தேர்தல் துளிகள் 27/03/2019 (1)

ராசாத்தி அம்மாள் நிச்சயம் முருகனிடம் வேண்டியிருக்க மாட்டார், ஆனால் வள்ளியிடம் வேண்டியிருப்பார்

ராசாத்தி அம்மாளின் கஷ்டம் அந்த வள்ளி ஒருத்திக்குத்தான் முழுமையாக புரியும் என்பதால் வேண்டுதல் நிச்சயம் ஏற்கபட்டிருக்கும்

முத்துவேலர் சொத்தே..
முத்தமிழர் வித்தே..
முத்துநகர் முத்தே…

(இதுபோன்ற ஏக அடைமொழிகள் சங்கத்து கைவசம் உள்ளது, வேண்டியவர்கள் தொடர்பு கொள்ளவும்)

தமிழ்நாட்டின் மிகபெரும் சாபக்கேடு அதிமுக அதுவும் அதன் அடுத்த வெர்ஷனான தினகரன் கோஷ்டியும் இத்தேர்தலோடு காணாமல் போக வேண்டும்

(அதிமுக இல்லா இடத்தில் அதனையொற்றி களமிறங்க நினைக்கும் பாஜக தானாக வெளியேறும்..)

40 ஆண்டுகாலம் தமிழகத்தை பிடித்த சனி இந்த அதிமுக..

அது ஒழிவதன்றி தமிழகத்திற்கு விடிவே இல்லை

“அங்க பாருங்க ராகுல், தமிழ்நாட்டுல மச்சான் அரசியல் கொடிகட்டி பறக்குது , இந்த tttv தினகரன், சுதீஷ்ல இருந்து சைமன் மச்சினன் வரைக்கும் நிறைய மச்சான் அரசியல்..

அதெல்லாம் பார்க்காதீங்க வாத்ரா,அப்புறம் உங்க புத்தியும் மாறி தொலையும்., எனக்கே அதை எல்லாம் பார்த்துட்டு உங்கள பார்க்க பயமாகத்தான் இருக்கு..”

எங்களை நம்பி அதிகாரத்தை தாருங்கள்; சிறந்த ஆட்சியை தருவோம்: சீமான்

அங்கிள் சைமனுக்கு என்னாயிற்று என தெரியவில்லை, நடப்பது நாடாளுமன்ற தேர்தல்

அன்னாருக்கு 40 தொகுதி கிடைத்தாலும் அதிகாரம் வராது, இந்தியா முழுக்க அன்னார் வெல்லவும் முடியாது

இன்னொரு கட்சி ஆதரவு தந்தால் அன்னார் ஏற்கமாட்டார், மானம் அவருக்கு முக்கியம்

இதில் இவர் எப்படி இந்திய ஆட்சியினை பிடிப்பார் அதில் சிறந்த ஆட்சி தருவார்?

அவருக்கும் அவர் மச்சினருக்குமே வெளிச்சம்..

தேர்தல் துளிகள் 26/03/2019 (1)

ஒரு பைசா லஞ்சம் ஊழல் இருந்தால் விஷ ஊசி போட்டு கொன்றுவிடுவோம் : சீமான்

சயனைடை கடி, குண்டுவெடித்து சாவு என போதித்த பிரபாகரனின் தம்பி எப்படி பேசுவார்?

இப்படித்தான் பேசுவார்..

எப்பொழுதும் போராட்டம் சிறை என வாழ்ந்த அந்த எளிய தமிழச்சி, அன்றொரு நாள் மாபெரும் மக்கள் நல போராட்டத்திற்கு திமுக மகளிரணி சார்பாகதயாராகி களத்திற்கு சென்ற காட்சி இது

நெற்றியில் உதயசூரியன் எல்லாம் வரைந்து வந்தது குறிப்பிடதக்கது

கேப்டனுக்கு பேசுவதற்கு பயிற்சி அளிக்கபடுகின்றது, “ஒளிமயமான எதிர்காலம்” எனும் எம்ஜிஆர் பாடலை பாடுகின்றார் கேப்டன் : பிரேமலதா

என்னது அந்த பாடல் ராமசந்திரன் பாடியதா? எல்லாம் சகவாச தோஷம்

அது இருக்கட்டும் அம்மணி, கேப்டன்
“மூணு முடிச்சால முட்டாளா ஆனேன் 
கேளு கேளுதம்பி.
.நான் இருந்தேன் தேருக்குள்ள,
இப்போ விழுந்தேன் சேறுக்குள்ள” என்றல்லவா பாடி கொண்டிருக்கின்றாராம்.

ஸ்டாலின் நாகரீகம் தெரியாதவர், மேஜையில் ஏறி சட்டசபையிலே ஆட்டம் போட்டவர் : பழனிச்சாமி

கலைஞர் இருந்தால் எப்படி பதில் சொல்வார் தெரியுமா?

