தேர்தல் துளி – 05/03/2019

ஈழபோரை தடுக்காத , பிரபாகரனை சாகவிட்ட‌ சோனியாவும் ராகுலும் சென்னை வரலாம்

ஆனால் சிங்கள கடற்படையின் துப்பாக்கி சூட்டை தடுத்திருக்கும் மோடி சென்னைக்கு வரகூடாது

இதெல்லாம் வைகோவின் நியாயங்கள்

“நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்… நீ பேச வேண்டும்..

நாள்தோறும் பொழுதோறும் உறவாட வேண்டும்.. உறவாட வேண்டும்

“பாலோடு பழம் யாவும் உனக்காக வேண்டும்
உனக்காக வேண்டும்.

சாமி உன்முகம் பார்த்து பசியாற வேண்டும்”

ஆயிரத்து ஐநூறு வீரர்களை இழந்து, ஏராளமானோர் காயபட்டு லங்கையிலிருந்து திரும்பிய இந்திய ராணுவத்தை கலைஞர் வரவேற்காமல் அவமானபடுத்தியதை வசமாக மறந்துவிட்டு..

மோடி ஏன் அபினந்தனை வரவேற்கவில்லை என சத்தமாக கேட்கின்றான் அல்லவா?

அவன் தான் திமுககாரன்..

கேப்டன் சார், ஒரு சீட்டாவது தரசொல்லுங்க சார், ரொம்ப அவமானமா இருக்கு சார். எங்கப்பா மரியாதை எல்லாம் நாசமா போகுது சார்

அட போங்க வாசன், எனக்கே 3 சீட்டுதான் தருவானுக போல, உங்களுக்கு எப்படி நான் கேக்குறது?”

இன்னோவா காருக்கு ஒரு பேச்சு

ஸ்விப்ட் காருக்கு இன்னொரு பேச்சு…

(ஒரு சைக்கிள் கூட , ஒரு குக்கர் கூட‌ கொடுக்காததால் தினகரன் கட்சியில் அன்னார் கொஞ்சநாள் கூட தங்கவில்லை

முன்பே சொன்னதுதான், தொழில்நுட்பமும் யூடியூப்பும் இவர்களின் மாபெரும் எதிரிகள்)

திமுக எந்த மதத்திற்கும் எதிரான கட்சி அல்ல : முக ஸ்டாலின்

இவரென்ன தேர்தலுக்கு பின்பு சொல்லவேண்டியதை முன்னாலே சொல்லிவிட்டார்?

தீபாவளி, விஜயதசமி இன்னும் பல பண்டிகைகளுக்கு வாழ்த்து கூட சொல்லமாட்டார்கள், நெற்றியில் குங்குமமிட்டால் அழிப்பார்கள், பெரிய பகுத்தறிவு தத்துவெல்லாம் பேசுவார்கள்

ஆனால் தேர்தல் வந்துவிட்டால் சர்வத சமத்துவம் மட்டும் வந்துவிடுகின்றது

தேசவிரோதி வைகோ, இந்து விரோதியும் புத்தமத அபிமானியுமான திருமா, இன்னும் சில இஸ்லாமிய சக்திகளுடன் கூட்டு என ஒருமாதிரி முகம் காட்டும் திமுகவினை மக்கள்முன் நிறுத்தும்பொழுது ஸ்டாலினுக்கு ஏதோ உறுத்தியிருகின்றது என்பது மட்டும் நிஜம்

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட விருப்பமனுவை தலைமை கழகத்தில் தாக்கல் செய்தார் கனிமொழி

திமுகவின் முதல் வெற்றிஅறிவிக்கபட்டாயிற்று