பசும்பொன் முத்துராமலிங்க தேவர்

( (நம் பதிவினை காப்பி அடிக்கும் Dhurai Sathish போன்றவர்களே, இதை வழக்கம் போல் காப்பி செய்து எங்காவது வெட்டுபட்டு செத்தால் சங்கம் பொறுப்பல்ல..)

அவருக்கு சுதந்திர போராட்டத்தில் நிச்சயம் எந்த அளவு இடம் உண்டோ, அந்த அளவு சர்ச்சைகளிலும் இடம் உண்டு

14 வயதில் ஒரு மாஜிஸ்ரேட் காலை வெட்டிய வழக்கில் அவர் சேர்க்கபட்டது முதல் இம்மானுவேல் கொலைவரை குற்றம் சாட்டபட்டுகொண்டே இருந்தார் என்பது இன்னொரு பக்கம்

எனினும் மதுரை ஆலயத்தில் தாழ்த்தபட்டோர் நுழைய துணை நின்றது, ஒரு அயோக்கியனை தண்டிக்க ஒரு ஊரையே கைரேகை சட்டம் என வதைத்த கொடுமையினை நீக்க துணை நின்றது என அவருக்கு இன்னொரு நல்ல பக்கமும் உண்டு

அவரை முழுக்க நேதாஜி என சொல்லவும் முடியாது, அதே நேரம் 100% கொடுமையானவர் என்றும் சொல்லமுடியாது, சில நல்ல குணங்களும் அதே நேரம் “நாம் ஆள பிறந்தவர்கள்” எனும் ஒருவித மனப்பான்மையும் இருந்திருக்கின்றது

முரண்பாடுகளின் கலவை அவர்.

சர்ச்சைகள் இருந்தாலும் அவரின் நாட்டுபற்றும், இந்து மதத்தின் மேலான பெரும் பக்தியும் போற்ற வேண்டியது

சுருக்கமாக சொன்னால் ஒரு மூர்க்கமான சமூகத்திற்கு மூங்கணாங்கயிறு போடமுயன்று அதனால் பலத்த சர்ச்சைகளை சந்தித்த தலைவர் அவர்

இன்று அவருக்கு பிறந்த மற்றும் நினைவு நாள். சந்தேகமில்லை தமிழகம் நினைவு கூற வேண்டிய சுதந்திர போராட தியாகி அவர்

ஆனால் அளவுக்கு மீறி அவர் நினைவிடத்தில் கும்மாங்குத்து குத்துவதுதான் வாக்கு அரசியல், இது எங்கு தொடங்கிற்று?

தேவர்சாதியின் தனிபெரும் தலைவராக விளங்கியவர் அவர், அவருக்கு முன்பு பாண்டிதுரை போன்றவர்கள் இருந்தாலும், தன் தனிபெரும் தைரியம் மற்றும் அதிரடி பேச்சுக்களாலும் போராட்டங்களாலும் பிரபலமானார் தேவர்

அந்த கம்பீரமான பிரம்மசரிய கோலம் அவருக்கு தனி மரியாதையினை பெற்று கொடுத்தது

காங்கிரஸில் இருக்கும்பொழுது அவருக்கு ஒத்துவரவில்லை, எப்படி பெரியார் தான் பெரும் பணக்காரர், எனக்கு காங்கிரஸில் பெரும் பதவி இல்லையா? என வெளிவந்தாரோ, அப்படித்தான் பெரும் ஜமீந்தாரான எனக்கு காங்கிரஸில் பெரும் பொறுப்பு இல்லையா என வெளிவந்தவர் தேவர்

இன்னொன்று அவரின் போக்கிற்கு நேதாஜிதான் சரியான வழி எனவும் கண்டார்

பின் நேதாஜி வருவார், நேருவினை விரட்டுவார் என அரசியல் செய்துகொண்டிருந்தார், தேவருக்கு தனிபட்ட வோட்டு வங்கி நிலையாய் இருந்தது

இந்நிலையில் கமுதி பக்கம் கலவரம் வெடிக்க தாழ்த்தபட்டோருக்கான தலைவராக இம்மானுவேல் சேகரன் உருவானார், காமராஜரின் ஆசி அவருக்கு இருந்தது. அரசியல் அல்ல மாறாக தாழ்த்தபட்டோருக்கு ஏதும் செய்ய வேண்டும் என்ற எண்ணம் அது

ஆனால் அது அரசியலாக்கபட்டது, இம்மானுவேல் சேகரன் கொலை , முதுகுளத்தூர் கலவரம் எல்லாம் தமிழக கோர காட்சிகள், 5 மறவர் சுட்டுகொல்லபட்ட பொழுதெல்லாம் தமிழகம் கடும் பதற்றத்தில் இருந்தது

இதிலிருந்து காட்சிகள் மாறின‌

திமுக ரகசியமாக இதனை பயன்படுத்தியது, பார்வர்டு பிளாக் என தேவரின் கட்சி இருந்தாலும், அந்த சமுதாயம் திமுக பக்கமே முதலில் சாய்ந்தது

