கரும்பு விவசாயி சின்னமாம்

மெழுவர்த்தி சின்னம் பிடுங்கபட்டு அங்கிள் சைமன் கட்சி இருட்டில் தள்ளபட்டது, விடுவாரா சைமன் இப்பொழுது புதிய சின்னத்தை வாங்கிவிட்டார்

அது கரும்பு விவசாயி சின்னமாம்

இவர்கள்தான் கரும்பு விவசாயம் சரியில்லை, சீனி சரியில்லை , மாட்டு எலும்பெல்லாம் கலக்கின்றார்கள். நாங்கள் ஒரு செடியின் விதையிலிருந்து இயற்கை சர்க்கரை தயாரிப்போம், பனங்க் கருப்பட்டி எனும் இயற்கை சர்க்கரை கொடுப்போம் என என்னவெல்லாமோ சொன்னார்கள்

ஆனால் விதி மறுபடி கரும்பு வடிவிலே வந்திருக்கின்றது, இனி என்னாகும்?

அங்கிள் சைமன் கோஷ்டி கையில் கரும்புடன் சுற்றும், அவர்கள் சுற்றலாம் ஆனால் பார்க்க எப்படி இருக்கும்?

பட்டினத்தார் போலவே இருக்கும்

பட்டினத்தார் கையில் கரும்பு வைத்திருப்பார், வாழ்க்கையின் தொடக்கம் இனிமை முடிவு கசப்பு என சொல்லும் தத்துவமாம் அது

இப்பொழுது அங்கிள் சைமனுக்கும் கையில் கரும்பு கொடுத்தாயிற்று, கிட்டதட்ட சைமனுக்கும் அதே தத்துவம் பொருந்துவதுதான் ஆச்சரியம்

அரசியல் முதலில் இனிப்பு போக போக கசப்பு

எவ்வளவு அழகாக பட்டினத்தாரின் தத்துவ கரும்பை அங்கிள் சைமனுக்கு கொடுத்துவிட்டார்கள்?, தேர்தல் கமிஷனிலும் மகா குசும்பர்கள் இருப்பார்கள் போல‌

ஆக இனி தமிழகத்தில் புதிய பட்டினத்தாராக அங்கிள் சைமன் கையில் கரும்போடு வருவார்

“இது தமிழ் கரும்பு, நீ தமிழன் என்றால் அதை விரும்பு” , “இருப்பாய் தமிழா கரும்பாய்” போன்ற வசனங்களுடன் இனி தும்பிகள் பாய்ந்து வரும்.

இப்பொழுது அங்கிளுக்கு சிக்கல் என்னவென்றால் சின்னம் கிடைத்துவிட்டது, ஆனால் 40 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள்தான் கிடைக்கவில்லை

(ஒன்றை கவனித்தீர்களா? இப்பொழுதெல்லாம் அங்கிளின் கட்சி சின்னங்களில் புலி வருவதில்லை, அவர் அண்ணனும் வருவதில்லை)