சமூக பொறுப்பு

இந்திய தேசிய எதிர்ப்பு, இன்னும் பல விவகாரங்களில் இந்த மனிதர் மேல் பெரும் அபிமானமில்லை

ஆனால் இந்த விஷயத்தை வெளிகொண்டு வந்திருப்பவர் இவர்தான், அன்று ஆட்டோ சங்கர் முதல் பல விஷயங்களை உடைத்தது போல் இன்றும் இந்த மாபெரும் பாதகத்தை வெளிகொண்டுவந்திருக்கின்றார்

ஒருமனிதன் சமூக பொறுப்போடு சில காரியங்களை தைரியமாக செய்யும்பொழுது நிச்சயம் வாழ்த்த்த வேண்டும்

நக்கீரன் கோபாலுக்கு துணை நிற்க வேண்டியது நம் கடமை, இல்லையேல் அறக்கடவுளே நம்மை கொன்றுவிடும்

மனசாட்சி இருப்பவர்கள் இவர்பக்கம் நிற்றல் வேண்டும், மிக கொடூரமான இக்கூட்டத்தை அதுவும் ஒப்பிட்டால் ஆட்டோ சங்கரை கையெடுத்து வணங்க செய்யும் மகா கொடூர கூட்டத்தை இவர் அடையாளம் காட்டியிருகின்றார்

ஆட்டோ சங்கர் எந்த குடும்ப பெண்ணையும் தொட்டதில்லை, அவனுக்கு கூட தர்மம் இருக்கின்றது

உங்களை வணங்கி வாழ்த்துகின்றோம் கோபால், உங்களுக்கு உலக வாழ் தமிழர்கள் எல்லாம் துணையிருக்கின்றார்கள்

எல்லா மக்களோடும், தெய்வமும் உங்களோடு இருந்து உங்களை வழிநடத்தும்..

முழு வீடியோ : https://youtu.be/THAjUBv5_aM