“மேஜைக்கு அடியில் புகுந்து யார் காலிலோ விழுந்து கிடந்தவர்களுக்கு நாம் தரையில் நடப்பது கூட மேஜைக்கு மேல் நடப்பது போலத்தான் தெரியும் உடன்பிறப்பே…”

சில விஷயங்களை கவனித்து பார்த்தால் சைமன் என்பவர் அதிமுக தயாரிப்பு என்பதும், திருமுருகன் காந்தி என்பவன் திமுகவின் தயாரிப்பு என்பதும் தெரிகின்றது

வேல்முருகன் என்பவர் வைகோ போல ஜெயாவின் கண்ணசைவில் இருந்தவர் என்பதும் புலனாகின்றது

இந்த கவுதமன் என்பவர் சைமனின் இசுஸ் காரை பார்த்துவிட்டு அதைபோல் இல்லாவிட்டாலும் ஒரு சுவிப்ட் காராவது வாங்கவேண்டும் என்ற வெறியில் களம் புகுந்திருப்பது நன்றாகவே தெரிகின்றது

டெல்லியில் இஸ்லாமியனை தாக்கினால் “ஹேய்ய்ய் இந்தியாவில் இஸ்லாமியனுக்கு பாதுகாப்பில்லை..” என பொங்குவதும்

தமிழகத்தில் ராமலிங்கம் போன்றோர் கொல்லபட்டாலும், கோவையில் பலநூறு பேர் கொல்லபட்டாலும் அமைதி காப்பது மத சகிப்புதன்மை எனப்படும்

அதைவிட மிகபெரும் சகிப்புதன்மை கோவை குண்டுவெடிப்பு குற்றவாளிகளை விடுவிக்க சொல்வது, அதுதான் இங்கு நாட்டுபற்றும் மதசார்பற்ற நிலையுமாகும்

“எல்லா பேப்பரும் நாம ஜெயிக்கமாட்டோம்ணே எழுதியிருக்காங்க, ஆனா எச்.ராசா நம்மள ஜெயிக்க வச்சிருவார்..”

( செட்டி புள்ள வெட்டி…)

ஸ்டாலினும் கனிமொழியும் கலைஞர் போலவே பேச தொடங்குகின்றார்கள் ஆனால் இடையிலே தங்களுக்கே உரித்தான தடுமாற்றத்தில் தள்ளாடுகின்றார்கள்

கலைஞரை போல மிக அழகாக பேசுபவர் முக அழகிரி ஒருவர்தான், ஆம் சிக்கலான நேரங்களில் ஓரிரு வார்த்தைகள் தவிர கலைஞர் அதிகம் பேசியதில்லை

தெளிவாகத்தான் இருக்கின்றார்கள்..

“ஏண்டா பாஜகாஸ் சிவகங்கை பக்கம் , ராமநாதபுரம், தூத்துகுடி பக்கம் எல்லாம் எப்படி?

கண்டிப்பா ஜெயிப்போம்ணே

டெப்பாசிட் தேறுமா?

அட டெப்பாசிட் வாங்குறதுதான் எங்க வெற்றி, அதுக்குத்தான் இவ்வளவு போராட்டம்

அப்படியா?

பின்ன எச்.ராசா டெப்பாசிட் வாங்கினாலே சிதம்பரத்துக்கு அவமானம்ணே, தமிழிசை வாங்கிட்டா கனிமொழிக்கு பெரிய அவமானம்

அப்படியா?

ஆமா, அதாண்ணே எப்படியாவது டெப்பாசிட் வாங்கி அவங்க மூஞ்சில கரிய பூசுவோம்ணே, அது போதும்ணே மற்றபடி யாரும் ஜெயிக்கட்டும்ணே”

அவர்கள் தெளிவாகத்தான் இருக்கின்றார்கள்..

எங்கள் பிரியதலைவியே வருக

ஏப்ரல் 1க்கு பின் காங்கிரசுக்காக பிரச்சாரம் செய்வேன் : குஷ்பு

ஆக உடனே பாஜக அரசின் சொதப்பல்களை குறிப்பெடுத்து வைத்து குவிக்க வேண்டும், அது ஏகபட்டது இருப்பதால் சிக்கல் இல்லை.

அதை எல்லாம் கொடுத்து தலைவி பிரச்சாரத்திற்கு வரும்பொழுது அவருக்கு வலு சேர்க்க வேண்டும், இதை விட என்ன பெரிய வேலை இருக்கின்றது?

இதை செய்யாவிட்டால் சங்கம் நடத்துவதன் குறிக்கோளே அடிபட்டு போகும், சாத்தான் கூட அதன்பின் நரகத்தில் சேர்க்கமாட்டான்

2 ஆயிரம் ரூபாய் நோட்டு ஏன் வாபசாகவில்லை என்ற பெரும் கேள்வியோடு சங்கம் தலைவியினை வரவேற்கின்றது..

