பெருங்கொடுமை

கோவையில் 6 வயது சிறுமியினை கற்பழித்து கொன்றிருக்கின்றார்கள்

இதெல்லாம் இனி சட்டம் போட்டு தடுக்கும் கதையாக தெரியவில்லை, சீர்கேடுகள் வேறு எங்கோ இருக்கின்றன

சட்டத்தால் தடுக்க முடியாததை விழிப்புணர்வு மூலமாகத்தான் தீர்க்கமுடியும்

இச்சமூகத்தின் கடைசி சிறுமிக்கு ஆபத்து நிகழ்ந்தபின் யோசிப்பதை விட இப்பொழுதே உரிய திட்டங்களை தீட்டுதல் நலம்

அதற்கு முன் இந்த குற்றவாளிகளுக்கு மாபெரும் தண்டனை கொடுத்தே தீரவேண்டும்

கடும் பசியிலிருக்கும் விலங்குகள் கூட குட்டிகளை தொடுவதில்லை. இந்த கொடூரர்கள் அவைகளை விட மகா மோசம்

பத்திரிகை புலிகளையும், புலனாய்வு புலிகளையும் இங்கு காணவில்லை காரணம் பணமும் வராது, அரசியலும் செய்ய முடியாது

இப்படி ஒரு பெருங்கொடுமை பூமியில் எங்குமே இல்லை

பூக்கும் முன்னே கசக்கி எறியபட்ட அந்த மொட்டுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்

பாழ்பட்ட இந்த பூமியில் நீ பிறந்ததாலும் உன்னை காக்க இச்சமூகம் தவறியதாலும் எங்களை மன்னித்துவிடம்மா என கதறிகொண்டிருக்கின்றோம்..

அழுதாலும் தீரா சோகத்தோடு அழுகின்றோம்..

மனசாட்சி கொண்ட மனிதர்களெல்லாம் உனக்காக அழுகின்றோம், அது ஒன்றைத்தான் எங்களால் செய்யவும் முடியும்

அந்த திசைபார்க்க அழுது கொண்டிருக்கின்றோம்

இதற்கொரு முடிவுகட்டாமல் இனி அழுகையினை இச்சமூகம் நிறுத்துதல் கூடாது

இதோ கோவை சிறுமி, 6 வயதுதான்

ஆசிபா போலவே கொடூரமாக கொல்லபட்டிருக்கின்றாள், ஆனால் ஒரு சத்தம் வரும்?

செத்தாலும் இங்கு சிறுபான்மை மதம், இனமாகத்தான் சாகவேண்டும் போலிருக்கின்றது

கொஞ்சமா பேசினார்கள்?

ஷாலினி பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும்; இல்லையேல் சட்ட நடவடிக்கை: நாம் தமிழர் கட்சி காட்டம்

ஷாலினி மன்னிப்பு கேட்க வெண்டுமென்றால், இதுவரை சொல்லியிருக்கும் மகா பொய்களுக்கும், தேசவிரோத பேச்சுக்களுக்கும் இந்த நாம் தமிழர் கோஷ்டி மொட்டை போட்டு சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை உருண்டு வர வேண்டும்

கொஞ்சமா பேசினார்கள்?

ஷாலினி மேல் சட்ட நடவடிக்கை என்றால், இவர்களை கண்டெய்னெரில் அடைத்து கடலில் தள்ள வேண்டும்

பெரியாரை கட்டி தழுவுவதா பெண்ணியம்??

விவேகானந்தர் என்றொரு மகான் இருந்தார், அவரின் அறிவு மேலும் சில பெண்களுக்கு மயக்கம் இருந்தது

உங்களை போல அறிவான மகனை பெற ஆசை அதனால் என்னை மணந்துகொள்ளுங்கள் என தானாக மயங்கி அவர் முன் நின்ற மங்கையர் ஏராளம்

ராமகிருஷ்ண பரம்மஹம்சரே திருமணமானவர் என்பதால் விவேகானந்தர் திருமணம் செய்ய தடையேதுமில்லை

ஆனால் அந்த இளம் துறவி சொன்னார்” அம்மா, என்னை போல் ஒரு மகனை பெற்றேடுப்பதை விட என்னையே மகனாக தத்தெடுங்கள் தாயே”

ஆம் அறிவு என்பதும் தெளிவு என்பதும் பகுத்தறிவு என்பதும் அதுதான்

இங்கோ சிலதுகள் இப்பொழுது ஈரோட்டு கிழவன் இருந்தால் ஓடிபோய் கட்டுவேன், நொட்டுவேன் என என பெண்ணியம் பேசுகின்றன‌

பெரியாரை கட்டி தழுவுவதா பெண்ணியம்??

அதைத்தான் சன்னிலியோன் மிக அழகாக செய்வாரே? அவரை பெரியாரிஸ்ட் என சொல்ல‌ முடியுமா?

ஏன் அவருக்கு மகளாய் பேத்தியாய் இருக்க கூடாதா? எல்லோருக்கும் மணியம்மை வழிதான் பிடிக்குமா?

ஈரோடு பொள்ளாச்சிக்கு தொலைவில் இல்லை என்பது வேறு விஷயம்

ஆண்களின் தன்மையினை பொறுத்ததே நாடு

“நாடாக ஒன்றோ, காடாக ஒன்றோ,
அவலாக ஒன்றோ, மிசையாக ஒன்றோ,
எவ்வழி நல்லவர் ஆடவர்,
அவ்வழி நல்லை வாழிய நிலனே”.

