யோகி ஆதித்யநாத் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

அவருக்கு ஏதோ பூர்வ ஜென்ம தொடர்ச்சி மிக சரியாக இருக்கின்றது

அவர் பிறந்தபின் உத்திரபிரதேசத்தை அரசர் போல் ஆண்டுகொண்டிருந்த நேரு குடும்பம் செல்வாக்கினை இழக்க தொடங்கியது, இந்திரா மிகபெரும் சவால்களை சந்தித்தார்

அவர் வளர வளர நேரு குடும்பம் பல சோதனைகளை சந்தித்து கொஞ்சம் கொஞ்சமாக செல்வாக்கு இழந்தது

அவர் அரசியலில் 18 வயது இளைஞனாக கால்வைத்த 1990க்கு பின் காங்கிரஸின் கடைசி நம்பிக்கையான ராஜிவும் இல்லாது போனார், அதே வருடம் மசூதியும் இல்லை

அப்பொழுது யோகி வீட்டை விட்டு நீங்கி 18 வயதிலே சன்னியாசம் ஏற்று கோரக்பூர் மடத்தில் இருந்தார்

மக்கள் சேவை மகேசன் சேவை எனும்பொழுது மகேசன் தொண்டன் ஒருவன் மக்கள் சேவகனாக ஏன் இருக்க முடியாது? அப்படி அரசியலுக்கும் வந்தார் அவர்

காங்கிரஸ் செய்த பெரும் தவறு சோனியாவினை தலைவராக்கி உபிபக்கம் அழைத்து சென்றது, அதை உபிமக்கள் விரும்பவில்லை அதை முலாயம்சிங், மாயாவதி கன்ஷிராம் ஆகியோர் கன கச்சிதமாக பயன்படுத்தி ஆட்டம் போட்டனர்

என்ன இருந்தாலும் இந்தியாவின் மத்திய அரசை நிர்ணயிக்கும் மாநிலமாக அதுதான் விளங்கிற்று. நேரு, சாஸ்திரி முதல் பலர் அங்கிருந்துதான் வந்தார்கள், இன்னும் வருவார்கள்

காங்கிரஸ் வீழ்ந்த நேரத்தில் , அரசியல் குழப்பம் கூடிய நேரத்தில் அங்கு தனி கவனம் பெற்று வளர்ந்தார் அவர், தொடர்ந்து நாடாளுமன்றத்துக்கு அவரை அனுப்பி கொண்டே இருந்தது அந்த மண்

ஒரு கட்டத்தில் நேரு குடும்பம், மாயாவதியின் அடாவடி, முலாயம் குடும்பத்தின் வாரிசு சண்டை என பார்த்து சலித்த உத்திரபிரதேசம் அவரிடம் சரணடைந்தது

அதன் பின் உபி முதல்வராக தன் 46ம் வயதிலே அமர்ந்திருக்கின்றார் அவர்

ஆம் சந்நியாச பெயரான யோதி ஆதித்த்யநாத் என்ற பெயரை கொண்ட அஜய்சிங் பிஸ்த்

அவர் மேல் யார் என்ன சொன்னாலும் சில விஷயங்களை நம்மால் உறுதிபட சொல்லமுடியும்

அவருக்கென சொத்து இல்லை, ஊழல் என ஒரு குண்டூசி கூட காட்டமுடியாது. ஒரு குடிசையில் தவகோலத்தில் வாழ்ந்து வருகின்றார் அவர்.

அவரே சந்நியாசி ஆனபின் குடும்பத்துக்கும் அவருக்கும் தொடர்பில்லை அவரின் குடும்பமோ 4ம் பங்காளியோ கூட ஊழல் செய்யமுடியாது.

எங்கு சென்றாலும் காவிவேட்டியும், அந்த மண்ணின் அடையாளமாய் செல்கின்றார்.

அரசியல் என்பது பக்திமார்க்கம் போன்றது, பந்த பாசத்தில் சிக்கியவன் அதில் பூரணமாக செயல்பட முடியாது.

