தேர்தல் துளிகள் 19/03/2019 (2)

மய்யத்து காமெடி தொடர்கின்றது

கோவை சரளா என்னை எப்படி நேர்காணல் நடத்துவது என பொங்கிய ஒரு மய்யத்து நபர் ஒருவர் மய்யல் தீர்ந்து ஓடிவிட்டார், ஓடும் பொழுது “கோவை சரளா எல்லாம்..” என சொல்லி விட்டு ஓடிவிட்டார்

அவ்வளவுதான் அம்மணிக்கு கோபம் பொத்துகொண்டு வந்தாயிற்று

“என்றா இது, எனக்கு அறிவு இல்லியாடா, நெசமா இருக்குடா? நா அரசியல் பண்ணகூடாதுன்னு எவண்டா சொன்னது? என்றா தகுதி இல்ல என்ட்ட‌, போடா கெரகம் புடிச்சபயல‌” என வானுக்கும் பூமிக்கும் குதிக்கின்றது

அவர் கிடக்கின்றார் சரளா அக்கா, கமலஹாசனே கட்சி நடத்தும்பொழுது உங்களுக்கு பிரதமர் ஆகும் தகுதி இல்லையா என்ன?

விடுதலை புலிகள் இந்தியாவிற்கு பாதுகாப்பாக இருந்தனர் : கருணாஸ்

இந்திய ராணுவத்தினை எதிர்த்து, இந்திய பிரதமரை கொன்று இன்னும் பல கொடுமைகளை இந்தியாவுக்கு எதிராக செய்தவர்கள் இந்திய பாதுகாப்பாக இருந்தார்களாம்

முன்பொரு பேட்டியில் நான் வெளிநாட்டு சரக்காய் குடிப்பேன் என கருணாஸ் சொன்னது நினைவிருக்கலாம்

அந்த போதை தெளியவில்லை அவ்வளவுதான்

சைக்கிள் சின்னம்

மரத்தில் இருந்து சந்தண மர கன்றை கொண்டு வரலாம், ஆனால் மழையினை கொண்டுவர முடியாது

சைக்கிள் சின்னம் கிடைத்திருக்கலாம், ஆனால் ரஜினி ஆதரவு கிடைக்குமா?