இந்த திரிபுரா முதல்வர் இப்படி சிக்குவது புதிதல்ல

Image may contain: 1 person, text

வாத்து மூளைகாரன் எல்லாம் பிஜேபியில் இருப்பது கொடுமை அல்ல, அதில் சிலர் முதல்வராய் இருப்பதுதான் கொடுமை

குடிநீர் வழங்கும் அணை எல்லாம் இனி வாத்து நீந்துமாம், பிரதமர் மோடி கூட வாத்து நீந்திய நீரினைத்தான் இனி குடிப்பாராம்

ஆனால் தைவான் வாத்து மட்டுமே நீந்த வேண்டும் என அவர் கேட்காமல் இருந்தால் நல்லது

மாட்டு பாசத்தை தொடர்ந்து வாத்து பாசம்.. அடுத்து என்ன பாசமோ நிச்சயமாக மனிதர்கள் மேலாக மட்டும் இருக்கவே இருக்காது

இந்த திரிபுரா முதல்வர் இப்படி சிக்குவது புதிதல்ல,கட்சிக்கு ஏதாவது செய்வதாக இருந்தால் மேலிடம் இவரை ஏதும் தூணில் சங்கிலி போட்டு கட்டி வைப்பது நல்லது

இனிய ஓண அஷம்சுக்கள்

Image may contain: 1 person

அன்றொரு காலத்தில் முந்தைய தமிழர் நாடான‌ சேரநன்னாட்டினை ஆண்டுகொண்டிருந்தான் பெரிய முப்பாட்டன் மகாபலி.

ஆட்சி என்றால் அப்படி ஒரு அற்புதமான ஆட்சியினை கொடுத்தான் என்கிறது புராண வரலாறு. நாட்டில் எங்கும் அமைதி, வளம், செழிப்பு அதற்கும் மேல் நோய் நொடி என்பது ஒரு நொடி கூட இல்லை

வெள்ளம் எல்லாம் வரவே இல்லையாம், வந்தாலும் உதவி தாருங்கள் என்ற நிலை எல்லாம் இல்லவே இல்லையாம்

எல்லோருக்கும் எல்லாம் இருந்துவிட்டால் நாட்டில் குழப்பம் ஏது?

மன்னன் மாவீரனும் கூட இந்த லோகம், கீழோலகம், மேலோகம் என எல்லா உலகினையும் வென்று ஆண்டுகொண்டிருந்தான். ஆட்சி என்றால் பொற்கால ஆட்சி

ஆனால் மன்னனுக்கு சிக்கல் பெரிய இடத்து சண்டையில் வந்தது, பெரிய இடம் என்றால் தேவர்கள் அசுரர்கள். இதில் மாமன்னன் மகாபலியின் கரம் அசுரர்கள் பக்கம் இருந்தது, அசுர குரு சுக்கிராச்சாரியாரே அவனுக்கும் ராஜகுரு

மகாபலி சக்கரவர்த்தி எல்லா கேரள மக்களையும் போல பெரும் விஷ்ணுபக்தன். மலையாளம் அப்படித்தான், இன்றைய பத்மநாப சுவாமி கோயிலின் தங்க புதையலே அதற்கு சாட்சி

தோல்வி மேல் தோல்வி பெற்ற தேவர்கள், அவர்களின் புகலிடம் விஷ்ணுவிடம் சென்று அழுதார்கள். காரணம் மகாபலி சக்கரவர்த்தி அசுரர்களின் பெரும் பலம். அவனை அடக்காமல் தேவர்குல வெற்றி சாத்தியமில்லை

கர்ணனை போல தவறான இடத்தில் இருந்தவன் நல்லவன் மகாபலி

விஷ்ணுவும் மகாபலியினை அடக்கினால் அசுரர்கள் வீழ்வார்கள் என கணித்து அவனை விரட்ட சித்தமானார்

மிக குள்ள உருவில் வந்தார், எப்பொழுதுமே ஒருவனின் வீக் பாயிண்ட் பார்த்து அடிப்பதில் விஷ்ணு கெட்டிக்காரர். மகாபலியின் பலவீனம் அவனது கொடை மனம் கர்ணனை போல‌, எதனை கேட்டாலும் மறுக்க மாட்டார்.

அவனிடம் மூன்றே மூன்று அடி நிலம் வேண்டும் என்றார், அவனும் ஏனய்யா 3 அடி நிலம் வைத்து என்ன செய்வீர்? என கேட்கவில்லை, தவமிருப்பார் போலும் என நினைத்து அவ்வளவுதானா என தரதயாரானன்.

ஆனால் சுக்கிரச்சாரியாருக்கு வந்திருப்பவர் யார் என் தெரிந்து தடுத்தார், ஆனால் அன்னாளைய ஆச்சாரப்படி கமண்டல நீர் வார்த்து தானம் தர எழும்பினான் மகாவலி

ஆனால் மகாபலி அழிந்தால் அசுரகுலம் அழியும் என எண்ணிய சுக்கிராச்சாரி வண்டாக மாறி கண்டலத்தை அடைத்து கன்னட வாட்டாள் நாகராஜ் போல நீர் வராமல் அழிச்சாட்டியம் செய்தார் .

ஆனால் குச்சியால் குத்தி வண்டை விரட்டிய வாமணன் விரும்பிய வரம் அடைந்தார்

அவ்வளவுதான் நொடிபொழுதில் அணுகுண்டு வெடித்துகிளம்பும் பெரும் புகையாய் விஸ்வரூபமெடுத்தார் பெருமான், ஒரே அடியில் வானை அளந்தார், இன்னொரு அடியில் பூமி அளந்தார் மூன்றாவது அடி வைக்க இடமில்லை, மன்னா எங்கே உன் வாக்கு என்றார்?

அவனும் கொஞ்சம் சிந்தித்து, பெருமாளே பாதாள உலகை அளந்துகொள் என சொன்னால் முடிந்தது விஷயம், ஆனால் விஷ்ணு பக்தன் தன் கடவுளை பார்த்த மகிழ்வில் தன் தலையினை மிதிக்க கொடுத்தான்

அதோடு அவனை பாதாளம் தாழ்த்தி தேவர்களை நோக்கி புன்னகை பூத்தார் வைகுண்ட நாயகன், ஆனாலும் அவன் மீது அவருக்கொரு பரிவு இருந்தது, அவன் இருந்த இடம் தவறே அன்றி அவன் மகா நல்லவன், அவனிடம் ஒரு வரம் கேள் என்றார்

கேட்டான் மாமன்னன் மகாபலி, அவனது பெரும் குணமும், மணமும் அங்கேதான் விளங்கிற்று

தனக்காக அவன் கேட்கவில்லை, அசுரர்ககாக கேட்கவில்லை, தன் நாட்டு மக்களுக்காக கேட்டான், இதுதான் நல்ல தலைவனுக்கு அடையாள.

