புதிய போர்சின்னம்

டெல்லியில் புதிய போர்சின்னத்தை திறந்து வைத்தார் மோடி

ராணுவ வீரர்களின் தியாகம் என்றுமே வணங்கபட வேண்டியது, அவ்வகையில் அவர்கள் நினைவாக திறக்கபட்டுள்ள சின்னத்தை இந்தியர் மிக மரியாதையாக வணங்கி தீரவேண்டும்

இந்நினைவு சின்னத்தில் இலங்கைக்கு அமைதிபடையாக சென்று உயிரிழந்த நம் வீரர்களின் நினைவும் வைக்கபட்டிருப்பது நல்ல விஷயம்

எல்லாம் சரிதான்

ஆனால் மோடி எந்த போரை நடத்தினார் வெற்றிகொண்டார்? ஒன்றுமே இல்லை

போர் நடத்தியதெல்லாம் காங்கிரஸ் அரசு, ஆனால் அதை சொல்லி நினைவுசின்னம் அமைத்து அதில் சந்தடி சாக்கில் காங்கிரஸை சீண்டிகொண்டிருக்கின்றார் மோடி

மோடி நினைவுசின்னம் அமைத்தது சரி , ஆனால் அதில் அரசியல் பேசியது தவறு.

போர்தான் நடத்த முடியவில்லை நினைவு சின்னமாவது திறப்போம் என ஆறுதல் அடைந்திருக்கின்றார்

இப்படியே பாஜகவினரால் இடிக்கபட்ட பாபர் மசூதிக்கும் ஒரு நினைவுசின்னம் அமைக்கபடுமானால் அது வாழ்த்துகுரியது

மற்றபடி போரே நடத்தாமல் போர் சின்னம் திறந்த முதல் இந்திய பிரதமர் எனும் பெருமையினை பெற்றார் மோடி