சுயநல கூட்டம்

தேர்தல் களைகட்ட தொடங்கியிருக்கின்றது, மக்களின் மனவோட்டம் பற்றியும் கணிப்புகள் வரதொடங்கியிருக்கின்றன‌

பெருவாரி மக்கள் இத்தேர்தலில் தனக்கு வேண்டிய கட்சியோ நபரோ வெற்றிபெற்றால் தனக்கு என்ன கிடைக்கும் அல்லது தங்களுக்கு என்ன கிடைக்கும் என்பதை தவிர வேறு சிந்தனையில் இருப்பதாக தெரியவில்லை

அப்படி பழக்கபட்டுவிட்டது இச்சமூகம்

இது நாடாளுமன்றத்துக்கான தேர்தல் , இந்நாட்டை வழிநடத்த சரியான தலமை எது? என்பதைபற்றியோ யார் ஆட்சிக்கு வந்தால் நாட்டுக்கு நல்லது என்பது பற்றியோ சிந்திக்க யாரும் தயாராக இல்லை

எல்லோர் நோக்கமும் தங்களுக்கு இத்தேர்தலில் என்ன இலாபம் என்பதை நோக்கியே செல்கின்றது

தம் கட்சி, தம் சாதி, தம் மதம் என்றே நோக்குகின்றார்களே தவிர இது நம் நாடு என்ற நோக்கம் யாரிடமும் இல்லை என்பதால் இது நாடாளுமன்ற தேர்தல் அல்ல

மாறாக சுயநல கூட்டம் தனக்கு தேவையானதை பெறும் ஒருவகை பந்தயம் அல்லது வேட்டை