பிரியங்காவிற்கே வழிகாட்டும் எங்கள் பிரியதலைவியே வருக….அரிய வழி தருக

ஸ்டாலினை சாட‌ கொஞ்சமும் தகுதி கொண்டவர் அல்ல

என்ன இருந்தாலும் அந்த கட்சியில் தனக்கு நினைவு தெரிந்த காலத்தில் இருந்து இருப்பவர் ஸ்டாலின்

ஒரு சலூன் கடையில்தான் திமுக இளைஞரணியினை அவர் தொடங்கினார், வரலாறு அப்படித்தான் சொல்கின்றது, அதுதான் அவரை கட்சிக்குள் பலமாக கொண்டுவந்தது

கட்சியினை ஒரு நொடியும் பிரியாமல் அதோடு வளர்ந்தவர் ஸ்டாலின்

மிசா காலத்தில் சிறையில் ஸ்டாலின் அடிவாங்கியபொழுது கமலஹாசன் என்பவர் பரதநாட்டியம் ஆடிகொண்டிருந்தார்

இந்திராவினையும் ராமசந்திரனையும் திமுக எதிர்த்த காலங்களில் கமலஹாசன் ஏராளமான பெண்களோடு கிசுகிசுக்கபட்டுகொண்டிருந்தார்

ஸ்டாலின் அரசியலில் போராடிகொண்டிருந்தபொழுது கமலஹாசனுக்கு நடனமும் சினிமாவும் உணவும் நீருமாயிருந்தது

1990களில் ஜெயலலிதாவினை எதிர்த்து ஸ்டாலின் அரசியல் செய்ய தொடங்கியபொழுது கமலஹாசன் சரிகாவின் பார்வைக்கு தவமிருந்தார்

சென்னை மேயராகவும், பல தொகுதிகளின் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்து ஏராளமான பணிகளை ஸ்டாலின் செய்தபொழுது கமலஹாசன் கவுதமி பக்கம் பார்வையினை திருப்பியிருந்தார்

ஒரு இடத்திலாவது சமூகத்தை பற்றியோ அரசியல் பற்றியோ கமல் பேசியதே இல்லை

அப்படிபட்ட கமலஹாசன் இன்று திடீரென வந்து முக ஸ்டாலினை கேள்வி கேட்பதெல்லாம் ஏற்றுகொள்ளமுடியாத விஷயம்

ஸ்டாலின் அரசியல் கடலிலே நீந்தியவர் இன்னும் நீந்துபவர். ஆனால் கமல் திடீரென அரசியலில் குதித்த கரடி

எந்த இடத்திலும் ஸ்டாலின் தான் அரசியலை விட்டு செல்வதாக சொன்னதே இல்லை, கமலஹாசனோ இரு வருடம் முன்பு வரை அரசியலுக்கு வருவதாக சொன்னதே இல்லை

இவ்வளவுக்கும் கலைஞருக்கு நெருக்கமாகவும் அடுத்த இடமாகவும் இருந்தவர் முரசொலிமாறன், மாறன் இருக்கும்வரை ஸ்டாலின் தொண்டனே

இப்பொழுதும் மாறன் இருந்திருந்தால் ஸ்டாலின் தலைவராகியிருக்க முடியாது

ஒரு சில இடங்களில் ஸ்டாலின் தடுமாற அதுதான் காரணம், ஆம் மாறனே கலைஞரின் அரசியல் வாரிசு. ஸ்டாலின் மாறனாகி கலைஞராக சில தடுமாற்றம் வரத்தான் செய்யும்

கலைஞர் இல்லா இடம் என்பதை விட, முரசொலிமாறன் இல்லா இடத்தைத்தான் ஸ்டாலின் நிரப்பினார், அதுதான் சரி.

இந்த கமலஹாசன் என்பவர் ஸ்டாலினை சாட‌ கொஞ்சமும் தகுதி கொண்டவர் அல்ல, ஒரு காலமும் அந்த தகுதி வரவும் வராது

தேர்தல் என ஒன்று வந்துவிட்டால்

தேர்தல் என ஒன்று வந்துவிட்டால் கன்னியாகுமரியில் கிறிஸ்தவர்கள் இருப்பதும், அதைவிட முக்கியமாக அவர்களுக்கு கால் இருப்பதும் பொன்னாருக்கு சரியாக தெரிந்துவிடுகின்றது

வாழையடி வாழை

மக்களோடு மக்களாக வந்து நின்றவர்கள் ராஜிவும் கலைஞரும்

ஆம் எளிய மக்களோடு மக்களாக அவர்களை சாலையில் பார்க்கலாம், அவர்களோடு நடப்பார்கள் அவர்களோடு பயணிப்பார்கள், மக்களில் ஒருவராகவே மாறுவார்கள்

ஜெயா போன்ற அரசியல்வாதிகளோ இல்லை அவரின் அரசியல் வாரிசுகளோ அப்படி அல்ல, அங்கொரு ராஜ பாணி தோன்றும்

ராஜிவுக்கு பின் ராகுலும், கலைஞருக்கு பின் ஸ்டாலினும் அதே பாணியில் வந்திருப்பது மிக்க ஆறுதல்

வாழையடி வாழையாக வருவது என்பது இதுதா