பாசிசம் என்றால் என்ன

இந்த விமானத்தில் சோபியா என்பவர் கத்தினார், அதை தொடர்ந்து பாசிச பாஜக என கத்தினார்கள், கத்தினார்களே தவிர பாசிசம் என்றால் என்னவென தெரியவில்லை

புரட்சி என்றாலே எம்ஜிஆரா என அப்பாவிதனமாக கேட்கும் தமிழகத்திற்கு பாசிசம் என்றால் என்ன என்பது எப்படி தெரியும்?

நம்மிடமும் சிலர் கேட்டார்கள், சொல்லிவிடலாம்

உலகில் மக்களாட்சியினை முதலில் கொடுத்த ரோமர்கள் ஒரு சிக்கலான காலகட்டத்தில் அவசர ஏற்பாடாக Cincinnatus. என்பவரை மன்னராக வைத்தார்கள், அவனோ அடக்கி ஆள ஆரம்பித்தான்

அவன் தனக்கு சிலை எல்லாம் வைத்து மகிழ்ந்தான், அப்பொழுது ரோமரின் ஒரு விதமான ஆயுதத்தோடு தான் நிற்பது போல் சிலை வைத்தான் அதன் பெயர் (Fasces) பாசெஸ்

விறகு கட்டுக்குள் நீண்டிருக்கும் கோடாரி ஆயுதம் அது அதுதான் Fasces

இது அக்காலத்தில் பிரபலம், பின்னாளில் அமெரிக்காவில் பல ஐரோப்பியர் குடியேறும்பொழுது இத்தாலியரும் சென்றனர், ஓஹையோ மாநிலத்தில் அந்த மன்னன் பெயரில் சின்சினாட்டி எனும் நகரை அமைத்தனர், அவன் விருப்படி சிலையும் வைத்தனர்

அதை எந்த அமெரிக்க அரசும் இன்றுவரை தடை செய்யவில்லை, உலகில் நாமும் அதைத்தான செய்கின்றோம் என நாயகன் ஜனகராஜ் போல சிரித்துகொண்டு விட்டுவிட்டார்கள்

இந்த Cincinnatus மன்னன் இத்தாலியரின் அடையாளம், அதாவது ஒருமாதிரி அடக்கி ஆண்டிருக்கின்றான், கொஞ்சம் நற்பெயரும் இருந்திருக்கின்றது

அதாவது பெரும்பான்மையினரை அவனின் சிறுபான்மை இனம் ஆட்டி படைத்திருக்கின்றது, அவனின் ஆட்சி அப்படி இருந்திருக்கின்றது

இது சின்சினாட்டஸ் கொள்கை என்றுதான் முசோலினி காலம் வரை இருந்தது

முசோலினி இத்தாலி அதிபரான பொழுது தானும் இடையில் அன்று வந்த சின்சினாட்டஸ் மன்னர் போன்றவன், இத்தாலியின் பெருமையினை மீட்டெடுப்பேன் என சொல்லிகொண்டான்

அந்த சின்சினாட்டி சிலையின் கையில் இருக்கும் விறகுகட்டுக்கு இடையில் கோடரி இருக்கும் அந்த ஆயுதமான பாசெஸ் என்பதில் இருந்து பாசிசம் எனும் கொள்கையினை உருவாக்கினான்

“பாசிசம் என்பது ஒரு மதம். அது சோஷலிசத்தை எதிர்க்கின்றது. ஏனென்றால் சோஷலிசம் தேசிய ஒற்றுமையை குலைக்கும் வர்க்கப் போராட்டத்தை வலியுறுத்துகின்றது.”

“ரோமர்கள் காலத்தில் இத்தாலியர்கள் உலகை ஆண்டார்கள். லத்தீன் மொழியில் இருந்து தான் பிற மொழிகள் வந்த படியால், உலகில் தோன்றிய மூத்தகுடி லத்தீன் பேசினார்கள். அத்தகைய பெருமைக்குரிய இத்தாலி இனம் மீண்டும் தலைநிமிர வேண்டும்…..”

