தேர்தல் துளி – 20 பெப்ரவரி 2019 தொடர்ச்சி

கொஞ்சம் அரசியல் ஆசையில் இருந்த விஜயகாந்தினை , அவர் மண்டபத்தை இடித்து அரசியலுக்கு தள்ளிய கட்சி திமுக‌

விஜயகாந்த் சிவந்த கண்களோடு அரசியலுக்கு வர முக்கிய காரணம் அது வந்ததும் “தெய்வத்தோடும் மக்களோடும் மட்டுமே கூட்டணி ” என முழங்கினார்

திமுக அதிமுக என இரு கட்சிகளையுமே எதிர்த்து நின்றார், அவர் குடிகாரர் என்றெல்லாம் கலாய்த்தார்கள்

அவரோ தனித்துதான் நின்றார், முதலில் கூட்டணி எல்லாம் இல்லை.

ஒரு கட்டத்தில் அரசியல் சிக்கல் புரிய ஆரம்பித்தது, அவரை மிக நுட்பமாக வளைத்த அதிமுக கூட்டணியில் இழுத்து போட்டது

தன்னை குடிகாரன் என்ற கும்பலுடன் கூட்டணி வைக்க விஜயகாந்திற்கு தயக்கமே இல்லை, ஜெயாவுக்கும் அந்த தயக்கம் சுத்தமாக இல்லை

கவனித்த கலைஞர் “விஜயகாந்த் அவர் வணங்கிய தெய்வத்தோடு கூட்டணி வைத்துகொண்டார்” என மிக பொருத்தமாக கலாய்த்தார்

காலங்கள் மாறின பின்னொரு நாளில் அதே விஜயகாந்திற்காக பாலோடு காத்திருந்தார் கலைஞர்

அரசியல் என்பது இதுதான், இதற்கு ராமதாசும் விதிவிலக்கல்ல, விஜயகாந்தும் விதிவிலக்கல‌

திமுக என்பது விதிவிலக்கே அல்ல, இந்த தலைகீழ் திருப்ப அரசியலை தொடங்கி வைத்ததே அவர்கள்தான்

இப்பொழுதும் விஜயகாந்த் திமுக பக்கம் வருவதாக தெரியவில்லை , இவர்கள் அழைப்பதாகவும் தெரியவில்லை

பாலை கலைஞர் சமாதியிலே ஊற்றிவிட்டதால் இம்முறை பழம் நழுவி விழ பால் இல்லை

ஆக மறுபடியும் ஒரு அடிவாங்க திமுக, விஜயகாந்த் என இருவருமே தயாராகின்றார்கள்

******

கலைஞர் இல்லா தேர்தல், ஜெயா இல்லா தேர்தல் என பலபேர் சொல்கின்றார்களே தவிர‌

சசிகலா இல்லா தேர்தல் என ஒருபயலும் சொல்ல காணோம்,

இன்னும் ஒரு வருடம்தான், அதன் பின்னால் தெரியும் சின்னம்மாவின் சாகச தேர்தல்.

******

நாங்கள் கொள்கையில் தேக்குமரம், கூட்டணிக்கு நாணல் : ராமதாஸ் விளக்கம்

ஆக‌ பதவி கிடைக்கா இடத்தில் வேப்பமரம், முள் மரம், புளியமரமாக ஆகிவிடுவார்கள் போல‌

எப்படியோ தேர்தலில் மொட்டைமரமாக ஆகாமல் இருந்தால் சரி

மரம் வெட்டி கட்சி என அவர்களுக்கு பெயர், அது சரியாகத்தான் இருக்கும் போல..

*******

என்னதான் வெளியே கெத்தாக திரிந்தாலும் 
இன்றைய வாரிசு தலைவர்கள் எப்படி எல்லாம் தலையினை பிய்த்து பெரிசுகளை திட்டி தீர்ப்பார்கள் என்பதை அன்றே சொல்லியிருக்கின்றார் மகான் கவுண்டமணி

“30 ரூபா டா ..30 ரூபா” என்பதை 3 தொகுதி முதல் 30 தொகுதிவரை பொருத்தி பாருங்கள்

மகான் கவுண்டமணியின் தீர்க்கதரிசனம் புரியும்

******

காங்கிரஸ் திமுக கூட்டணிபற்றி இன்னும் தகவல் அறிவிக்கபடவில்லை

அநேகமாக இருவரும் தனி தனியாக அறிவிப்பார்கள் போல..

******

தலைகாட்ட முடியல டாடி, திமுக பாய்ஸ் ரொம்ப மோசமா திட்ரானுக‌

மகனே, திராவிட கட்சியோடு கூட்டு இல்லை என்ற நாம் அதிமுக பக்கம் வந்திருக்கின்றோம் என்றால் அவர்கள் மகிழ்ச்சி அடைய வேண்டாமா?

எப்டி டாடி?

மகனே, கூட்டணி கிடையாது என சொன்ன நாம் இப்பொழுது அதிமுக பக்கம். அடுத்த சட்டமன்ற தேர்தலில் திமுக பக்கம் போக எவ்வளவு நேரமாகும்?

ஓஓ டாடி அங்கேயும் போறோமா?

எங்கேயும் போகலாம், மகனே அந்த பக்கம் இருக்கும் பாமக இந்த பக்கம் வர எவ்வளவு நேரமாகும் என்று கூட நிதானமா யோசிக்க தெரியாத திமுக என்ன கிழிக்க போகின்றது?

ஆமா டாடி

இதுக்குத்தான் மகனே வீட்டுகொரு பெரியவர் வேணும்னு சொல்றது..”