Image may contain: 1 person, sitting and indoor

ஆயிரம் விலங்குகளில் சிக்கி தவிக்கும் அவனால் ஆட்சி எனும் வண்டியினை இழுக்க முடியாது, பற்றற்ற ஆசையற்ற பாச விலங்கற்ற குடும்ப உறவுக்கு அப்பாற்பட்ட கர்ம வீரனே அரசியலுக்கு சரி

காமாராஜரும் சாஸ்திரியும் அப்படி சந்நியாச கோலத்தில் நின்றார்கள், வரலாறு ஆனார்கள். அந்த வரலாற்றின் தொடர்ச்சியே யோகி.

நிச்சயம் உபி அவரை மதவெறியராய் பார்க்கவுமில்லை, அவர் அப்படி நடந்து கொள்ளவுமில்லை.

உபியில் சந்நியாசிகளும் இஸ்லாமியரும் மிக நெருக்கமாக பழகுவது பாரம்பரியமான ஒன்று என்பதால் இஸ்லாமியர்கள் அவரை தயக்கமின்றி ஏற்றுகொண்டார்கள்

யோகியின் அதிகாரிகள் முதல் அலுவலர் வரை இஸ்லாமியர்களே

அவரின் வெற்றி இதுதான், அவர் உபியின் சக்திவாய்ந்த தலைவராக உருவாக்கிய காரணங்கள் இவைதான்

பணத்துக்கு அலையாத மனம், கொஞ்சமும் பகட்டு இல்லா குணம், கொடிய எதிரியும் குற்றம் சொல்ல முடியா ஒழுக்கம், பக்தி மிகுந்தவன் மனசாட்சிக்கு கட்டுபட்டு ஆட்சி நடத்துவான் எனும் எதிர்பார்ப்பு

இவைதான் அந்த சக்திமிக்க மனிதனை உருவாக்கியிருக்கின்றது

இன்னொன்று மகா உன்னிப்பாக கவனிக்க வேண்டியது

500 ஆண்டுகளுக்கு முன் இடிக்கபட்ட ராமர்கோவில் அவரின் காலத்தில் கட்டபட வேண்டுமென விதியின் முடிவு எங்கோ யாராலோ எடுக்கபட்டிருக்கின்றது

அதனாலே அவரை விதி இழுத்து கொண்டு அந்த அரியணையில் வைத்து அதை கட்டவும் வகை செய்தது

ஆம், யோகி அரசியலை விரும்பவில்லை , பதவிக்கு வரவேண்டும் என ஆசைபட்டதுமில்லை. ராமர்கோவில் கட்டவேண்டும் என்றுதான் விரும்பினாரே தவிர தன் ஆட்சியில் கட்டவேண்டும் என அவர் விரும்பியதே இல்லை

காலம் அவருக்கான வழியினை செதுக்கியது, தடைகள் யாவையும் காலமே அகற்றியது, அதுவே மிக சரியான நேரத்தில் அவரை அமர வைத்து செங்கோலையும் கொடுத்தது

அதுவும் காங்கிரசும் , கம்யூனிஸ்டுகளும், மூன்றாம் அணி இம்சை குழப்பங்களும் ஓய்ந்த காலத்தில் மிக அழகாக வாழ்த்தி கொடுத்தது, இனி அவருக்கு சவால் என ஏதுமில்லை.

அது விதி என நம்பினால் விதி, தெய்வம் என நம்பினால் தெய்வம்

அவர் தெய்வத்தை நம்புகின்றார், மக்கள் அவரை நம்புகின்றனர், தேசம் அவரை கவனிக்கின்றது

நிச்சயம் பல தசாப்தங்கள் உபி பகுதியினை ஆண்ட நேரு குடும்பம் ஏதாவது உருப்படியாக செய்திருந்தாலோ இல்லை ராமர்கோவிலுக்கு ஒரு செங்கல் எடுத்து வைத்திருந்தாலோ ஏன் அவர்கள் வீழபோகின்றார்கள்?

காலம் எல்லோருக்கும் வாய்ப்பு கொடுத்தது அவர்கள் அதை வீணடித்தார்கள், காலம் இப்பொழுது யோகியினை வைத்து தன் கடமையினை செய்கின்றது.

இன்று இந்தியாவின் நம்பிக்கைகுரிய இளம் தலைவராக அறியபடுபவர் அந்த யோகி, அவருக்கு இன்று பிறந்தநாள்.