விளைவு என்னாயிற்று காமராஜர் தோற்கடிக்கபட்டார், ஆச்சரியமாக எந்த சமூகத்திற்காக காமராஜர் களமிறங்கினாரோ அச்சமூகமும் அவருக்கு வாக்களிக்கவில்லை

1967ல் நிலமை இது, 5 ஆண்டுகளில் காட்சி மாறியது. ஆம் புரட்சியாளர் ராமசந்திரன் தனி கட்சி கண்டார். அவருக்கு கன்னி தேர்தல் அல்லது முதல் பரிட்சை திண்டுக்கல் இடைதேர்தல் வடிவில் வந்தது

மாயன் எனும் வேட்பாளரை மாயத்தேவர் என பெயரை சாதியோடு சேர்த்து நிறுத்தினார் புரட்சி தலைவர், எப்படிபட்ட புரட்சி

அது அமோக வெற்றி, எப்படிபட்ட வெற்றி என்றால் திமுக 3ம் இடத்திற்கு செல்லும் அளவு அமோக வெற்றி

அதில் புன்னகைத்தார் ராமசந்திரன், அதிமுகவின் கட்சியின் அடிப்படை அஸ்திவாரம் அந்த சாதி என குறித்து கொண்டார்

அதன் பின் அந்த சாதியின் திருநாவுக்கரசு , லதா போன்ற பலரை தன் அருகில் இருக்குமாறு பார்த்து கொண்டார். பாரதிராஜா போன்றோரை முத்தமிட்டார்

இது போதுமா? போதாது என்றுணர்ந்த ராமசந்திரன் தேவர் குருபூஜையினை பிரமாண்டமாக கொண்டாட ரகசிய உதவிகள் செய்தார்

அவர் 11 ஆண்டுகாலம் அரசியலில் நிலைக்க இந்த சமுதாய ஒத்துழைப்பு அவருக்கு கைகொடுத்தது

அதன் பின்வந்தார் ஜெயலலிதா, அதனை அப்படியே அப்பட்டமாக செய்தார். திருநாவுக்கரசை தன் பக்கம் வைத்திருந்தார் ஜெயலலிதா எம்ஜிஆர் பாணியில்

பின் அந்த இடத்தை சசிகலா பிடித்ததும் அடுத்த இன்னிங்க்ஸ் ஆரம்பமானது, தேவர் ஜெயந்தி விழா தூள் கிளப்பியது, நேரே சென்று வணங்கினார் ஜெயா, 15 கிலோ தங்க கவசம் எல்லாம் சாற்றினார்

வாழும்பொழுது ஒரு கிராம் தங்கம் அணியாமல் வாழ்ந்த சாமியார் தேவருக்கு, 15 கிலோ தங்கம் சாற்றினார் ஜெயா, ஏன் என்றால் அதுதான் வாக்கு வங்கி அரசியல்

தான் பதவி விலகும்பொழுது கூட பன்னீர்செல்வம் எனும் அச்சமுதாயக்காரரை அமர்த்தும் அளவு சாதிஅரசியல் கட்டுக்குள் இருந்தார் ஜெயா

ஜெயா பிராமணர் சந்தேகமில்லை, ஆனால் அவர் ஆட்சியினை தேவர் ஆதரவு ஆட்சியாக திருப்பியவர் சசிகலாவும் நடராஜனும்

இன்று பன்னீர், டிடிவி என வரிந்துகட்டி செல்கின்றார்கள்.

நல்லவரோ கெட்டவரோ ஆனால் தேவர் என்பவரின் சில நோக்கங்களுக்காக திரட்டபட்ட கூட்டம், ராமசந்திரன், ஜெயா, தினகரன், பன்னீர்செல்வம் என பலருக்கு பயன்பட்டுகொண்டிருப்பதுதான் விதி

ஒரு சுதந்திரபோராட்ட வீரரின் நினைவுநாளை குருபூஜையாக்கி அதை பெரும் அழிச்சாட்டியத்துடன் கொண்டாடும் அளவு நிலமையினை விபரீதமாக்கியது புரட்சி தலைவர் ராமசந்திரன்

அந்த அழிச்சாட்டியம் ஒளிந்துவிடாமல் தொடர பாடுபட்டவர் ஜெயா

இன்று அது எங்கோ போய் நிற்கின்றது, என்று திருந்துவார்களோ தெரியாது, நம்பிக்கை இருக்கின்றது ஒரு காலமும் திருந்தமாட்டார்கள்

தேவர் மேல் சர்ச்சைகள் ஏராளம் உண்டு ஆனாலும் மதுரை ஆலய போராட்டம், கை ரேகை போராட்டம், நேதாஜியோடு போராடியது, டெல்லி பாராளுமன்றத்தில் மிக தைரியமாக‌ கர்ஜித்த முதல் தமிழன் போன்ற பல சிறப்புக்கள் அவருக்கு உண்டு