எம் மக்கள் ஒருகுறையும் இன்றி வாழவேண்டும், வருடா வருடம் ஆவணி திருவோண நட்சத்திரத்தன்று நான் வந்து பார்க்கவேண்டும், அவர்கள் வாழ்வாங்கு வாழ்வதை கண்டு மகிழ வேண்டும் என்றான்

அவனது உயர்ந்த உள்ளபடியே அவனுக்கு வரமளித்தார் பகவான், அப்படி அவன் வருடம் ஒருமுறை கேரளம் வந்து தன் மக்களை இல்லம் தோறும் சந்திக்கின்றான் என்பது அவர்கள் நம்பிக்கை

அவனை வரவேற்க அத்திப்பு கோலமிடுவார்கள், புத்தாடை அணிவார்கள், மகிழ்ச்சியினை காட்ட படகு ஓட்டுவார்கள், பொன்னூஞ்சல் ஆடுவார்கள், அவனும் மகிழ்ந்து பாதாளம் திரும்புகின்றான்

அதாவது தன் மக்கள் வாழ்வாங்கு வாழ்வதில் அவனுக்கொரு ஆனந்தம், இந்நிகவுதான அவர்களின் ஓணம் பண்டிகை, நெடுங்காலமாய் தொடரும் விழா

அவன் நல்ல அரசன், ஆனால் அசுவமேத யாகத்தின் போது தலைகணத்தில் செருக்கில் ஆடினான், விஷ்ணுவந்து தலையிலே மிதித்தார் என்றொரு கோணமும் உண்டு

திராவிட புரட்சி அந்நாளைய திராவிட பகுதியான கேரளாவினை தொட்டபொழுது வாமணன் ஆரியன், மகாபலி திராவிடன் தந்திரமாக ஆரியர்கள் திராவிடனை அழித்தனர். அதனால் இதனை கொண்டாட கூடாது என கோஷங்கள் எழுந்தன.

பகுத்தறிவு இப்படியெல்லாம் அங்கும் விதைக்கபட்டது ஆனால் பலனில்லை

மலையாளிகளுக்கு எதை ஆதரிக்க வேண்டும் எதை எதிர்க்க வேண்டும் என மிக சரியாக தெரியும். தேசியத்தில் இருப்பார்கள் மாநில கட்சி நடத்தமாட்டார்கள்

ஆனால் மாநில உரிமையினையும் கலாச்சாரத்தையும் அட்டகாசமாக காப்பார்கள்

அதே குள்ள வாமணனுக்கு அங்கு கோவில் உண்டு ஆனால் யாராவது மகாபலியினை தொட்டால் அவர்களுக்கு கோபம் சீறும்

மகாபலி கொடுர மன்னன் அதனால் வாமணன் கொன்றான், அவன் செத்ததை மக்கள் கொண்டாடுகின்றார்கள் என்றெல்லாம் கதைகள் திரிக்கபட்டன அதுவும் அங்கு பலனற்று போயின.

திமுகவின் திடீர் நண்பராகிவிட்ட அமித்ஷா இடையில் வாமண ஜெயந்தி என சொல்லிபார்த்தார் கண்டித்தனர் மலையாளிகள், அதன் பின் அவர் கேரளா செல்லும்பொழுது சன்னிலியோனை காண கூடி அவரை தந்திரமாக பழிவாங்கினர் மலையாளிகள்.

இப்படி மலையாளிகள் அந்த திரிபுகளை எல்லாம் கொஞ்சமும் சட்டை செய்யாமல் தலைமுறை தலைமுறையாக கொண்டாடி மகிழ்கின்றனர் மகிழட்டும்

மகாபலியினை நினைக்கும் பொழுதெல்லாம் மகாபாரத கர்ணனே நினைவுக்கு வருவான். இருவரும் மகா நல்லவர்கள், கொடையாளிகள், ஆனால் இருந்த இடம் தவறு

நண்பர்களை விட்டுகொடுக்காமல் இறுதிவரை நட்பில் நின்றவர்கள், கொடை கொடுத்தே தங்கள் முடிவினை தேடியவர்கள், இருவருமே யாருக்கும் கிடைக்கா விஸ்வரூப தரிசனத்தை கண்ணார கண்ட பேறு பெற்றவர்கள்.

இன்று ஓணம் பண்டிகை

அக்கால ஆரியபட்டா முதல் இந்நாளைய ஏவுகனை விஞ்ஞானி டெய்சி தாமஸ் வரை

சிறந்த ஓவியர்களில் ரவிவர்மா வரை.

அக்கால பத்மினி முதல் இன்றைய மஞ்சிமா மோகன் வரை, ஜேசுதாஸ் , ஜென்சி முதல் சுவர்ணலதா வரை, செம்மீன் முதல் பிரேமம் வரை அவர்கள் கொடுத்த கலைஞர்கள் வரிசை மிக பெரிது, அது இருக்கட்டும் சொன்னால் சொல்லிகொண்டே செல்லலாம்.

மலையாள மக்களுக்கு எல்லோரும் ஓண வாழ்த்து சொல்லும் நேரம், நாமும் சொல்லிகொள்வோம் இப்படியாக‌

இறந்துவிட்ட பத்மினி சகோதரிகள், கல்பனா, நடிகை சுஜாதாவினை மட்டும் விட்டுவிட்டு செம்மீன் ஷீலா முதல், தீபா (அவர்தான் முந்தானை முடிச்சு டீச்சர்) அம்பிகா, ரேகா, ரேவதி என அந்த வரிசையில் லட்சுமி மேனன் வரை, அல்ல அல்ல மஞ்சுமா மோகன் வரை எல்லோருக்கும் ஓணம் வாழ்த்துக்களை சொல்லிக்கோள்வோம், அப்படியே சரிதா நாயருக்கும்,

அதிலென்ன வஞ்சனை ஷகிலாவிற்கும் ஒரு வாழ்த்து நமக்கெல்லாம் மலையாளம் கற்றுகொடுத்தவர் அல்லவா.

வாருங்கள் எல்லோருக்கும் சேர்த்து சொல்லிகொள்ளலாம்

இனிய ஓண அஷ்ம்சுகள்

(குஷ்பூ மலையாளி இல்லை என்பதால் இவ்வாழ்த்து சாத்தியபடாது)

(நயனுக்கு மட்டும் வாழ்த்து சொல்லும் எண்ணமில்லை, வேண்டுமானால் நித்யா மேனனுக்கு சொல்லி கொள்ளலாம்)

நண்பர் Babu Rao போன்றோர் நயந்தாரா படத்தின் முன்பு நின்று இன்று முழுக்க மந்திரம் போல அஷம்சுகள் சொல்லிகொண்டே இருப்பார்கள்.

நெல்லுக்கு பாயும் நீர் புல்லுக்கு பாய்வது போல, அமைச்சர்களுக்கு கிடைக்கும் லஞ்சம் பி.ஏக்களுக்கும் பாய்வது போல இவர்களுக்கு சொல்லும் வாழ்த்து இன்ன பிற மலையாளிகளுக்கும் கொஞ்சம் வாழ்த்துக்கள் போய் சேரட்டும், அவர்களுக்கு அவ்வளவு போதும்.

அந்த வாமண அவதாரம் அப்படி பிரசித்தி பெற்றது, காரணம் யுத்தத்தால் வெல்லமுடியா மாவீரனை குள்ளன் வடிவில் தானம் கேட்டு வந்து பகவான் வீழ்த்திய வரலாறு

இன்றும் கேரளாவில் திரிகராவில் அவன் அரண்மனைக்கு மேல்தான் வாமணன் கோயில் உண்டு என்கின்றார்கள். ஆச்சரியமாக மகாபலி கேட்டுகொண்டதன் பேரில் கேரளா கடவுளின் சொந்த மாநிலமாகவும் ஆயிற்று.

இயற்கை செழுமை, அழகு, கல்வி இன்னபிற விஷயங்களில் அது அப்படித்தான் தெரிகின்றது. அரேபிய எண்ணெய் வளங்களிலும் குறிப்பிடதக்க பங்கு அவர்களுக்கு வருகின்றது,

பூமிக்குள் புதைத்த மகாபலி அரேபியாவில் பெட்ரோல் பணத்தை மலையாளிகளுக்கு வாரி வழங்குகின்றாரோ என்னமோ?, இருக்கலாம்

இது புராதன கால வாமணன் வரலாறு

தமிழகத்தில் ஒரு வாமண அவதாரம் 93 ஆண்டுகளுக்கு முன்பு உதித்தது, 1950களில் அது விஸ்வரூபமெடுத்தது தமிழகத்திடம் மூன்று அடி கேட்டது.