என அங்கிள் சைமன் போலவே சொல்லி கொண்டான்

இந்த பாசெஸ் ஆயுதம் ஒரு காலத்தில் உலகை ரோம் மன்னரின் அடையாளமாக ஆண்டது போல, நாமும் இனி ஆளபோகின்றோம் என சொல்லி பாசிசம் பேசினான்

பாசிசம் என்பது இப்படித்தான் உருவாயிற்று, தமிழில் அதன் அர்த்தம் முசோலினி பாணியில் சொல்லவேண்டுமென்றால் நாம் ஆளபிறந்தவர்கள்

முத்துராமலிங்க தேவர் அப்படி பேசினார், அதன் பின் அங்கிள் சைமன் பேசிகொண்டிருகின்றார்

(பாசிசம் என சொல்லி முசோலினி பின் திரண்ட கூட்டம் போல் அங்கிள் சைமன் பின் திரண்டால் என்ன சொல்லலாம்? சின்சினாட்டி மன்னன் பாசெஸ் ஆயுதம் வைத்திருந்தான் உங்கள் தலைவன் பிரபாகரனோ சயனைடுதான் வைத்திருந்தான்

அதனால் நீங்கள் சயனடைடிசம் தொடங்குங்கள், பாசிசத்தை கேவலபடுத்தாதீர்கள் என சொல்லலாம்)

இப்படி முசோலியால் பாசிசம் என்ற வார்த்தை பிரபலமாகி, பாசிசத்தை வீழ்த்துகின்றோம் என பல நாடுகள் எழும்பி அந்த வார்த்தை பிரபலமாகிவிட்டது

ஆக பாசிசம் என்பது, நாம் ஆளபிறந்தவர்கள் நாம் மட்டும் ஆளபிறந்தவர்கள் என்ற இத்தாலி மொழியின் வடிவமன்றி வேறல்ல‌

ஜோசப் ஸ்டாலின் கம்யூனிஸ்ட் பாசிஸ்ட் அல்ல.

இந்தியாவில் சஞ்சய்காந்திக்கு அந்த பாசிச‌ மனப்பான்மை இருந்தது, அதன் பின் நாம் பார்த்த மிகபெரும் பாசிஸ்ட் பிரபாகரன்

வேறு யாரையும் சொல்லமுடியாது, ஜெயா எல்லாம் பாசிச சாயல் அல்ல , பின்வாங்க வேண்டிய இடங்களில் பின் வாங்கினார்

கலைஞர் சர்ச்சில் ரகம், தந்திரக்காரர்.

முக ஸ்டாலின் போன்றோர் கட்சிக்குள் மட்டும் பாசிஸ்ட் வெளியில் அல்ல‌

ஆக பாசிசம் எனும் கொடும் வார்த்தை பாஜகவிற்கு எல்லாம் பொருந்தவே செய்யாது, அதுவும் தமிழிசை எல்லாம் பாசிஸ்ட் என்றால் அந்த சின்சினாட்டஸ் மன்னன் மறுபடி வந்து அந்த பாஸெஸ் ஆயுதத்தால் அவன் சிலை எல்லாம் உடைத்து முசோலியினையும் சாத்து சாத்திவிட்டு கடலுக்குள் குதித்துவிடுவான்

பாஜக எல்லாம் பாசிஸ்டுகள் என்றால் அந்த சின்சினாட்டஸ் மன்னனுக்கும் அவன் விறகுகட்டு கோடாரிக்கும் என்னதான் மரியாதை?

( அமெரிக்க சின்சினாட்டியில் பாசிஸ்ட் ஆயுதத்தோடு சிலை உண்டு என்றால் அவர்கள் சர்வாதிகாரத்தில் சம்பாதிக்கலாம் என்பதையாவது உணர்ந்தவர்கள்

தமிழிசைக்கு அதுவும் உண்டா? பின் எப்படி அவர் பாசிஸ்ட் ஆவார்?)