடக்கிவைத்து “வாழ்ந்தால் இருவரும் வாழ்வோம் இல்லாவிட்டால் இருவரும் மூழ்குவோம், சாவு ஒன்றும் எங்களுக்கு இங்கு புதிதல்ல..” என அவர்கள் போக்கில் இருக்கின்றார்கள்

இங்கு பெரும் சிக்கலிலும் நெருக்கடியிலும் இருப்பது அதிமுக முகாமே..

கடன்பட்டான் நெஞ்சம் போல கலங்கிகொண்டிருப்பது அவர்கள்தான்