ஒரு காலால் தமிழை அதன் வசன உலகை, வசன எழுத்து உலகை அளந்தது.

இன்னொரு காலால் அரசியல் உலகினை அளந்தது

மூன்றாவது காலை தமிழகத்தை மகாபலிபோல நன்றாக ஆண்டு கொண்டிருந்த காமராஜர் மீது வைத்தது

காரணம் காமராஜர் நல்லவர்தான் ஆனால் இருந்த இடம் காங்கிரஸ், அது சரியில்லை என அது உலகிற்கு சமாதானம் சொன்னது.

ஆனால் காமராஜர் வரம் ஏதும் கேட்டதாக தெரியவில்லை அவர் போக்கில் சென்றுவிட்டார்

இன்று அந்த வாமண அவதாரமும் அது விஸ்வரூபமாய் வந்து உருவாக்கிய மாயைகளும் தமிழகத்தை ஆண்டுகொண்டிருக்கின்றன.

எப்படிபட்ட ஆட்சி என்பதை சொல்லி தெரியவேண்டியதில்லை, கலியுக அவதார ஆட்சிகள் இப்படித்தான் இருக்கும்

ஆனால் நிச்சயமாக அவர் வாமணர். மிக குள்ளமாய் வந்து கொஞ்சம் கொஞ்சமாக விஸ்வரூபமெடுத்து தமிழகத்தின் எல்லா திசைகளையும் தன் காலால் அளந்துவிட்ட வாமணன் அவர்.

தமிழக கலியுக வாமண அவதாரம் எடுத்திருக்கும் விஸ்வரூபம் அப்படியானது, ஆனால் இந்த விஸ்வரூபத்தை தாண்டி இன்னொரு மாற்றம் இங்கே இப்போதைக்கு சாத்தியமில்லை.

மக்களோ தமிழ்நாட்டு மகாபலி திரும்பவும் வரமாட்டானா என காத்துகொண்டே இருக்கின்றனர்.

வரலாற்றில் மகாபலி, கர்ணன், காமராஜர் எல்லாம் ஒரே வரிசையே, வஞ்சத்தால் வீழ்த்தபட்ட மகா நல்ல ஆட்சியாளர்கள்.

மலையாளிகளுக்கு அவர்களின் மகாபலி ஆண்டுக்கொருமுறை வருகின்றான்

தமிழ்நாட்டு மகாபலி இனி பிறந்துவந்தால்தான் உண்டு,விடுங்கள் தமிழக தலைவிதி அப்படி

என்ன சொல்ல? அதே தான்

பத்மினி, சுஜாதா, கல்பனா தவிர நயன் தாரா தவிர‌ எல்லா சேர நன்னாட்டு பெண்களுக்கும் இனிய ஓண அஷம்சுக்கள்

(முன்பெல்லாம் தன் ஆட்சி கலைக்கபடும் பொழுது மகாபலியின் பலமும், நல்லாட்சியும் எப்படி மேலிருப்பவர்களுக்கு பொறுக்கும் என மிக சரியான வசனத்தை சொல்வார் கலைஞர், அதுதான் கலைஞர்)

ஆரியபட்டரின் நாடு என்பதை நிரூபித்திருக்கின்றது இந்தியா

Image may contain: 3 people, text

நிலவில் நீர் இருப்பதை உறுதி செய்திருக்கின்றது நாசா

எப்படி என்றால், நிலவுக்கு சென்றதாக சொன்ன அவர்களோ இல்லை நிலவினை சுற்றி ஆய்வு செய்த செயற்கை கோள்களும் அல்ல

ரஷ்ய கோள்களும் அல்ல‌

இந்தியாவின் சந்திராயன் அனுப்பிய படங்களே அதை ஊர்ஜிதம் செய்திருக்கின்றது

விண்வெளி உலகம் இந்தியரையும் அவர்களின் துல்லியமான செயற்கை கோளையும் பாராட்டி கொண்டிருக்கின்றது

ஆரியபட்டரின் நாடு என்பதை நிரூபித்திருக்கின்றது இந்தியா

அந்த விஞ்ஞானிகளுக்கு தேசத்தின் வாழ்த்துக்கள்

மெட்ராஸ் டே

Image may contain: one or more people, sky, outdoor and water

மெட்ராஸ் டே

சீனாவின் பட்டும், இந்திய மிளகும் பட்டுசாலை எனும் சாலை வழியாக துருக்கி மூலம் ஐரோப்பாவினை அடைந்துகொண்டிருந்தன, அது ஒன்றே பிரதான இணைப்பு.

அலெக்ஸாண்டர் காலம் முதல் போப்பாண்டவர்கள் உச்ச காலம் வரை அது ஐரோப்பியர் கட்டுபாட்டிலே இருந்தது, வியாபாரம் அதன் மூலமே நடந்தது.

இது யார் கட்டுபாட்டில் இருப்பது என்று தொடங்கிய அரசியல் போர், பின் மதச்சாயம் பூசப்பட்டு சிலுவைப்போர் என தொடர்ந்தது, வலுவான துருக்கியர் அனாசாயமாக விரட்டினர், இந்நிலையில்தான் எப்படியோ ஆசியா சுற்றி வந்து , இந்தியாவினை பார்த்து வாயினை பிளந்தான் அவன்

இன்று நாம் ஐரோப்பாவினை ஆஆஆ என பார்கின்றோம் அல்லவா? அப்படி.

Image may contain: 1 person, smiling, close-upஉலகின் வரலாற்றை மாற்றி போட காரணமாயிருந்தவன் மார்க்கோ போலோ, இத்தாலிக்காரர் (இத்தாலியருக்கு இந்தியா என்றாலே ஒரு விருப்பம் போலும் ), வியாபாரிதான் ஆனால் இந்தியா, சீனம் என ஆசியாவினை சுற்றிவிட்டு ,செல்வம் இந்தியாவில் குவிந்து கிடக்கிறது என்ற ஐரோப்பியரின் கனவிற்கு, ஆமாம் நானே கண்ணால் பார்த்த சாட்சி என்று சூடமேற்றி சத்தியம் செய்தவர்.

அதுமுதல் “இந்தியா கிறுக்கு” பிடித்து அலைந்தது ஐரோப்பா, தேடினார்கள், முதல்வெற்றி போர்ச்சுகல்லுக்கு உபயம் வாஸ்கோடகாமா, பலர் வந்தார்கள் , அவர்கள் வரும்பொழுது, முக்கால சோழ நாட்டின் பகுதியான அந்த கடற்கரை நாயக்கர்களுக்கு கட்டுபட்டதாயிருந்தது, ஆனாலும் ஆண்டு கொண்டிருந்தது ஆற்காடு நவாப்.

அந்த பகுதியை சுற்றி சுற்றி பார்த்தார்கள், வியாபாரம் செய்ய வந்தவர்கள்தான் ஆனால் போர்த்துகீசியரின் சமயபற்று ஆழமானது, ஒரு கிறிஸ்தவ போதகர் எப்படியோ இந்த பகுதிக்கு வந்திருக்கிறார், இறந்திருக்கிறார், அவரின் கல்லறை அங்கிருக்கின்றது என்பதை கண்டுகொண்டு ஆராய்ந்தார்கள், அமைதியானார்கள்.

