தமிழக தலைவிதியினை நிர்ணயிக்கும் பிக் பாஸ்

தமிழகத்தின் மிகபெரும் பிரச்சினையின் மையம் யாரெல்லாம் என்றால், யார் தமிழகத்தின் எதிர்காலத்தையும் வளப்பத்தையும் நிர்ணயிக்கும் மிக முக்கியமான விஷயத்தில் பெரும் சவால் எடுத்திருக்கின்றார்கள் என்றால் இவர்கள்தான்

அப்படி தமிழக பத்திரிகை செய்திகள் , இணைய செய்திகள் இவர்களைத்தான் குறிப்பிடுகின்றன, தமிழகத்தை மாற்றபோகும் மாபெரும் சக்தி இவர்களின் முடிவில்தான் இருக்கின்றது.

தமிழக தலைவிதியினை நிர்ணயிக்கும் மாபெரும் விவாதத்தில் அவர்கள்தான் இருக்கின்றார்கள்

யார் அவர்கள்?

மகத், மும்தாஜ், டோனி, திவ்யா , தாடி பாலாஜி மற்றும் அவன் பொண்டாட்டி


விஷால் கட்சி தொடங்கியதை வரவேற்கின்றேன் : சரத்குமார்

ஒஹோ , எப்படியும் விஷால் கட்சி தன் மரு(மகன்)கட்சி ஆக போகின்றது என மனமார நம்புகின்றார் போல..


இந்த பிக்பாஸ் பற்றி என்ன சொன்னார்கள்

Image may contain: 1 person, smiling, standing and text

இந்த பிக்பாஸ் பற்றி என்ன சொன்னார்கள், அங்கு கேமரா மட்டும்தான் இருக்கும், ரகசியமாக கண்காணிக்கும் விளையாட்டு என்றார்கள்

அப்படி எல்லாம் அல்ல, இது ஒரு ஷூட்டிங் எல்லோரும் கேமரா முன்பு நடிக்கின்றார்கள் என சொல்ல வந்துவிட்டார்கள் படபிடிப்பு தொழில் நுட்ப சங்கத்தினர்

அதாவது பிக்பாஸ் நிகழ்ச்சி படபிடிப்பில் வடமாநில தொழிலாளர்கள்தான் அதிகம் பயன்படுத்தபடுகின்றார்களாம், உள்மாநில தொழிலாளர்களுக்கு வேலை இல்லையாம் அதனால் ஸ்டைக்காம்

ஆக இது படபிடிப்பு போல திட்டமிட்டு செய்யபடும் விஷயம் என்பது உறுதியாயிற்று

இது என்ன வடமாநில தொழிலாளர்கள் வேலை செய்வதால் ஸ்ட்ரைக்?

அதில் நடிக்கும் நடிகைகளில் 90% அயல்மாநில நடிகைகள்தான், நிச்சயம் உள்ளூர் நடிகைகளும் ஸ்ட்ரைக் செய்தே தீரவேண்டும்

அதுபற்றி எல்லாம் யார் பேசபோகின்றார்கள்??


முன்பெல்லாம் கிராமங்களில் சுவருக்கு சுண்ணாம்புதான் பூசுவார்கள்

அந்த சுண்ணாம்பினை சுவற்றில் அடிக்க பனை மட்டையினை ஊற வைத்து பிரஷ் போல செய்வார்கள். அதுவும் வெள்ளை அடித்தபின் நிறம் மாறி இருக்கும்

இந்த பிக்பாஸில் ஒரு மண்டையினை பார்க்கும்பொழுது அந்த பிரஷ் நினைவுதான் வந்தது, அது என்.எஸ்.கே பேத்தியாம்

அவருக்கு இப்படி ஒரு அவமானம் வந்திருக்க கூடாது, இப்படி எல்லாம் வருவார்கள் என்றுதான் விரைவிலே இறந்தாரோ என்னமோ?

ஆளும் அவள் மண்டையும்……


 

அதென்ன ஜனனி “அய்யர்”?

Image may contain: 1 person

அதென்ன ஜனனி “அய்யர்”, பெரியார் பூமியில் இப்படி ஒரு பெயர் இருக்கலாமா?