விவேகானந்தர் சொன்னார் அல்லவா? தேசபற்றும் ஆன்மீகமும் அறிந்த 100 இளைஞர்களை என்னிடம் கொடுங்கள் இந்த தேசத்தை நான் மாற்றுகின்றேன் என கர்ஜித்தார் அல்லவா?

அந்த கனவின் உருவம், விவேகானந்தர் கண்ட 100 இளைஞர்களின் மொத்த உருவம்

அவரிடம் விவேகானந்தரின் சாயல் இருக்கின்றது, அமெரிக்காவில் “எமக்கு ஒரு கனவு உண்டு” என முழங்கிய மார்ட்டின் லுத்தர்கிங்கின் சாயல் இருக்கின்றது

அப்படியே “இது எம் மண், எங்கள் கலாச்சாரத்தை மீட்டெடுத்து மாபெரும் வரலாறு படைப்போம்” என சொல்லி ஈரானில் மிகபெரும் எழுச்சியினை ஏற்படுத்தி இன்றுவரை ஈரான் தனித்து நிற்க காரணமானானே அந்த கொமேனியின் சாயலும் இருக்கின்றது

ஆம், அந்த யோகி ஒரு ஆச்சரியம், காலம் உருவாக்கிய ஒரு நம்பிக்கை

இந்த மண்ணின் மரபறிந்த, ஞானம் அறிந்த மக்களின் உணர்வறிந்த, அறம் அறிந்த , இந்நாட்டின் தாத்பரியமும் தர்மமும் பாரம்பரியமும் அறிந்த ஒருவனே இந்த ஞானபூமிக்கு நல்வழி காட்டமுடியும்

யோகி அதை அழகாக செய்கின்றார்.

நாம் முன்பே சொன்னபடி உபி என்பது பிரதமர்களை கொடுக்கும் மாநிலம், சாஸ்திரி போன்ற அபூர்வ பிரதமர்கள் அங்கிருந்துதான் வந்தார்கள்

அப்படி பின்னொரு நாளி காவி அணிந்த சாஸ்திரியாக, காவி அணிந்த காமராஜராக அவர்களின் வாரிசாக யோகி ஒரு நாள் பிரதமர் பதவியில் அமர்வார்

அன்று ஈரானிய எழுச்சி போல, கரிபால்டி உருவாக்கிய இத்தாலி போல, கமால் பாட்சா உருவாக்கிய நவீன துருக்கி போல இத்தேசம் தன் பொற்காலத்தை அடையும்

கங்கை கரையில் சந்திரகுப்தன் ஆண்டபொழுது பாரத கண்டம் எப்படி பொற்காலத்தில் இருந்ததோ அதே பொற்காலத்தை நிச்சயம் மீட்டெடுக்கும்

காலம் மிகபெரும் கடமையினை நோக்கி அவரை அழைத்து சென்றுகொண்டிருகின்றது, அந்த தர்மவாதி தன் பிறவிகடமையினை, மிக பாரமான கர்மாவினை நிச்சயம் நிறைவேற்றுவார்

எல்லா தெய்வங்களும் அவருக்கு அந்த ஆற்றலையும் வலிமையும் வழங்கும், தேசம் செழிக்கும், தர்மம் அரங்கேறும்.

சுந்தரம் பிள்ளை!

அவர் பெயர் சுந்தரம் பிள்ளை, 1855ல் பிறந்தார்.

கேரளாவில் பிறந்த தமிழர், தமிழை கசடற கற்றவர், பல பட்டங்களை பெற்றவர், பின் நெல்லை கல்லூரி ஒன்றில் பேராசிரியரானார்

அக்கல்லூரி பின் இந்து கல்லூரி ஆயிற்று, இன்றும் அக்கல்லூரி நெல்லையில் உண்டு.

