தேர்தல் நேரமல்லவா

இந்த ஆர்.எஸ்.எஸ், இந்து மகா சபா, சங் பரிவார் எனப்படு சங்கிகள், மண்ணின் மதம் என சீறும் மங்கிகளுக்கு எல்லாம் சிந்து நதி என்பது பெரும் கனவு

எப்படியாவது அகண்ட பாரதம் அமைத்து, சிந்து நதி இந்தியாவில் ஓடுகின்றது என சொல்லவேண்டும் என்பது அவர்களின் லட்சியங்களில் ஒன்று

யார்தான் அக்கனவினை காணவில்லை? அலெக்ஸாண்டர் கண்டான், என் ராஜ்யத்தில் சிந்து ஓடவேண்டும் என படையெடுத்தான், அவனுக்கு பின் ஏராளமானோர் படையெடுத்தனர்

பின் பிரிட்டிஷ் சாம்ராயத்திலும் அந்நதி ஓடியது

அந்த நதி இந்தியாவில் ஓடவேண்டும் அதில்தான் என் அஸ்தி கரைக்கபட வேண்டும் என எழுதிவைத்துவிட்டு காந்தியினை சுட்டான் கோட்சே

அவனின் சீட கோடிகளும் அவன் அஸ்தியினை இன்னும் பாதுகிக்கின்றன, சிந்து நதி இந்தியாவில் ஓடும்பொழுதுதான் கரைப்பார்களாம்

அப்படிபட்ட கும்பலுக்கு இப்பொழுது கவலை வந்திருக்கின்றது

எப்பொழுது இந்தியாவில் சிந்துநதி ஓடுவது? எப்பொழுது கரைப்பது? நமக்கு பின் அஸ்தியினை காக்க போவது யார்? என்றெல்லாம் கடுமையாக யோசித்திருக்கின்றார்கள்

அப்பொழுதுதான் அந்த சிந்தனை வந்திருக்கின்றது

நிச்சயம் அகண்டபாரதம் அமைக்க முடியாது, பாரத மாதாவுக்கு போஷாக்கு கொடுத்து எடை அதிகரிப்பு செய்வதெல்லாம் முடியாத விஷயம், பாகிஸ்தானை இந்தியாவோடு இணைப்பது இனி முடியாத விஷயம்

என்ன செய்யலாம்? நமக்கு பாகிஸ்தானா சிக்கல்? இல்லை சிந்துதான் சிக்கல்

பாகிஸ்தானை இழுக்க முடியாது, ஆனால் சிந்துவினை இழுக்கலாம்

ஆம் பாகிஸ்தானுக்கு செல்லும் நதியினை திருப்பி யமுனையில் இட்டால் யமுனை சிந்துவாக மாறும், இதோ சிந்து எங்கள் ஆட்சியில் இந்தியாவில் ஓடுகின்றது

கோட்சே கனவினை நிறைவேற்றிவிட்டோம், இதோ அஸ்தியினை கரைக்கின்றோம் , பாஜக என்பது பராக்கிரம கட்சி என அழிச்சாட்டியம் செய்யலாம்

அதற்கான வாய்ப்பினை காஷ்மிர் தாக்குதலில் பெற்று இப்பொழுது நதிமறிப்போம் என்கின்றார்கள்

ஒரு சிலர் இதை தாங்கி பிடிக்கின்றார்கள்

ஏன் வாஜ்பாய் ஆட்சியில் கட்டவில்லை அதுவும் காந்தகார்,கார்கில் காலத்தில் கட்டவில்லை, இப்பொழுதும் பதான்கோட் தாக்குதலுக்கு பின் கட்டவில்லை?

அப்பொழுதெல்லாம் கட்டாமல் இப்பொழுது சிமென்ட் சகிதம் லிங்கா ரஜினியாக கிளம்புவது அரசியல் நடிப்பன்றி, தேர்தலுக்கான நடிப்பன்றி வேறென்ன?