முழங்காலிட்டு பிதா,சுதன்,பரிசுத்த ஆவி அடையாளமிட்டு சொன்னார்கள், இது இயேசுகிறிஸ்து கூட இருந்த செயிண்ட் தாமஸ்(போர்த்துகீசிய மொழியில் சாந் தோம்ஸ்), அவருக்கு ஆலயமும் கட்ட தொடங்கினார்கள் “சாந்தோம்” என பெயரிட்டார்கள்,வணங்கினார்கள்.

(புனித தோமையார் இந்தியா வந்தார் என்பதற்கு நச்சென்ற ஆதாரமில்லை, ஆனால் யாரோ ஒரு கிறிஸ்தவ துறவி வந்திருக்கிறார், பெயர் தாமஸாக இருக்கலாம்)

ஒரு மாலுமியாக அந்த போர்த்துகீசியரும் வந்தார், நீண்ட‌ தாடிவைத்திருந்தார், “மெட்ருஸ்” என்பது அவரின் பெயர், வந்த இடத்தில் இறந்தார், அவரை புதைத்த இடத்திற்கு அடையாளமிட்டார்கள் “மெட்ராஸ்”, இதுதான் 1996 வரை நீடித்த பெயர்.

பின்னால் வந்த பிரிட்டனும்,பிரான்சும் போர்ச்சுக்கல்லை பிடரியில் பிடித்து தள்ளி விரட்ட, அழுதுகொண்டே மலாக்கா சென்றனர். ஆனால் அந்த “மெட்ராஸ்” என்ற பெயர் மாறவில்லை, வெள்ளையரும் அப்படியே அழைத்தனர், தமிழில் அது “மதராசபட்டினம்” ஆயிற்று.

அந்த இடத்திற்கு கொஞ்சம் தள்ளி, பிரிட்டானியர் கோட்டை கட்டினர், அந்நாளைய பிரிட்னுக்கு புனித ஜார்ஜ, தெற்கத்தியருக்கு பெரும்பாலும் முனியாண்டி, மதுரை வீரன், இசக்கியம்மன், சுடலையாண்டவர் போல அவர்களுக்கு இங்கிலாந்தின் காவல் தெய்வம் ,புனித ஜார்ஜ் பெயரினை இட்டார்கள். மறக்காமல் ஒரு மாதா கோயிலும் கட்டிகொண்டார்கள்.

கோட்டைக்கு நிலம் வாங்கிய நாள் இன்று ஆகஸ்ட் 22ல் கொண்டாடும் சென்னை தினமாம், கோட்டை திறக்கபட்டநாளில்தான் சென்னை தினம் கொண்டாடி இருக்கவேண்டும், ஆனால் யாரோ புண்ணியவான் பத்திரம்முடிந்த நாளையே குறித்துவிட்டார்கள், பரவாயில்லை.

வெள்ளையர்கள் தென்னிந்தியாவிற்கு செய்த பெரும் உதவி அந்த கோட்டை, கிட்டதட்ட 90 வருடங்கள் மதராஸ் ராஜதானி அதாவது madras presidency (கன்னடம், கேரளம்,ஆந்திரா,தமிழ்நாடு) என தென்னிந்தியாவின் கட்டுப்பாட்டு அறையாக திகழ்ந்ததும் அந்த கோட்டை, மாநிலங்கள் பிரிக்கபட்டபின் இன்றுவரை தமிழக தலைவிதி எழுதபடுவது எல்லாம் அந்த கோட்டைதான், பலவகை விவாதங்ள், தலைவரின் சிறப்புரைகள்,சட்டங்கள், தீர்மானங்கள் என‌ இன்னும் பல சிறப்புகளுக்கு அடையாளம் அந்த கோட்டை.

இத்தாலியின் வெனிஸ் போலவே திட்டமிட்ட நீர்வழிச்சாலையினையும் வெள்ளையர்கள் அமைத்திருக்கின்றார்கள், அந்த சென்னை அப்படித்தான் இருந்திருக்கின்றது, பின்னாளில் எல்லாம் நாசமாய் போய்விட்டது.

எதனை ஒழுங்காக பராமரித்தோம் நாம்?.

இந்த இடம் கோட்டைக்காக வாங்கும் பொழுதும், அதில் பெரும் லண்டன் கனவான்கள் ஆளும்பொழுதும், நிச்சயம் திருக்குவளை வாரிசும், மைசூர் வாரிசும் வந்து சண்டையிடும் என்றெல்லாம் நினைத்திருப்பார்களா? விதி எப்படி எல்லாம் ஆடுகின்றது.

அட அதன் பின் தேனிக்காரரும், கோவைக்காரரும் வந்து ஒன்றாக இணைவார்கள் என யார் எதிர்பார்த்திருப்பார்கள்?

அக்கோட்டையில்தான் இந்தியாவில் வெள்ளையர் ஆட்சியினை தொடக்கி வைத்த ராபர்ட் கிளைவ் வசித்தான், அதன் மாடத்திலிருந்து அவன் தேநீர் பருகுவானாம், அவனின் திருமணம் கூட சென்னை கோட்டையில்தான் நடந்தது,

அப்பொழுது சென்னை பகுதி நதிகள் எல்லாம் ஓடங்கள் ஓடுமாம், அதில் அவனுக்கு பிடித்தமான நதியில் அவன் படகோட்டுவானாம்

அதில் ஒன்று கூவம், இன்று நாறி கிடக்கும் கூவம், விடுங்கள். அக்காலம் அவ்வளவு அழகாய் இருந்திருக்கின்றது.

நிச்சயமாக சென்னைக்கு திருப்புமுனை கொடுத்ததே அந்த கோட்டைதான், அது அமையாவிட்டால் சென்னை இந்த அளவிற்கு வளர்ந்திருக்காது, , அசுரவேகத்தில் கிட்டதட்ட 60 கிராமங்களை விழுங்கி இன்று பிரமாண்டமாய் எழுந்து நிற்கிறது, இன்று கிட்டதட்ட 80லட்சம் மக்கள் வாழும் நகரம், ஆசியாவின் குறிப்பிடதக்க நகரங்களில் ஒன்று

பகை நாடுகளின் பெரும் இலக்குகளில் சென்னையும் ஒன்று, சில நாடுகளின் ஏவுகனைகளின் நுனி சென்னை நோக்கியே திருப்பபட்டு நிற்கிறது. அது அவ்வாறாக இருப்பதில் கொழும்பிற்கும் மகிழ்ச்சி.

சென்னையும், அதற்கு காரணமான ஜார்ஜ் கோட்டையும் பல ஆபத்துக்களை கடந்துள்ளன், பாண்டிச்சேரி பிரென்ஞ் கவர்னர் டூப்ளேவிற்கு அதன் மீது ஒரு கண், பதிலுக்கு வெள்ளையர் அவர் முதுகை உடைத்துவிட்டார்கள், ராபர்ட் கிளைவ் எத்தனையோ போர்களுக்கு அங்கிருந்துதான் திட்டமிட்டான், உத்தரவு கொடுத்தான்.

மாவீரன் மருதநாயகம் பிரெஞ்ச் படைகளை விரட்டி அதனை மீட்டு தான் தன் வீரத்தினை நிரூபித்துகாட்டினான்.

