காரியத்தில் படு சமத்து

தமிழிசை அக்கா காமெடியாக பேசிகொண்டிருந்தாலும் காரியத்தில் படு சமத்தாக இருந்திருகின்றார்

சோபியாவிடம் வம்பிழுத்தது, துப்பாக்கி சூட்டு நேரத்தில் தத்துவம் பேசியது என தூத்துகுடி கடலே பொங்கும் அளவுக்கு அந்த பகுதியினை கோபமூட்டி வைத்திருந்தார் அக்கா

ஆனால் தேர்தல் நெருங்க நெருங்க மிக அமைதியாக கொடியேற்றம், கட்சி கூட்டம் என சுற்றி வந்திருக்கின்றார், எதிர்ப்பு ஏதுமில்லை என்பதை கண்டுகொண்டே பின்பே களத்திற்கு வந்திருக்கின்றார்

தென் பக்கம் இருக்கும் நாடார் வாக்கு மற்றும் அதிதீவிர இந்துக்களின் வாக்கு வங்கி அவருக்கு நம்பிக்கையினை ஏற்படுத்தியிருகின்றது

இன்னும் தூத்துகுடியின் மாபெரும் சக்திகள் எல்லாம் டெல்லிக்கு அஞ்சுபவை என்பதால் அந்த கணக்கும் அக்காவுக்கு சாதகம்

பாஜக பக்கமும் பழனிச்சாமி பக்கமும் சரியும் சில நாடார் அமைப்புகளால் கனிமொழிக்கு சவால் கொடுக்கமுடியும் என அக்கா கருதுகின்றார்

மிகபெரும் கணக்கோடுதான் அக்கா களமிறங்குகின்றார் , எதிர்தரப்பினை குழப்பிவிடும் சில வேலைகளை செய்தால் அவரால் சவால் கொடுக்க முடியும் என்கின்றது தென்னக செய்திகள்