அதன் பின் திருவனந்தபுரம் கல்லூரியில் தத்துவயியல் ஆசிரியரானார், திறமையானவர் என்பதால் பிரிட்டிஷ் அரசின் பல பட்டங்கள், ராவ் பகதூர் பட்டம் வரை வாங்கினார், திருவிதாங்கூர் அரண்மனை திவானாகவும் இருந்தார்

பல படிப்புகள் படித்திருந்தாலும், கல்வெட்டு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு பல ஆராய்ச்சிகளை செய்தார்

அவருடைய தமிழ் அவரை உந்தி தள்ளியது, மனோன்மணியம் எனும் ஒப்பற்ற நாடக நூலை எழுதினார், இன்றுவரை மிகசிறந்த நாடக நூல் அது

அந்த நூலில் வரும் பாடல்தான், நீராருங் கடலுடுத்த நிலமடந்தை எனும் அற்புதமான பாடல்

அந்த பாடல்தான் 1970ல் தமிழ்த்தாய் வாழ்த்து என தமிழக அரசால் அங்கீகரிக்கபட்டது

பத்துபாட்டு உட்பட பல தமிழ்பாடல்களை கொத்து போட்டு ஆய்வு செய்து விளக்கம் அளித்தவர் சுந்தரம் பிள்ளை

தமிழுக்கு அவர் செய்திருக்கும் தொண்டு பெரியது, அந்த்தொண்டின் மகுடம்தான் அந்த தமிழ்தாய் வாழ்த்து

அவர் பணி தொடங்கிய நெல்லையிலே பல்கலைகழகம் வந்தபொழுது கொஞ்சமும் தயங்காமல் அவர் பெயரினை சூட்டினார்கள், நெல்லை பல்கலைகழகத்திற்குத்தான் பாரதியார் பெயர் சூட்டபட்டிருக்க வேண்டும்

ஆனால் அது கோவை பக்கம் அமைந்துவிட்டதால், சுந்தரனார் அவரின் மனோன்மணியம் எனும் அடையாளத்துடன் நெல்லை பல்கலைகழகத்தில் அமர்ந்துவிட்டார்

எத்தனையோ தமிழ் அறிஞர்கள் இவரைப்போல, உ.வே சாமிநாதரை போல தமிழுகு தங்களால் ஆன தொண்டு செய்து அதனை வளர்த்து காத்திருக்கின்றார்கள்

அவர்கள் எல்லாம் தார் சட்டி தூக்கவில்லை, திணிப்பு என கொதிக்கவில்லை, காரணம் அவர்கள் அரசியல்வாதிகள் இல்லை

வெள்ளையன் திருநெல்வேலியினை தின்னவேலி என்றபொழுதும், தஞ்சாவூரை தஞ்சூர் என்றபொழுதும், திருச்சிராப்பளியினை டிரிச்சி எனும்பொழுதும் அவர்கள் “ஆங்கில திணிப்பு” என‌ தார்சட்டி தூக்கவில்லை

மாறாக எது தமிழுணர்வு, எது அதனை காக்கும் வழி என அவர்களுக்கு தெரிந்த்திருக்கின்றது, ஆனால் அரசியல் தெரியவில்லை

மாறாக தமிழுக்கு செய்ய வேண்டியதை செய்திருக்கின்றார்கள்.

இன்றுள்ளவர்களுக்கோ எது அரசியல் என தெரிந்திருக்கின்றது, தார் சட்டி அது இது என அழிச்சாட்டியம் செய்கின்றார்கள், துப்பாக்கி தூக்கிய கொலைகாரன் தமிழனாய் இருந்தாலும் தமிழை காத்தவன் என கொடூர சிந்தனையில் சிரிக்கின்றார்கள்.

ஆனால் தமிழுக்கு என்ன செய்யவேண்டும் என தெரியவே இல்லை, அந்த பேச்சோ செயலோ இல்லை

இவரைபோல நிறைகுடங்கள் அன்று இருந்திருக்கின்றன, நமது விதி பின்னாளில் சிக்கிகொண்டோம், தமிழும் தமிழகமும் சிக்கிவிட்டது

இன்று அந்த சுந்தரம்பிள்ளையின் பிறந்தநாள்

மனோன்மணியத்தில் அவர் தமிழ் அவ்வளவு அழகு, ஆங்கிலம் கற்ற பேராசிரியரின் தமிழ் அவ்வளவு அழகாக இருந்திருக்கின்றது

தமிழை அதன் சீரிளமை திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே, என வாழ்த்திய அவரை அவர் பிறந்த நாளில் நினைத்து கொள்ளலாம்..