முதலாம் உலகப்போரின் போது உலகை மிரட்டிய ஜெர்மனியின் நீர்மூழ்கி எம்டன் சென்னை கோட்டையை குறிவைத்து தாக்கியது,(அந்த கல்வெட்டு இன்றும் உண்டு), முதலும் கடைசியுமாக சென்னை மீது நடந்த ராணுவ தாக்குதல் அது, அதன் பின்னர் ஆபத்தில்லை

ஆனால் ஆபத்து மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்படும் பொழுது எழுந்தது, சென்னை எங்களுக்கு சென்னை வேண்டும் அல்லது சண்டிகர் போல பொதுநகராக இருக்கலாம் என போராடினர் தெலுங்கர்கள், கிட்டதட்ட அவர்களுக்கு சாதகமான சூழல், அன்றேல்லாம் ஐதராபாத் சிறு நகரம், விசாகபட்டினம் தூத்துக்குடி அளவிற்கே இருந்தது, விடமாட்டோம் என பிரளயம் செய்தனர் தெலுங்கர்கள்.

“எங்க இருந்தா என்ன இந்தியாவில தான இருக்குண்ணேன்??” என காமராஜர் சிந்திக்க, “வெங்காயம் அப்படியும் அது திராவிடநாட்டிலதான இருக்கு” என்று பெரியாரும் ஒதுங்கிகொண்டனர்,அண்ணாவோ பணம் படைத்த பெரியாரை எதிர்த்து என்ன செய்ய என சிந்தித்த காலம், கருணாநிதி அன்று கலைஞர் அல்ல, ஆனால் அறியபட்ட வசனகர்த்தா, அவர் என்ன ஆகபோகின்றார் என்பது அவருக்கே தெரியாத காலம், போராட யாருமில்லை,

ஒரே ஒருவரை தவிர அவர் ம.பொ.சிவஞானம், தமிழரசு கட்சி நிறுவணர்.

அங்கிள் சைமன் தான் முதலில் தமிழர் கட்சி கண்டவர் ,ஆதித்தனார்தான் வழிகாட்டி என யாராவது சொன்னால் அவர்களை அப்படியே ராஜபக்ஸேவிடம் ஒப்படைப்பது அவருக்கு நலம், அரசியலையாவது கற்பிப்பார்.

பலர் தமிழியக்கம் நடத்தினர் அவரில் சிலப்பதிகாரத்தை கரைத்து தெளித்த “சிலம்பு செல்வர்” என அறியபட்ட ம.பொ.சி பிரசித்தம், அவரை விட அவர் மீசை பிரசித்தம், அண்ணாவின் மயக்கும் தேன் தமிழில் சற்று மங்கிபோனவர் ம.பொ.சி.

ஆனால் தமிழரின் எல்லையை காத்த போராட்டம் இவரால் மட்டும்தான் நடைபெற்றது, அவரின் எழுச்சியான போராட்டத்தில் சென்னை தமிழகத்திற்கு வந்தது, திருத்தணியும் வாங்கிகாட்டினார், திருப்பதி முதல் திருஅனந்தபுரம் வரை தமிழரின் எல்லை என முழக்கமிட்டார்.

திரு என்பது தமிழ்பெயர், திருப்பதி தமிழனுக்கே சொந்தமான அடையாளம், என ஆதாரத்தோடு அவர் முழங்கிய முழக்கம் கொஞ்சமல்ல‌

திருப்பதியும் உங்களுக்கா என தெலுங்கள் பொங்கி தற்கொலை முயற்சி வரை சென்றனர், “தேவுடா” தமிழகம் வர மறுத்தார் அங்கே தங்கிவிட்டார், கொஞ்சம் தமிழகம் போராடியிருந்தால் திருப்பதி கிடைத்திருக்கும்,இந்து அறநிலையதுறை அமைச்சருக்கு போரே நடந்திருக்கும்.( பல ஊழலும் நடந்திருக்கும் ), கிடைக்கவில்லை அதுவும் நல்லது.

தந்திரமாக கேரளம் முந்திகொண்டு திருவனந்தபுரம் எங்கள் தலைநகர் என்றது, நிச்சயமாக அன்று அது அவர்கள் தலைநகராக இருக்க சம்பந்தமில்லாதது, அரசியலில் முந்திகொண்டார்கள், அதுவும் பரவயில்லை, இல்லை என்றால் பதமநாபசாமி கோயில் என்ன ஆகியிருக்குமோ, சுரங்கம் அமைத்து தூக்கியிருப்பார்கள், மணலையே விடாத தமிழகம் இது.

சினிமா ஸ்டூடியோக்கள் கூட சென்னையை நம்பாமல் சேலத்தில்தான் அக்காலத்தில் கட்டபட்டன, முதன் முதலில் துறைமுகமாக மட்டும் அறியபட்ட சென்னை கொஞ்சம் கொஞ்சமாக எல்லா தொழிலின் சந்தையாக‌ மாறிற்று, இன்று சென்னையின் நிலை வேறு, தமிழகத்தின் எல்லா கிராமங்களிலிருந்தும் அதனோடு நேரடியாகவோ இல்லை மறைமுகமாகவோ தொடர்பில்லாதவர் யாருமில்லை.

மக்கள் தொகை பெருக,பெருக சில பிரச்சினைகளும் பெருகும், அதனில் சென்னை சிக்கி இருக்கலாம், ஆனால் சில சிறப்புக்கள் சென்னைக்கு எப்போதும் உண்டு.

சாதிய கலவரமோ, இல்லை மத,இன‌ ரீதியான வன்முறைகளிலோ சிக்காத இந்திய நகரங்களில் சென்னையும் ஒன்று, கல்கத்தா,மும்பை என பெருந்தீ எழும்பி தாண்டவமாடிய நகரங்கள் உண்டு, சென்னை அப்படியல்ல, அதன் மக்களும் அப்படியல்ல,

இதுதான் சென்னை இக்காலம் வரை பதித்திருக்கும் முத்திரை.

மயிலாப்பூர் கோயில், கபாலீஸ்வரர் ஆலயம், சாந்தோம் ஆலயம், தாமஸ் மலை,விக்டோரியா ஹாலும் அதிலுள்ள ரவிவர்மனின் ஓவியங்கள், எழும்பூர் மியூசியம், பல தலைவர்கள் வாழ்ந்த இல்லம், விவேகானந்தர் தங்கிய இல்லம், ரோஜா முத்தையா நூலகம், அழகான கடற்கரை, சமாதிகள், ரயில் நிலையங்கள், காமராஜரை தவிர எல்லா முதல்வர்களையும் தமிழகத்திற்கு தந்த ஏ,வி.எம் ஸ்டூடியோ, போயஸ் கார்டன் நாடக பள்ளி என இன்னமும் ஏராள பெருமை கொண்டிருந்தாலும்

முதல் அடையாளம் அந்த கோட்டையே.

அந்த கோட்டை இன்று ராணுவத்திற்கு சொந்தமானது, தமிழக அரசிற்கு தனியாக தலமைசெயலகம் வேண்டும் என்று கலைஞர் ஒரு கட்டடம் கட்டினார், ஆயிரம் சர்சைகள் இருந்தாலும் கட்டடம் அமைப்பதிலும், சிலைகள் அமைப்பதிலும் கலைஞர் எடுத்துகொள்ளும் முயற்சி வியப்புக்குறியது, அது பாஞ்சாலங்குறிச்சி கோட்டையோ?, வள்ளுவர் கோட்டமோ? அல்லது சிலையோ? அவரின் அந்த அக்கறை பாராட்டதக்கது.