அந்த அய்யர் பிக்பாஸ் வீட்டு தலைவராக இருக்கலாமா? இது ஆரியவாதம், இனவாதம், இந்துத்வா மோசடி. கமலஹாசன் அவர்களின் ரகசிய ஏஜென்ட் என ஏன் ஒரு பயலும் கிளம்பவில்லை

எல்லா மதம், சாதியினரையும் நுணுக்கமாக உள்ளே அனுப்பி அங்கே அய்யரை ஆளவிட்டிருப்பது மோடி அரசின் பாசிச வெறியினை காட்டுகின்றது, பாஜகவின் ரகசிய அஜென்டாவினை காட்டுகின்றது என ஒரு பயலும் சத்தமே இல்லை

ஒரு பயலும் கிளம்பமாட்டான்

பெரியார், அண்ணா வழியில் வந்த கட்சிக்கு பிராமண ஜெயலலிதாவினை தலைவராக ஏற்ற தமிழகம் அல்லவா?

ஜனனி அய்யரை மட்டும் சாடவா போகின்றார்கள்?

ஏம்பா பாரதிராஜா, ஜனனிங்கிறது உன் பேரு, அய்யங்கிறது நீ வாங்கின பட்டமான்னு ஒரு வார்த்தை கேட்டால் என்ன?

நீர்தான் பெரும் போராளியாச்சே

ஏம்பா ரஞ்சித்து, நீனுமா கேட்கபுடாது

சின்னத்திரைன்னா ஒரு பயலும் கேட்கமாட்டான், காரணம் அவனுக பொழப்புக்கு இவர்கள்தான் விளம்பரம்.

அடேய் தெருவில் போகிற அப்பாவி அய்யரை அடித்து பூனூல் புடுங்கும் தி.க கோஷ்டிகளா, நீங்களுமா தலைமறைவு??

 

பிக் பாஸ் – 2 : 100 நாட்கள் படுஜோராக தமிழகம் மகா மகிழ்ச்சியாக இருக்கும்

பிக்பாஸுக்கு இந்த பொன்னம்பலம் மும்தாஜை அனுப்புவதை விட பழைய சரோஜாதேவி, ஏ.எல் ராகவன், கே.ஆர் விஜயா, சவுகார் ஜாணகி, விஜயகுமாரி கோஷ்டிகளை வீல்சேரில் அனுப்பினால் கூட பழைய படங்களின் அனுபவங்களையாவது பேசிகொண்டிருப்பார்கள்

ஒரே சிக்கல் ஒரு மூட்டுவலி மருத்துவரையும் உடன் அனுப்ப வேண்டும் அவ்வளவுதான்

அப்படியே அக்கால வசனகர்த்தா ஆரூர் தாஸ் முதல் பலரை அனுப்பினால் இன்னும் நன்றாக இருக்கும்

அட அவ்வளவு ஏன் கங்கை அமரன் போன்றவர்களை அனுப்பினால் கூட பழம் அனுபவங்களை கொட்டுவார்கள்

அதை விட்டு யாரென்றே தெரியாத சிலரை அனுப்பி இம்சைபடுத்துகின்றார்கள், காலா படத்தை விட மோசமான தண்டனை இந்த பிக்பாஸ் 2

இந்த பிக்பாஸுக்கு திரையுலகம் மற்றும் மார்டலிங் உலகிலிருந்துதான் பங்கேற்பாளர்கள் வரவேண்டும் என்ற விதியினை மாற்ற வேண்டும்

அரசியல்வாதிகள் 100 நாள் விடுமுறை எடுத்துகொண்டு வந்தால் ஒன்றும் கெட்டுவிடாது, சமூகமாவது அமைதியாக இருக்கும்

Image may contain: 1 personதமிழிசை, எச்.ராசா, திருமா, கிருஷ்ணசாமி, அன்புமணி, துரை முருகன், டிடிவி தினகரன், தங்க தமிழ்செல்வன், பழனிச்சாமி கோஷ்டி, ஈவிகே எஸ் இங்கோவன், அங்கிள் சைமன் என அனுப்பினால் எப்படி இருக்கும்?