அதாவது ஏ நிலமே! நீ நாடாகவோ, கழனியாகவோ காடாகவோ, பள்ளமாகவோ அல்லது மேடாகவோ, எப்படி இருந்தாலும் இருக்கலாம்

ஆனால் அங்கு வாழும் ஆண்கள் நல்லவர்களாக இருந்தால் நீயும் நல்ல நிலமாக இருப்பாய், அங்கு வாழும் ஆண்கள் சரியில்லை என்றால் நீ நல்ல நிலமாக இருக்க முடியாது

ஆண்களின் தன்மையினை பொறுத்ததே நாடு

(இது அவ்வையார் பாடல், ஆக அவர் காலத்திலே பொள்ளாச்சி கும்பல் போல சில இருந்திருக்கலாம்)

கொடூர வீடியோ அனுப்பும் அன்பர்கள் கவனத்திற்கு

இந்த பொள்ளாச்சி வீடியோ, அந்த வீடியோ இந்த வீடியோ என கொடூர வீடியோ அனுப்பும் அன்பர்கள் கவனத்திற்கு

அனுப்பினால் “இளமை எனும் பூங்காற்று..பாடியது ஒர் பாட்டு” ஸ்ரீதேவி போன்ற தரமான வீடியோக்களை அனுப்பவும்

அந்த மாபெரும் தத்துவபாடல் பிண்ணணியில் ஒலிக்க கடந்துவிடலாம்

இந்த பழைய நடிகை மாதுரி நடித்தது போன்ற கொடூர காட்சிகளை அனுப்ப வேண்டாம்

ஆனாலும் அன்றே “தேக சுகத்தில் கவனம்.. காட்டு வழியில் பயணம்” என எழுதி வைத்த கண்ணதாசன் மாபெரும் தீர்க்கதரிசி, ஒரு தெய்வீக கவிஞன்

சங்கம் பொறுப்பல்ல…

“நிறையான் மிகுகல்லா நேரிழை யாரைச் 
சிறையான் அகப்படுத்தல் ஆகா – அறையோ! 
வருந்த வலிதினின் யாப்பினும் நாய்வால் 
திருந்துதல் என்றுமோ இல்..”

அதாவது மனதால் கட்டுபாடு இல்லாத‌ பெண்ணை பெரும் காவலில் வைத்தாலும் தீயவையிலிருந்து காக்க முடியாது, அப்படி காக்க முடியும் என நம்பினால் அது நாய்வாலை நிமிர்த்துவதற்கு சமம்

இந்த பாடலுக்கும் பொள்ளாச்சி சம்பவத்துக்கும் தொடர்பு இருப்பதாக கருதினால் சங்கம் பொறுப்பல்ல…

இதெல்லாம் அவர்களின் அரசியல்..

இதெல்லாம் அவர்களின் அரசியல்..

பொள்ளாச்சி பாலியல் விவகாரம்: சுதந்திரமான விசாரணை குழுவை ஐகோர்ட்டு அமைக்க வேண்டும் – வைகோ

இந்த கோஷ்டிகள் ஒருமாதிரி ஆகிவிட்டன‌

பொள்ளாச்சி விவகாரத்தில் மாநில காவல்துறை விசாரித்தால் சரிவராது என்றார்கள், பின் சிபிசிஐடிக்கு மாற்றபட்டது

அது போதாது என்றார்கள், பின் சிபிஐக்கு வழக்கு வந்தது

இப்பொழுது சிபிஐயும் வேண்டாமாம் ஐகோர்ட்டே விசாரிக்க வேண்டுமாம்

இனி ஐ.நா மேற்பார்வை வேண்டும் என்பார்கள், அப்படியே ராஜபக்சேவினையும் விசாரிக்க வேண்டும் என்பார்கள்

இதெல்லாம் அவர்களின் அரசியல்..

முக ஸ்டாலின் மருமகனை ஏன் இழுக்க வேண்டும்?

பொள்ளாச்சி விவகாரத்தில் நக்கீரன் கோபாலை இழுத்தால் சரி, இந்த முக ஸ்டாலின் மருமகனை ஏன் இழுக்க வேண்டும்?

“புலமிக் கவரைப் புலமை தெரிதல்
புலமிக் கவர்க்கே புலனாம் – நலமிக்க
பூம்புனல் ஊர பொதுமக்கட்(கு) ஆகாதே
பாம்பறியும் பாம்பின கால்“

அதாவது புலவரின் மொழி இன்னொரு புலவருக்குத்தான் தெரியுமாம்

பாம்பு எப்படி ஊர்கிறதென்று இன்னொரு பாம்புக்குத்தான் தெரியுமாம்

இவர் என்ன புலவரா? பாம்பா? 
நீ சொல்லு நந்தலாலா

ஏம்மா சின்மயி கேட்டுச்சா?

பொள்ளாச்சி சம்பவத்திற்கு அரசு என்ன செய்ய போகின்றது: கமலஹாசன்

ஏம்மா சின்மயி கேட்டுச்சா?

கமலஹாசனுக்கு வாணிகணபதியும் கவுதமியுமே பதில் கொடுக்க போதும் என்பதால் அமைச்சர் ஜெயகுமார் சிரித்து கொண்டிருக்கின்றார்