காலமாற்றமோ அல்லது ஏதும் நிர்பந்தமோ மாமல்லபுரம் கடற்கரை கோயில் போல ஒரு அழகான கட்டடம் நவீன மாடலில் அமைப்பார் என எதிர்பார்த்திருந்த பொழுதுதான் இந்தியன் ஆயில் எண்ணெய் குடோன் மாடலில் ஒன்றை கட்டினார்கள், உறுதியாக அவர் முழுமனதோடு அதனை ஏற்றிருக்கமாட்டார், அவரின் ரசனை அப்படி அல்ல.

அதுதான் இனி தமிழக தலையெழுத்தினை நிர்ணயிக்கும் பாற்கடல் என தமிழக மக்கள் நினைக்க ஆட்சி மாறியது, முன்னாள் எதிர்கட்சி என்றாலும் எதிராகத்தான் செய்யவேண்டும் என்பதல்ல அதிரடியாகவும் செய்யலாம், மறுபடியும் சென்னை கோட்டை இழந்த ஆட்சிபீடத்தினை பெற்றது.

அங்கு தமிழத்திற்கான திட்டங்களை எப்படி தீட்டுகின்றனர் என தெரியவில்லை, கொஞ்ச நாளைக்கு முன்பாவது ஆட்சி மிக‌ நன்றாக நடக்கிறது என தெரியவேண்டுமானால் ஜெயா டிவி பார்க்கலாம், பெரும் ஜனநாயக படுகொலை நடக்கிறது என்று பார்க்கவேண்டுமானால் சன் டிவி, மக்கள் டிவி பார்க்கலாம்.

இன்று ஜெயா டிவியும் தமிழக ஆட்சி சரியில்லை என புலம்புகின்றது, ஆக எல்லா டிவியும் கரித்துகொட்டும் ஒரு ஆட்சி நடக்கின்றது

இன்று திருவிழா கொண்டாடும் தமிழக தலைநகர மக்களுக்கு நமது வாழ்த்துக்களை தெரிவிப்போம், வெளிநாடுகளில் ஒருவன் தமிழரென்றால் அவர்கள் கேட்கும் கேள்வியே “உனக்கு சென்னையா?” என்பதுதான்.

இது நல்ல துறைமுகம் என கண்ட போர்த்துகீசியரும், கோட்டை அமைத்து சென்னைக்கு அடிகோலிய பிரிட்டிசாரும், அதனை குறிப்பிட்ட இடமாக மாற்றிய ராபர்ட்கிளைவும் (கிளைவின் திருமணம் சென்னை கோட்டையில்தான் நடந்தது), அதனை மாதிரி நகரமாக திட்டமிட்டு கொடுத்த லார்டு ரிப்பனும், பின்னாளில் அதனை தமிழரின் தலைநகராக மாற்றி தந்த ம.பொ.சியும் ஏனோ மனதில் வந்து வந்து போகின்றார்கள்.

(உண்மையில் முதலில் சென்னையினை காத்தவன் ராபர்ட் கிளைவ், அவன் இல்லாவிட்டால் சென்னை பிரெஞ்ச்காரன் வசம் ஆகியிருக்கும்

பாண்டிச்சேரி, கோவா போல ஒரு மாதிரி ஊராக அது மாறியிருக்கும், கிளைவ் அதனை காத்தான்)

இவர்கள் இல்லாவிட்டால் தமிழகத்தில் சென்னையோ, இல்லை சென்னையில் தமிழர்களோ ஏது??

எல்லாவற்றையும் விட மகா முக்கியமான பெருமையினை சென்னை பெற்றிருக்கின்றது, உலகின் எந்த நகருக்கும் இல்லா சிறப்பு அது.

ஆம் அங்குதான் குஷ்பூ வசித்துகொண்டிருக்கின்றார்.

அவ்வகையில் கிளியோபாட்ரா வாழ்ந்த அலெக்ஸாண்டிரியாவிற்கு அடுத்து பெரும் புகழ்பெற்றது குஷ்பூ வாழும் சென்னை, வரலாறு அப்படித்தான் குறித்துகொண்டது.

பிரிட்டன் ராணி மகுடம் கோஹினூர் வைரம் பதிக்கபட்டு பெருமை பெற்றது போல குஷ்புவினால் சென்னை பெரும் பெருமை பெற்றது

சென்னை வாழ் மக்கள் அனைவருக்கும் இனிய சென்னை நாள் நல்வாழ்த்துக்கள்.

இந்தியா ராணுவ ரீதியாக‌ பெரும் பலம் பெற்றுவிட்டது

Image may contain: water and outdoor

ஒரு வழியாக இந்தியா ராணுவ ரீதியாக‌ பெரும் பலம் பெற்றுவிட்டது, கடற்படையின் பலம் அதிகரிக்கபட்டுவிட்டது

இந்தியாவிடம் இதுவரை நீர்மூழ்கியில் இருந்து ஏவப்படும் டார்பிடோ ரக ஏவுகனைகள் கிடையாது

1972 யுத்தத்தின் பொழுது இப்படி ஒரு நீர்மூழ்கியினை பாகிஸ்தானுக்கு அமெரிக்கா கொடுத்தபொழுது அதனால் இந்தியா சந்தித்த சிக்கல் கொஞ்சமல்ல‌

உண்மையில் அந்த யுத்தத்தை நாம் ஹாஜி கப்பலோடே நடத்தி இறுதியில் வென்றோம்

நீர்மூழ்கி கப்பலில் இருந்து ஏவபடும் ஏவுகனை அவ்வளவு முக்கியமானது

எதிரி நாட்டு துறைமுகம் முதல் போர்கப்பல்கள் வரை அட்டகாசமாக இனி தாக்கலாம்

இவ்வகை நீர்மூழ்கிகளே விமானம் தாங்கி கப்பல்களுக்கு பாதுகாப்பும் கூட‌

இந்த சோதனையில் இந்தியா வென்றுவிட்டதாக அறிவிக்கபட்டிருப்பது இந்தியாவில் மகிழ்ச்சியினையும் சில நாடுகளுக்கு ஆச்சரியத்தையும், சில நாடுகளுக்கு பயத்தையும் எரிச்சலையும் கொடுக்கின்றன‌

இதுபோக டாங்கிகளை எதிர்க்கும் நாக் ஏவுகனையினை இப்பொழுது ஹெலினா என தரம் உயர்த்தி வெற்றிகரமாக பசிசோதித்திருக்கின்றது இந்தியா

நவீன இந்தியாவின் பாதுகாப்பு பலம் இப்பொழுது கணிசமாக உயர்ந்திருக்கின்றது

கடற்படைக்கும், அதற்கு உழைத்து கொடுத்த விஞ்ஞானிகளுக்கும் ராயல் சல்யூட்

வந்தே மாதரம்


கார் வேண்டாம், பங்களா வேண்டாம்: சிக்கன நடவடிக்கையில் இம்ரான் கான்

அய்யா, அப்படியே உங்கள் பட்ஜெட்டை விழுங்கும் ராணுவத்தையும் கலைத்துவிட்டு சிக்கனமாக இருங்கள், நன்றாக உங்கள் தேசம் வாழும்


60 ஆயிரம் யானை கதை

Image may contain: outdoor

இந்த தும்பிகளின் அட்டகாசம் தாங்கமுடியவில்லை, முன்பெல்லாம் எரிச்சலை கிளப்பிய கும்பல் இப்பொழுது குபீர் சிரிப்புகளை கொடுக்கின்றது

அதாவது சோழர்கள் தெலுங்கர்கள் அவர்கள் இன விரோதிகள் என சொல்லிகொண்டிருகின்றன, இதே வாய்தான் முன்பு சோழன் முப்பாட்டன், ராஜராஜசோழன் 4ம் பாட்டன் என்றெல்லாம் சொன்னது

60 ஆயிரம் யானை கதை எல்லாம் தும்பிகள் சோழனை பற்றித்தான் சொன்னது, இப்பொழுது பல்டி அடிக்கின்றன‌

வரலாறு என்ன?

