கொடியவர்களிடம் சிக்கமாட்டார்கள்

“சிலம்பிக்குத் தன் சினை கூற்றம்; நீள் கோடு
விலங்கிற்குக் கூற்றம்; மயிர்தான் வலம் படா
மாவிற்குக் கூற்றம் ஆம்; ஞெண்டிற்குத் தன் பார்ப்பு; நாவிற்கு நன்று அல் வசை..”

சிலந்திப் பூச்சிக்கு அதன் முட்டையும், மிருகங்களுக்கு அவற்றின் நீண்ட கொம்புகளும், கவரிமானுக்கு அதன் மயிரும், நண்டுக்கு அதன் குஞ்சுகளும், மனிதனுக்கு அவன் நாவும் எமனாகும்

அதாவது ஒரு உயிருக்கு எதெல்லாம் பலமும் அழகும் கொடுக்குமோ அதுவே அவர்களுக்கு ஆபத்துமாகும், அவைகளுக்கு ஆபத்து என்பது எங்கிருந்தும் வருவதல்ல, தன்னுள்ளே இருப்பதே

இதை உணர்ந்த பெண்கள் பொள்ளாச்சி கும்பல் போல கொடியவர்களிடம் சிக்கமாட்டார்கள்