100 நாட்களாக படுஜோராக தமிழகம் மகா மகிழ்ச்சியாக இருக்கும்

அவர்களும் வேண்டாமென்றால் இந்த நித்தி, மதுரை ஆதீனம், பால் தினகரன், ஈஷா சாமி, ஜவஹருல்லா கோஷ்டிகளை அனுப்பினால் இன்னும் மாபெரும் கொண்டாட்டமாக இருக்கும்


“மய்யம்” மேடை என்றால் மட்டும் நம்மை அழைக்கின்றார், பிக்பாஸ் மேடை என்றால் அவர் மட்டும் போய் பேசிகொண்டே இருக்கின்றார்

ஹும், பிக்பாஸ் வீட்டுக்கே அனுப்பாத இவரா நம்மை சட்டமன்றம் அனுப்ப போகின்றார்? இவரிடம் இனி மிக கவனமாக இருக்க வேண்டும்

மய்யமும் மண்ணாங்கட்டியும்….


பிக்பாஸ் : எங்க வோட்டுக்கு என்னடா மரியாதை?

Image may contain: 1 person, standingஇந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் பெரும் அவமானபடுவோம் என முன்பே கணித்துத்தான் அதனை திருப்ப கமலஹாசன் தமிழக அரசை அடிக்கடி சீண்டுகின்றாரோ என நினைக்க தோன்றுகின்றது.

காரணம் அவருக்கு அந்நிகழ்ச்சி பெரும் அவமானம், சந்தேகமே இன்றி சொல்லலாம்

ஒரு போட்டி என்றால், ஒருவர் வெளியே சென்றால் சென்றதாகத்தான் இருக்கவேண்டும், அதுதான் ஆட்டம். அல்லது புதிது புதிதாக இறக்காமலாவது இருக்கவேண்டும்

இங்கு இரண்டுமே இல்லை

புதிதாக வந்துகொண்டே இருக்கின்றார்கள், சென்றவர்களும் திரும்பிகொண்டே இருக்கின்றார்கள்

இந்த ஆர்த்தி, ஜூலி எல்லாம் ரசிகர்களால் வாக்களிக்கபட்டு வெளியேற்றபட்டவர்கள், இன்று மறுபடியும் அவர்களுக்கு கதவினை பிக்பாஸ் திறந்திருக்கின்றார்

ரசிகர்கள் வாக்களித்து வெளியேற்றியவர்களை , ரசிகர்களை கேட்காமலே உள் இழுத்துபோடுவது பார்வையாளர் முகத்த்தில் காரி துப்புவது போன்றது.

அங்கிள் சைமன் பாணியில் கேட்பதாக இருந்தால் ” ஏண்டா, அவ்வளவு கேணபயலுகளா நாங்க, வோட்டு போடுண்ணு சொல்லுவ, நாங்க போடனும் அப்புறம் உன் இஷ்டத்து அனுப்பி வைப்ப‌

அப்ப நங்க என்ன … க்கு பார்க்கணும்,

எங்க வோட்டுக்கு என்னடா மரியாதை?, கேட்க நாதி இல்லையே, இந்த அநீதியினை கேட்க நாதி இல்லையே, அந்த கமலஹாசனுக்கும் கொஞ்சமும் சிந்தனை இல்லையே”

தன்னால் வெளிஅனுப்பி வைத்தவர்களை மறுபடியும் அழைத்து பல்லை காட்டிகொண்டிருப்பதால் கமலஹாசன் என்பவருக்கு சுத்தமாக மானமில்லை

இனியும் பிக்பாஸ் பார்த்துகொண்டிருந்தால் பார்பவனுக்கு மானமில்லை,

இந்த பகிரங்க மோசடியினை கூட கண்டிக்க தயங்கும் கமலஹாசன், தமிழக அமைச்சர்களை கண்டிக்கும் உரிமையினை இழந்துவிட்டார்.

தமிழக அமைச்சர்களுக்கு மானமில்லை வெட்கமில்லை என்பது உலகிற்கு தெரிந்தது, அதே வரிசையில் தான் கமலஹாசனும் இருக்கின்றார்.

அவர்கள் செய்வது அரசியல் மோசடி என்றால் இவர் செய்வது இன்னொரு வகை மோசடி.