அதை மறுக்க முடியாது

உண்மையில் இதை எல்லாம் தாண்டி தேவர் மிகபெரிய பக்திமான், தமிழறிஞர். அவரின் தமிழும் முருகபெருமான் மேலான அபிமானமும் சிலாகிக்க கூடியது

நிச்சயம் இந்த வம்புகளில் சிக்காமல் இருந்திருந்தால் அவர் பெரும் தமிழறிஞராக, கிருபானந்தவாரி போல பெரும் முருகபக்தராக சொற்பொழிவாளராக வந்திருக்க முடியும்

ஆனால் பொதுவாழ்வு, சமூக சூழல் என பல சங்கிலிகளில் சிக்கிவிட்ட அவரின் வாழ்வு திசைமாறிற்று, விதி வலியது

அந்த தேவருக்கு அஞ்சலிகள்..

[ October 30, 2018 ]

Image may contain: 1 person, standing and outdoor
============================================================================

இதோ பசும்பொன் கிராமத்தில் மொட்டை அடிக்கின்றார்கள், படையல் வைக்கின்றார்கள், மஞ்சள் விழா நடத்துகின்றார்கள், இன்னும் ஏராளம்

தங்க கவசம் எல்லாம் அணிந்து, தமிழகமெங்கிருந்தும் பக்தர்கள் வந்து ஏக பக்தி கூடவே அழிச்சாட்டியம்

இது நம்பிக்கையா இல்லை மூட நம்பிக்கையா என்பது யாருக்கு தெரியாது, விஷயம் அது அல்ல‌

இந்த பகுத்தறிவாளன் , திராவிட புரட்சியாளன், பெரியாரின் பெல் எவனாவது இதை கண்டிப்பானா

கோவில் நகைகளால் என்ன பயன்? அதை ஏழைகளுக்கு கொடுத்தால் என்ன என கேட்கும் பெரியார் கோஷ்டி இங்கே தேவருக்கு ஏன் தங்க கவசம்? அதை ஏழைகள் கல்விக்கு செலவழித்தால் என்ன என கேட்குமா?

நல்ல சாலைகள் இல்லா , தொழிற்சாலைகள் இல்லா பின் தங்கிய அந்த பகுதிக்கு இந்த பணத்தை செலவழிக்கலாமே? ஏன் வீணாக தேவருக்கு விழா? என ஒரு பகுத்தறிவாளன் கேட்டானா?

தேவர் என்பவர் சாதாரண மனிதன்? அவருக்கு ஏன் இவ்வளவு செலவு ? பெரியார் சொன்ன பகுத்தறிவில் சிந்தியுங்கள் என சொல்ல ஒருவன் உண்டு?

ஒரு வாதத்திற்கு முருகனே கடவுள் இல்லை, அவரை வணங்கிய முத்துராமலிங்கமும் காட்டுமிராண்டி என சொல்லட்டும் பார்க்கலாம்

மாட்டார்கள், சொல்லவே மாட்டார்கள்.

எங்கெல்லாமோ போராட்டம், புரட்சி, மானம் ஊட்டுதல், அறிவு ஊட்டுதல் , தமிழனுக்கு அறிவு கொடுத்தல் என கிளம்பும் கோஷ்டி பசும்பொன் பக்கம் செல்லட்டும் பார்க்கலாம்

சென்றால் திரும்ப மாட்டார்கள்

ஆக எந்த சாதியினை சீண்டினால் திருப்பி அடிப்பார்களோ அங்கு இந்த கோஷ்டி சத்தமே காட்டாது

மாறாக எந்த பிராமண கோஷ்டி திருப்பி அடிக்காதோ அங்குதான் இவர்களுக்கு பகுத்தறிவு ஊற்றெடுக்கும், போராட தோள் திணவெடுக்கும்

[ October 30, 2018 ]

============================================================================

ஏம்மா ரெகானா பாத்திமா, மேரி ஸ்வீட்டி இன்னபிற போராளி பெண்களே

சபரிமலைக்குத்தான் செல்வீர்களா? எங்கே பசும்பொன் வரை வந்து செல்லுங்கள் பார்க்கலாம்…

ஏம்பா மணிமாறா, பசும்பொன்னுக்கு செல்பவன் ஆதிக்க சாதி பக்தன் என சொல்லுங்களேன் பார்க்கலாம்

ஏம்பா இரண்டாம் பெரியார் திருமுருகன் காந்தி, கொஞ்சம் பசும்பொன் பக்கம் போய் மூட நம்பிக்கையினை கண்டியுங்கள் பார்க்கலாம்..

எங்கே வெட்டுவிழுமோ அங்கே ஒரு புரட்சியாளனையும் காணமுடியாது என்பது தமிழக யதார்த்தம்

[ October 30, 2018 ]

============================================================================