சோழர்களில் முற்கால சோழர், இடைக்கால சோழர், சாளுக்கிய சோழர் என பல காலப்பிரிவு உண்டு. இது சேரரிலும் உண்டு பாண்டியரிலும் உண்டு

முற்கால சோழர்களில்தான் செம்பியன் , நலங்கிள்ளி, கிள்ளிவழவன், கோப்பெருஞ்சோழன், கல்லணை கண்ட கரிகாலன் என பலர் வருவார்கள்

சுருக்கமாக சொன்னால் காவேரி பூம்பட்டினம் செழிப்பாக இருந்த காலம் அவை, கண்ணகி காலம்

சிபி சக்கரவர்த்தி, மனுநீதி சோழன், இலங்கையில் ஆண்ட மன்னனான எல்லாளன் எல்லாம் இந்த வகையறா

இவர்களின் ஆட்சி பின்னாளில் ஒய்ந்தது, பூம்புகாரும் கடலில் மூழ்கியது சோழர்கள் வாழ்வில் பெரும் துயர் சூழ்ந்தது

அந்த காலகட்டத்தில் சோழர் அரசை இழந்தனர், பல அரசுகள் பின்பு எழும்பின களபிரர்கள், பல்லவர்கள் என ஆள ஆரம்பித்தனர்

இந்த பல்லவ பேரரசை எதிர்த்துத்தன் பின்னர் விஜயாலய சோழன் என்பவன் இடைக்கால சோழபேரரசினை எழுப்பினான், ஆதித்தன் எனும் பெயர் இக்காலத்திலே வந்தது

மூத்தகுடி எனும் சொல்லே ஆதித்தன் என்பது, இந்த புலிகொடி கூட பல்லவரிடம் இருந்து சோழர் எடுத்தது

விஜயாலயன் வழி வந்த ஆதித்தன் , பராந்தகன் எல்லாம் பல்லவ பகுதிகளை பிடித்து ஆண்டனர் அதாவது சென்னை செங்கற்பட்டு, மகாபலிபுரம் எல்லாம் ஆண்டனர்

செங்கற்பட்டு மாவட்டத்தின் பிரதான ஏரிகள் எல்லாம் இவர்கள் காலத்திலே வெட்டபட்டன‌

இவர்களின் வாரிசாக வந்தவனே சோழற்குல திலகம் ராஜராஜ சோழனும், ராஜேந்திர சோழனும்

அவர்கள் காலத்தில்தான் சோழபேரரசு உச்சம் பெற்றது, தஞ்சை கோவில் எல்லாம் எழும்பியது, கல்லணையிலிருந்து கூடுதல் கால்வாய்கள் எல்லாம் வெட்டபட்டது

தன் பேரரசை காவேரி போன்றே வளமிக்க பகுதிகளான கிருஷ்ணா, கோதாவரி வரை நீட்டித்தனர் இவர்கள்

சோழநாடு சோறுடைத்து என்பது காவேரியால் மட்டும் வரவில்லை செங்கை மாவட்ட ஏரிகள், பாலாறு, தென்பண்ணை, கிருஷ்ணா நதிவரை சோழர்களின் நெற்பூமி இருந்தது

இதில் கிருஷ்ணா நதியினை குறிவைத்த யுத்தத்திலே ஹோய்சாலர்கள், சாளுக்கியருடன் எல்லாம் மோதினார்கள்

இவர்களுக்கு பலத்த சிக்கல்கள் பல்லவர்கள், ஹோய்ச்சாலர்கள் உருவில் வந்தது

புலிகேசி போன்ற சாளுக்கிய மன்னர்கள் சோழர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தனர்.

இன்னொரு எதிர்ப்பு பாண்டிய சிங்கள உறவில் வந்தது

பாண்டியருக்கும் சிங்களளுக்கும் பலத்த உறவு இருந்தது அதாவது சிங்களருக்கு ஒன்று என்றால் பாண்டியர் வருவார்கள், பாண்டியர் சோழனை தாக்கினால் சிங்களர் வருவார்கள்

சிங்களருக்கும் பாண்டியருக்கும் மண உறவு இருந்தது

இந்த தந்திரத்தை தெலுங்கு மன்னர்களுடன், சாளுக்கிய மன்னர்களுடன் சோழர்களும் செய்தனர், இது அக்கால வழக்கம்

வென்ற மன்னனின் சந்ததி தன்னை கொல்லாமல் இருக்க அங்கு மணம் செய்து உறவாவது அலெக்ஸாண்டர் காலத்து பாணி

அப்படியாக சாளுக்கியர் , ஹோய்சாலர்களுடன் இணைந்த உறவினை சோழர்கள் கொண்டிருந்தனர. ஒரு காலத்தில் சாளுக்கியரும் பல்லவரும் அகற்றபட்டு ஹோய்சாலரும் சோழருமே இருபெரும் அரசுகளை கொண்டிருந்தனர்

தன் பரந்துபட்ட பேரரசை பாதுகாக்க இம்மாதிரி சில விட்டுகொடுத்தல்களும் மணவுறவும் சோழர்களுக்கு தவிர்க்க முடியாததாயிற்று

இந்நிலையில் ராஜராஜ சோழனுக்கு கொள்ளுபேரன் காலத்தில் வாரிசு சர்ச்சை வந்தது, அதில் சாளுக்கிய உறவில் பிறந்த குலோத்துங்க சோழன் மன்னரானான்

இங்கிருந்துதான் சோழர்கள் தெலுங்கர்கள் எனும் சர்ச்சை கிளம்பிற்று

சோழர்கள் நடத்தியது அரசு என்றாலும், வியாபாரங்களை காப்பதில் முன் நின்றனர். பல்லவர் வழியே சென்று மலேயா, இந்தோனேஷியா, கம்போடியா, வியட்நாம் வரை அவர்கள் வியாபாரம் நடந்தது

பெரும் கப்பல்படையினை அவர்கள் நாடுபிடிக்க கொண்டிருந்தவர்கள் அல்ல, வியாபாரத்தில் சிக்கல் என்றால் படையெடுத்து சென்று தீர்ப்பார்கள், இப்பொழுது அமெரிககா செய்கின்றதல்லவா அப்படி

பல்லவர்கள் செய்த கடல் வியாபாரத்தை நொறுக்கவே சோழர்களும் பெரும் கப்பல் படை அமைத்தனர், நாடு பிடிக்க அல்ல.

ஆக சோழர்கள் தெலுங்கர்கள் என்பதெல்லாம் இந்த தும்பிகளின் குருவி மூளையில் உதித்துவிட்ட கற்பனைகள்

செங்கிஸ்கான், அலெக்ஸாண்டரின் பரந்த சாம்ராஜ்யங்கள் ஆங்காங்கே மண உறவுகளை ராஜதந்திரமாக ஏற்றுகொண்டதில் இருந்த தந்திரத்தை சோழர்களும் செய்தனர்

இது அக்கால உலக வழக்கம்

இது புரியாமல் குறுகிய புத்தியில் இருந்துகொண்டு சோழர் இந்திர விழா நடத்தினார்கள், சோழர் ஜல்லிகட்டு நடத்தவில்லை, சோழர் பொங்கல் வைக்கவில்லை அதனால் தமிழரில்லை என்பதெல்லாம் அபத்தம்

பல்லவர் பிடியிலிருந்து சோழ்நாட்டை மீட்டார்கள், பெரும் சாம்ராயத்தை நிறுவினார்கள்

பல்லவர் காலத்தில் இங்கு புத்தமதம் பரவி இருந்தது, சோழர் அதை மறுபடி இந்துமதத்திற்கு திருப்பினார்கள்

தஞ்சை கோவில் அப்படித்தான் பிரமாண்டமாக கட்டபட்டது, சிவனுக்காக கட்டபட்டது, பின் தைபொங்கல் , ஜல்லிகட்டு எல்லாம் நடத்தபட்டது, இந்திர விழா விடைபெற்றது

சோழருக்கும் தெலுங்கருக்குமான உறவில் சோழர் தெலுங்கர்கள் என சொல்லதுணிந்த தும்பிகள் பாண்டியர் சிங்கள உறவினை மறக்கின்றன‌

பாண்டிய சிங்கள உறவினை முறிக்கவே ராஜராஜ சோழன் ஈழபடையெடுப்பை நடத்தி அனுதாராபுரத்தை எரித்து மும்முடி சோழன் என பட்டம்பெற்றான்

பாண்டியருக்கும் சிங்களருக்கும் இருந்த உறவின் தொடர்ச்சியினையே பின்பு மதுரைக்கு வந்த நாயக்கரும் தொடர்ந்தனர்

நாயக்க எனும் பெயர் சிங்களரில் பெருகி இருப்பது இப்படியே, அவர்கள் மண உறவில் வந்தவர்கள்தான் கண்டி நாயக்கர் வகையறா

இந்த தும்பிகள் கொஞ்ச காலம் முன்பு நாயக்கர்கள் தமிழனத்திற்கு செய்த கொடுமை பாரீர் என கண்டி நாயக்கன் வீடியோ எல்லாம் வெளியிட்டன‌

ஆனால் நாயக்க சிங்கள உறவிற்கு அடித்தளமிட்டது தமிழர் பாண்டியர் என்பதை மறக்கின்றன‌

தும்பிகளின் ஆராய்ச்சி எப்பொழுதும் அவமானத்திலேதான் முடியும், காரணம் எதை எல்லாம் பேசகூடாதோ அதை எல்லாம் பேசி அவமானபடுவது தும்பிகளுக்கு புதிதல்ல‌

இப்பொழுது சோழர் தெலுங்கர் உறவை சொல்வதாக சொல்லி பாண்டியருக்கும் சிங்களருக்கும் இருந்த உறவை வெளிகொண்டுவருவார்கள்

அது எதில் முடியும்?

பாண்டியர் சிங்களவர்கள் என்ற ரீதியில் போய் முடியும்

தெலுங்கருடன் உறவு பாராட்டியதால் சோழர் தெலுங்கரென்றால் நிச்சயம் அதனை சிங்களவனுடன் செய்த பாண்டியர் சிங்களனே..

கேரளத்தில் நடந்திருப்பது மிகபெரிய அழிவு

கேரளத்தில் நடந்திருப்பது மிகபெரிய அழிவு, அது இன்னும் தொடர்ந்துகொண்டிருக்கின்றது என்பது அதிர்ச்சியான சோகம்

வெள்ளம் வடிந்தபின்னும் நிலமை சுமூகமாக இருக்காது, தொற்று நோய்கள் முதல் பல சவால்கள் எழும்

அடுத்து மிளகு முதல் பல பொருட்களுக்கு தட்டுபாடு வரும், நிச்சயம் அவற்றின் விலை கடுமையாக அதிகரிக்கும்

இப்பொழுதே நல்ல மிளகு சந்தை, வாழை சந்தை இன்னபிற பெரும் ஏற்றுமதிகள் எல்லாம் நிலை குத்தி நிற்கின்றன. பெரும் கோடிகனக்கான நஷ்டம் இதிலே வந்திருக்கின்றது

கேரளத்தில் சுற்றுலா முதல் பல தொழில்கள் பாதிக்கபடும்

வழக்கமாக பீகார் மற்றும் வட இந்தியாவில் இம்மாதிரி பருவமழை காலங்களில் வெள்ளம் பெருகும், கங்கையும், பிரம்பத்திராவும் பொங்கி தீர்க்கும் காலம் அவை

அவற்றிற்கும் கேரளாவின் இந்த பெரும் அழிவிற்கும் வித்தியாசம் உள்ளது ஆனால் மத்திய அரசு வருடாவருடம் ஏற்படும் பீகாரிய வெள்ளம் போல நினைத்துகொண்டிருக்கின்றதோ என்னமோ?

இன்று மோடி வருவதாக சொல்கின்றார்கள் பார்க்கலாம்

பாஜக அபிமானம் இல்லாத மாநில என அதை மத்திய அரசு புறக்கணிக்க கூடாது என்பதே நமது கோரிக்கை

நிச்சயம் இதை தேசிய பேரிடராக அறிவித்து ராணுவத்தை களமிறக்க வேண்டும்

அப்படியே வெளிநாட்டு உதவிகள் கோரபட்டாலும் தவறு இல்லை, நமக்கு இப்போதைய தேவை கேரள மக்களை பாதுகாப்பாக மீட்டு உங்கள் பின்னால் இத்தேசம் இருக்கின்றது, ஏராளமான மக்கள் இருக்கின்றார்கள் என்ற நம்பிக்கையினை விதைத்து அவர்களை காப்பாற்றுவது

அவர்கள் நீர் தராதவர்களாக இருக்கட்டும், முல்லைபெரியாரில் அடம்பிடிப்பவர்களாக இருக்கட்டும்

ஆனால் அந்த விஷயங்களை பேசி அவர்களை விலக்கி வைக்க இது நேரமில்லை, அவர்கள் நிம்மதியான பின் சண்டையிடலாம்

அவர்கள் நம் சகோதரர்கள் என எண்ணி தமிழகம் நீர் முதல் பல்வேறு உதவிபொருட்களை கொட்டுகின்றது, வாழ்த்துக்கள்

ஆக சிறந்த கதைகளை மலையாளத்தில் இருந்து திருடும் தமிழக சினிமா உலகமும் கொடுக்க தொடங்கி இருக்கின்றது

இதில் காதலுக்கு மரியாதை முதல் பல அற்புதமான மலையாள படங்களை திருடி பெயர் பெற்ற விஜய் என்பவரை காணவில்லை

கேரளத்தவர் நம் பங்காளிகள், சகோதரர்கள் அவர்களின் மிக துயரமான நேரத்தில் கை கொடுப்பது நம் கடமை

அந்த கடமையினை செய்யும் ஒவ்வொருவருக்கும் நன்றிகள்

மத்திய அரசு இன்னும் பல உதவிகளை செய்யட்டும், மீட்பு பணிகளில் ராணுவம் களமிறங்கட்டும்

நிச்சயம் இயற்கையினை நாம் வெல்ல முடியாது, ஆனால் கரங்கள் கோர்த்து நின்றால் நம்மை பாதுகாத்து கொள்ளலாம்

அவர்களுக்கு நம்மை விட்டால் யார் வந்து செய்ய போகின்றார்கள் அல்லது செய்ய முடியும்?

கேரள மக்கள் நம் எல்லோரின் அன்பான உதவியாலும் , கொடுக்கும் கரங்களினாலும் வெள்ளத்திலிருந்து மேலேறி வரட்டும்

அவர்களுக்கு உதவிகொண்டே கடவுளிடம் பிரார்த்திப்போம், இந்த மானிட ஒற்றுமை கண்டபின்னாவது அவன் தன் ஆட்டத்தை நிறுத்தட்டும்