அவர்கள் அவர்களின் பிக்பாஸ் சொன்னதை செய்கின்றார்கள், இவர் இவரின் பிக்பாஸ் சொன்னதை செய்கின்றார், ஆக இருவருமே வாக்களித்தவர்களை ஏமாற்றிகொண்டிருக்கின்றார்கள்

இந்த பிக்பாஸின் அடிமை, அந்த பிக்பாஸின் அடிமைகளை கேள்வி கேட்க என்ன இருக்கின்றது?

இனி அவர் அமைச்சர்களை என்றாவது சீண்டட்டும், அன்று இருக்கின்றது அவருக்கு.

அவர்களை சீண்ட / கண்டிக்க‌ இவருக்கு எந்த தகுதியும் இனி இல்லை..

ஒரு அடிமை இன்னொரு அடிமையினை எப்படி கேள்வி கேட்க முடியும்? அல்லது ஒரு சந்தர்ப்பவாதி இன்னொரு சந்தர்ப பிழைப்புவாதியினை எப்படி கண்டிக்க முடியும்?

 
 

காயத்திரியினை வெளியே அனுப்பினார்

எல்லோரையும் கேள்விகேட்டு திணறடிக்கும் கமலஹாசன், சத்தமே இல்லாமல் காயத்திரியினை வெளியே அனுப்பினார். மிக கடினமாக ஒரு வார்த்தையுமில்லை

எவ்வளவு சர்ச்சைகளை கிளப்பினார் காயத்திரி, அதனை பற்றி ஒரு வார்த்தை கூட கேட்காத கமலஹாசன் என்ன “ஹேருக்கு” அங்கு ஏதோ கிழித்தவர் போல நிகழ்ச்சி நடத்த வேண்டும்?

அம்மணியின் பின்புலம் அவ்வளவு வலுவானது போல,

கடைசிவரை தான் காயத்திரி தாசன் என்பதை கமல் நிருபித்துவிட்டார்.

ஆனாலும் காயத்திரி வெளியேறுவதை மிக ரசித்து ரசித்து பார்க்க முடிந்தது. இப்படியே இந்த சிநேகனைனையும் அனுப்புவதை கண்ணார கண்டுவிட்டால் பிக்பாசை மொத்தமாக தலை முழுகிவிடலாம்..


 

ஓவியா பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின்…

இந்த ஓவியா பிக்பாஸில் இருக்கும்வரை நல்ல சுதந்திரம் இருந்தது, என்ன செய்தாலும் பாகம்பிரியாள் கண்டுகொள்வதே இல்லை.

எதிர்த்த வீட்டு சீனப்பெண்ணுடன் பேசினாலும் கண்டுகொள்ளாத அளவு பெரும் சுதந்திரம் இருந்தது.

வீட்டை எப்படி அலங்கோலமாக்கி வைத்திருந்தாலும் கண்டு கொள்ளவே இல்லை.

இப்பொழுது ஓவியா களத்தில் இல்லை என்பதால் மறுபடியும் நம் மீதான கண்காணிப்பு அதிகரித்துவிட்டது, “அங்கே என்ன பார்வை? , இப்பொழுது ஏன் வாட்சப்?, அந்த புத்தகத்தை எவ்வளவு நாளாக படிப்பீர்கள்? ” என பழைய பார்மிற்கு வந்துவிட்டார் பாகம்பிரியாள்

“ஏய் ஆரவ் , என் சாபம் உன்னை சும்மாவே விடாது, நீ சீக்கிரம் இந்தியாவிட்டே ஓடிவிட சபிக்கின்றேன்..”

யாராவது அந்த ஓவியாவினை மறுபடியும் உள்ளே பிடித்து போட்டால் மிக நன்றாகத்தான் இருக்கும்,

என்ன செலவானாலும் சரி, ஓவியாவினை மறுபடி கொண்டுவர நிதி திரட்டினால் முதல் பங்கு என்னுடையது.

 

பிக் பாஸ் .. புதிய வரவுகள் ….

Image may contain: 2 people, people sittingசுஜா என்றொரு நடிகையினை பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பிவிட்டாயிற்று.

உடனே அவர் “அயிட்டம் டான்சர்” என முகம் சுழிப்பது யாரென்றால் காயூ ஆண்டி& கோ

பிரபுதேவா மீது காயூ ஆண்டி கால் போட்டு ஆடியதெல்லாம் என்ன யோகா நிகழ்ச்சியா?

பிந்துமாதவி ஆடாத ஆட்டமா? ஓடாத ஓட்டமா?

Image may contain: one or more people and outdoorசரி நமீதா என்றொருவர் முன்பு காயூ ஆண்டியிடம் கொஞ்சி கொண்டிருந்தாரே? அவர் என்ன ஸிரிவித்யா போல தளைய தளைய பட்டுபுடவையில் மட்டும் வந்தவரா?

நமீதா போன்றதொரு “டவுசர்” ஆட்டகாரியினை எங்காவது உலகில் காண முடியுமா?

இதில் இந்த சுஜா மட்டும்தான் ஐட்டம் டான்சராம்

அட பதர்களா? ” நீங்கள்எ ல்லாம் ஒரே இனம்” என்பது யாருக்கு தெரியாது???

அட அவ்வளவு ஏன்? அந்த கமலஹாசனே கோவணமும் சில நேரங்களில் அதுவும் இல்லாமல் கேமரா முன் நின்ற “ஐயிட்டம் பாய்” அல்லவா?

அது கூட மறந்துவிட்டதா?

 
 

கமலஹாசா.. காயத்திரி தாசா

Image may contain: 1 person, smiling, close-upImage may contain: 1 person, smiling, close-upபிந்துமாதவி சில்க் ஸ்மிதாவின் நெருங்கிய உறவினர் போலவே இருப்பது ஆச்சரியம்.

ஆனால் சில்க் ஸ்மிதாவின் காந்த‌ கண்கள் மட்டும் மிஸ்ஸிங்.

அடேய் இருட்டு மூஞ்சி திருட்டு முழி சிநேகா.. தமிழ்தாய் வாழ்த்து எழுதியவரை தெரியாத நீயெல்லாம் தமிழ் கவிஞனா?

அந்த பின்மண்டை முடியினை இழுத்து வைத்து கேட்கின்றோம்..

டேய் தருமி, எவனோ மண்டபத்தில் எழுதிய பாடலை இசையமைப்பாளரிடம் சொல்லி நீ எல்லாம் கவிஞனாகிவிட்டாய் அப்படித்தானே? உண்மையினை சொல்.

 

ஏம்பா பிக்பாஸ்?, அந்த காயத்திரி எங்கள் செல்லபிள்ளை அதனால் வெளியே விடமாட்டோம் என நேரடியாக சொன்னால்தான் என்ன?

ஏன் இப்படியெல்லாம் நாடகம் ஆடி உள்ளே வைக்கவேண்டும்?

எலிமினேட் ஆகபோவரை எல்லாம் ஒருவாரம் விட்டுபிடித்துத்தான் வெளியேற்றுவார்கள்.

ஆனால் காயத்திரியினை மட்டும் அவசரமாக காப்பாற்றும் மர்மம் என்ன? வோட்டு போட்டவன் எல்லாம் ஓவியா போல மனநிலை பாதிக்கபட்டவனா?

அங்கிள் சைமன் பாணியில் கேட்பதாக இருந்தால் 
” ஏண்டா..வோட்டு போட்ட நாங்க என்ன பைத்தியகார பய மக்களா?

நாதியில்லையே.. இத கேட்க நாதியற்ற இனமாக போய்விட்டோமே என் உறவே”.

இதனை எல்லாம் விட்டுவிட்டு விந்திய மலை, திராவிடம், தன்மானம் என என்னவெல்லாம் ஏனய்யா பேசிகொண்டிருக்கின்றீர் கமல்??? எரிச்சலாக வருகின்றது.

கமலஹாசா.. காயத்திரி தாசா இன்னுமா நடிக்க போகின்றீர்


 

முத்த பிரச்சினை ….

தமிழகம் கண்ட முத்தபிரச்சினையில் இந்த பிரச்சினைதான் பெரும் பிரச்சினையாக வரலாறு சொல்கின்றது.

ஆனால் ஓவியாவின் முத்த பிரச்சினை பரவிய அளவுக்கு இந்த முத்த பிரச்சினை பரவவில்லை என்பதுதான் விஷயம்..

 
Image may contain: 2 people, text
%d bloggers like this: